யார் கடவுள்....

4 views
Skip to first unread message

janar thanan

unread,
Sep 27, 2010, 5:56:39 AM9/27/10
to amir...@gmail.com, mani_...@yahoo.com, muthu...@yahoo.co.in, Muthukrishn...@isoftplc.com, nathan...@gmail.com, netha...@gmail.com, star-c...@googlegroups.com, Ananth M, aravind raj, Ashok, Balaji.K, gobikannan15, K_Salam, Kasi, Manoj, packia raj, prakash yogi, Ramesh-ashok, sathees kumar, Somanathan, Suba Anand, t_k_krishnan

மனிதன் இருக்கின்றானா

நீ மனிதனா
மனிதனே மனிதனைப் பார்த்து
கேட்கும் கேள்வி இது

பார்ப்பதற்க்கு எல்லோரும் மனிதர்களே
ஆனால் எல்லோரும்
மனிதர்கள் அல்ல
உண்மையான மனிதனை

பெண்ணியம்

ஈன்றெடுக்கும் தாயாக
அன்பைகாட்டும் சகோதரியாக
தோள்கொடுக்கும் தோழியாக
உறவைப்பங்கிடும் மனைவியாக
வம்சம் தளிரிடும் மகளாக
எத்தனை பெண்அவதாரங்கள்
சில கரும்புள்ளி பெண்களால்

முரண்

குழந்தை தொழிலாளர்
ஒழிப்பு வாரியத்தை
கூட்டித்துடைக்கிறாள்
பன்னிரண்டு வயது சிறுமி

ஆசிர்வாதம்

முன்னோர்கள் கடைபிடித்தது
மூத்தவர்கள் சொன்னது
மனிதன் மனிதனை
தலைதாழ்த்தி கால்தொட்டு
வாழ்த்திட கேட்கிறான்
நிற்பவனை குனியவைத்து
எழுந்துட சொல்லுவதல்ல
நல்ல ஆசிர்வாதம்
சுப தருணங்களில்

மேடைக் கூத்தாடி

முச்சந்தி வீதியில்
தோல் செண்டையடித்து
ஊருக்கு ஒதுக்குபுறத்தில்
ஓலக் கொட்டகையில்
ஆறடி மேடையமைத்து
இதிகாசக் கதைகளுக்கு
முகச்சாயம் பூசி
கூடிநிற்கும் மக்கள்பார்க்க

சுயம் மறந்தவள்

பருவம் எய்த பெண்ணவள்
வாகனங்கள் வந்துபோகும்
பேரூந்து நிலையத்தில்
அழுக்கு படிந்த
கிழிந்த சட்டைபாவாடையுடன்
வீதிக் கடைகளில்
கையேந்தி பிச்சைவாங்கி
எச்சி இலைகளில் சோறுண்டு

மானுடம்

சங்கம் அமைத்து தமிழ்கண்டார்-

நீதி எதுவென காண மறந்தார்

குற்றம் எதுவேன கண்டறிந்தாரே

அவர் குற்றமெதுவென அறிய மறந்தார்!

பாலுக்கு பசுவை வளர்த்தார்-அவர்
கன்றுக்கும் சிறிது கொடுத்து தன்

இளமை

இளம் வயது
ஓடும் பாம்பையும்
பிடிக்க சொல்லும் வயது
கத்திக் கூர்மையை
தடவிப் பார்த்து
கையை கிழித்துக் கொள்ளும்
பருவம் அது

நல்லது எது கெட்டது எது
புரியாத காலம் அது
மற்றவர் சொன்னாலும்

இன்றைய நாகரீகம்

அம்மா என்ற அமுத வார்த்தை
மறைந்து போய்
மம்மி என்ற வார்த்தை தேய்ந்து
மாம் ஆனதும்
அழகான பாவாடை தாவணி
குறைந்து போய்
மிடி என்ற பெயரில்
இடையில் நிற்காத ஒரு கைக்குட்டை
பாவாடை ஆனதும்

அலங்காரபொம்மைகள்

''நாணத்தால் தலை
கவிழ்ந்து மணமகளாய்
நடந்த நங்கையவளைக
கண்டு ஏளனமாகச்
சிரித்தது-வாசலில் இருந்த
அலங்கார பொம்மை.....
நீயும் என்னைப்
போலதானடி என்றெண்ணி..''

பெண் நிறங்கள்

*இருள் சூழ்ந்த
நான்கு சுவருக்குள்
மின்மினி வெளிச்சத்திற்கும்
கூட வெட்கப்பட்டு
கட்டிய கணவனுக்கு
மூடிய போர்வைக்குள்
உறவைப் பரிமாறும்
பெண்

*மணமாகும் முன்னே
கற்ப்பு களவாடப்பட்டதால்

அறியாமை

ஆயுதமேந்திய கடவுளும்
சிலுவைசுமந்த தேவனும்
உறவைத்துறந்த புத்தனும்
அன்பை போதித்தார்கள்
ஏன் மனிதர்கள்
அதர்மத்தை கையாளுகிறார்கள்

உள்முகம்

வலிகளை ஏற்றுக்கொள்
சித்தார்த்தன் போதனை
உயிர்களை கொன்று
வலிகளை பரப்பு
பௌத்த பிள்ளைகளின்
அழகிய கோரச்செயல்

தகவல் தொழில் நுட்பம் - சூழ்நிலைக்கவிதைகள்

தூழ்நிலை: தகவல் தொழில் நுட்பம் பயன்கள் மற்றும் தொல்லைகள்.

========================

கைப்பேசி குறுந்தகவலில் ஆரம்பித்த காதல்
கைப்பேசியில் எடுத்த நீலப்படத்தில் முடிந்தது...

வேண்டுவன வேண்டும்!

மீண்டும் பிறந்திட வேண்டும்
இந்த பூமிப்படுக்கையிலே
தாழாட்டு பாடிடவே இதே
தமிழ்த்தாயின் மடியும் வேண்டும்

எளிதில் தமிழ்ப்பற்றிடவே விரைவில்
எனக்கு பாரதி விளங்கவேண்டும்

நாட்டுப்பற்று

உதிர்ந்த பூக்கள்
சில்லரை மிட்டாய்கள்
தூக்கம் கலையாத
கை தட்டல்கள்
வாய் நிறைய
வாக்குறுதிகள்
இவையெல்லாம் பொய்யென
கோபித்து
உயரச்சென்று பறக்குது
நம் தேசியக்கொடி
கொண்டாடப்பட்டது
மீன்டும் ஒரு

கொஞ்சம் சிந்திக்கலாமே...

கோவையில் குண்டு வெடிப்பு
கார்கிலில் எல்லை போர்
பாராளுமன்றத்தை தகர்க்க சதி

கற்பில் சிறந்தவர்கள்

மலரா மொட்டுக்களை
தன் இச்சைக்காக
பறிப்பவர்களும்
உறவுகள் இருந்தும்
உடல் பசிக்காக
மாற்றான் உறவுகளை
களவு செய்வோரும்
காம லீலைகளுக்காக
காதலின் பெயரால்
காதலை சிதைப்பவர்களும்

கண்ணுள்ள குருடர்கள்

*இரும்புத்தாழ் இட்டு
பூட்டு போடுகிறார்கள்
கடவுளின் வீட்டை
திருடர்கள் பயம்

*திருக்கோவில்களிலும்
தேவ ஆலயங்களிலு
கபர் தர்காக்களிலும்
சிறைக் கைதியாக
கடவுள்கள்

*கேட்காத கடவுளுக்கு

மூன்று தர்மங்கள்

*பக்தர்களே தர்மம்போடுங்கள்
கடவுளின் மௌனவினவல்
கோவில் உண்டியல்

*பெயர்சொல்லியும் நலம்விசாரித்தும்
தர்மம்கேட்கிறார் பூசாரி
அர்ச்சனைத் தட்டு

*ஐயா தர்மம்போடுங்கள்

யார் கடவுள்

கோவிலில் சாமி கும்பிட வந்தவனை
பார்த்து கும்பிட்டான் பிச்சைகாரன் ...
அய்யா சாமி என்று...?

 



--
ப்ரியமுடன்,
ஜனார்த்தனன்
Reply all
Reply to author
Forward
0 new messages