அடியேனின் சிறுமதியில் நின்று, ஆச்சார்யன் எழுதிக்கொண்டது ...!!!
---------------------------------------------------------------------------------
தேசிகர் வாழ்த்து
அகத்திருளை அழிக்கவந்த ஆதவனே !! - நின்றன்
அடியார்க்கு அரும்பொருளாய் ஆனவனே !! - என்றும்
அழிக்கவொண்ணா அறப்பொருளை அளிப்பவனே !! - என்றன்
அகனமர்ந்து பரந்திட்டாய் ஆசா னென்றே !!!
தெள்ளியதீந் தமிழ்வேத மீந்த வேந்தே !! - கச்சி
தேவ ராஜன் திருவுருவே !!! தேசிகனே !! - எங்கள்
தேவே !! நின்திருவருளே வேண்டுகிறோம் !!! - என்றும்நின்
தெய்வத் திருப் பாதங்கள் பற்றி !!!
வேதமறைப் பொருளனைத்தும் விளங்கச் சொல்லி - கவி
வேழமென வீற்றிருக்கும் தூப்புல் திருவே !!
பக்தியொடு ஞானயோகம் வழங்கும் வேந்தே !! - நின்
பதகமலம் பற்றிடுவோ மென்றும் நாமே !!!
வண்டமி ழோடுவட மொழியும் கொண்டு - கச்சி
வரதனவன் வடிவழகைப் பாடிப் பரவி - இவ்
வையமுய்ய வழிசெய்த வெங்கள் தூப்புல்
வாரணத்துக் கிணையுமிந்த உலகில் உண்டோ!!
வாரிதிசூ ழுலகுவாழ் உயிர்க ளெல்லாம்
வல்லியமுப் பிறவிதம்மைத் தாண்டிச் செல்ல
வந்துதித்த தெந்தூப்புல் தெய்வத் திற்கே
வாழிவாழி வாழியென்று சொல்வோம் நாமே !!!
---------------------------------------------------------------------------------
தேசிகன் திருவடிகளே சரணம் !!....
Adiyen
Raghavan