Fwd: [MinTamil] Re: தமிழ் இணையப் பயிலரங்கம் - தமிழாசிரியர்களுக்கான பணியிடைப் பயிற்சி

8 views
Skip to first unread message

கவி.செங்குட்டுவன்

unread,
Feb 25, 2012, 7:59:48 AM2/25/12
to mintamil, Maalan, msmuthu...@yahoo.co.in, N.Bala Kumar, deeokrishnagiri, editor, editor, editor, editor, edi...@pudhucherry.com, India Today Tamil, Rathina Vengadesan, tamil-inaiya-payilarangam, jayakanthan0005276t, K N.SHANTHI LAKSHMANAN, let...@indianexpress.com, let...@thehindu.co.in, puthiya thalaimurai, SUBRAMANIAM SENTHIL NATHAN, arul...@gmail.com, rave...@gmail.com, subbuutg, gajend...@gmail.com, uthangaraibrc


---------- Forwarded message ----------
From: கவி.செங்குட்டுவன் <kavi.sen...@gmail.com>
Date: 2012/2/24
Subject: Re: [MinTamil] Re: தமிழ் இணையப் பயிலரங்கம் - தமிழாசிரியர்களுக்கான பணியிடைப் பயிற்சி
To: mint...@googlegroups.com


வணக்கம் நண்பரே, தங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி. தங்களைப் பற்றியும்,
நண்பர் செல்வமுரளி பற்றியும் தொட்டுக்காட்டத்தான் முடிந்தது. காரணம்
நிழற்படம் இல்லை.

On 2/23/12, manikandan <mkdur...@gmail.com> wrote:
> வாழ்த்துக்கள் திரு.கவிசெங்குட்டுவனாரே. உங்கள் இணையப்பணித் தொடர எமது
> வாழ்த்துக்கள்.
> அன்புடன்
> முனைவர் துரை.மணிகண்டன்.
>
> On Feb 23, 4:53 pm, கவி.செங்குட்டுவன் @ செ.இராஜேந்திரன்
> <kavi.senguttu...@gmail.com> wrote:
>> அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் மூலம் கிருஷ்ணகிரி வருவாய் மாவட்ட
>> அளவிலான உயர்நிலை மற்றும் மேநிலைப் பள்ளி தமிழாசிரியர்களுக்கான 5 நாட்கள்
>> பணியிடைப் பயிற்சி கிருஷ்ணகிரியில் கடந்த 20.02.2012 முதல் நடைபெற்று
>> வருகிறது. முதல் நாள் நிகழ்வில் மாவட்ட முதண்மைக் கல்வி அலுவலர் திரு
>> கே.இராமாணுஜம், கிருஷ்ணகிரி மாவட்டக் கல்வி அலுவலர் திரு நா. அருள் முருகன்,
>> ஒசூர் மாவட்டக் கல்வி அலுவலர் திரு இ. மணி ஆகியோர் கலந்துக்கொண்டு
>> வாழ்த்துரையும், கருத்துரையும் வழங்கி உள்ளனர். இப்பயிற்சி முகாமில் கங்கலேரி
>> தமிழாசிரியர் திரு ஆ. பண்ணீர்செல்வம், கிருஷ்ணகிரி ஆண்கள் பள்ளி தமிழாசிரியர்
>> திருமதிமா.தமிழ்ச்செல்வி, இட்டிக்கல் அகரம் தமிழாசிரியர் திருமதி பா. சாந்தி
>> ஆகியோர் கருத்தாளர்களாக பங்கேற்றுள்ளனர்.
>>
>> இப்பயிற்சியில் நல்ல தமிழ் மொழி ஆர்வலரும் தமிழ் இலக்கிய ஆர்வலருமான மாவட்டத்
>> தொடக்க கல்வி அலுவலர் திரு நா. அருள்முருகன் அவர்கள் முயற்சியால் ஒவ்வொரு
>> நாளும் ஓர் சிறப்பு அழைப்பாளர் துறை வாரியாக அழைக்கப்பட்டு கருத்துரை
>> வழங்கப்பட்டு வருகிறது.
>>
>> அதன் அடிப்படையில் தமிழில் இணையப் பயன்பாடு குறித்து பயிற்சி அளித்திட நான்
>> அழைக்கப்பட்டிருந்தேன். அதன்படி இன்று காலை 10 மணியளவில் எனது இணையப்
>> பயிலரங்க
>> நிகழ்வு துவங்கி சரியாக 12 மணியளவில் நிறைவு பெற்றது. இந்நிகழ்வில் மாவட்டம்
>> முழுவதிலுமிருந்து வந்திருந்த உயர்நிலை மற்றும் மேநிலைப் பள்ளிகளில் 9,10
>> வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் கற்பிக்கும் 220 ஆசிரியர்கள் பங்கு பெற்றனர்.
>>
>> இந்நிகழ்வில் முதலில் மொழியின் வளர்ச்சி நிலைகளைக் குறிப்பிட்டுவிட்டு இணையதள
>> வகைப்பாடு, இணையதள வரலாறு, இணையக் குழுக்கள், தமிழில் மடலாற் குழுக்கள் எனக்
>> கூறி தமிழ் இணைய வளர்ச்சிக்கு பாடுபட்டவர்களான திருவாளர்கள் நா.கோவிந்தசாமி,
>> உமர்தம்பி, யாழன் சண்முகலிங்கம், பாலாபிள்ளை, முரசு முத்தெழிலன், முகுந்த்,
>> தகடூர் கோபி ஆகியோரையும் தமிழ் நூல்களையும் பண்பாட்டையும் காத்திட முயற்சி
>> மேற்கொண்டு வரும் மதுரைத் திட்டம் திரு கு. கல்யாணசுந்தரம், தமிழ் மரபு
>> அறக்கட்டளை திரு நா. கண்ணன், திருமதி சுபாஷினி ட்ரெம்மல், திரு ஆண்டோபீட்டர்
>> ஆகியோரையும், தமிழ் இணையப் பயிலரங்க முன்னோடியான திரு மு. இளங்கோவன்
>> உள்ளிட்டவர்களையும் நிழற்படத்தோடு அறிமுகம் செய்து வைத்தேன்.
>>
>> பின்னர் இணையத்தில் தமிழ் எழுத்துருக்கள் பயன்பாடு மற்றும் அதில் ஏற்படும்
>> சிக்கல்கள் குறித்தும் விளக்கி யுனிகோட் தட்டச்சின் சிறப்புகளை எடுத்துரைத்து
>> அதை பயன்படுத்தும் முறையையும் கூறி nhm writer பற்றிய அறிமுகத்தையும் அதை
>> பதிவிரக்கம் செய்யும் முறையையும் கூறினேன்.
>>
>> பின்னர் தமிழ் இணைய நூலகங்கள் வரிசையில் தமிழ் இணையக் கல்விக் கழகம் பற்றிக்
>> கூறி அப்பக்கத்தை திறந்து தமிழ் நூல்களில் சிலப்பதிகாரம் எடுத்து அதில்
>> புகார்
>> காண்டத்தில் நுழைந்து வாழ்த்துப் பாடலும் அதற்கான உரை விளக்கமும் காட்டிய
>> போது
>> அனைத்து ஆசிரியர்களுமே வியந்து போனார்கள். தொடர்ந்து தமிழ் மரபு அறக்கட்டளை,
>> மதுரை தமிழ் இலக்கிய மின்திட்டம், நூலகம், காந்தளகம், விருபா
>> உள்ளிட்டவைகளையும் அறிமுகம் செய்தேன்.
>>
>> பின்னர் திரட்டிகள் வரிசையில் தமிழ்மனம், தமிழ்வெளி, திரட்டி, திண்ணை,
>> கீற்று,
>> தமிழம் நெட் ஆகியவற்றை அறிமுகம் செய்தேன்.
>>
>> அதன் பின் தமிழ் விக்கிபீடியா, தமிழ் விக்சனரி, பற்ரியும் அதன் பயன்பாடுகள்
>> மற்றும் நமது பங்கேற்பு பற்றியும் எடுத்துக்கூறி அதில் உள்ளே அழைத்துச்
>> சென்றேன்.
>>
>> பின்னர் மின்னஞ்சல் கணக்கு துவக்கிடும் முறைகள் மற்றும் வலைப்பூ துவக்கிடும்
>> முறைகள் குறித்து விரிவாக விளக்கியும் துவக்கியும் காட்டப்பட்டது.
>>
>> இறுதியாக தமிழ் இணைய மாநாடுகள், தமிழ் இணைய வானொலிகள் உள்ளிட்ட செய்திகள்
>> அவற்றின் வலை முகவரியோடு காட்டப்பட்டது.
>>
>> நிகழ்ச்சியைத் துவக்கிடும் முன்பே பங்கேற்பாளர்களின் நிழற்படத்துடன் ஓர்
>> சிறிய
>> அறிமுகச் செய்தியை வலைப்பூவில் வெளியிட்டுவிட்டுத்தான் நிகழ்ச்சியைத்
>> துவக்கினேன் எனவே பங்கேற்பாளர்கள் இறுதிவரை ஆர்வத்தோடே இருந்தனர்.
>>
>> ஓர் முழு மாவட்டத்தையுமே இணைய மூலம் இணையச் செய்யும் வாய்ப்பு கிட்டியமைக்கு
>> மிக்க மகிழ்வு.
>>
>> --
>> Posted By கவி.செங்குட்டுவன் @ செ.இராஜேந்திரன் to கல்விக் கோயில் at
>> 2/23/2012 03:53:00 AM
>
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil


--
அன்புடன்..........
கவி.செங்குட்டுவன்,
ஊத்தங்கரை - 635207.
அலைபேசி: 9842712109 / 9965634541
தொலைபேசி: 04341- 223011 / 223023
மின்னஞ்சல்: rajend...@yahoo.co.in / kavi.sen...@gmail.com
வலைப்பூ : http://pumskottukarampatti.blogspot.com.
                    http://kaviyinkural.blogspot.com
                    http://mazalaiootru.blogspot.com
                    http://kaviugi.blogspot.com/
                    http://crcmittapalli.blogspot.com/



--
அன்புடன்..........
கவி.செங்குட்டுவன்,
ஊத்தங்கரை - 635207.
அலைபேசி: 9842712109 / 9965634541
தொலைபேசி: 04341- 223011 / 223023
மின்னஞ்சல்: rajend...@yahoo.co.in / kavi.sen...@gmail.com
வலைப்பூ : http://pumskottukarampatti.blogspot.com.
                     http://kaviyinkural.blogspot.com
                     http://mazalaiootru.blogspot.com
                     http://kaviugi.blogspot.com/
                     http://crcmittapalli.blogspot.com/




Reply all
Reply to author
Forward
0 new messages