வார்த்தைகளின் தத்துவங்கள்!
"பிறருடைய வார்த்ததைகள் -
உங்களது உற்சாகத்தை,
உங்களுடைய முயற்சியை
ஒருநாளும் குறைத்து விட முடியாது.
நீங்கள் அனுமதித்தாலொழிய"....
***
"எண்ணங்களில் வாழப்பார்க்கிறோம்.
வார்த்தைகளில் தான் வாழ்கிறோம்.
செயலில் அல்ல."
***
*"வாழ்க்கையின் எந்தத் துறையிலும்,
ஆன்மீகத்திலாகட்டும், பாலுறவிலாகட்டும் -
வார்த்தைகளே நம்மைத் தூண்டுகின்றன."
------ (ஜே.கே.கிருஷ்ணமூர்த்தி)
***
"எண்ணங்களில் கவனமாக இருங்கள் -
அது வார்த்தைகளாக வெளிப்படுபவை.
வார்த்தைகளில் கவனமாக இருங்கள் -
அது செயலாக வெளிப்படுபவை.
செயல்களில் கவனமாக இருங்கள் -
அது பழக்கமாக மாறுபவை.
பழக்கங்களில் கவனமாக இருங்கள் -
அது உங்கள் ஒழுக்கமாகின்றன.
ஒழுக்கத்தில் கவனமாக இருங்கள் -
அது உங்கள் வாழ்க்கையை மேம்படுத்தும்."
***
"சொல்லுக்கும், செயலுக்கும் -
நெருங்கிய சம்பந்தம் இருக்க வேண்டும்."
***
"பிறரது உதாசீனம் பிறரது அவமானச் சொல் -
சில சமயம் நம் தன்னம்பிக்கையைக் குலைத்துவிடக் கூடும்."
***
"அன்பான பதில் -
கோபத்தை விரட்டி அடிக்கிறது.
துக்ககரமான சொற்கள் -
கோபத்தை உண்டாக்குகின்றன."
----- (சாலமன்)
***
"சொற்கள் -
பழைய அர்த்தங்களை இழந்து விடுவதே
சமூதாயப் புரட்சியின் முதல் அறிகுறி."
----------(கிரேக்க வரலாற்று அறிஞர் துஸிடீடிஸ் 470 – 400 கி.மு)
***
"பயனில்லாத சொற்களைப் பாராட்டுகிறவனை மக்கட்பதடி"
என்கிறார் வள்ளுவர்.
***
"மிகக் கடினமான பெரிய வார்த்தைகளைக் கொண்டு
அழகான பிரசங்கம் செய்து வருபவன் உண்மையில்
உங்களுக்கு எதையும் சொல்லிக் கொடுக்க விரும்புவதில்லை.
அவன் தன் மேதாவித்தனத்தை நிரூபிக்கும் பணியில்
ஈடுபட்டிருக்கிறான்."
------ (ஓ.மில்லர்)
***
"கால் இடறி கீழே விழும் போது ஏற்படும் காயம் ஆறிவிடும்.
ஆனால் யோசிக்காமல் தவறுதலாக சொன்ன வார்த்தைகள்
ஏற்படுத்தும் காயம் ஆறவேஆறாது."
---- (ப்ராங்க்லின்)
***
"மரணமும், வார்த்தைகளும், வரிகளும் -
தவீர்க்க முடியாதவை."
---- (ஹாலிபர்ட்டன்)
***
"பொய்யான சொற்கள் -
தன்னுள்ளே கெடுதலை வைத்துக் கொண்டிருப்பதோடல்லாமல்
அவைகள் ஆத்மாவையும் அதனோடு நோய்வாய்ப்படச் செய்கிறது."
----- (சாக்ரடீஸ்)
***
"சொற்களுக்குப் பொருள்
இருப்பது மட்டுமல்ல.
அந்தப் பொருளுக்கேற்ற
வலிமையும் அதற்குள் இருக்கிறது"
------- (மகாத்மா காந்தி)
***
"வார்த்தைகளில் - மென்மையும்,
வாதத்தில் - அழுத்தமும் தேவை."
***
"பாடலிலும், பேச்சிலும் சொற்கள் இருக்கின்றன.
சொற்கள் எதைக் குறிக்கின்றனவோ
அந்த வலிமை அந்தச் சொற்களுக்கு உண்டு.
வலிமை என்ற சொல் திரும்பத் திரும்ப சொல்லப்படும்
போது வலிமைதருகிறது. சோர்வு என்ற சொல் -
சோர்வு தருகின்றது. இதில் சோர்வடையச் செய்யும்
சொற்கள் மனிதசக்தியை வடித்துவிடுபவை."
***
"மெழுகுவர்த்தி சிந்தனைகள் -
தீப்பந்த வார்த்தைகள்."
***
"மனிதனுடைய இதயக் குமறலே,
அவனுடைய வார்த்தைகளாக வெளிப்படுகின்றன."
***
"சொன்ன ஒரு சொல்,
விடுபட்ட அம்பு,
கடந்து போன வாழ்க்கை,
நழுவ விட்டுவிட்ட சந்தர்ப்பம் -
ஆகிய நான்கும் மீண்டும் திரும்ப வராது."
-------- (அராபிய நாட்டுப் பழமொழி)
***
"கண்ணில் பட்டுக்கொண்டே இருக்கும் காட்சிகளும்,
காதில் விழுந்து கொண்டே இருக்கும் சொற்களும்,ஓசைகளும் நம்மையறியாமலேயே நம்முடைய மூளையில் பதிந்து விடுகின்றன.
பதிந்து நமக்குத் தெரியாமலேயே நம் விருப்பு வெறுப்புகளை
நிர்ணயித்து விடுகின்றன."
-------- (மனோதத்துவம்)
***
"பிறருடைய வார்த்ததைகள் -
உங்களது உற்சாகத்தை,
உங்களுடைய முயற்சியை
ஒருநாளும் குறைத்து விட முடியாது.
நீங்கள் அனுமதித்தாலொழிய."
***
"சொற்களை -
எண்ணிக்கை போடக்கூடாது.
எடைதான் போட வேண்டும்."
***
"சொற்கள் - தேனீக்களைப் போன்றது.
அவைகளில் தேனும் உண்டு.
கொடுக்கும் உண்டு."
***
"மென்மையான ஒரு சொல்
இதயவாசலைத் திறக்கிறது."
***
"உணர்வதை நாம் செய்வோம்.
சொல்வதை நாம் உணர்வோம்."
------- (செனிகா)
***
"காலம் போகும்.
வார்த்தை நிற்கும்."
***
"அறிவுள்ள மனிதனுக்கு -
ஒரு சொல் போதும்."
***
"அம்புகள் -
உடலை ஊடுருவித் தாக்கித் துளைக்கின்றன.
கொடுஞ்சொற்கள் -
ஆன்மாவை ஊடுருவித் தாக்கித் துளைக்கின்றன."
***
"சுவாசிக்கும் எண்ணங்களே –
எரியும் வார்த்தைகள்."
------ (கிரே)
***
"குறைந்த வார்த்தைகள் -
மேலான பிராத்தனையாகும்."
-------- (லூதர்)
***
"திரும்பத் திரும்பச் சொல்லும் வார்த்தைகள் -
சுவையின்மையையும், சலிப்பும் ஏற்படுத்தும்."
-------- (பாயிலே)
***
"தீயைவிடக் கொடுமையானது –
தீய சொல்."
***
"தைரியமான சொற்கள் -
மிகவும் தைரியம் நிறைந்த செயல்கள் -
மனிதனை வீரனாக்கும்."
***
"வார்த்தை ஒன்று தடை செய்யப்பட்டால்
அந்த வார்த்தைக்கு வலிமை வருகிறது.
அந்த வார்த்தை வன்முறையை அடைகிறது.
அந்த வார்த்தையில் விஷமேறிப் போகிறது."
---------- (லென்னி புரூஸ்)
***
"வாழ்க்கையில் திரும்பப் பெற முடியாதவை –
உயிரும், நேரமும், சொற்களும்."
***
"சொல் வன்மைக்கு -
மனத் தெளிவு அவசியம்.
எந்த விஷயத்தின் நுட்பத்தையும்,
முழுத்திறமையையும் அலசி அறிந்து
பகுத்தறிவோடு பிறருக்கு உண்மையை
விளக்கும் ஆற்றல் வேண்டும்."
--------- (எமர்சன்)
1)ஒரு நிர்வாகத்தின் எந்தப் பொறுப்பில் இருந்தாலும், நீங்கள் திறந்த
மனதுடன் செயல்பட வேண்டியது அவசியம். நினைவில்கொள்ளுங்கள், மனித மனமும் ஒரு
பாராசூட் போலத்தான். பரந்து, விரிந்து, திறந்து இருந்தால்தான், அது
சிறப்பாக வேலை செய்யும்!
2)மூளை ரொம்பவும் சுயநலம் நிரம்பியது. சமயங்களில் உங்கள் வாடிக்கையாளர்
அல்லது ஊழியர்கள் சம்பந்தப்பட்ட முடிவுகளை எடுக்கும்போது, உங்கள் இதயம்
சொல்வதைக் கேட்டுச் செயல்படுங்கள்!
3)மிகச் சிறிய விஷயம்தான் பிரமாண்ட வித்தியாசத்தை ஏற்படுத்தும். நிசப்தமான
குளிர் சாதனப் படுக்கை அறையில், ஒற்றைக் கொசு உலவினால் எப்படி இருக்கும்
என்பதை உணர்வீர்கள்தானே!
4)ஒரு நிலம் எவ்வளவுதான் வளமானதாக இருந் தாலும், அதில் உழவு
மேற்கொள்ளாவிட்டால் எதற் கும் பயன் அளிக்காது. அது போலவேதான் மேலும் மேலும்
கற்றுக்கொள்ள ஆர்வம் இல்லாத மனித மூளையும் துருப்பிடித்துப் போகும்.
கற்பதற்கு மட்டும் எந்தக் காலத்திலும் தடை போடாதீர்கள்!
5)பின் வரும் வார்த்தைகளை அடிக்கடி உபயோ கிக்கப் பழகுங்கள்... 'என்ன?’, 'ஏன்?’, 'எங்கே?’, 'எப்போது?’, 'எப்படி?’, 'யார்?’.
6)உங்கள் ஈகோ உங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருக்குமாறு
பார்த்துக்கொள்ளுங்கள். உங்கள் முடிவு களை அது மிக மோசமாகப் பாதிக்காதவாறு
அடிக்கடி சுய பரிசோதனையில் ஈடுபடுவது அவசியம்!
7)ஒரு நிர்வாகத்தில் நடுவாந்திர நிலையில் இருக் கும் மேலாளருக்கு, அங்கு
உயர்ந்த நிலையில் இருக் கும் எக்ஸிகியூட்டிவ் பெறுவதில் பாதி சம்பளம்தான்
கிடைக்கும். ஆனால், ஏறக்குறைய அந்த எக்ஸிகியூட் டிவ்வுக்கு நிகரான வேலைப்
பளுவினை அந்த மேலா ளர் சுமப்பார். அப்போதும் உங்கள் திறனை 10 சதவிகிதம்
அதிகரித்துக்கொண்டால், உங்கள் சம்பளம் மிக விரைவில் இரட்டிப்பாகும்!
8)எல்லா சாதனையாளர்களுக்கும் உங்களுக்குமான ஒற்றுமை... உங்கள்
அனைவருக்கும் சரிசமமாக தினமும் 24 மணி நேரம் கையில் இருப்பதுதான்! அந்த
நேரத்தை எவ்வளவு திறமையாக நீங்கள் கையாள்கிறீர்கள் என்பதில்தான் அடங்கி
இருக்கிறது, உங்கள் வளர்ச்சியின் பிரமாண்டம். இதில் அலுவல் நேரத்துக்குப்
பிறகான நேரத்தைத் திட்டமிடுவதும் அடங்கும்!
9) எட்டப்படும் வரை குறிக்கோள்கள் என்பவை வெறுமனே நம்பிக்கைகள்தான். உங்கள்
குறிக்கோள்கள் திட்டமிட்டதாக, எட்டக்கூடியதாக, வளர்ச்சியைக்
கணக்கிடக்கூடியதாக, நிர்ணயித்த காலக் கெடுவுக்குள் அடைவதற்கான செயல்பாடுகளை
உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்!
10) 100 சதவிகிதம் கச்சிதமான மனிதன் இன்னும் பிறக்கவில்லை. அதனால், பிறர்
செய்யும் தவறுகளை மன்னிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். ஆனால், அந்தத் தவறில்
இருந்து அவர்கள் அறிய வேண்டிய பாடத்தை அவர்களுக்கு உணர்த்த மறக்காதீர்கள்!
11)ஒன்று கவனித்து இருக்கிறீர்களா? ஏதேனும் ஒரு விஷயத்தில் முடிவெடுக்கத்
தாமதித்துத் தள்ளிப்போடும்போது, அது மேலும் மேலும் சிக்கலாகும். எந்த
விஷயத்திலும் முடிவு எடுக்கத் தயங்காதீர்கள்!
12)இந்த உலகத்தில் எதுவுமே... எதுவுமே உங்கள் கைக்கு எட்டக்கூடியதுதான்.
நீங்கள் விரும்புபவற்றை உங்களை நோக்கி ஈர்க்கக்கூடிய காந்தத் திறனை மட்டும்
வளர்த்துக்கொள்ள வேண்டும். கடின உழைப் பும், தணியாத ஆர்வமும்தான் அந்த
காந்தத் திறனை அதிகரிக்கும்!
13)எதையும் கற்றுக்கொள்ளும் மாணவ மனப்பான்மை யுடனேயே இருங்கள். நிச்சயமாக
உங்களுக்குப் பல சங்கதிகள் தெரியாது. அதை மற்றவர்களிடம் இருந்து தான்
நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும்!
14)அனுபவங்களில் இருந்து கற்றுக்கொள்வதைக் காட்டிலும் வலி மிகுந்தது, அந்த அனுபவங்களில் இருந்து கற்றுக்கொள்ளாமல் இருப்பதுதான்!
15)அலுவல் திட்டமிடல்களோ, குடும்ப நல முடிவு களோ எதுவுமே ஒரு
பயணம்போலத்தான். அதற்கு ஒரு மேப் அவசியம். செல்ல வேண்டிய திசை, செலவுக்கான
பட்ஜெட், அடைய வேண்டிய இலக்கு என அனைத்தும் அத்தியாவசியம்!
16)உங்கள் நினைவாற்றலை அளவுக்கு அதிகமாக நம்பாதீர்கள். சின்னச் சின்ன
விஷயங்களைக் குறிப்பு களாக எழுதிக்கொள்ளுங்கள். நாம் பேசியவற்றுள் பாதி
வார்த்தைகளை அடுத்த 60 நிமிடங்களுக்குள் நாம் மறந்துவிடுவோம்!
17)நிச்சயம் உங்களால் பெரிய சாதனைகளை நிகழ்த்த முடியும், சின்னஞ்சிறு விஷயங்களில் உங்கள் நேரத்தைத் தொலைக்காமல் இருந்தால்!
18)டோனால்ட் ட்ரம்ப் ஒரு முறை சொன்னார், 'எனக்கு எதையும் மிகப் பெரியதாக
யோசிக்கப் பிடிக் கும். பலர் பிரமாண்ட வெற்றிக்கு அஞ்சியும், தீர்க்கமாக
முடிவெடுக்கத் தயங்கியும் சின்னதாக யோசித்துக்கொண்டு இருக்கிறார்கள். அது
என்னைப் போன்றவர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கிறது!’
19)அதே சமயம், பெரிதாக யோசித்துக்கொண்டு இருந்தால் மட்டும் போதாது.
நீங்கள் உலகத்தைச் சுற்றி வரத் திட்டமிட்டு இருந்தாலும், அந்த முதல் அடி
உங்கள் வீட்டு வாசலைத் தாண்டுவதாகத்தான்
20)மேலே படித்த எல்லாவற்றியும் பின்பற்றுவது நம்மையும் ஒரு உயர்ந்த இடத்தில் வைக்கும்
வெட்டிப்பய தத்துவங்கள்
1. இன்னைக்குத் தூங்கினா நாளைக்கு எந்திரிக்கலாம். ஆனால் நாளைக்குத் தூங்கினா இன்னைக்கு எந்திரிக்க முடியுமா?
2. பஸ்சுல கலெக்டரே ஏறினாலும், முதல் சீட்டு டிரைவருக்குத் தான்.
3. சைக்கிள் கேரியர்ல டிபன் கேரியரை வெச்சி எடுத்துட்டுப் போகலாம். ஆனால் டிபன் கேரியர்லே சைக்கிளை வெச்சு எடுத்துட்டுப் போக முடியாது
4. டிக்கெட் வாங்கிட்டு உள்ளே போனா அது சினிமா தியேட்டர். ஆனால் உள்ளே போய்ட்டு டிக்கெட் வாங்கினா அது ஆபரேஷன் தியேட்டர்.
5. என்னதான் மீனுக்கு நீந்தத் தெரிஞ்சாலும், அதால மீன் குழம்புலே நீந்த முடியாது.
6. அயர்ன் பாக்ஸ்லே அயர்ன் பண்ண முடியும். ஆனா பென்சில் பாக்ஸ்லே பென்சில் பண்ண முடியுமா? இதுதான் வாழ்க்கை.
7. நீ என்ன தான் காஸ்ட்லி மொபைல் வச்சிருந்தாலும், அதுல எவ்வளவு தான் ரீசார்ஜ் பண்ணாலும், உன்னால உனக்கு கால் பண்ண முடியாது.
8. க்ரீம் பிஸ்கட்லே க்ரீம் இருக்கும், ஆனா நாய் பிஸ்கட்லே நாய் இருக்குமா?
9. ஒரு எறும்பு நினைச்சா 1000 யானைகளைக் கடிக்கும். ஆனால் 1000 யானைகள் நினைச்சாலும் ஒரு எறும்பைக் கூட கடிக்க முடியாது.
10. குவார்ட்டர் அடிச்சிட்டு குப்புற படுக்கலாம். ஆனால் குப்புற படுத்துக்கிட்டு குவார்ட்டர் அடிக்க முடியாது.
11. செல்போனுலே பாலன்ஸ் இல்லைன்னா கால் பண்ண முடியாது. ஆனால் மனுசனுக்கு கால் இல்லைன்னா பாலன்ஸ் பண்ண முடியாது.
12. ரயில்வே ஸ்டேஷன்லே போலீஸ் ஸ்டேஷன் இருக்கலாம். ஆனால் போலீஸ் ஸ்டேஷன்லே ரயில்வே ஸ்டேஷன் இருக்க முடியாது.
13. என்னதான் கராத்தேயிலே பிளாக் பெல்ட் வாங்கினாலும், சொறி நாய் தொரத்தினா ஓடித்தான் ஆகணும்.
14. நாய்க்கு நாலுகால் இருக்கலாம், ஆனா அதால லோக்கல் கால், ஐடிடி கால் ஏன் மிஸ்ட் கால் கூட பண்ண முடியாது.
15. கங்கை ஆத்தில மீன் பிடிக்கலாம், காவேரி ஆத்தில மீன் பிடிக்கலாம் ஆனா ஐயர் ஆத்தில மீன் பிடிக்க முடியுமா?
16. என்னதான் உன் தலை சுத்தினாலும் உன் முதுகை நீ பாக்க முடியுமா?
17. மீன் பிடிக்கிறவனை மீனவன் எண்டு சொல்லலாம்……. நாய் பிடிக்கிறவனை நாயவன் என்று சொல்ல முடியுமா?
18. என்னதான் ஒருவன் குண்டா இருந்தாலும் அவனை துப்பாக்கிக்குள்ள போட முடியாது.
19 தேள் கொட்டினா வலிக்கும், பாம்பு கொட்டினா வலிக்கும், முடி கொட்டினா வலிக்குமா??
20. ஸ்கூல் டெஸ்டில பிட் அடிக்கலாம், காலேஜ் டெஸ்டில பிட் அடிக்கலாம், பிளட் டெஸ்டில பிட் அடிக்க முடியுமா?
21. பொங்கலுக்கு லீவு கொடுப்பாங்க.. ஆனா இட்லி வடைக்கு லீவு கொடுப்பாங்களா??
22. கோல மாவில கோலம் போடலாம்… கடலை மாவில கடலை போட முடியுமா??
23.தூக்க மருந்து சாப்பிட்ட தூக்கம் வரும்.. இருமல் மருந்து சாப்பிட்டா இருமல் வருமா??? (என்ன கொடுமை சார் இது)
24.வாழை மரம் தார் போடும் அதை வச்சு ரோடு போட முடியுமா??
25. டீ கப்ல டீ இருக்கும், வேர்ல்ட் கப்பில வேர்ல்ட் இருக்குமா??
26.பாலில இருந்து பால்கோவா பண்ணலாம்… ரசத்தில இருந்து ரசகுல்லா பண்ண முடியுமா??
27. சண்டே அன்னைக்கு சண்டை போட முடியும். ஆனா மண்டே அன்னிக்கு மண்டைய போட முடியாது