---------- Forwarded message ----------
From:
Nilavan <vijayala...@gmail.com>
Date: 2009/10/21
Subject: [:: ஈர்த்ததில்] இந்திய அரசு செம்மொழி நிறுவன விருது அறிவிப்பு
To:
vijayala...@gmail.com
தமிழ் சங்க இலக்கியங்களில் ஆய்வுகள் பல மேற்கொண்டு வெவ்வேறான தகவல்களை வெளிக்கொணரும் அறிஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் இந்திய அரசின் செம்மொழி நிறுவனம் விருதுகளை அறிவித்திருக்கிறது.
எமது நண்பரும், புதுச்சேரி பலகலைக்கழகத்தில் பேராசிரியராய் பணிபுரிபவருமாகிய முனைவர் திரு மு.இளங்கோவன் அவர்களுக்கு செம்மொழி இளம் அறிஞர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பேராசிரியர்கள் அடிகளாசிரியர், ஜார்ஜ் ஹார்ட்டு அவர்களுக்கு தொல்காப்பிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விருது இந்திய குடியரசுத் தலைவரால் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழுக்காகத் தம் நேரங்களை ஒதுக்கி, ஆய்வுப்பணிகளில் ஈடுபட்டு, உழைக்கும் தமிழறிஞர்களுக்கு இவ்விருது ஊக்கமும், ஆக்கமும் அளிக்கும், மேலும் தமிழ் இளைஞர்கள் இவ்வகைப் பணிகளில் ஈடுபட ஊக்கப்படுத்தும். இவ்விருதினைப் பெறும் மு.இளங்கோவன், அடிகளாசிரியர், ஜார்ஜ் ஹார்ட்டு ஆகியோருக்கு எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
--
Posted By Nilavan to :: ஈர்த்ததில் at 10/21/2009 08:38:00 AM