From: "Thirumeyyam Sundararaman thirumeyyam....@gmail.com [ramanuja]" <rama...@yahoogroups.com>
Date: 18 June 2016 at 12:59:14 IST
To: yahoogroups <rama...@yahoogroups.com>, "varavaramun...@googlegroups.com" <varavaramun...@googlegroups.com>
Subject: [sri ramanuja] அமுத வரி - வெங்கட கிருஷ்ணன் திருவல்லிக்கேணி
Reply-To: rama...@yahoogroups.com
அமுத வரிதிரு. ப. வெங்கட கிருஷ்ணன் திருவல்லிக்கேணியில் இருந்து13-6 to 17-6 வரை kri...@gmail.comWord file attached for easy reading.------------13.06.2016 <> இன்றைய அமுதவரி
"இன்றே கழல் கண்டேன் ஏழ் பிறப்பும் யான் அறுத்தேன்"
(பேயாழ்வார், மூன்றாம் திருவந்தாதி, பாசுரம் 2)
இதற்கு முன் பாசுரத்தில், அதாவது, இந்தப் பிரபந்தத்தின் முதல் பாசுரத்தை, "திருக்கண்டேன்" என்று தொடங்கி, பகவானைத் தரிசிக்கப் பெற்றேன்; அவனுடன் கூடிய பிராட்டியைத் தரிசிக்கப் பெற்றேன்; அவனோடு கூடிய திவ்ய ஆயுதங்களைத் தரிசிக்கப் பெற்றேன் என்று தான் கண்ட தரிசனத்தை அறிவித்தார் ஆழ்வார். முதலாழ்வார்கள் எனப்படும் பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார் மற்றும் பேயாழ்வார் ஆகிய மூவரும் திருக்கோவலூர் என்னும் திவ்யதேசத்தில் ம்ருகண்டு மகரிஷியின் ஆசிரமத்தில் உள்ள இடைகழியில் (தாழ்வாரத்தில்) நின்றுகொண்டு பகவத் அனுபவத்தில் ஆழ்ந்திருந்தார்கள். அப்படி இருந்த நிலையில், முதல் இரண்டு ஆழ்வார்கள் (பொய்கையார் மற்றும் பூதத்தார்) ஆகிய இருவரும் ஏற்றிய ஞான விளக்கின் ஒளியால், பகவானைத் தரிசிக்கப் பெற்றேன் என்று உரைத்தார் பேயாழ்வார். அப்படி அவருக்குத் தரிசினத்தைக் கொடுத்த எம்பெருமான் அந்த தேசத்தில் (திருக்கோவலூரில்) இன்று கோயில் கொண்டுள்ள எம்பெருமான் "ஆயன்". என்றே கொண்டாடப்படுகிறார். கண்ணன் எம்பெருமானின் ஐந்து திவ்ய க்ஷேத்ரங்களுள் ஒன்று, திருக்கோவலூர்.
ஆக, அந்த ஆயனான கண்ணனின் தரிசனத்தைப் பெற்றேன் என்று தொடங்கி, "இன்றே கழல் கண்டேன்" என்பதன் மூலம், கண்ணனே! உனது திருவடிகளை வணங்கப் பெற்றேன் என்றும், "ஏழ் பிறப்பும் யான் அறுத்தேன்" என்பதன் மூலம் ஜென்ம பரம்பைரைகள் இனி என்னைத் தொடரமுடியாதபடி ஒழித்திட்டேன் என்றும் உரைக்கிறார். கண்ணன் எம்பெருமானின் திருவடிகளைச் சரண் பற்றியதால் கிடைத்த பலன், பிறவித் துன்பம் முடிந்தது என்று அறுதியிடுகிறார் பேயாழ்வார்.
தான் திரு அவதரித்த அன்றே, பெற்றோர்களுக்குக் கம்சன் இட்ட விலங்குகளை அறுத்தெரிந்தவன் கண்ணன். தன்னைச் சரண்பற்றும் அடியார்களின் பிறவித் துயராகிய விலங்கையும் அறுக்கவல்ல திருவடிகளை உடையவன் கண்ணன் என்பதையே பேயாழ்வாரின் இந்த அமுத வரிகள் உரைக்கின்றன.
ஆயன் துவரைக் கோனாய் நின்ற மாயனைத் தொடர்ந்து அனுபவிப்போம்.
==============
14.06.2016 <> இன்றைய அமுதவரி
"கூடாரை வெல்லும்சீர் கோவிந்தா"
(ஸ்ரீ ஆண்டாள், திருப்பாவை, பாசுரம் 27)கண்ணனை "கோவிந்தன்" என்று அழைத்தார்கள். திருப்பாவையில், மூன்று பாசுரங்களில் (27, 28 & 29) கோவிந்தத் திருநாமத்தைச் சொல்லியே கண்ணன் எம்பெருமானை அழைக்கின்றார்கள் ஆய்ச்சிமார்கள்.
"கோவிந்தன்" - பசுக்களை மேய்ப்பவன் என்று பொருள். பசுக்களைக் காத்தவன் என்றும் பொருள். கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்தவன். கோவிந்தனே! உன்னோடு கூடமாட்டோம்; உன்னைப் பற்றமாட்டோம் என்பவர்களை (அழித்து) நீ வெற்றி கொள்கிறாய் என்றுரைக்கின்றாள் ஸ்ரீ ஆண்டாள்.
"கூடாரை வெல்லும்சீர் கோவிந்தா" - இதனால் விமுகர்களையும் வசப்படுத்திக் கொள்ளவல்ல திருக்குணத்தை உடையவன் கண்ணபிரான் என்பது கூறப்படுகிறது. உலகிலுள்ள ஜனங்களை அபிமுகர்களென்றும், விமுகர்களென்றும், உதாஸீனர்கள் என்றும் மூன்று பிரிவில் அடக்கலாம்.
1) அபிமுகர்கள் என்பது அன்பர்களை;
2) விமுகர்கள் என்பது பகைவர்களை;
3) அன்பும் இல்லாமால், பகையும் இல்லாமல் இருக்கிற வழிப்போக்கர்கள் உதாஸீனர்கள் எனப்படுவர்."கூடார்" என்னும் சொல்லானது இந்த மூன்று பிரிவினரையும் குறிக்கும். "கூடார்" என்பதற்கு கூடாதவர்கள் என்று அர்த்தமாய் இருக்கும்போது, மேற்சொன்ன. விமுகர்களும், உதாஸீனர்களும் கூடாதவர்களாய் இருப்பார்களே ஒழிய, அபிமுகர்கள் எனப்படுகிற அன்பர்களும் எப்படிக் கூடாதவர்கள் ஆவர்? என்ற சந்தேகம் பிறக்கும். அதற்கு, எம்பெருமானுடைய ஒப்புயர்வற்ற பெருமையையும், நம்முடைய தாழ்வையும் ஒப்பிட்டால், நாம் அவனுடன் கூடமுடியாதவர்கள் என்ற கருத்து பிறக்கும். ஆக, "கூடார்" என்ற சொல்லிலே அபிமுகர்களோடு, விமுகர்களோடு, உதாஸீனர்களோடு வேறுபாடு இன்றி எல்லாரையும் சேர்த்துக்கொள்ள தவறில்லை என்ற தெளிவு பிறக்கும்..
அனைவரையும் வெல்லும் சக்தி படைத்தவனாய், ஆற்றங்கரைக் கிடக்கும் கண்ணனைத் தொடர்ந்து அனுபவிப்போம்.
==============
15.06.2016 <> இன்றைய அமுதவரி
"கூட்டிலிருந்து கிளி எப்பொழுதும் கோவிந்தா கோவிந்தா என்றழைக்கும்"
(ஸ்ரீ ஆண்டாள், நாச்சியார் திருமொழி, 12-9)
கண்ணன் இன்னும் தன்னைக் கைப்பிடிக்காததால், அந்தப் பிரிவாற்றாமையால், கண்ணனிடம் மிகுந்த கோபத்தில் இருந்தாள் ஆண்டாள். அப்பொழுது பார்த்து, இவள் வளர்த்து வந்த கிளி ஒன்று, இவள் முன்பு கற்பித்து வைத்திருந்த திருநாமத்தைச் சொல்லிக்கொண்டு இங்கும் அங்கும் திரியத் தொடங்கிற்று. இதை நாம் இப்படி சுதந்திரமாகத் திரியும்படி விட்டதால்தானே இது எனக்கு வெறுப்பு தரும் கண்ணன் நாமத்தையே திரும்பத் திரும்பச் சொல்லி என்னைக் கொல்லுகின்றது! என்று நினைத்து, அதைப் பிடித்து ஒரு கூட்டுக்குள் அடைத்துவைத்தாள். அப்பொழுதும், அந்தக் கிளியானது, கூட்டுக்குள் இருந்தபடியே, "கோவிந்தா கோவிந்தா" என்று அலற்றத் தொடங்கியது.
ஒருவேளை இதற்கு நன்கு உணவு சமைத்துப் போடுவதால், அந்தச் சத்தால்தான் இப்படி அவன் திருநாமங்களைச் சொல்கிறது; ஆகவே, இதன் சக்தியை இழக்கவைப்போம் என்று அதற்கு சோறு இடுவதை நிறுத்தினாள். அப்பொழுதும் அந்தக் கிளி விடாமல், "உலகளந்தான்" என்று கண்ணனின் புகழைக் குரலுயர்த்திப் பாடத் தொடங்கியது.
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தனைத் தொடர்ந்து அனுபவிப்போம்.
17.06.2016 <> இன்றைய அமுதவரி
"உறிவெண்ணெய் தோன்ற உண்டான்" == (பொய்கை ஆழ்வார், முதல் திருவந்தாதி, பா.18)
உறிகளிலே சேகரித்து வைத்த வெண்ணெயை எட்டிப்பிடித்து உண்டான் என்று வியாக்யானம். இன்னொரு வியாக்யானம், களவை மறைக்கத் தெரியாமல் இவனே கள்வன் என்று அனைவரும் அறியும்படியாகத் திருடி உண்டான் என்பதாகும். சிசுபாலன் முதலியவர்களும் ஏசும்படியாக அனைவருக்கும் தெரியும்படியாகத் திருடி உண்டான். இதனால், தனக்கு அனுகூலமானவர்கள் கை பட்ட பொருளைப் பெற்றாலே ஒழிய தரிக்க முடியாதவனாக இருந்தான் என்பது கூறப்படுகிறது. அடியவர்களுடைய பொருளும் , விரோதிகளுடைய உயிரும் வேறுபாடு இல்லாமல் இரண்டுமே அவனுக்கு விரும்பத்தக்கதாக இருப்பது கூறப்படுகிறது.
களவு என்றால் அதை இரகசியமாகச் செய்யவேண்டும். அதைவிட்டு, தான் செய்த களவானது பிரசித்தி பெறும்படி, அதாவது அனைவரும் அறியும்படி செய்தவன் கண்ணன் எம்பெருமான். அடியவர்கள் குற்றம் செய்தால், "என்னடியார் அது செய்யார் செய்தாரேல் நன்று செய்தார்" என்று அதை நற்றமாகக் (நல்லதாகக்) கொள்பவன் எம்பெருமான். இவன் வெண்ணையைத் திருடி உண்டான் என்று ஆய்ச்சிமார்கள் குற்றம் சுமத்த, இனி அவன் அதைச் செய்யாதபடிக்கு, அவனை யசோதை உரலோடு கட்டிப்போட, அந்த செயலே நன்மையில் முடிந்தது இருவருக்கு. அதாவது, கண்ணன் அவ்வுரலை இழுத்துக்கொண்டு அருகில் இருந்த இரட்டை மருத மரங்களுக்கு இடையே சென்றபோது, அந்த உரலைக் கண்ணன் குறுக்காய் நின்று இழுத்ததனால் அம்மரங்கள் இரண்டும் முறிந்த அளவில், முன்பு நாரதாரால் சாபம் பெற்று மரங்களாய் இருந்த நளகூபரன் மற்றும் மணிக்ரீவன் என்னும் குபேர புத்திரர் இருவரும் சாபம் தீரப் பெற்றனர்.
இதன்மூலம், கண்ணன் செய்த களவு விஷயம்கூட ஒரு நன்மையைக் கருதியே நடத்தப்பட்டது என்பது புலப்படுகிறது.
உண்ணும் சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலை என்று எல்லாமுமாய் இருப்பவனைத் தொடர்ந்து அனுபவிப்போம்.
---------------Adiyen Ramanuja DasanThiru Meyya Malai Ala Ramanuja Jeeyar Thiruvadigale Saranam__._,_.___
Reply via web post • Reply to sender • Reply to group • Start a New Topic • Messages in this topic (1)
Have you tried the highest rated email app?With 4.5 stars in iTunes, the Yahoo Mail app is the highest rated email app on the market. What are you waiting for? Now you can access all your inboxes (Gmail, Outlook, AOL and more) in one place. Never delete an email again with 1000GB of free cloud storage.
.![]()
__,_._,___