You do not have permission to delete messages in this group
Copy link
Report message
Show original message
Either email addresses are anonymous for this group or you need the view member email addresses permission to view the original message
to selvamurali
தமிழ்வணிகம்.காம் -ல் இனி புத்தக மதிப்புரை
தமிழ்
வணிகம்(www.tamilvanigam.com) வாசகர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள். காலமறிந்து
புதுமைகளை அறிமுகம் செய்வதில் தமிழ் வணிகம்(www.tamilvanigam.com) எப்போதும் முன்னிற்கும். அந்த
வரிசையில் ஒரு புதிய முயற்சிக்கான தேடலைத் துவங்கி இருக்கிறது தமிழ்
வணிகம். படைப்பாளர்களை இணைய உலகத்துக்கு அறிமுகம் செய்து வைக்க அதுவொரு
நல்ல சந்தர்ப்பத்தை வழங்கும் என்று நம்புகிறோம்.
வளர்ந்து வரும் தொழில் நுட்பம் வாசிப்புப் பழக்கத்துக்கு வேட்டு வைத்து
விடும் என்பது ஒரு சாராரின் ஆதங்கக் குரல். ஆனால் அப்படியல்ல என்பதை
ஆண்டுதோறும் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே அவ்வப்போது நடத்தப்படும்
புத்தகக் காட்சிகள் நிரூபிக்கின்றன. அச்சு வடிவிலான புத்தகங்களை
இணையத்தில் கொண்டு சேர்ப்பது எளிமையான காரியம். புத்தகம் வெளியிட்ட
பதிப்பகங்கள் அல்லது ஆசிரியர்கள் தங்களுடைய புத்தகங்களை எங்களுக்கு
மதிப்புரைக்காக அனுப்பித் தரலாம்.இதன்வழியாக நமது புத்தகங்களை புத்தக
ஆர்வலகர்களுக்கு தெரியப்படு்த்தலாம். உங்களது புத்தகங்களை வாசகர்களிடம்
கொண்டு சேர்க்க நாங்கள் துணைநிற்கின்றோம்.
துறைசார்ந்த அறிஞர்களிடமிருந்து
மூலம் பெறப்படும் புத்தக விமர்சனங்கள் நமது தமிழ் வணிகத்தில்
வெளியிடப்படும். ஒவ்வொரு புத்தகத்திலும் இரண்டு பிரதிகள் விமர்சனத்துக்காக
அனுப்பி வைக்கப்பட வேண்டும். புத்தகங்களின் பிரதி (Soft Copy)
இருந்தாலும் இணைத்து அனுப்பலாம். இலவசமாகத் தரவிறக்கம் செய்யும் வாய்ப்பை
வழங்க நினைத்தால் அது பற்றிய குறிப்பையும் அனுப்பித் தரலாம்.
புதுமைகளை இருகரம் நீட்டி அரவணைக்கும் வாசகக் கண்மணிகள் தமிழ் வணிகத்தின் இந்த முயற்சிக்கும் ஆதரவளிப்பீர்கள் என்று நம்புகிறோம்.
புத்தகங்களை அனுப்ப வேண்டிய முகவரி....
M/S VisualMedia
C/o M.S.Murali
G.H.Backside,
Mathur. 635203
Krishnagiri District
Tamilnadu
வாசகர்கள்அனைவருக்கும்
மீண்டும் புத்தாண்டு வாழ்த்துகள். இனி வருங்காலம் நம் வாழ்வில்
வசந்தத்தைக் கொண்டு வந்து நிறைக்கவும், மகிழ்ச்சி நிலைக்கவும்
பிரார்த்தனை.