சில மாற்றங்கள்

7 views
Skip to first unread message

Ravishankar

unread,
Dec 26, 2007, 10:13:07 AM12/26/07
to tamil-blog...@googlegroups.com
இந்த open-opml திட்டம் மீது அசாதாரணமான திட்டமிட்ட தேவையற்ற தவறான தாக்குதல்கள் தமிழ் வலைப்பதிவுலகில் முன்னெடுக்கப்படுவதை நீங்கள் அறிவீர்கள். இந்தத் திட்டத்தின் முக்கியத்துவம், தாக்கம், வெற்றியைப் புரிந்து கொள்ள இதுவே அத்தாட்சி. இதைத் தொடர வேண்டும் என்ற உறுதியையும் இதுவே அளிக்கிறது

விமர்சனம் எழும் ஒவ்வொரு இடத்திலும் போய் விளக்கம் தருவது எந்த விதத்திலும் பயனளிக்கப்போவதில்லை என்பதால் அமைதியாக இருப்போம்.

ஆனாலும், நம் திட்டத்தின் மேல் திட்டமிடப்பட்ட விசமத் தாக்குதல்கள் நிகழலாம் என்பதால் சில மாற்றங்களை உங்களைக் கலந்தாலோசிக்காமல் செயற்படுத்தி இருக்கிறேன். ஏற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன். மாற்றுக் கருத்து இருந்தால் தெரிவியுங்கள். அதற்கேற்ப மாற்றங்களைச் செய்யலாம்.

மாற்றங்கள்:

1.கூகுள் ரீடர் பொதுக்கணக்கு, ப்ளாக்லைன்ஸ் பொதுக்கணக்கு இரண்டின் கடவுச்சொற்களையும் மாற்றி இருக்கிறேன். அவற்றை பொதுவில் வெளிப்படுத்த விரும்பவில்லை என்பதால் இங்கு தெரிவிக்க இயலாது. நண்பர்களுக்குத் தனி மடலில் அனுப்பி வைக்கிறேன்.

2. இந்தக் குழும மடல்கள் பொதுப் பார்வைக்குவராது. உறுப்பினர்கள் மட்டுமே பார்க்க முடியும். புதிதாகச் சேர விரும்புபவர்களும் மட்டுறுத்தலுக்குப் பிறகே சேர்வார்கள்.

இந்த இரு நடவடிக்கைகளால் விசமிகளால் நம் பதிவுப் பட்டியலைத் தாக்க முடியாது என்று உறுதிப்படுத்தலாம். முற்றிலும் திறந்த முறையில் செயல்படத் தான் என் விருப்பம். ஆனால், அதற்குத் தமிழ் வலைப்பதிவுலகம் தயாராகவில்லை என்றே உணர முடிகிறது. குறைந்தபட்சம் விக்கி மென்பொருள் போல் யார் யார் பங்களிக்கிறார்கள் என்பதைக் கண்காணிப்பதற்காவது வாய்ப்புகள் இருக்க வேண்டும். அதுவும் இல்லை. நம்மிடம் இருப்பதோ ஆக்கப்பூர்வப் பங்களிப்புக்கு உதவும் கூகுள் ரீடர் என்று மிக எளிமையான கருவி மட்டுமே. விசமிகளை எதிர்க்கொள்வதற்காக கருவியை மேம்படுத்த நேரத்தை வீண்டிக்க இயலாது.

ஆக,  open opml என்பதில் இருந்து சற்று விலகி free opml என்ற முறையில் செயல்படலாம். நாம் நம் opmlஐ வெளியிட்ட உடன் அது முற்றிலும் free to change தானே? இதை விட மேம்பட்ட, தரமான opml ஐ வெளியிட நினைப்பவர்கள் நம் opmlஐயே மூலதனமாகக் கொண்டு அவர்கள் விரும்பும் கருவி, அவர்கள் வகுக்கும் தர நிர்ணயம் ஆகியவற்றுடன் வேறு ஒரு opmlஐ வெளியிட இயலும் தானே?

இரு வாரங்களுக்கு முன் விதை விட்டு இப்போது 1000+ பதிவுகள் என்ற பழத்துடன் வந்திருக்கிறோம். மரத்தை எப்படி வளர்க்கலாம் என்று ஆலோசனை சொல்பவர்களுக்கு "எங்களுக்கு இப்படித் தான் மரம் வளர்க்கத் தெரியும்" என்று ஒப்புக் கொண்டு பழத்தைத் தருவோம். பழத்தைச் சுவைத்து விட்டு மரம் வளர்க்கத் தெரிந்தவர்கள் அந்தப் பழத்தில் உள்ள விதையைப் பயன்படுத்திக் கொள்ளட்டுமே?

boston bala விடுமுறை விட்டு வந்து விட்டீர்களா? புத்தாண்டுக்குள் 1500+ பதிவுகள் என்ற நம் இலக்கை அடைய முடியுமா? புத்தாண்டுக்கு இந்ந வெளியீட்டை அளிக்கும் போது நம்முடைய இந்தச் செயல்பாட்டு மாற்றத்தையும் உலகுக்குத் தெரிவிக்கலாம்.

இன்னொன்று, இது என்னுடைய திட்டம் என்றே குறி வைத்துத் தாக்கப்படுகிறது. புத்தாண்டு வெளியீட்டை குழுமம் சார்பில் வேறு யாருமோ இல்லை அனைவருமோ செய்ய இயன்றால் நன்றியுடையவனாவேன். இல்லை, நானே செய்து கல்லடிகளை வாங்கிக் கொள்ளவும் தயாரே

மயூ, இது தமிழ்மணத்துக்கு எதிரான அரசியல் என்று ஏன் விளங்கிக் கொள்ளப்படுகிறது என்று எனக்கு நன்றாகவே புரிகிறது. என்னுடைய கணிமை பதிவுஉ இடுகைகளைப் படித்தால் உங்களுக்குப் புரிய வரும்.

அன்புடன்
ரவி

Ravishankar

unread,
Dec 26, 2007, 10:15:06 AM12/26/07
to tamil-blog...@googlegroups.com
மயூ,

இனிமேல் நான் எழுதப்போகும் கணிமை பதிவு இடுகைகளைப் படித்தால் உங்களால் புரிந்து கொள்ள இயலும் என்று சொல்ல வந்தேன்.

ரவி

ila

unread,
Dec 28, 2007, 3:55:15 PM12/28/07
to tamil-blogs-open-opml
ரவி,
இந்தக் கல்லடிக்கெல்லாம் காரணம் பதிவுகளே. இனி OPML பற்றிய பதிவுகளை
நிறுத்துவோம். திட்டம் வெற்றி அடைந்தவுடன் ஏதாவது ஒரு திரட்டியில் இந்த
OPMLஐ முயற்ச்சித்து பார்ப்போம்(இருக்கவே இருக்கு சங்கமம்). பின்னர்
இதைப் பற்றி வெளியே சொல்வோம்.

இந்தக் குழுவை பொதுவுக்கு இப்போது கொண்டு வருவதில் எனக்கும்
உடன்பாடில்லை. அதேபோல் தமிழ் பதிவுகள் யாராவது பதிய ஆரம்பித்தால் நமக்கு
information கிடைக்குமாறு ஏதாவ்து tool இருந்தா சொல்லுங்க, போட்டு
பார்த்துருவோம்.



On Dec 26, 10:15 am, Ravishankar <ravishankar.ayyakka...@gmail.com>
wrote:

Ravishankar

unread,
Dec 28, 2007, 5:46:05 PM12/28/07
to tamil-blog...@googlegroups.com
On Dec 28, 2007 9:55 PM, ila <ilam...@gmail.com> wrote:
ரவி,
இந்தக் கல்லடிக்கெல்லாம் காரணம் பதிவுகளே. இனி OPML பற்றிய பதிவுகளை
நிறுத்துவோம். திட்டம் வெற்றி அடைந்தவுடன் ஏதாவது ஒரு திரட்டியில் இந்த
OPMLஐ முயற்ச்சித்து பார்ப்போம்(இருக்கவே இருக்கு சங்கமம்). பின்னர்
இதைப் பற்றி வெளியே சொல்வோம்.

இளா, இந்தத் திட்டத்துக்கு வெற்றி என்றெல்லாம் ஒன்றும் இல்லை. 2007 முடிவில் 1500 பதிவுகள் பட்டியல் என்பது இலக்கு. அதை எட்ட முடியும் என்றே நினைக்கிறேன். எட்ட இயலாவிட்டாலும் சேர்த்த வரை ஒரு OPML கோப்பாக வெளியிட வேண்டியது தான். பிறகு ஒவ்வொரு மாதமும் எவ்வளவு சேர்க்கிறோமோ அதையும் தொடர்ந்து இற்றைப்படுத்தி வெளியிட்டு வரலாம்.

OPML குறித்த பதிவுகள் பிரச்சினை இல்லை. உண்மையில் OPML என்றால் என்ன, இந்தத் திட்டத்துக்கு google reader போன்றவை எந்த வகையில் உதவுகின்றன என்ற புரிதல் இல்லாமலும் புரிதல் இருந்தாலும் காட்டிக் கொள்ள விரும்பாதவர்களாலும் தான் பிரச்சினை. இது குறித்து சில விழிப்புணர்வு இடுகைகளைப் போடுவதும் அவசியமே.

கோப்பைப் பொதுவில் வெளியிடாமல் தனியொரு திரட்டியில் சோதித்து வெளியிட்டால், அது திட்டத்துக்கு பெரிய பின்னடைவு, சாயம், முத்திரை எல்லாவற்றையும் கொண்டு வந்து விடும். உண்மையில், இதில் சோதிக்க ஒன்றுமில்லை.

ஒரு வேளை, சங்கமத்துக்கு இதை நீங்கள் பயன்படுத்த விழைந்தாலும் கோப்பு பொதுவில் வெளியிடப்பட்ட பிறகு பயன்படுத்திப் பார்க்குமாறு வேண்டிக் கொள்கிறேன்.
 
இந்தக் குழுவை பொதுவுக்கு இப்போது கொண்டு வருவதில் எனக்கும்
உடன்பாடில்லை.

விசமிகள் தாக்குதல் உள்ளிட்ட காரணங்களுக்காக bloglines பொதுக்கணக்கு போன்றவற்றின் கடவுச்சொல்லைத் தான் தற்போது பொதுவில் வைக்க இயலாத நிலை இருக்கிறது. இந்தக் குழுமத்தைத் திறந்து வைப்பதில் பிரச்சினை இல்லை. புத்தாண்டு OPML கோப்பு வெளியீட்டுக்குப் பிறகு திறந்து வைக்கலாம் என்பதே என் பரிந்துரை.

 
அதேபோல் தமிழ் பதிவுகள் யாராவது பதிய ஆரம்பித்தால் நமக்கு
information கிடைக்குமாறு ஏதாவ்து tool இருந்தா சொல்லுங்க, போட்டு
பார்த்துருவோம்.

புதிய பதிவுகளைக் கண்டு கொள்வதற்கான குறுக்கு வழியை icarus prakash இந்த இடுகையின் மறுமொழியில் தெரிவித்து உள்ளார். பார்க்க - http://kanimai.blogspot.com/2007/12/defective-by-design.html

அன்புடன்
ரவி

மாலன்

unread,
Dec 29, 2007, 1:59:18 AM12/29/07
to tamil-blogs-open-opml
அன்புள்ள நண்பர்களுக்கு,

கடந்த சில ஆண்டுகளில் தமிழ் வலைப்பதிவுகள் எண்ணிகையில் வளர்ச்சி
கண்டிருக்கின்றன. ஆனால் உள்ளடகத்தின் கனத்தில் சரிவு கண்டிருக்கின்றன.
திரட்டிகள் கவனம் பெறுவதற்கான ஒரு வாய்ப்பைத் தருவதால், கவனம் பெறுகிறோம்
என்ற மிதப்பே பாவனைகளை மேற்கொள்ளப் பதிவர்களை உந்துகிறது என்பதனால்
பாவனைகளே பதிவாகிப் போகின்றன. கண்ணாடி முன் நின்று முகம் பார்த்து
மகிழும் மனிதர்களைப் போல, பஸ்ஸில் பெண்களின் கவனத்தை ஈர்க்க முற்படும்
மீசை அரும்பாத ஆண்களைப் போல, திருவிழாவில் ஆண்களின் கவனத்தை ஈர்க்க
முற்படும் வளர் இளம் பருவத்துச் சிறுமிகளின் செய்கைகளைப் போல பல பதிவுகள்
இருந்து வருகின்றன. இவற்றோடு திரட்டிகள் குழு மனப்பான்மைக்கு
உரமளிக்கவும் செய்வதால், கருத்துக்கள் மீதான விவாதங்களை நொடிப்பொழுதில்
தனிமனிதர்கள் மீதான அவதூறுகளாகவும், துச்சமான எள்ளல்களாகவும்
ஆக்கிவிடவும் செய்கின்றன. ஓர் ஆரோக்கியமான கருத்துலகு உருவாக இந்தப்
பண்புகள் உதவாது.

இதைவிடப் பெரும் அபாயம், திரட்டிகளின் நிர்வாகிகள் முதலாளிகளைப் போல
கட்டளைகள் இடுவதையும், பதிவர்களை பயனாளிகளைப் போல நடத்துவதும், அவர்கள்
பயனாளிகள்தான் என்பதை பதிவர்களே ஏற்றுக் கொள்வதைப் போன்ற ஒரு மனோநிலையை
அவர்களிடம் ஏற்படுத்த முனைவதும்தான். உணமையில் பதிவர்கள் பயனாளிகள் அல்ல,
அவர்கள் பங்களிப்பவர்கள்.
இந்தச் சூழ்நிலையில் தமிழ் வலைப்பதிவுகளை முன்னெடுத்துச் செல்வதற்கு,
திரட்டிகளைச் சாராது பதிவுகள் செயல்படும் நிலைக்கு எடுத்துச் செல்வது
அவசியம்.
அதை நோக்கி நீங்கள் துவங்கியிருக்கும் முயற்சிகள்
வலுப்படுத்தப்படவேண்டியவை. விமர்சனங்களும் கல்லடிகளும் அரசியல்
சாயப்பூச்சுக்களும் சுமத்தப்படும். ஆனால் அதைப் பொருட்படுத்தாது
முன்னேறிச் செல்லுங்கள். 1500 பதிவுகள் என்பதை ஒரு இலக்காக வைத்துக்
கொள்ளலாம். அதை 2007ன் இறுதிக்குள் எட்ட இயலாது போனாலும் அதற்காகக்
காத்திருக்க வேண்டியதில்லை. 1000 என்பதே ஒரு critical mass தான்.
தொழில்நுட்பமும் கூட அவ்வப்போது சரிபார்த்து இற்றைப்படுத்திக் கொள்ளலாம்.
எல்லாத் துறைகளிலும் evoluton என்பது இயல்பானதே.

எந்த நெடும்பயணமும் ஒரு சிறு அடியில்தான் துவங்குகிறது.
அன்புடன்
மாலன்

On Dec 29, 3:46 am, Ravishankar <ravishankar.ayyakka...@gmail.com>
wrote:
> இடுகையின் மறுமொழியில் தெரிவித்து உள்ளார். பார்க்க -http://kanimai.blogspot.com/2007/12/defective-by-design.html
>
> அன்புடன்
> ரவி
Reply all
Reply to author
Forward
0 new messages