கர்ப்ப கால காதல் !

8 views
Skip to first unread message

janar thanan

unread,
Dec 11, 2010, 8:59:44 AM12/11/10
to Ananth M, aravind raj, Ashok, Balaji.K, gobikannan15, Gopal, Gopinathan, Hema, K_Salam, Kasi, Mani Room, Manoj, Muthu, Muthu, Muthukrishnan, Nethaji, packia raj, Panthose, prakash yogi, Ramesh-ashok, SAEC Group, sathees kumar, Siva(Qtr), Somanathan, Suba Anand, Thanraj

கர்ப்ப கால காதல் !

        என்னதான் வாழ்க்கையில் நம்முடைய பரிமாணங்களை ஒவ்வொரு சூழலிலும் நாமே கண்டு களித்திருந்தாலும் கணவன் தான் தகப்பன் ஆவது தெரிந்து அதற்க்கு காத்திருக்கும் காலமும் மனைவி தான் தாயாகப்போகும் தருணம் வரை காத்திருக்கும் காலம் முக்கிய கால கட்டம் அந்த கால கட்டத்தில் ஒரு மனைவிக்கும் கணவனுக்கும் இடையே நடக்கும் காதல் பற்றி பார்ப்போமா?


      என்னங்க நம்ம பையன் உங்களைப்போல் சாடையாக பிறந்தால் தான் உங்க வீட்டுல எல்லாருக்கும் பிடிக்குமாம் உங்கம்மா சொல்றாங்க என்று சிணுங்கியவளை சே ! சே ! உன் சாடையா பிறந்தால் தான் எனக்கு பிடிக்கும் என்றதும் என் தோளில் கைகளை வைத்து முகம் புதைக்கிறாள் கர்ப்ப கால வெட்கத்தில்!


     நமக்கு பொறக்கப்போற பையனுக்கு என்னென்ன பொம்மையெல்லாம் வாங்கி வைக்கப்போறீங்க என்றவளிடம் அழகான பார்பி பொம்மையான நீயும் யானை பொம்மையான நானும் இருக்க தனியே வேறு பொம்மை வாங்க வேண்டுமா என்ற என் குமட்டில் தன் கைகளால் செல்லமாக இடித்து குசும்பு என்கிறாள்!


     வீட்டில் இருந்த நேரம் முழுவதும் அது இதென்று இழுத்துப்போட்டு வேலை செய்பவளிடம் ரொம்பவும் அலுத்துக்காதடி பிள்ளைக்கு ஆகாது என்றதும் அப்போ உடம்புக்கெதும் ஆனாலும் பரவாயில்லைன்றீங்களா? என்று கடிந்தவள், நான் உடம்பைத்தான் பிள்ளையென்று சொன்னேன் என்றதும் ச்சீய்ய்ய் என்கிறாள்!


     ஆமா நமக்கு பொறக்கப்போறது பையன் தான்னு எப்படி இவ்வளவு உறுதியா சொல்றீங்க? வயித்தில இருக்கும்போதே சரக்கடிச்சவனாட்டம் வாந்தியெடுக்கிறானே அதை வைத்துதான் சொன்னேன் என்றதும் ஓங்கி ஒரு குட்டு வைத்தாள் நடுமண்டையில்!


     ஏங்க நம்ம பையன் பொறந்ததும் அவனுக்கு எங்கண்ணா அஞ்சு பவுன்ல தங்கச்செயினும் எங்கப்பா தங்க மோதிரமும் வாங்கித்தர்றேன்னு சொல்லியிருக்காங்க நீங்க என்ன வாங்கித்தரபோறீங்க உங்க பையனுக்கு? ஒரு தங்கச்சி பாப்பா வாங்கித்தரலாம்ன்னு இருக்கேன் என்றுசொன்னதுதான் தாமதம் உங்கள உங்கள என்று சொன்னபடியே கையில் வைத்திருந்த தக்காளிப்பழத்தை என் மீது எறிந்தேவிட்டாள்!


     என்னடி உன்னோட வயிறு பெரிசாச்சுனா என் அம்மா பார்த்து பார்த்து பூரிச்சுப்போய் ஆப்பிள் ஜூஸ் கொடுத்து பாசத்தை பொழியுறாங்க! போன வாரம் நானும் என்னோட வயிறும் பெரிசாயிட்டே போகுதுன்னு சொன்னதுக்கு வாயக்கட்டு ராஸான்னு சொல்றாங்க உனக்கொரு நியாயம் எனக்கொரு நியாமா என்று செல்லமா கேட்டதற்க்கு எனக்குள்ள இருக்கிறது வாரிசு உங்களுக்குள்ள இருக்குறது தரிசுன்னு சொல்லி சிரிக்கிறாள்  எமகாதகி!




     சமையலறையில் மிக்ஸி இருந்தாலும் கைமணம்போல் வராதென்று சொல்லி நின்று கொண்டே அம்மியில் கறி மசால் அரைத்துக்கொண்டிருந்தவள் என்னிடம் திடீரென்று நான் சாமியாம் உங்களுக்கு வரமொன்று தரலாம்ன்னு இருக்கேன் என்ன வரம் வேணும் என்று கேட்டாள் !  இவ்ளோ நாள் உன்னை மட்டும் கட்டிப்பிடிக்க என் கை போதுமானதாக இருந்தது இனி உன்னோடு நம் பிள்ளையையும் சேர்த்து கட்டிப்பிடிப்பதற்க்கு, உன் வயிறும் என் கைகளும் சேர்ந்தே வளரும் வரம் கேட்பேன் என்றதும் சிரித்துவிட்டாள்!





--
ப்ரியமுடன்,
ஜனார்த்தனன்
Reply all
Reply to author
Forward
0 new messages