{tamil-literature-thoughts:%d}

5 views
Skip to first unread message

K.V. Ramanathan

unread,
Sep 11, 2010, 8:05:02 AM9/11/10
to tamil-litera...@googlegroups.com, k.raman...@yahoo.in

Topic-1                      

தமிழ் இலக்கியச் சிந்தனைகள்

1.   இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளாக மக்களால் பேசப்பட்டு வரும் தொன்மையான மொழி – தமிழ் மொழி;

பெரும்பாலும் அடிப்படைத் தன்மைகள் மாறாது தொடரும் உலகச் செம்மொழி – தமிழ் மொழி

திராவிட மொழிகளில் முதன்மை பெறும் மொழி – தமிழ்மொழி

2.   இலக்கு என்பதற்கு விளக்கம், நோக்கம், கொள்கை எனப் பொருள் கொள்ளலாம்;

இயம் என்பதற்கு ஒலிப்பது, கூறுவது, வெளிப்படுத்துவது எனப் பொருள் கொள்ளலாம்;

அதனால் குறிக்கோள்களையும் கொள்கைகளையும் விளக்குவது-இலக்கியம் எனலாம்

3.   தமிழ் இலக்கியம் – செய்யுள் வடிவம் மற்றும் உரைநடை வடிவம் என இரண்டு வகைகளைக் கொண்டது எனலாம்.

 

செய்யுள் வடிவம் – இரண்டாயிரம் ஆண்டுகள் கொண்டது எனலாம்.

 

உரைநடை வடிவம் – கதை – சிறுகதை, புதினம், நாடகம், கட்டுரை, வாழ்க்கை வரலாறு, பயணக் கட்டுரை, நாட்குறிப்பு, கடிதம் போன்றவை கொண்டது எனலாம். உரைநடை இலக்கியங்கள் ஏறத்தாழ இருநூறு ஆண்டுகள் கொண்டது எனலாம்.

 

4.   பொருளை அடிப்படையாகக் கொண்டு அனைத்து இலக்கியங்களையும் – அகம், புறம் எனப் பிரித்துவிடலாம்.

 

அகம் – இன்பத்தில் அடங்கலாம் எனலாம்.

புறம் - அறம், பொருள் என அடங்கலாம் எனலாம்.

 

5.   மேலும் அக இன்பத்தினை – சிற்றின்பம், பேரின்பம் எனப் பகுக்கலாம் எனலாம்.

சிற்றின்பத்தில்        – காதல் போன்றனவும்,

பேரின்பத்தில்         – இறைபக்தியும், தேசபக்தியும் பிறவும் எனலாம்.

மேலும் இறைபக்தி    – சமயத் தோத்திர இலக்கியங்களும், சாத்திர

  இலக்கியங்களும் கொண்டவை எனலாம்.

6.   இலக்கியத்தின் புறப்பகுப்பான அறத்தின்கீழ் – இல்லறம், துறவறம் உள்ளன எனலாம். சமுதாயச் செய்திகளனைத்தும் – இல்லறத்தில் அடங்கும் எனலாம். அரசியல், போர் போன்றவை - பொருட்பகுப்பின் கீழ் வரும் எனலாம்.

7.   செய்யுள் வடிவ இலக்கிய வகையை மீண்டும்

1.   யாப்படிப்படையிலானவை எனவும்,   

2.   பிற அடிப்படையிலானவை எனவும் பிரிக்கலாம்.

8.   மேலும் தமிழ் இலக்கியக் காலத்தை – காலத்தை அடிப்படையாகக் கொண்டு – தொல்காப்பியக்காலம், சங்க காலம், பதினெண்கீழ்கணக்குக் காலம், பக்திக்காலம், பிரபந்தக் காலம், தற்காலம் எனவும் பகுக்கலாம்.

***********

 

 

K.V. Ramanathan

unread,
Sep 22, 2010, 9:33:56 PM9/22/10
to tamil-litera...@googlegroups.com

 

From: kvrfam...@hotmail.com
To: tamil-litera...@googlegroups.com
CC: k.raman...@yahoo.in
Subject: {tamil-literature-thoughts:%d}
Date: Sat, 11 Sep 2010 17:35:02 +0530

K.V. Ramanathan

unread,
Sep 22, 2010, 9:35:40 PM9/22/10
to tamil-litera...@googlegroups.com

 

From: kvrfam...@hotmail.com
To: tamil-litera...@googlegroups.com
CC: k.raman...@yahoo.in
Subject: {tamil-literature-thoughts:%d}
Date: Sat, 11 Sep 2010 17:35:02 +0530

Reply all
Reply to author
Forward
0 new messages