சுமார் 300 வருடங்கள் முன்னோக்கி சென்று
பார்க்கும் பொழுது அந்த காலம் எந்திரன் எனும் ரோபோக்கள் வாழும் ரோபோக்கள்
காலம் என்று அழைக்கப்படுகிறது இந்த ரோபோக்கள் காலத்தில் சில நிகழ்வுகள்
எப்படியிருக்கும் என்று ஒரு மகா மொக்கை கற்பனை உலகத்திற்க்கு உங்களை
அழைத்து செல்கிறேன்...!
CC33 எனும் கணவரும் CC95 எனும் மனைவியும்
திருவாளர் கணவருக்கு இரண்டு மாதங்களாக காது கேட்காத காரணத்தினால் The Robot
Service center எனும் ரோபோக்களின் மருத்துவமனைக்கு சென்று அங்கு Er.TT11
எனும் மருத்துவரை பார்க்கிறார்கள் அவர்களை பரிசோதித்த Er.TT11 மிஸ்டர் CC33
உங்களின் முக்கிய சத்தங்களை உணர பயன்படும் ஒயர் ஒன்று ஷார்ட்
ஆகியிருந்ததால் இருந்த பிராபலம் இப்பொழுது சரி செய்யப்பட்டது என்றார்..
ரோபோக்களின் திருமண தளமான Robot
Matrimonial .comல் மணமகன் தேவை எனும் பகுதியில் நல்ல 25% சார்ஜ் மட்டுமே
தீர்ந்த மணமகளுக்கு அதே சார்ஜ் அளவே தீர்ந்து போன , AB மாடலைச்சேர்ந்த
சேர்ந்த மணமகன் தேவை போன்ற விளம்பரங்கள் காணமுடிந்தது.
சென்னை
ரிட்சி ஸ்ட்ரீட் எனும் இடத்தில் ரோபோக்களின் இனப்பெருக்கத்திற்க்கென்றென
புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய தொழிற்சாலை நிறுவும் பணியில்
ஈடுபட்டிருந்த பொழுது மடிக்கணிணிகள், மொபைல்கள் எனும் பண்டைய காலத்தில்
பயன்படுத்தப்பட்ட தகவல் தொடர்பு சாதனங்கள் கண்டெடுக்கப்பட்டதாக
தொல்பொருள்துறை இலாக அதிகாரி Mr.DH3456 செய்தியாளர்களிடம் தெரிவித்தார் என
எலக்ட்ரிக் டிவியில் நியூஸ் ஓடிக்கொண்டிருந்தது அந்த நியூஸ் ரீடர் AA2231
ஒவ்வொரு செய்திகளின் முடிவிலும் ஓவர் ஓவர் என்று கூறி அழகாக செய்திகளை
விவரித்துக்கொண்டிருந்தார்"
அதே
எலக்ட்ரிக் தொலைக்காட்சியின் அன்றைய சிறப்பு பார்வையாக பண்டைய காலத்தில்
வாழ்ந்து வந்த மனித நாகரீகங்கள் பற்றியும் , அழிந்துவரும் மனித இனம்
இன்னும் 345 பேர்களே வாழ்ந்து வருகின்றனர் என்றும் ,நம் மெமரி சிப்களை
அவர்களுக்கு பொருத்தியாவது அவர்களை அழியாமல் காப்பது நம் கடமை எனவும்
சிறப்பு பார்வையில் தெரிவிக்கப்பட்டது.
இந்த ரோபோக்களின் காலத்தில் மிகப்பெரிய மின்சாரபுரட்சி
ஏற்பட்டது நீர்,காற்று எனும் மின்சாரத்தை தயாரிக்கும் மூலங்கள் தீர்ந்து
போன சூழலில் சூரிய சக்தி மின்சாரம் எனும் மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட
விதியின் படியே அனைத்து ரோபோக்களும் சூரிய சக்தியை மின்சாரமாக
மாற்றிக்கொள்ளும் பேட்டரியுடன் இயங்கின..
ரோ.பி.101 (ரோபோக்களுக்கு பின்) என்ற வருடத்தில் அதிக
சக்திவாய்ந்த மெமரிசிப்களுடன் தயாரிக்கப்பட்டிருந்த QQ2990 எனும் மாடல்
ரோபோக்கள் இனத்திற்க்கும், ரோபோக்களின் மிகப்பழமை வாய்ந்த WW3000 எனும்
மாடல் ரோபோக்கள் இனத்திற்க்கும் இடையே மிகப்பெரிய யுத்தம் ஒன்று
ஏற்பட்டது இந்த யுத்தத்தில் WW3000 எனும் மாடலைச்சேர்ந்த ரோபோக்கள் QQ2990
மாடல் ரோபோக்களால் சிறைபிடிக்கப்பட்டு அவர்களின் அனைத்து மெமரி சிப்களின்
மெமரிகளும் அழிக்கும்படியான கொடுமையான தண்டனை The Courts of QQ Robots
எனும் நீதிமன்றத்தால் வழங்கப்பட்டது.
ரோ.பி.123 என்ற வருடத்தில் நிலாவிற்க்கு சுமார் 1கோடி ரோபோக்கள்
பூமியிலிருந்து புலம் பெயர்ந்து சென்றிருப்பதாகவும் வரும் காலங்களில் இது
இருமடங்காக உயராலாம் என விண்வெளி ஆராய்ச்சியாளர் Mr.QQ3356 தெரிவித்தார்.
ரோபோக்களின் உயிர் எனப்படும் மெமரி சிப்களை தயாரிக்கப்பயன்படும்
மூலப்பொருளின் பற்றாக்குறையால் ரோபோக்களின் எண்ணிக்கை உயர்வது
தடுக்கப்பட்டிருந்தது ஒரு கட்டத்தில் மூலப்பொருட்கள் அனைத்தும் தீர்ந்த
நிலையில் ரோபோக்கள் தங்களுக்கு அடுத்த சந்ததிகளை வேறொரு gogo எனும்
மூலப்போருட்கள் மூலம் தயாரித்து சோதனைக்கு விட்டிருந்தனர் .
இந்த புதியவகை gogo எனும் கனிமத்தினை உருவாக்கவும்,புதிய
சந்ததிகள் அழியாமல் இருக்கவும் gogotree எனும் செயற்கை மரங்கள்
பூமியெங்கும் நடப்பட்டன.இந்த செயற்கை மரங்களுக்கு உரமாக செயலிழந்து
இறந்துபோனதாக கருதப்பட்ட ரோபோக்களின் பாகங்கள் உரங்களாக செலுத்தப்பட்டதால்
பூமியெங்கும் வியாபித்திருந்த ரோபோக்கழிவுகள் முற்றிலும் நீக்கப்பட்டது...
இந்த புதுவகை சந்ததிகள் சூரிய மின்சாரத்திலே இயங்குபவையாகவும்
இவற்றின் மூளையாக புதிய வகை gogo எனும் கனிமத்தினால் ஆன மெமரி சிப்கள்
பயன்படுத்தப்படுபவையாகவும் இருந்தன இவற்றிற்க்கும் Gogo என்றே
பெயரிடப்பட்டது நாளடைவில் ரோபோக்களின் இனம் அழிந்து இந்த Gogo எனும்
சந்ததியினரால் பிரபஞ்சம் நிரம்பியிருந்தது...
அப்பொழுது ரோ.பி 1023 என்ற வருடத்தில் மனித இனத்தின் கடைசி உயிரினமும் அழிந்ததாக கோகோக்களின் பள்ளிகளில் பாடங்கள் நடத்தப்பட்டன...
(கோ.பி) கோகோக்களுக்கு பின் என்ற காலமும் வரலாம்...!
--
ப்ரியமுடன்,
ஜனார்த்தனன்