Fwd: எள்ளி நகையாடத்தான் செய்வர், எண்ணி நகையாடத்தான் செய்வர்

3 views
Skip to first unread message

janar thanan

unread,
Dec 25, 2010, 12:25:47 AM12/25/10
to Ananth M, aravind raj, Ashok, Balaji.K, gobikannan15, Gopal, Gopinathan, Hema, K_Salam, Mani Room, Manoj, Muthu, Muthu, Muthukrishnan, Nethaji, packia raj, Panthose, prakash yogi, Ramesh-ashok, SAEC Group, sathees kumar, Siva(Qtr), Somanathan, Suba Anand, Thanraj

எள்ளி நகையாடத்தான் செய்வர், எண்ணி நகையாடத்தான் செய்வர்

மனிதம் தன்னை புதைத்து, மந்திகளாய் திரியும் மதிகெட்ட உலகில்,
மனிதாபத்தோடு பழகி, மாசற்ற மாண்போடிருந்தால் - உனை
எள்ளி நகையாடத்தான் செய்வர், எண்ணி நகையாடத்தான் செய்வர்

கர்பநோக்கில் காதல் வைத்து காமமிகுத்தி காதலிழுக்கும் கயமை உலகில்
கலங்கமில்லா நட்பில் கனிவாய் கட்டுண்டிருந்தால் - உனை
எள்ளி நகையாடத்தான் செய்வர், எண்ணி நகையாடத்தான் செய்வர்

பணம் ஒன்றே குறியாய் பரபரத்திருக்கும் மன பிணங்கள் மிகுந்த உலகில்
பாசாங்கில்லா உறவாய் பாசங்கலந்து பிணைந்திருந்தால் - உனை
எள்ளி நகையாடத்தான் செய்வர், எண்ணி நகையாடத்தான் செய்வர்

சுரண்டி, பிராண்டி தன் தாய்நாட்டையே அவலமாக்கும் துரோகிகள் உலகில்
சுத்தனாய், தேச பக்தனாய் தன்மரியாதையுடன் நிமிர்ந்து நின்றால் - உனை
எள்ளி நகையாடத்தான் செய்வர், எண்ணி நகையாடத்தான் செய்வர்

--
பிரியமுடன் நா. காசிராஜ்

--
ப்ரியமுடன்,
ஜனார்த்தனன்
Reply all
Reply to author
Forward
0 new messages