இரும்பு கம்பிகளுக்கு மாற்றாக பேரீச்ச மர மட்டைகள்: ஓமனில் பணிபுரியும் தமிழ்நாட்டை சேர்ந்த பேராசிரியர்களுக்கு காப்புரிமை

5 views
Skip to first unread message

Muduvai Hidayath

unread,
Mar 4, 2024, 5:37:58 AM3/4/24
to

இரும்பு கம்பிகளுக்கு மாற்றாக பேரீச்ச மர மட்டைகள்: ஓமனில் பணிபுரியும் தமிழ்நாட்டை சேர்ந்த பேராசிரியர்களுக்கு காப்புரிமை
 
 
மஸ்கட்:  ஓமன் நாட்டில் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் தூத்துக்குடி மற்றும் மதுரை மாவட்டங்களை சேர்ந்த முனைவர். ந. அரவிந்த் மற்றும் கல்லூரி புல முதல்வர். ஆ. வல்லவராஜ் போன்றோர் உட்பட ஏழுபேர் கொண்ட குழுவினர் இந்திய அரசின் காப்புரிமை பெற்றுள்ளனர்.
 
முனைவர். ந. அரவிந்த் ஓமன் தேசத்தில் உள்ள தேசிய பல்கலைக்கழகத்தில், அமைப்பியல் பொறியியல் துறையில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். அவர், பொறியியல் கல்லூரி மாணவர்களுக்காக ஆங்கிலத்தில் இரு நூல்களையும், தமிழில் ‘உடல் குறள் உறைவிடம்’ என்ற நூலையும் எழுதியுள்ளார். இவருடைய சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உமரிக்காடு என்ற கிராமம்.
 
இழுவிசையை தாங்குவதற்காக கற்காரையெனும் காங்கிரீட்டிற்குள் போடும் இரும்பு கம்பிகளுக்கு மாற்றாக பேரீச்ச மரத்தின் பதப்படுத்தப்பட்ட மட்டைகளை பயன்படுத்தலாம் என்ற புதுமையான கண்டுபிடிப்பிற்காக எங்களுக்கு இந்திய அரசாங்கம் பல்வேறுகட்ட சோதனைகளுக்கு பிறகு இந்த காப்புரிமையை வழங்கியுள்ளது.
ஓமன் தேசத்தின் தேசிய மரம் பேரீச்ச மரமாகும். இங்கு உள்ள கோடிக்கணக்கான மரங்களில் இருந்து வீணாகும் மட்டைகளை கம்பிகளுக்கு மாற்றாக உபயோகப்படுத்தலாம் என்று பேராசிரியர் ஆ. வல்லவராஜ் யோசனை வழங்கினார். இந்த ஆய்வக பரிசோதனைகளுக்காக ஓமான் அரசாங்கம் எங்களுக்கு ஆராய்ச்சி மானியம் தந்தது. இந்த பேரீச்ச மர மட்டைகள் 18 அடி நீளம் வரை வளரக்கூடியது. இவற்றை சிறிய கட்டிடங்கள், வாகன கொட்டகை கட்டுவதற்கும் மற்றும் தண்டவாளத்திற்கு அடியில் போடப்படும் காங்கிரீட்டால் ஆன குறுக்குச் சட்டங்கள் செய்வதற்கும் பயன்படுத்தலாம். இதனுடைய வலிமையை கண்ணாடி இழை வலுவூட்டப்பட்ட பல்படிமத்தினை (Glass Fibre Reinforced Polymer) வேதிப்பொருள் கலந்த கோந்து (epoxy resin) துணையுடன் சுற்றி ஒட்டுவதன் மூலம் அதிகப்படுத்தினோம். இவ்வாறு தயாரிக்கப்பட்ட காங்கிரீட் சட்டங்களானது கம்பிகள் போடாத சட்டங்களைவிட 42 சதவீதம்வரை சுமைகளை கூடுதலாக தாங்கியது. இது துரு பிடிக்காது மற்றும் செலவும் குறைவு. இந்தோனேசியா போன்ற நாடுகளில் மூங்கில் குச்சிகளை இதே முறையில் பயன்படுத்தி நிறைய கட்டிடங்கள் கட்டியுள்ளனர். இந்த ஆராய்ச்சியானது, கட்டுமான துறையில் பேரீச்ச மரங்கள் நிறைந்த நாடுகளான வளைகுடா நாடுகள் மற்றும் இந்தியாவின் கவனத்தை ஈர்க்கும் என்று நம்புகிறோம்.

இந்த ஆராய்ச்சியில் ஓமன் நாட்டை சேர்ந்த 3 மாணவர்களும், ஆய்வக பயிற்றுவிப்பாளர் இமான் மற்றும் ராணி பாண்டியன் போன்றோரும் ஈடுபட்டுள்ளனர். அதுபோல் இளம் கண்டுபிடிப்பாளர்களை மேம்படுத்தும் நோக்கில் 'காப்புரிமை பாதுகாப்பு உத்திகள்' என்ற தலைப்பில் சென்னையில் உள்ள ‘இந்திய அறிவுசார் உடைமை’ (IP India) அலுவலகத்தில் பணிபுரியும் இயந்திரவியல் துறையை சார்ந்த காப்புரிமை துணை கட்டுப்பாட்டாளர்  எஸ். உதய ஷங்கர் அவர்கள் வழங்கிய ‘விழிப்புணர்வு பயிற்சி திட்டம்’ எங்களுக்கு காப்புரிமை விண்ணப்பிக்க மிகவும் ஊக்கத்தை தந்தது மட்டுமின்றி உதவியாகவும் இருந்தது.  இவர்கள் தவிர திரு. ந. கண்ணபிரான் மற்றும் சி. மணிகண்டன் போன்றோர் காப்புரிமை ஆவணங்களை சமர்ப்பிக்க உதவினர். காப்புரிமை பெற்ற அனைவரையும் பல்கலைக்கழக நிர்வாகம் பாராட்டியது.


Prof Aravind - OMAN   +968 9918 9644

Prof. Aravaind Interview in Youtube


Pl view, share, like and Subscribe





Prof Aravind (3).jpg
Prof Aravind (1).jpg
Prof Aravind (4).JPG
Reply all
Reply to author
Forward
0 new messages