மேலக்கொடுமலூர் முருகன் கோவிலில் இடம் பெற்றுள்ள ஜவ்வாதுப் புலவர் !
--- இந்து ஆங்கில நாளிதழ் 19 ஏப்ரல் 2024
எமனேஸ்வரத்தில் வாழ்ந்து
பரமக்குடி கீழப்பள்ளிவாசலில் அடங்கப் பெற்றவர்
ஜவ்வாதுப் புலவர்.
சேதுபதி மன்னரின் அரசவையில் இடம் பெற்ற கவிஞர் ஜவ்வாதுப் புலவர்.
அவர் பாடிய முருகன் பதிகம்
இராமநாத்புரம் மாவட்டம் அபிராமம் அருகில் உள்ள
மேலக்கொடுமலூர் முருகன் கோவில் கல்வெட்டுக்களில் பொறிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவரை கவுரவிக்கும் வகையில் கோவில் மேல்புறத்தில் சிறு சிலை
இடம் பெற செய்யப்பட்டுள்ளது.
சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் அவரது பாடல்கள்
இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஜவ்வாதுப் புலவரின் எட்டாம்
தலைமுறை வழித்தோன்றல்
ஈரோடு எம். கே. ஜமால் முஹம்மது
தகவல் :
முதுவை ஹிதாயத்
+971 50 51 96 433