ஏப்ரல் 21, பரமக்குடியில் இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் சார்பில் ஜவ்வாதுப் புலவர் வழித்தோன்றல் ஈரோடு எம். கே. ஜமால் முஹம்மது எழுதிய ‘தியாகச்சுடர் திப்பு சுல்தான்’ நூல் வெளியீட்டு விழா
பரமக்குடி :
பரமக்குடி வாணியர் மண்டபத்தில் (ஏசி)
இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் சார்பில்
ஜவ்வாதுப் புலவர் வழித்தோன்றலும், ஆய்வெழுத்தாளருமான தமிழ்மாமணி
எம்.கே. ஜமால் முஹம்மதுவின் எழுத்துக்கள் வழங்கும் -
"தி யா க ச் சு ட ர் தி ப் பு சு ல் தா ன்" நூல் வெளியீட்டு விழா
ஞாயிற்றுக்கிழமை 21/04/2024 அந்திமாலை 05 மணி அளவில் நடக்க இருக்கிறது.
இந்த விழாவுக்கு
குத்புதீன் ஐபக் எனும் கவிஞர் மானுடப் பிரியன், முகவை முத்தமிழ் மன்றத்தின் தலைவர் மற்றும் கம்பன் கழகத்தின் பொதுச்செயலாளர், இராமநாதபுரம் தலைமை வகிக்கிறார்.
துபாய், இஸ்லாமிய இலக்கியக் கழக அமைப்பாளர் முதுவை ஹிதாயத் வரவேற்புரை நிகழ்த்துகிறார்.
பரமக்குடி, எமனேஸ்வரம் சேக்கிழா விருது பெற்ற எழுத்தாளர் டாக்டர் நீ.சு. பெருமாள்,
சென்னை, உலக தமிழாராய்ச்சி நிறுவனம் Department of sociology arts and culture (anthropologists) – ன் ஆராய்ச்சியாளர் டாக்டர் ஜாஸ்மின்,
முதுகுளத்தூர் ஓய்வு பெற்ற ஆசிரியர் மற்றும் பட்டிமன்ற பேச்சாளர் ச. துரைப்பாண்டியன்.
இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியின் தமிழாய்வுத் துறைத் தலைவர் பேராசிரியர் கா. அப்துல் ரகீம்,
முனைவர் பாரதி நடராஜன், முதலமைச்சர் மொழிபெயர்ப்புத் திட்டம்
திட்ட மேற்பார்வையாளர், ஐ ஐ டி எஸ் தரமணி, சென்னை 113 உள்ளிட்ட கல்வியாளர்கள் வாழ்த்துரை வழங்க இருக்கின்றனர்.
நூலாசிரியர் தமிழ்மாமணி ஈரோடு எம்.கே. ஜமால் முஹம்மது ஏற்புரை நிகழ்த்துகிறார்.
பரமக்குடி கவிஞர் இதயா தொகுத்து வழங்கிறார். பரமக்குடி கே.ஏ. சாதிக் நஸ்ரத் கான் நன்றியுரை நிகழ்த்துகிறார்.
விழாவில் அனைவரும் பங்கேற்று சிறப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அனைவரும் வருக ! அறிவமுதம் பெறுக !!
தொடர்புக்கு
95665 90033 / 97501 05141 /
whatsapp +971 50 5196433