வணக்கம் நண்பர்களே!!
மீண்டும் வெப்ஹோஸ்டிங் பழகலாம் - 3 பகுதியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.
இதுவரை நாம் பார்த்தவைகள் என்னென்ன......?
இப்போது நாம் பார்க்கவிருப்பது இணையத்திலும் சரி நுட்பத்திலும் சரி மிகவும் முக்கியமானது
வெப்சைட்கள் எனப்படும் இணையத்தளங்கள் எதற்கு தேவை
வெப்சர்வர்கள், டிஎன்எஸ் சர்வர்கள், இணையம் எப்படி இயங்குகிறது
என்று பார்த்தோம்.
சரி, அன்னியன் படத்தில் கிளைமேக்சில் பிரகாஷ் ராஜ் அன்னியனை எப்படி கண்டுபிடிப்பார் என்று சொல்ல முடியுமா? அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் என்றெல்லாம் கேட்ககூடாது. அதற்கான பதில்களை சொன்னால் நீங்கள் இந்த கோர்சை வெகு எளிதாக கற்றுக்கொள்ளலாம்.
சரி பேண்ட்வித் என்று ஒரு வார்த்தை கேள்வி கேட்டிருக்கலாம் எல்லாரும். இணையத்தினை பயன்படுத்துபவர்கள் எல்லாரும் அறிந்திருப்பார்கள்.
ஆம், நம் வீட்டில் பயன்படுத்தும் இணையம் முதற்கொண்டு இணையத்தில் பயன்படுத்தும் இணையத்தளங்கள் வரை எல்லாருக்கும் பேண்ட்வித் தேவை.
இப்படித்தான் நம்மூர் முனுசாமி ஒரு நிறுவனத்தில் பிராட்பேண்ட் சேவையை வாங்கி ஒரு மூணு மாசம் கழித்து வந்த கட்டண அறிக்கையை பார்த்தபோது அவருக்கு ஹார்ட் அட்டாக் வராத குறை. ஆம், சாதாரணமாக வரவேண்டிய கட்டணத்தினை விட திடீரென அதிகமான 5 மடங்கு வந்துவிட்டதுதான் அதற்கு காரணம். உடனடியாக சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு வேகமாக ஓடினார். அவர் பில்லை காட்டி இது என்னன்னு எனக்கு தெரியாது. ஆனா வெளிநாட்டில் இருக்கிற பையன் ட்ட பேசறதுக்கு தான் பயன்படுத்துவேன். இவ்வளவுவெல்லாம் வராதுன்னு அடிச்சுப்பேசிபார்த்தார். ஆனால் சம்பந்தப்பட்ட நிறுவனம் சாதாரண நிறுவனமா,, ஒரு ஆள் உயரத்திற்கு ஒரு அறிக்கையை கொடுத்து நீங்க பயன்படுத்துன இணையத்திற்கான விபரம் இதில் இருக்கு.
’’நீங்கள் வழக்கமாக செலுத்திய கட்டணத்திற்கும் நாங்கள் வழங்கும் சேவையை விட அதிகமாக நீங்கள் இணையத்தினை பயன்படுத்துவிட்டீர்கள் ’’ அதனால்தான் பில் கட்டணம் அதிகமாக வந்தது என்று கூறினார்கள். அவருக்கு ஒன்றும் புரியவில்லை. அதிகமாக பயன்படுத்தினேன் சொன்னீங்களே அது பேர் என்னங்க என்று கேட்டார் அந்த அதிகாரிகளிடம்....
அப்போதுதான் அவரிடம் இருந்து பதில் வந்தது.... பேண்ட்வித் அதிகமாக இருக்கு. நாங்க கொடுத்த லிமிட் தாண்டி நீங்கள் பயன்படுத்தியதால் அதற்கேற்றார்ப்போல் நாங்கள் கட்டணம் கேட்டோம் என்றார்கள்....
அப்போதும் புரியவில்லை பேண்ட்வித் என்றால் என்ன என்று..?