| @வெறும் கல்லாயிருந்தோம் ஒரு வரம் கிடைத்தது. விழிகளையெல்லாம் விழுங்கும் எழிற் சிற்பமாகினோம் ! @ இனிப்பை மொய்க்கும் ஈக்களாய்த் தானிருந்தோம் . ஒரு வரம் கிடைத்தது இனிப்புத்தேன் அடைகட்டும் தேனீக்களானோம் ! @ மரங்களைக் கொத்திக்கொண்டிருந்த மரங்கொத்திகள் அன்று நாம் . ஒரு வரம் கிடைத்தது மூங்கிலைத் துளையிட்டு புல்லாங்குழல் செய்யும் கலைநயம் அறிந்தோம் ! @ வழக்கமான உரையாடல்களின் வார்த்தைகளாயிருந்தோம் . ஒரு வரம் கிடைத்தது புதுக்கவிதைகளைக் கட்டியெழுப்பும் வித்தகச்சொற்களாய் உருவெடுத்தோம் ! @ கற்களை உருட்டித்தவழும் மழைநீராயிருந்தோம் . ஒரு வரம் கிடைத்தது வேர்களுள் நுழைந்து தாவரங்களின் ஜீவனாகும் சூத்திரம் தெரிந்தோம் ! புதிது புதிதாய் பரிணாமங்கள் நாம் கண்டோம்... அதற்காகவே கிடைத்து அந்த வரம் ! எது அந்த வரம் ?........ ............................. ...... ஞானச்சிசுக்களின் பிரசவம் நடக்கும் பள்ளிக்கூடம் தான் அந்த வரம் !! ஆம் ... பள்ளிக்கூடம் .. அது, ஒரு வரம் ! தவமியற்றாமலேயே கிடைத்த வரம் !! @ பள்ளிக்கூடம் .. அது ,பூமியின் இரைப்பை ! பூகோளம் உட்கொள்ளும் மானுடம் அதில் செரிமானம் ஆன பின்னரே ஆற்றலாகிறது ! @ பள்ளிக்கூடம் .. அது, நம் இரண்டாம் தாய் ! பண்பை ..படிப்பை .. அவள் பாலாயூட்டியதாலேயே நம் வாழ்க்கை உரு கண்டிருக்கிறது ! இரண்டாம் தாய் வளர்த்த பிள்ளைகளே.. என் சகோதரர்களே ! அவளை கவனிக்கத் தவறுதல் அது உச்சகட்ட மடமை ! அவளை அரவணைத்துப்போற்றுதலே நம் இதயங்களின் கடமை !!....... @@ புரட்சி நம்பி |