Fwd: கவிதை -- இரண்டாம் தாய் (School)

33 views
Skip to first unread message

Prem :-)

unread,
Jul 8, 2009, 3:33:05 AM7/8/09
to st_j...@googlegroups.com, pura...@ymail.com, mram...@gmail.com, Janarathanan


---------- Forwarded message ----------
From: Prem :-) <hiii...@gmail.com>
Date: 2009/7/8
Subject: கவிதை -- இரண்டாம் தாய் (School)
To: st_j...@googlegroups.com


Dear Schoolmates
 
Here is a Poem composed by Mr.Puratchi Nambi, (Old Student) about our School & the Old Students Association.
Its very nice, impressive & we appreciate him..This will be published in the Old Student Magazine & in our website...We appreciate & encourage the articles from the old students & th same will b published in the Magazine


 
---------- Forwarded message ----------
From: Puratchi Nambi <pura...@ymail.com>
Date: 2009/7/7
Subject: கவிதை -- இரண்டாம் தாய்
To: janarthanan <jan...@gmail.com>


@வெறும் கல்லாயிருந்தோம்
 ஒரு வரம் கிடைத்தது.
விழிகளையெல்லாம் விழுங்கும்
 எழிற் சிற்பமாகினோம்  ! 

@ இனிப்பை மொய்க்கும்
 ஈக்களாய்த் தானிருந்தோம் .
ஒரு வரம் கிடைத்தது
இனிப்புத்தேன் அடைகட்டும்
தேனீக்களானோம் !
  
@ மரங்களைக் 
கொத்திக்கொண்டிருந்த
 மரங்கொத்திகள் அன்று நாம் .
ஒரு வரம் கிடைத்தது
மூங்கிலைத் துளையிட்டு 
புல்லாங்குழல் செய்யும்
கலைநயம் அறிந்தோம் !

@ வழக்கமான  உரையாடல்களின்
 வார்த்தைகளாயிருந்தோம் .
 ஒரு வரம் கிடைத்தது
 புதுக்கவிதைகளைக் கட்டியெழுப்பும்
 வித்தகச்சொற்களாய்
 உருவெடுத்தோம் !  

 @ கற்களை உருட்டித்தவழும்
 மழைநீராயிருந்தோம் .
ஒரு வரம் கிடைத்தது
வேர்களுள் நுழைந்து
தாவரங்களின் ஜீவனாகும்
 சூத்திரம் தெரிந்தோம் !
          
      புதிது புதிதாய்
    பரிணாமங்கள்
     நாம் கண்டோம்...
   அதற்காகவே  கிடைத்து 
     அந்த வரம் !
 எது அந்த வரம் ?........
.............................
...... ஞானச்சிசுக்களின்
        பிரசவம் நடக்கும்
   பள்ளிக்கூடம் தான்
     அந்த வரம் !!
     ஆம் ...
       பள்ளிக்கூடம் .. அது,  ஒரு வரம் !
     தவமியற்றாமலேயே கிடைத்த வரம் !!
 @ பள்ளிக்கூடம் ..
       அது ,பூமியின் இரைப்பை !
    பூகோளம் உட்கொள்ளும்
    மானுடம்
    அதில் செரிமானம் ஆன பின்னரே
  ஆற்றலாகிறது !

@ பள்ளிக்கூடம் ..
   அது, நம்  இரண்டாம் தாய் !
   பண்பை ..படிப்பை ..
   அவள்  பாலாயூட்டியதாலேயே
   நம் வாழ்க்கை உரு கண்டிருக்கிறது  !
   
 இரண்டாம் தாய் வளர்த்த பிள்ளைகளே..
  என் சகோதரர்களே !
 அவளை கவனிக்கத் தவறுதல்
  அது உச்சகட்ட மடமை !
 அவளை அரவணைத்துப்போற்றுதலே  
  நம் இதயங்களின் கடமை !!.......                         @@ புரட்சி நம்பி
                                                                          
    





--
Thanks and Regards,
Janarthanan K
+91- 94440 39677



--
In True Friendship & Greatest Regards..Prem ♥



--
In True Friendship & Greatest Regards..Prem ♥
Reply all
Reply to author
Forward
0 new messages