வணக்கம் நண்பர்களே!!
ஆன்டிராய்டு 4 அடிப்படையிலான கணிப்பலகையை ( Tablet) எங்கள் நிறுவனம்
வெளியிட்டது. ஆனால் அதில் தமிழ் ஒத்திசைவு இல்லாத காரணத்தினால் அதன் வெளியீடு தள்ளிக்கொண்டே போனது. இது குறித்து பல்வேறு விவாதக்களங்களில் காணப்பட்ட செய்தி என்னவெனில்
ஆன்டிராய்டு , விண்டோஸ் அடிப்படையிலான கணிப்பலகைகள்(tablet) மற்றும் அலைபேசிகளுக்கு தமிழ் ஒத்திசைவை தரவில்லை. ஆகையால் ஓபேரா வை நிறுவி அதன் வழியாக மாற்றங்களை செய்து தமிழ் செய்திகளை படித்திருந்தோம்.
ஆனால்
ஆன்டிராய்டு 1.6 -ல் தமிழை பயன்படுத்தி தட்டச்சு செய்திடதமிழ்விசை தமிழா குழுவினரால் கொண்டுவரப்பட்டு பின் அனைவரும் பயன்படுத்த ஏதுவாக இருந்தது.
எனவே நிச்சயமாக இது எழுத்துரு சம்பந்தமான பிரச்னையாகத்தான் இருக்கும் என்று என்று எண்ணி தேடியபோது நிச்சயமாக இது எழுத்துரு பிரச்னையாகவே இருந்தது.
என்னவெனில் ஆன்டிராய்டு தன்னுடன் வழங்கும் எழுத்துருக்களில் தமிழ் உட்பட பல மொழிகளுக்கான எழுத்துருக்கள் சேர்க்கப்படவில்லை. எனவே அதன் தன்னியல்பான எழுத்துருவான DroidSansFallback எழுத்துருவில் யுனிகோடு அடிப்படையிலான தமிழ் இடங்களில் தமிழ் எழுத்துக்கள் இல்லை. எனவே பான்ட் கிரியேட்டர் வழியாக தமிழ் எழுத்துருவை சேர்க்கலாம் என்று முயற்சித்தேன். ஆனால் வேறு ஒரு குழுவில் வேறு மொழி பிரச்னைக்கு மைக்ரோசாப்ட்-ன் லதா எழுத்துருவை DroidSansFallback என பெயர் மாற்றம் செய்து பாண்ட் கோப்பில் இட்டால் எல்லா மொழியையையும் காணலாம் என்று கூறியிருந்தார்கள்.
அதனடிப்படையில் லதா எழுத்துருவை ரீநேம் செய்தும் பாண்ட் கோப்பில் இட்டும் தமிழ் கட்டம் கட்டமாகவே வந்தது. கடைசியாக எல்ஜி ஆப்டிமைஸ் -ல் சமீபத்திய அப்டேட்டிற்கு பிறகு தமிழ் வசதி வந்தது நினைவில் வந்தது. எனவே அதில் இருந்த Framework.jar என்ற பைலை root\system\framework -, கணிப்பலகைக்கு மாற்றி ரீஸ்டார்ட் செய்தவுடன் ஆன்டிராய்டு 4 வெகு சிறப்பாக தமிழ் மொழியை காட்டியது :)
கூடவே தமிழ் விசை வழியாக தமிழும் சிறப்பாக தட்டச்சவும் முடிந்தது. ஆனால் சில இடங்களில் முழுமையாக ரெண்டரிங் ஆகவில்லை என்றாலும் தட்டச்சு செய்து பதிந்த பின் மிகச்சரியாக தமிழ் வந்தது.
எனவே ஆன்டிராய்டு எல்லா பதிப்புகளுக்கும் கீழ்க்கண்ட எழுத்துருக்களை நிறுவி தமிழ் உட்பட எல்லா மொழியினையும் கொண்டுவரலாம்.
மேலும் திரு.தகடூர் கோபி அவர்கள் பல்வேறு விதமான எழுத்துருக்களை யுனிகோடு வடிவில் வெளியிட்டுள்ளார். எனவே எழுத்துரு மாற்றம் வேண்டுபவர்கள் அந்த எழுத்துருக்களை தரவிறக்கம் செய்து பெயர் மாற்றி ஆன்டிராய்டுல் பயன்படுத்தலாம் வித விதமான எழுத்துருக்களுடன் :)
எச்சரிக்கை.சில மொபைல்களில் ரூட்டிங் வசதியை அனுமதிப்பதில்லை. இல்லையேல் உங்கள் மொபைலின் வாரண்டி போய்விடும். எனவே கவனமாக பயன்படுத்தவும்
ஆன்டிராய்டில் தமிழு எழுத்துருக்கள் தரவிறக்க
http://dl.dropbox.com/u/8548231/droidfonts.zip
ரூட்டிங்கிற்கு பயன்படுத்திய மென்பொருள்
https://play.google.com/store/apps/details?id=com.jrummy.root.browserfree&feature=search_result#?t=W251bGwsMSwxLDEsImNvbS5qcnVtbXkucm9vdC5icm93c2VyZnJlZSJd
நமக்கு பிடித்தமான எழுத்துருக்களை சேர்க்க
http://www.higopi.com/index.php?option=com_jdownloads&Itemid=4&view=viewcategory&catid=11
ஏற்கனே TAM அடிப்படையில் உள்ள எழுத்துருக்களை யுனிகோடுக்கு மாற்றி ஆன்டிராய்ட் உட்பட எல்லா மொழிகளிலும் கொண்டு வர வழிமுறைகள் பற்றி திரு.தகடூர் கோபி அவர்கள் எழுதியுள்ள கட்டுரை
http://higopi.blogspot.in/2008/08/1.html
http://itnewshot.blogspot.in/2012/04/4.html -