{tamil-literature-thoughts%d}

16 views
Skip to first unread message

K.V. Ramanathan

unread,
Sep 24, 2010, 7:30:27 AM9/24/10
to tamil-litera...@googlegroups.com, k.raman...@ymail.com

Tamil Literature Thoughts – Topic-2

சிற்றிலக்கியங்கள் அந்தாதி

ஆழ்வார்கள் மற்றும் நாயன்மார்களின் இறைக்கொள்கை சிற்றிலக்கியங்களின் தோற்றம் மற்றும் வளர்ச்சிக்குப் பெரிதும் தொண்டாற்றியுள்ளது. பனிரெண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அந்தாதி இலக்கியம் சிறப்பு பெற்றிருந்தது.

     முடிவை முதலாகப் பெற்றமைவது – அந்தாதி. ஓர் செய்யுள் இறுதியுலுள்ள எழுத்தாயினும், சீராயினும், அடியாயினும் அடுத்துவரும் செய்யுளின் முதலாக அமையும்படி பாடுவது அந்தாதிக்கு இலக்கணம்.

     இவ்வந்தாதிகள் வெண்பாவால் ஆயினும், கலித்துறையால் ஆயினும் நூறு பாடல்களால் அமைவதே பெருவழக்கானதாகும். இதனை அந்தாதித்தொகை என்றலும் உண்டு.

     குறைந்தது இரண்டு அடிகளுக்கும் அல்லது இரண்டு செய்யுள்களுக்கும் இடையே காணபடுவது அந்தாதி.

இரண்டு அடிகளுக்கு இடையே அமைவது - அந்தாதித் தொடை.

இரண்டு செய்யுள்களுக்கு இடையே அமைவது – செய்யுள் அந்தாதி.

     ஒரு செய்யுள் அடியின் ஈற்றெழுத்து அடுத்த அடியின் முதல் எழுத்தாகவரின் அது – எழுத்தந்தாதி.

செய்யுளின் ஓரடியின் ஈற்றசை மற்றையடிக்கு முதல் அடியாக வந்தமையின் அது – அசையந்தாதி.

தமிழில் தோன்றிய அந்தாதி இலக்கியங்கள் முதலில் வெண்பா யாப்பிலேயே அமைந்திருந்தன.

     முதல் அந்தாதி இலக்கியமான காரைக்கால் அம்மையாரின் அற்புதத் திருவந்தாதியும், முதலாழ்வார்களின் அந்தாதிகளும் சான்றாகின்றன.   

     அந்தாதி இலக்கியங்களின் பல்வேறு வகைப்பாடுகள் – யமக வந்தாதி, திரிபந்தாதி, நீரோட்டக யமக வந்தாதி, சிலேடை அந்தாதி.

     அந்தாதிகளின் பெயரமைவு  - தலம், தீர்த்தம், மூர்த்தி, விசேடம், அடியார், வள்ளல், ஆசிரியர், பா, பாவகை, சந்தம், செய்யுள் விசேடங்கள், எண்ணிக்கை – ஆகிய நிரல்களில் அமைகிறது.

     அந்தாதி அமைப்பு முறையில் பாடல்களை எளிதில் மனப்பாடம் செய்ய இயலும். அந்தாதி அமைப்பு முறைகளாவன:- எழுத்தந்தாதி, அசையந்தாதி, சொல்லந்தாதி, அடியந்தாதி, செய்யுளந்தாதி.

**************

K.V. Ramanathan

unread,
Sep 24, 2010, 7:33:50 AM9/24/10
to tamil-litera...@googlegroups.com, k.raman...@ymail.com

Tamil Literature Thoughts - Topic – 3

தமிழ் இலக்கியச் சிந்தனைகள்

சங்ககால இலக்கியங்கள்:

  அகத்தியரின் அகத்தியம்

  தொல்காப்பியரின் தொல்காப்பியம்

 

பதினெண்மேற்கணக்கு:

 

  அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை, நற்றிணை உள்பட எட்டுத்தொகைகள்.

 

  திருமுருகாற்றுப்படை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை உட்பட பத்துப்பாட்டும்.

 

பதினெண் கீழ்கணக்கு:

               திருக்குறள், நாலடியார், திரிகடுகம் உள்பட 19 நூல்கள்

              ஐம்பெரும் காப்பியங்களான

            சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி,

வளையாபதி, குண்டலகேசி

 

ஐஞ்சிறுகாப்பியங்களான

உதயணகுமார காவியம்,

நாககுமார காவியம்

யசோதர காவியம்

நீலகேசி, சூளாமணி

 

பக்தி இலக்கியங்கள்:

கலிங்கத்துப்பரணி, தக்கயாக பரணி,

கம்பராமாயணம், சூடாமணி,

திவாகரம், பிக்கலந்தை,

கயாதரம் – முதலிய இரண்டு நூல்கள்

அகராதி நிகண்டு, சதுரகராதி,

உள்பட அகராதிகள்

பன்னிரு திருமறைகள்,

நாலாயிர திவ்ய பிரபந்தம்,

சைவ சித்தாந்த மூலநூல்கள்,

கிறிஸ்துவத் தமிழ் இலக்கியங்கள்,

இசுலாமியத் தமிழ் இலக்கியங்கள்

 

**************

 

Reply all
Reply to author
Forward
0 new messages