ஊத்தங்கரை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்குத் தமிழ் இணையப் பயிற்சி

1 view
Skip to first unread message

மு இளங்கோவன்

unread,
Dec 19, 2009, 9:01:54 PM12/19/09
to தமிழ் இணையப் பயிலரங்கக் குழு
ஊத்தங்கரை வித்யா மந்திர் கல்லூரியில் நடைபெறும் பன்னாட்டுக்
கருதரங்கிற்கு வருமாறு பேராசிரியர் க.ப.அறவாணன் அவர்கள் அன்பு அழைப்பு
விடுத்தார்கள்.எனக்குக் கல்லூரி விடுமுறை என்பதால் முதல்நாள் செல்ல
நினைத்திருந்தேன்.

இந்த நேரத்தில் தலைமையாசிரியர் திரு.கவி. செங்குட்டுவன் அவர்கள் இணையம்
வழி அறிமுகம் ஆனார்கள். அவர்களிடம் என் வருகையை எடுத்துரைத்தபொழுது
மகிழ்ந்து அவர் பயின்ற அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும்
கணிப்பொறித்துறை மாணவர்களுக்கு என் தமிழ் இணையம் குறித்த உரை கிடைத்தால்
பயனாக இருக்கும் என்று நினைத்தார்கள்.

நானும் திட்டமிட்டவாறு 18.12.2009 பகல் 1 மணிக்கு ஊத்தங்கரை
அடைந்தேன்.பகலுணவுக்குப் பிறகு பள்ளிக்கு இருவரும் சென்றோம்.
தலைமையாசிரியர் அவர்கள் அன்புடன் வரவேற்றார்.

அந்தப் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் இணைந்து ஒரு கோடி உருவா
திரட்டி உயரிய மின்னணு நூலகம் உருவாக்கி அன்பளிப்பாகப் பள்ளிக்கு
வழங்கியுள்ளனர்.மிகச்சிறந்த கூண்டு வடிவ நூலகமாக அது உள்ளது.
அரசுப்பள்ளியில் இத்தகு நூலக வசதி யான் அறிந்தவரை இல்லை. அனைவருக்கும்
இது முன்மாதிரிப் பள்ளியாகத் திகழ்கிறது.இதில் பயின்ற முன்னாள் மாணவர்
ஒருவர் 20 இலட்ச உருவா நன்கொடை வழங்கியுள்ளார். அவர் பெயரில் ஒரு வளாகம்
உள்ளது.இச்செயல்கண்டு அவரை உள்ளம் குளிர்ந்து மனத்துள்
வாழ்த்தினேன்.வித்யா மந்திர் கல்லூரியின் தாளாளர் திரு.சந்திரசகரன்
அவர்கள் 40 இலட்சம் உருவா திரட்டித்தந்துளதாகவும் அறிந்தேன்.

2.30 மணியளவில் பயிலரங்கம் தொடங்கியது.கலந்துகொண்டவர்கள் பெரும்பாலும்
சிற்றூர்ப்புற மாணவர்கள் என்பதால் ஆர்வமுடன் பயிற்றுவித்தேன்.அனைவரும்
சுவடிகளை வைத்துக்கொண்டு குறிப்புகளை எடுத்துக்கொண்டனர்.அவர்கள்
பயன்பெறும்படி தமிழில் தட்டச்சிடுவது
தொடங்கி,மின்னஞ்சல்,உரையாடல்,மதுரைத் திட்டம்,தமிழ் மரபு
அறக்கட்டளை,மின்னிதழ்கள்,சுரதா தளம்,தட்சு தமிழ் பற்றியெல்லாம்
காட்சிப்படுத்தலுடன் எடுத்துரைத்தேன்.


ஐயம் போக்கிக்கொள்ள மாணவர்களை வேண்டினேன்.
ஒரு மாணவன் அருகே வந்து மட்டைப்பந்து ஓட்டம் இப்பொழுது எவ்வளவு என்று
வினவிச்சென்றான்.

அனைவரிடமும் விடைபெற்று திரு.செங்குட்டுவன் ஐயா அவர்களின் உதவியுடன்
வித்யா மந்திர் கல்லூரிக்குப் புறப்பட்டேன்.

Maalan

unread,
Dec 20, 2009, 8:34:36 AM12/20/09
to tamil-inaiya...@googlegroups.com
>>அந்தப் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் இணைந்து ஒரு கோடி உருவாதிரட்டி உயரிய மின்னணு நூலகம் உருவாக்கி அன்பளிப்பாகப் பள்ளிக்கு
வழங்கியுள்ளனர்.மிகச்சிறந்த கூண்டு வடிவ நூலகமாக அது உள்ளது.
அரசுப்பள்ளியில் இத்தகு நூலக வசதி யான் அறிந்தவரை இல்லை.<<

திரு கவி.செங்குட்டுவன் மின்னஞலோ, தொலைபேசி எண்ணோ கிடைக்குமா?

அன்புடன்
மாலன்

2009/12/20 மு இளங்கோவன் <muela...@gmail.com>

--
==================================================
"தமிழ் இணையப் பயிலரங்கக் குழு" வில் இருந்து இக்கடிதம் பெறப்பட்டுள்ளது.

மடல்களை அனுப்புவதற்கு tamil-inaiya...@googlegroups.com என்னும் மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தவும்.

நன்றி..

Santhosh Selvarajan

unread,
Dec 20, 2009, 4:54:13 AM12/20/09
to tamil-inaiya...@googlegroups.com
ஐயா தங்கள்,,, முயற்ச்சிக்கு மிக்க நன்றி.!!! இது தான் இக்காலத்தின் தேவை..!!

2009/12/20 மு இளங்கோவன் <muela...@gmail.com>
ஊத்தங்கரை வித்யா மந்திர் கல்லூரியில் நடைபெறும் பன்னாட்டுக்

Selva Murali

unread,
Dec 20, 2009, 12:43:49 PM12/20/09
to tamil-inaiya...@googlegroups.com


2009/12/20 Maalan <maa...@gmail.com>

>>அந்தப் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் இணைந்து ஒரு கோடி உருவாதிரட்டி உயரிய மின்னணு நூலகம் உருவாக்கி அன்பளிப்பாகப் பள்ளிக்கு
வழங்கியுள்ளனர்.மிகச்சிறந்த கூண்டு வடிவ நூலகமாக அது உள்ளது.
அரசுப்பள்ளியில் இத்தகு நூலக வசதி யான் அறிந்தவரை இல்லை.<<

திரு கவி.செங்குட்டுவன்

98427-12109
99656-34541
04341-223011/223023




--
M.S.Murali (B+ve)
99430-94945
----------------------------
www.visualmediaa.com

Vijayalakshmanan

unread,
Dec 21, 2009, 1:58:48 AM12/21/09
to tamil-inaiya...@googlegroups.com
திரு மாலன் அய்யா அவர்களுக்கு வணக்கம், 

கவி. செங்குட்டுவன் அவர்களின் வலைத்தளத்திலிருந்து கிடைத்த தகவல்கள் இங்கே . 

கவி. செங்குட்டுவன்,
ஊத்தங்கரை -635207.
அலை பேசி :9842712109


2009/12/20 Maalan <maa...@gmail.com>



--
--
Regards,
Vijayalakshmanan
+91 97409 84705

http://blog.nilavan.net

Gopalakrishnan (Gopi)

unread,
Dec 21, 2009, 1:34:07 AM12/21/09
to tamil-inaiya...@googlegroups.com
முனைவர் மு.இ,

தமிழிணையத்தை அனைத்து தரப்பினரும் எட்டும் வண்ணம்  நீங்கள் முன்னெடுத்த மற்றொரு முயற்சி சிறப்பாக முடிந்தது குறித்து மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

இம்முறை தங்களை நேரில் சந்திக்க இயலாததால் எனக்கு வருத்தம். அடுத்த முறை நீங்கள் முன்னெடுக்கும் பயிலரங்கில் சந்திக்க ஆவலாய் இருக்கிறேன்.

இனிமையுடன்,

கோபி

2009/12/20 மு இளங்கோவன் <muela...@gmail.com>
ஊத்தங்கரை வித்யா மந்திர் கல்லூரியில் நடைபெறும் பன்னாட்டுக்

Selva Murali

unread,
Dec 21, 2009, 10:00:04 AM12/21/09
to tamil-inaiya...@googlegroups.com
மிக்க மகிழ்ச்சி அய்யா!
என்னாலும் கலந்துகொள்ள இயலாதது வருத்தமாக இருக்கிறது. அதுவும் எங்கள் ஊர் மிக அருகில்.
நிச்சயமாக அடுத்த பயிலரங்களில் கலந்துகொள்ள முயற்சிக்கிறோம்
நன்றி!

2009/12/21 Gopalakrishnan (Gopi) <hig...@gmail.com>
Reply all
Reply to author
Forward
0 new messages