எந்தன் இசையே - புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பிறந்தநாள் வாழ்த்துப் பாடலும்...

2 views
Skip to first unread message

முனைவென்றி நா. வேல்முருகன் சேர்வை

unread,
Jul 2, 2025, 1:53:29 AMJul 2
to



பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ -https://youtube.com/shorts/sVpWfUJT8QQ


இப்போது தான் நேரம் கிடைத்திருக்கிறது பாடலை பதிவு செய்து வெளியிட.

கடந்த ஜனவரி 24, அதிகாலை 4.15 மணிக்கு தூக்கத்திலிருந்து என்னை எழுப்பி இந்தப் பாடலை எழுத வைத்தது எனக்குள் இருந்த இசை. எனக்கேதோ பைத்தியம் பிடித்து விட்டதென நினைத்துக் கொண்டே இருந்தேன். மெட்டு மட்டும் முதலில் வந்தது. உடனேயே முழுப் பாடலும் வந்தது. தத்தகாரத்தில் மெட்டை மட்டும் குரல் பதிவாக என் மூத்த மகள் ரிதன்யா வின் பள்ளி இசை ஆசிரியரும் இசையமைப்பாளர்/பாடகருமான திரு. குமரன் அவர்களுக்கு அனுப்பிவிட்டு பாடலின் முதல் நான்கு வரிகளையும் அனுப்பி விட்டு  எனக்கேதோ பைத்தியம் பிடித்து விட்டதென நினைத்துக் கொண்டே உறங்கிப் போனேன். காலை 7.50 மணியளவில் குமரனிடமிருந்து பதில் குரல் பதிவில் "சார், ட்யூன் அருமையா இருக்கு. நேர்ல வாங்க பேசலாம். இப்படியே திறமையா உங்களுக்குள்ளேயே வச்சுக்கிட்டா என்ன பண்ண முடியும்? வெளிப்படுத்த வேணாமா? நான்கைந்து மாதங்களுக்கு முன்னாடி குழந்தைய கூட்டிட்டு வந்தீங்க. அதுக்கப்பறம் வரவே இல்லையே? நேர்ல வாங்க பேசலாம்" என்று அனுப்பி இருந்தார். அப்போது தான் ஒரு செய்தி புரிந்தது "நான் முறையாகக் கற்றுக் கொள்ளாத இசை, எனக்குத் தெரியாத இசை எனக்குத் தெரியாமலேயே எனக்குள் குடி புகுந்து கொண்டு என்னை இப்படி ஏதோ செய்கிறது" என்று.

இந்தப் பாடலில் என்னுடைய இசையையும் என் இளைய மகளும் என் குட்டி இளவரசியான நிறைமதியையும் ஒப்பிட்டு ஒரு வரியில் என் இசையையும் இன்னொரு வரியில் என் குட்டி இளவரசி நிறைமதியையும் பாடும்படி பாட்டு அருமையான மெட்டோடு கலந்து வந்திருக்கிறது.

இந்த விழியத்தின் ஆரம்பத்தில் இசையமைப்பாளர்/பாடகருமான திரு. குமரன் அவர்கள் இப்பாடல் பற்றி சொன்ன குரல் பதிவை இணைத்திருக்கிறேன். விழியத்தை முழுமையாகக் கேளுங்கள். உங்கள் கருத்துகள், விமர்சனங்களை இந்த விழியத்தின் பின்னூட்டத்தில் (comments) கட்டாயம் தெரியப் படுத்துங்கள்.




--

=================
=  அன்பே கடவுள்  =
=================
முனைவென்றி நா.  வேல்முருகன் சேர்வை,
த/பெ த. நாகராசன் சேர்வை,
௭/௨௧௫-௧ (7/215-1), தேவராஜன் நகர் முதல் தெரு,
எமனேஸ்வரம் - ௬௨௩௭௦௧ (623701),
பரமக்குடி வட்டம்,
இராவணநாதபுரம் மாவட்டம்,
தமிழ்நாடு.
அலைபேசி: ௮௭௫௪௯௬௨௰௬ (8754962106). 
வலைப்பூ - http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.in/
-------------
Munaivendri N. Velmurugan servai,
S/O T. Nagarajan servai,
7/215-1, Devarajan Nagar 1st street,
Emaneswaram - 623701,
Paramakudi Taluk,
Ravananathapuram District,
Thamizhnadu.
Mobile: 8754962106
*** 
இராவணனே தமிழர்களாகிய நம்முடைய கடவுளரில் ஒருவர். இராமன் என்பவன் தமிழரை அழிக்கப் புறப்பட்டு வந்த யூதனாவான். எனவே, என்னுடைய மாவட்டம் இராவணநாதபுரம் ஆகும். கடல் சூழ்ந்த தீவிற்கு பெயர் இராவணேஸ்வரம் என்பதே உண்மை.
***
Reply all
Reply to author
Forward
0 new messages