இன்றுடன் யாழ்ப்பாணப் பொது நூலகம் எரிக்கப்பட்டு 32 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. இந்த 32 ஆண்டுகளில் பல தெரியாத சம்பவங்கள் - நடந்த சம்பவங்களில் சில மறைக்கப்பட்டும், நடக்காத நிகழ்வுகள் நடந்ததாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளதாலேயே ஒரு ஆவணமாக இங்கு பதிவிடுகின்றேன். ஆவணமாகப் பயன்படுத்தும் நூல்களிலும் தவறுகள் இருக்கின்றன.மூன்று நான்கு தடவைகள் நூல்களைப் பார்த்து அவை பிழை என்று ஊர்ஜிதம் செய்தபின்னர் இவற்றை ஆவணமாக்க முயற்சித்தேன். இதில் பிழைகள் இருப்பின் தயவுசெய்து உடனடியாக எனக்கு அவற்றைச் சுட்டிக்காட்டித் திருத்தவும், மேலதிகமாக உங்களுக்குத் தெரிந்த எனக்குத் தெரியாத தகவல்களை எனக்குத் தெரிவிக்கும்படியும் தயவாக வேண்டி நிற்கின்றேன்.