மீண்டும் நான்காம் பாகத்தில்உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.....
இதுவரை வெப்சர்வர்கள், டிஎன்எஸ் சர்வர்கள், இணையம், பேண்ட்வித் என்றால் என்ன என்பது பற்றி பார்த்தோம்!!
இதுக்கு முன்னாடி நாம பார்த்தது Domain name system எனப்படும் வெப்சைட் பெயர்கள். அதைப்பற்றி விரிவாக பார்ப்போமா?
DNS பற்றி நிறைய பார்த்தோம். இந்த DNS எப்படி முழுமையாக இயங்குகிறது என்று பார்ப்போமா?
இந்த DNS முழுமையாக இயங்க கீழ்க்கண்ட பதிவுகள் அவற்றிற்கு முக்கியமாக தேவை.
A - பதிவு
இந்த A பதிவானது DNS ன் முக்கியமான அங்கம். அதாவது ஒரு இணையதளத்தின் பெயரை கொடுத்து உலாவும்போது அந்த இணையதளத்தின் ஆவணங்கள் எல்லாம் ஒரு சர்வரில் பதிந்து வைக்கப்பட்டுள்ளது. அந்த சர்வரின் IP முகவரியை இந்த A பதிவானது கொண்டிருக்கும்.
உதாரணத்திற்கு
www.tamilvanigam.com என்று கொடுத்தவுடன் நம் DNS சர்வரானது tamilvanigam.com ல் உள்ள DNS பதிவுகளை படிக்கிறது. அதில் A பதிவில் உள்ள 75.126.38.186 என்ற சர்வர் ஐபி முகவரியை பார்க்கிறது. பின் அந்த முகவரியை தொடர்புகொளளும்போது அங்கே உள்ள டிஎன்எஸ் ஆனது இந்த தளம் இந்த சர்வரில் இந்த பயனருக்கான இடத்தில் இந்த போல்டரில்(கோப்புக்குள்) (உதாரணம்: http://75.126.38.186/tamilva/public_html) வைக்கப்பட்டுள்ளது.
இந்த 75.126.38.186 என்ற ஐபி முகவரியானது ஒரு IPV4 முகவரியை கொண்டுள்ளது. இந்த IPV4 வரிசை எண்கள் எல்லாம் முடிந்துவிட்டதால் தற்போது IPV6 முறைமைக்கு மாறியிருக்கிறார்கள். அந்த ஐபி முகவரி 2001:0db8:85a3:0000:0000:8a2e:0370:7334 இப்படி வரும்.
மேலும் படிக்க...............