ஆங்கிலச் சொற்களுக்கான தமிழ்ச் சொற்களையும், தமிழ்மாழிச் சொல்லாக்கம்
பற்றியும் இங்கு கலந்துரையாடுவோம்.....
--
கனககோபி || K.Gopi krishna.
INFLATION - பணவீக்கம்
DEFLATION - ??????
பணவீக்கதிருக்கு எதிர்மறையாக பணசுருக்கம் என்று வேண்டுமானால்
சொல்லலாமா????
ஸ்ரீரங்கன் அச்சுதன்
பங்குச்சந்தை - ஸ்ரீலங்கா
http://pangusanthai-srilanka.blogspot.com/
அவர் ஒரு ஒரேமாதிரியான துடுப்பாட்ட வீரர் என்பது நேரடி மொழிபெயர்ப்பு. ஆனால் இந்த இடத்தில் consistent நுக்கு இது அர்த்தம் இல்லை
On Jan 3, 9:21 am, Gopi krishna Kanagalingam <kanagag...@gmail.com>
wrote:
> அதே....
> *பணச்சுருக்கம்* தான்.....http://www.google.com/dictionary?langpair=en|ta&q=DEFLATION&hl=en&aq=f
On 1/3/10, Gopi krishna Kanagalingam <kanag...@gmail.com> wrote:
> அதுதான் பிரச்சினை....
> *சீரான* என்பது வரலாம்....
--
LOSHAN
http://arvloshan.com/
சரி....
Cricket க்கு உச்சரிப்பு வந்தால் சரி. தமிழில் இந்த சிக்கலை மாற்றுவது கடினம் என நினைக்கிறேன்
அப்படியானால் சரியான பதம் என்ன?
cricket என்பதை krikit என்று தான் உச்சரிக்க வேண்டும்... (ஆங்கில அகராதிகள்)
சக்தியின் என்ற First Step விளம்பரத்தில் Fair என்ற சொல்லுக்கு சாதாரணமானது என்கின்றார்கள் Fair என்றால் நியாயமானது என்பதுதான் அவர்களின் News 1st News Fair and ... அந்த வசனத்திற்க்கு வரும்,Form என்பதை விண்ணப்ப படிவம் எனச் சொல்லாமல் இருந்தால் சரி.
அதற்கு மட்டையாட்டம் என்று கொஞ்சக் காலத்துக்கு முன்பு பதிலை எடுத்தேன்....
மட்டையாட்டமும் batting இனையே பிரதானப்படுத்துகிறது. மட்டைப்பந்தாட்டம் என எங்கேயோ பார்த்த ஞாபகம்
Hallucination இதற்க்கு சரியான தமிழ்ப் பதம் என்ன? இதனை தமிழில் எழுதினால் ஆள் முடிஞ்சுபோம்
பிரமை?
cricket என்பது ஆங்கிலம். தமிழ் துடுப்பாட்டம் அல்லது மட்டைப்பந்தாட்டம் எனலாம். cricket இனை தமிழில் எழுதும்போது உச்சரிப்பு ஏறத்தாள வந்தால் சரி. ஆங்கிலச் சொற்களுக்கு தமிழில் சரியான உச்சசரிப்புகள் எடுப்பது கடினமாயிற்றே
--
http://subankan.blogspot.com/
B.Subankan
இல்பொருள் உணர்வு, இல்பொருள் தோற்றம், மாயத்தோற்றம் என்றும் கூறலாம்
--
///
(0 0)
BaVaN-oOO (_)
╔═══════════════════╗
║http://nbavan7.blogspot.com/
╚═══════════════════╝
OOo
|__|__|
|| ||
ooO Ooo
நான் என்ன கேட்கிறேன் என்றால் ஆங்கிலத்தில் உச்சரிப்பு ஒன்று தானே, (வேண்டுமானால் 2...) அப்போது நாம் ஏன் 6, 7 வகையில் அதை எழுதவேண்டும்?
ஏதோ ஒழுங்காக விவாதித்து விட்டுஒரு முடிவு காணுங்கள் நிறைய வேலைகள் இருக்கின்றது பின்னர் சந்திக்கின்றேன்
சில விடயங்களை நேரடித் தமிழ் படுத்துவது சரியா?
தமிழில் எல்லா உச்சரிப்புகளுக்கும் எழுத்துகள் இல்லையே கோபி, அவரவர் சரியான உச்சரிப்பு என்று கருதுவதை எழுதுகிறார்கள்.
ரோஜாப்பூவை ரோசா என்று சொன்னால் ரோஜாப்பூவிலிருந்து அது வேறாகிவிடுமா???
ஸ்ரீரங்கன் அச்சுதன்
பங்குச்சந்தை - ஸ்ரீலங்கா
http://pangusanthai-srilanka.blogspot.com/
பிரச்சினை இருப்பதை ஏற்றுக் கொள்கிறேன்? ஆனால் நாங்கள் ஏன் பொதுப்படையாக ஒன்றைப் பயன்படுத்தக்கூடாது என்று கேட்கிறேன்....
அப்படியென்றால் கிருஷ்ணன் என்பதை எப்படி எழுதுவது கிருட்டினன் என்றா?
--
///
(0 0)
BaVaN-oOO (_)
╔═══════════════════╗
║http://nbavan7.blogspot.com/
╚═══════════════════╝
OOo
|__|__|
|| ||
ooO Ooo
சுருக்கமாக, அழகாக இருக்கும்போது எளிமை கருதி நேரடியாகக் கையாளலாம்.
இல்லை கோபி, இவற்றுக்கு தமிழ்ப்பதங்கள் இருக்கும்போது எதற்காக ஆங்கிலத்தை தமிழில் எழுதவேண்டும்?
அதே போல புதிய தொழிநுட்பச் சொற்களுக்கு தமிழாக்கம் செய்வதை ஏன் தவறு என்கிறீர்கள்?
இங்கே வடமொழிக் கலப்பைப் பற்றி அல்ல, ஆங்கிலத்தை அப்படியே தமிழில் எழுதுவது பற்றியே குறிப்பிட்டேன. வடமொழி எழுத்துகள் ஓரளவு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.(எதிர்ப்பவர்களும் இருக்கிறார்கள்)
தமிழில் எழுதுவது ஒருபோதும் தவறாகாது. ஆனால் இப்படியான சொற்களை தமிழில் பலரும் அறிந்திருக்க மாட்டார்கள் என்பதால் அருகிலேயே ஆங்கில விளக்கமும் அவசியமாகிறது.
நல்ல கலந்துரையாடல்...நாம் கையடக்க தொலைபேசிக்கு பயன் படுத்தும் sim என்பதன் தமிழ் சொல் என்ன?
sim என்றால் subscriber identity module...
இடுகை என்பது நாம் இடுகின்ற post இனை குறிக்கின்றது என்றுதான் நான் அறிந்திருக்கிறேன். நாம் ஒரு இடுகையை இட்டுவிட்டு பதிவிட்டுவிட்டேன் என்று சொல்கிறோம் இவற்றை சரியாக பயன்படுத்துவது நல்லதல்லவா?
SIM CARD என்றால் -தொகுப்பி, தகவல் அட்டை என்றும் கூறலாம்
--
///
(0 0)
BaVaN-oOO (_)
╔═══════════════════╗
║http://nbavan7.blogspot.com/
╚═══════════════════╝
OOo
|__|__|
|| ||
ooO Ooo
கார் தமிழ் ஒலிக்கு நேரடியான சொல். 'கார்ல போனா வேகமா போலாம், தேர்லன்னா
அசஞ்சு அசஞ்சுதான் ' - என்பது போல தமிழுக்குரிய 'எகன மொகன '
இருக்கும்பொழுது அதைக் கண்டுகொள்ள மறுப்பது வீம்பு.
நான் நினைக்கிறேன் ஊர்ந்து என்று அல்ல உந்து என்பதாக இருக்கலாம் என்று (மகிழுந்து, பேருந்து ) உந்துதல் என்று பொருள் படலாம் என்று நினைக்கிறேன். மகிழுந்து போன்ற சொற்களை லோஷன் அண்ணா மூலமே நான் அறிந்தேன் இதற்கு லோஷன் அண்ணா விளக்கம் தருவது நல்லது.
பேருந்து, மகிழுந்து என்று பெயர் வரக் காரணம் எனக்கு தெரியாது...
நான் நினைக்கிறேன் ஊர்ந்து என்று அல்ல உந்து என்பதாக இருக்கலாம் என்று (மகிழுந்து, பேருந்து ) உந்துதல் என்று பொருள் படலாம் என்று நினைக்கிறேன். மகிழுந்து போன்ற சொற்களை லோஷன் அண்ணா மூலமே நான் அறிந்தேன் இதற்கு லோஷன் அண்ணா விளக்கம் தருவது நல்லது.
இந்தச் சொற்களை 'வி.பு' தங்கள் கட்டுப்பாட்டு பிரதேசங்களில் பயன்படுத்துவதை பார்த்திருக்கிறேன்....
நண்பர்களே,
தமிழில் சொல்லாக்கம் தொடர்பான உரையாடல்களுக்கென்றே தனி மடலாடற்குழு ஒன்று இயங்குகிறது.
இங்கே உறுப்பினராகச் சேர்ந்துகொள்வீர்களானால் எல்லோருக்கும் பயன்படும் வண்ணம் சொல்லாக்கம் குறித்து உரையாடி நல்ல தமிழ்க் கலைச்சொற்களை உருவாக்கலாம்.