வெள்ளை சேலை கட்டீட்டு பேய் வந்துடா நான் இன்னைக்கு பார்த்தேன் என
சொல்வதையும் கேட்டிருக்கிறேன். பிசாசு கல் எடுத்து ஏறிந்ததுடா என
சொல்வதையும் கேட்டிருக்கிறேன். எனக்கும் பல நாட்களாக எப்படியாவது ஒரு
நாள் பிசாசை பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தது ஆனால் என் கண்களுக்கு
இதுவரை தெரியவில்லை.
இப்போது பேய்களுக்கு பஞ்சமில்லை பேயாட்டிகளுக்கும் பஞ்சமில்லை. ஒவ்வெரு
மதங்களிலும் பேய் பிசாசுகளை விரட்டும் ஸ்பெசலிஸ்ட்கள் இருக்கின்றனர்.
அவர்களிடம் இருக்கும் சக்தியால் உடம்பில் புகுந்திருக்கும் பேய்களை
வெளியே கொண்டு வந்து விடுகின்றனர். இதில் பொதுவாக இறந்து போனவர்கள் தான்
வருகின்றனர். வேறு பல பிசாசுகளும் வருகின்றன.
இன்று குடும்ப பெண்களையும் இளகிய மனது கொண்ட ஆண்களையும்இந்த பிசாசுகள்
ஆட்டி படைக்கிறது அவர்களின் வாழ்கையே சீரழியும்அளவிற்கு கொண்டு
விடுகிறது.
உண்மையில் பிசாசு ஓன்று இருக்கிறதா?
இன்று மத குருமார்களும் மதத்தை வைத்து பிழைப்பு நடத்தும் போலி மத
வியாபாரிகளும் பிசாசு பேய் போன்ற கெட்ட விதைகளை மக்கள் மத்தியில்
விதைத்து அதன் மூலம் ஆதாயம் தேடி வருகின்றனர். மத கூட்டங்களை விளம்பர
படுத்தும் சுவரொட்டிகளில் பேய், பிசாசு, பில்லி சூனியம்
போன்றவற்றிலிருந்து விடுதலை அளிக்கப்படும் என விளம்பர படுத்துகிறார்கள்.
இதை பார்க்கும் அப்பாவி மக்களும் நம்பி ஏமாந்து இந்த வியாபாரிகளுக்கு
அடிமையாகின்றன .
வாழ்க்கையில் தன்னம்பிக்கை இழந்த மக்கள், கணவனின் பொறுப்பின்மை தனத்தால்
செல்லும் மனைவிமார்கள், உழைக்க தெரியாத ஆண்கள், தவறான பாதையில்
செல்லுபவர்கள் இப்படி பட்ட ஆண்களும் பெண்களும் தான் பெரிதும்
ஏமாறுகிறார்கள். இவர்களுக்கு தான் பேயும் பிசாசும் வருகிறது. இவர்கள்
தங்கள் உடம்பிற்குள் வந்து புகுந்து விடுகிறது என நம்புகிறார்கள், இப்படி
தான் அந்த நண்பனை பார்க்க வேண்டும் என நானும் இன்னொரு நண்பனுமாக
சென்றிருந்தோம். என்னடா ஆச்சு என விசாரித்தேன் . ஆமாடா என்னுடைய உடம்பில
ஒருத்தன் இருக்கான்டா. நேற்றைக்கு பாஸ்டர் ஜெபம் பண்ணி போயிடிச்சி .
வயிற்றுக்குள்ள இருந்தான் வாந்தி எடுத்த பிறகு தான் போச்சு அப்படி
சொன்னான் . சரி போயிடிச்சி தானே அப்பா வீட்டுக்கு வரலாமில்ல என
வினவினேன் , இல்ல இன்னும் ஒரு வாரத்திற்கு வருமாம் அதனால இங்கேயே இருக்க
சொல்லியிருக்கார். அப்படி சொன்ன நண்பன் ஒரு ஆண்டுகளுக்கு மேலாகியது
இன்னும் வரவில்லை.
எனக்கு இது என்னவோ வித்தியாசமாக தான் இருந்தது. பேய் ஆடியிருக்கிறதா
கேள்வி பட்டிருக்கிறேன் வாந்தியில வெளிய வந்தத இப்ப தான் கேள்வி
படுறேன் . நான் அந்த கோவிலில தான் அவன சந்தித்தேன். திரும்ப திரும்ப
கேட்டேன் டேய் என்னடா சொல்ற? உண்மை தாண்டா நம்புடா எப்படிடா நம்புறது
அப்படி கேட்டுட்டு வந்துட்டேன் .
இவன் மட்டுமில்லாது இவன போல பல ஆண்களும் பெண்களும் இப்படி போலி மத
வியாபாரிகளிடம் சிக்கி சின்னாபின்னமாகி கொண்டிருக்கின்றனர். இது
மனிதர்களுக்கு ஏற்படும் ஒரு வித மன நோய் யார் மதங்களை முட்டாள் தனமாகவும்
பயத்தின் பேராலும் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு இந்த நிலை
ஏற்படுகிறது . இன்று மதம் மிக பெரிய தொழிலாகி விட்டது . யார் புதிய மாடல்
கார் பைக் வாங்குகிறார்களோ இல்லையோ ஆனால் மத ஊழியக்காரர்கள்
வாங்குகிறார்கள்.
புனித நூல்களில் இருக்கும் பிசாசு என்பது எது என்பது என்ற தெளிவின்மை கூட
இதற்கு ஒரு காரணமாகி போகிறது. ஒரு மனிதனை யார் கெட்ட பாதைக்கு அழைத்து
செல்கிறார்களோ அவர்கள் தான் அந்த மனிதனுக்கு பிசாசு இது தான் புனித
நூலின் சாராம்சம். ஆனால் அதை விட்டு விட்டு தன உடம்பிற்குள் ஏதோ
புகுந்தது போன்று எண்ணுகிறார்கள். அப்படி தான் இந்த ஊழிய காரர்களும்
சொல்லி கொடுக்கிறார்கள். உண்மையில் அவர்கள் உடம்பில் அல்ல பிரச்னை மனதில்
தான் பிரச்னை . சிந்திக்கும் அறிவு இல்லாமையாலும் வேத நூல்களை சரியாக
பொருள் பட வாசிக்காமலும் இருப்பதால் தான் இந்த நிலை.
இப்படி மனதளவில் பாதிக்க பட்டவர்கள் வரும் போது இந்த போலி வியாபாரிகள்
அவர்கள் மனதில் மீண்டும் பேய் பிசாசு போன்றவைகளை புகுத்தி கடவுளின்
பெயரால் இதை நான் சரிபடுத்துகிறேன் என்று சொல்லி அந்த நபரின் சொத்துக்கள்
முழுவதையும் அபகரித்து விடுகிறார்கள். இந்த போலிகளிடமிருந்தும் பேய்
பிசாசுகளிடமிருந்தும் மக்கள் விடுதலை பெற வேண்டுமெனில் தன்னம்பிக்கை வளர
வேண்டும். பேய் பிசாசு என்பது இல்லாத ஓன்று என்ற புரிதல் வேண்டும் .
நல்லது எது கேட்டது எது என்ற பகுத்தறிவு வர வேண்டும் . மத நூல்களில்
இருக்கும் நல்ல செயல்களை மட்டும் பின்பற்றி யதார்த்தத்திற்கு ஒத்து வராத
செயல்களை ஒதுக்கி நல்ல வாழ்வை வாழ வேண்டும் . வீட்டிலோ மனதளவிலோ ஏதாவது
பிரச்சனை ஏற்படின் நல்ல மனநல மருத்துவரை அணுகி கவுன்சிலிங் எடுத்து
கொண்டால் எல்லாம் குணமாகி விடும் . நம் மன தைரியமின்மை மற்றவர்கள் நம்மை
ஏமாற்ற ஏதுவாகிறது .