தொடுவானம்- இந்திய மின்னாளுமை திட்டங்களின் முன்னோடி

7 views
Skip to first unread message

Selva Murali

unread,
Sep 1, 2011, 5:15:58 AM9/1/11
to selvamurali

தொடுவானம்- இந்திய மின்னாளுமை திட்டங்களின் முன்னோடி


வான்வெளியில் உள்ள செயற்கை கோள்களை மேலாண்மை செய்திட, பெரிய நிறுவனங்களில் உற்பத்தி பணியில் இயந்திரங்களை மேலாண்மை செய்திட , 
சேவை நிறுவனங்களில் மேலாண்மை செய்திட, இரு சக்கர வாகனங்கள் முதற்கொண்டு எல்லாவற்றிலும் கணினிகள் நுழையாத இடமில்லை. இவ்வளவு ஏன் சச்சின் டெண்டுல்கரை வீழ்த்த கூட தனியாக வியூகம் வகுக்க கூட கணினிகள் நுழைந்துவிட்டன. ஆனால் மக்களுக்கு சேவை செய்யவே தேர்ந்தெடுக்கப்படும் அரசாங்கத்தில் மட்டும் இன்னமும் முழுமையாக கணினிகள் நுழையாமல் இருப்பது மிகப்பெரிய ஆச்சர்யமே.....

ஆனால் அந்தக்குறையும் தற்போது நிவர்த்தியாகிவிட்டது... மதுரை மாவட்ட ஆட்சியர் திரு.சகாயம் அவர்கள் முயற்சியால்  அரசாங்க இயந்திரங்கள் வேகமாக இயங்க கணினி நுட்பம் பயன்படுத்தி மக்களின் குறைகளை களையவும், அலுவலர்களின் பணிச்சுமையை குறைக்கவும் கொண்டுவரப்பட்டதுதான் தொடுவானம்

ஆம் ,  உயர்திரு.மதுரை மாவட்ட ஆட்சியர் திரு.சகாயம் அவர்கள் மதுரை மாவட்ட மக்களுக்காக கிராமங்களில்இருந்தபடியே மனுக்களை நேரடியாக ஆட்சியருக்கு அனுப்பும் தொடுவானம் என்ற திட்டத்தினையும், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடுதிரை வழியாக குறைகளை சொல்லும் திட்டத்தினையும் அமல்படுத்தியுள்ளார்.

இத் தொடுவானம் திட்டம் இந்திய மின்னாளுமை திட்டத்தின் முன்னோடி என்று தாரளமாக சொல்லலாம். அட அப்படியென்ன வசதிகள் இத்திட்டத்தில் என்கிறீர்களா? இதோ பார்ப்போம்... 

எல்லாஇடங்களிலும் கணினி பயன்படுத்துகிறோம். ஆனால் அரசாங்க இயந்திரங்களில்  கணினியை பயன்படுத்துவதால் என்ன நன்மை?

இதோ மதுரை மாவட்ட ஆட்சியர் உயர்திரு.சகாயம்  அவர்கள் சொல்கிறார்..

ஏதோ ஒரு காரணத்திற்காக ஒரு மனு கொடுக்க ஆட்சியரை சந்திக்க வரும் ஒரு விவசாயி அந்த ஒரு நாளிற்காக அவன் வேலையை விட்டுவிட்டு காசு செலவு செய்துகொண்டு தன் கூலியை இழந்து வந்து  சந்திக்கிறான்,  அது தேவையா? அவர்கள் இருக்குமிடத்திலயே மனுக்களை அளிக்கும் வசதியை ஏற்படுத்திவிட்டால் அவர்கள் வேலை இழக்கவேண்டிய அவசியம் இல்லையே.... ஊதியத்தினை இழக்கவேண்டியதில்லையே.....

என்ற அவரின் எண்ணத்தில் எழுந்த திட்டம் படிப்படியாக தமிழ்உலகம் அறக்கட்டளை சார்பாக திரு. ஆல்பர்ட் பெர்னான்டோ அவர்கள் முன்னெடுப்பில் தகடூர் கோபி அவர்களின் தலைமையில்தொடுவானம்http://www.thoduvanam.com திட்டம் முதற்கட்டமாக நாமக்கல் மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்டது. 

இத்தொடுவானம் திட்டம் வழியாக இணையம் வழியாக நேரடியாக மாவட்ட ஆட்சியருக்கு புகார்களையும்/ஆலோசனைகளையும் அனுப்பலாம். மேலும் மாவட்ட ஆட்சியருடன் நேரடியாக காணொளி வழியாக கலந்துரையாடலாம். இதனால் யாரும் அவரவர்கள் பணியை விட்டுவிட்டு வர வேண்டிய அவசியம் இல்லையே. ஏனெனில் கிராமங்களுக்கு 5 தன்னார்வலர்களை எடுத்து அவர்களுக்கு பயிற்சி அளித்து  அவர்கள் வழியாக அக்கிராமத்தில் உள்ள மக்கள் தங்கள் குறைகளை தொடுவானம் இணைய தளம் வழியாக மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிவிடுவார்கள். பின் மாவட்ட ஆட்சியர் இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி உடனுக்குடன் தீர்வு காண அனுப்பிவைப்பார். 

நேரடி  காணொளி வசதி

அதே தளத்தில் நேரடியாக ஆட்சியர் அவர்களுடனும், அதிகாரிகளுடனும் பேசி தங்கள் குறைகளையும் கூறலாம். தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை அரசாங்ககள் முழுமையாக பயன்படுத்தினால் கிராமங்களும் முன்னேறும். நகரங்கள் மேலும் வலுப்பெறும்..



தொடுதிரை

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக ஒவ்வொரு திங்கள் கிழமையும் நடைபெறும் மனுநீதிநாளில் வரும் பல்லாயிரக்கணக்கானோர்களை சந்தித்து குறைகள் தீர்ப்பதும்் மிகப்பெரிய பணிதான். அதையும் குறைக்க மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடுதிரை(டச் ஸ்கிரின்) மூலமாகவும் குறைகள் அனுப்பலாம்.  இந்த தொடுதிரையில் அவர்கள் பெயர்களை மட்டும் கொடுத்தாலே மற்ற மனு சார்ந்த விபரங்கள் தேர்ந்தெடுத்தாலே போதும்.


அதே தளத்தில் நேரடியாக ஆட்சியர் அவர்களுடனம், அதிகாரிகளுடனும் பேசி தங்கள் குறைகளையும் கூறலாம். தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை அரசாங்ககள் முழுமையாக பயன்படுத்தினால் கிராமங்களும் முன்னேறும். நகரங்கள் மேலும் வலுப்பெறும்..

இதைவிட முக்கியம். நேரடியாக பேப்பர் பயன்பாடு என்பதும் அது தொலைந்துவிட்டது போன்ற சிக்கல்களும் இங்கே கிடையாது.


மிகப்பெரிய அதிசயம் !!

--->  http://itnewshot.blogspot.com/2011/09/blog-post.html

--
M.S.Murali (B+ve)
99430-94945
----------------------------------------------------------
India`s Leading Web Hosting Providers
www.rupeeshost.com
India`s First Cloud Hosting Provider
www.cloudsindia.in
----------------------------------------------------------

கவி.செங்குட்டுவன்

unread,
Sep 1, 2011, 8:55:59 AM9/1/11
to tamil-inaiya...@googlegroups.com
தொடுவானம் தொட்டுவிடும் தூரம்தான் சாதாரன ஏழை, நடுத்தர மக்களுக்கு, சகாயம் போன்ற உயர் அலுவலர்கள் முன்னெடுத்துச் செல்லும் போது.

2011/9/1 Selva Murali <mural...@gmail.com>

--
==================================================
"தமிழ் இணையப் பயிலரங்கக் குழு" வில் இருந்து இக்கடிதம் பெறப்பட்டுள்ளது.
 
மடல்களை அனுப்புவதற்கு tamil-inaiya...@googlegroups.com என்னும் மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தவும்.
 
நன்றி..



--
அன்புடன்..........
கவி.செங்குட்டுவன்,
ஊத்தங்கரை - 635207.
அலைபேசி: 9842712109 / 9965634541
தொலைபேசி: 04341- 223011 / 223023
மின்னஞ்சல்: rajend...@yahoo.co.in / kavi.sen...@gmail.com
வலைப்பூ : http://pumskottukarampatti.blogspot.com.
                     http://kaviyinkural.blogspot.com
                     http://mazalaiootru.blogspot.com
                     http://kaviugi.blogspot.com/
                     http://crcmittapalli.blogspot.com/




Reply all
Reply to author
Forward
0 new messages