நிகழ்வுகள் பற்றிய அறிவிப்புக்கள்

33 views
Skip to first unread message

M.Mauran

unread,
Nov 10, 2010, 11:02:21 AM11/10/10
to srilankanta...@googlegroups.com

அரசியல் ஆய்வுகளிலும் வேறு அரசியல் விடயங்களிலும் அடிக்கடிப் பயன்படுத்தப்படும் "வர்க்கம்" , "வர்க்கப் போராட்டம்" போன்ற சொற்களின் அர்த்தம் என்ன? இதனை எளிமையாக விளங்கிக் கலந்துரையாட நாளை கூட்டத்துக்கு அனைவரும் வாருங்கள். அறிமுக உரை - சி. சிவசேகரம்

காலம் : 11-11-2010 (நாளை வியாழக்கிழமை)

நேரம்: 6.00 மணி (5.45 ற்கு சிற்றுண்டிகள் வழங்கி முடிக்கப்படும்)

இடம் : தேசியக் கலை இலக்கியப் பேரவை (றொக்சி திரையரங்குக்கு முன்னால்)




இவ்வாரம்:
வர்க்கமும், வர்க்கப் போராட்டமும்

மாக்சியத்தின் அடிப்படையான வர்க்கம், வர்க்கப் போராட்டம் பற்றிய புரிதல்களுக்கான கலந்துரையாடல்.

...நிகழ்த்துபவர்: சி.சிவசேகரம்


2010 - நவம்பர்- 11, வியாழக்கிழமை.

ஆர்வமுள்ள எவரும் கலந்துகொள்ளலாம்.

Social Science Studies Circle - An Open Discussion Platform
சமூக விஞ்ஞான கல்வி வட்டம் - ஒரு திறந்த கலந்துரையாடற் களம்

(வாரம் தோறும் வியாழக்கிழமைகளில் மாலை 5:45 மணியிலிருந்து.)

முற்று முழுதாக கலந்துரையாடல் வடிவிலமைந்த ஒரு வாராந்த சந்திப்பு!

இடம் :
தேசிய கலை இலக்கியப் பேரவை,
571/15. காலி வீதி,
வெள்ளவத்தை




--
மு. மயூரன் | මු. මයූරන් | M. Mauran
[ http://www.google.com/profiles/mmauran ]

ம.தி. சுதா

unread,
Nov 10, 2010, 12:06:34 PM11/10/10
to srilankanta...@googlegroups.com
நிகழ்வு சிறப்புற வாழ்த்துக்கள்...

2010/11/10 M.Mauran <mma...@gmail.com>



--
என் வலைத்தளம் தமிழனால் தமிழுக்காக....
போரற்ற புது வாழ்வு வேண்டுபவன்
......
mathisutha.blogspot.com

மன்னார் அமுதன்

unread,
Nov 12, 2010, 2:34:05 AM11/12/10
to srilankanta...@googlegroups.com
பேசாலை வளர்கலை மன்றத்தின் 35ஆவ்து நிறைவாண்டு முத்தமிழ் விழா 14-11-2010 ஞாயிற்றுக் கிழமை மாலை 5.30 க்கு பேசாலை வெற்றி அன்னை அரங்கத்தில் நடைபெற உள்ளது. 

வளர்கலை மன்றத்தின் தலைவரான அ.சூசைமரியான் பீரிஸ் தலைமையில் நடைபெறவிருக்கும் இவ்விழாவில் மன்னார் தமிழ்ச்சங்கத் தலைவர் அருட்பணி.தமிழ்நேசன் அடிகளார் முதன்மை விருந்தினராகவும் அருட்பணி .அகஸ்ரின் புஸ்பராஜ் (பங்குத் தந்தை), திரு.மு.சுந்தரபாண்டியன் (தமிழ் ஆர்வலர் - மட்டக்களப்பு), திரு. எஸ்.இ. சத்திய சோதி (உதவி பிரதேச செயலாளர்), மற்றும் கவிஞர்.மன்னார் அமுதன் ஆகியோர் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொள்ள உள்ளனர்.

அருட்பணியாளர்களான ப.ஜெரோம் லெம்பட், செ.சூசை துரம், சூ.ஜெயபாலன் குரூஸ், அ.செலஸ்ரின் மஸ்கிறிஞ்ஞ, ஜீவா பெர்ணாண்டஸ், ஜெயந்தன் பச்சேக், ச. ஜோய் பறுநாந்து, க.அருள்ராள் குரூஸ், எஸ்.நெவின்ஸ் பீரிஸ், சூ.டக்ளஸ் லோகு ஆகியோர் கெளரவ விருந்தினர்களாகவும் கலந்து கொள்ள உள்ளனர்.


நாள்: 14-11-2010
இடம்: பேசாலை வெற்றி அன்னை அரங்கம்



தகவல்:
மன்னார் அமுதன்
http://amuthan.wordpress.com/
==============================

ம.தி. சுதா

unread,
Nov 12, 2010, 7:29:50 AM11/12/10
to srilankanta...@googlegroups.com
நிகழ்வு சிறப்புற வாழ்த்துக்கள்...

2010/11/12 மன்னார் அமுதன் <amuj...@gmail.com>

மன்னார் அமுதன்

unread,
Nov 26, 2010, 2:19:45 AM11/26/10
to srilankanta...@googlegroups.com
கொழும்பு திருமறைக் கலாமன்றத்தின் இலக்கிய பாசறை நிகழ்வு

மாதந்தோறும் நடைபெறும் இலக்கியப் பாசறை நிகழ்வு 
28-11-2010 ஞாயிற்றுக் கிழமை மாலை 4.00 மணிக்கு 
இல.57, 5வது ஒழுங்கை, புனித பெனடிக்ட் வீதி, கொழும்பு-13 இல் அமைந்துள்ள கலாசுரபி மண்டபத்தில் நடைபெறும். 

கவிஞர்.வதிரி.சி.இரவீந்திரன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் 
கவிஞர் வெ.துஷ்யந்தன் எழுதிய “வெறிச்சோடும் மனங்கள்” நூல் பற்றிய விமர்சனத்தை மன்னார் அமுதனும்,
போர்கால இலக்கியங்களின் முக்கியத்துவங்கள் பற்றிய ஆய்வுரையை கவிஞர் வெ.துஷ்யந்தனும் ஆற்றவுள்ளனர்.

இலக்கிய ஆர்வமுள்ள, தமது கருத்துக்களை உலகிற்கு உரத்துச் சொல்ல விரும்பும் சிந்தனையாளர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

அனைவரும் வருக ... தமிழ்ச் சுவை பருக

ம.தி. சுதா

unread,
Nov 26, 2010, 5:00:56 AM11/26/10
to srilankanta...@googlegroups.com
நிகழ்வு சிறப்புற வாழ்த்துக்கள்...

2010/11/26 மன்னார் அமுதன் <amuj...@gmail.com>

Mathuvarman

unread,
Nov 28, 2010, 1:34:54 AM11/28/10
to srilankanta...@googlegroups.com
தோழர் கே. ஏ. சுப்பிரமணியம் - 21வது நினைவு தினக் கூட்டம்

தலைப்பு:
உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் திருத்தச் 
சட்டமூலம்.
பொது உடமை இயக்கத்தின் புரட்சிகர 
முன்னோடி 

தோழர் கே. ஏ. சுப்பிரமணியம்

21வது நினைவு தினக் கூட்டம்


இடம்:
கைலாசபதி கேட்போர் கூடம்,

தேசிய கலை இலக்கியப் பேரவை
(571/15, காலி வீதி, வெள்ளவத்தை)

காலம் : 28. 11. 2010 (ஞாயிறு) 
பி.ப 5.00 மணி

தலைமை : பொ.கோபிநாத்
நினைவுப் பேருரை : இ. தம்பையா

தலைப்பு:
உள்ழூராட்சி சபைகளுக்கான தேர்தல் திருத்தச் 
சட்டமூலம்.

அனைவரையும் வருகைதருமாறு அன்புடன் 
கேட்டுக்கொள்கிறோம்.

-நினைவுக் குழு-

மன்னார் அமுதன்

unread,
Dec 16, 2010, 4:27:08 AM12/16/10
to srilankanta...@googlegroups.com

”வாசாப்பு” -நாவல் வெளியீட்டு விழா

எதிர்வரும் திங்கட்கிழமை 20-12-2010 அன்று காலை 10.00 மணிக்கு 
நாவலாசிரியர் எஸ்.ஏ.உதயனின் “ வாசாப்பு” நாவல் வெளியீட்டு விழா 
கலாசுரபி மண்டபம், இல.57, 5ஆவது ஒழுங்கை, புனித பெனடிக்ட் மாவத்தை, கொழும்பு -13 இல்
நடைபெற உள்ளது.

எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் தலைமையில் நடைபெற உள்ள இவ்விழாவில் எழுத்தாளர்களான
அந்தனி ஜீவா, கலைவாதி கலீல், மற்றும் ரோயல் கல்லூரி அதிபர் மா.கணபதிப்பிள்ளை ஆகியோர் கெளரவ விருந்தினர்களாக கலந்து சிறப்பிக்க உள்ளனர்...

அனைவரும் வருக....


தகவல்: மன்னார் அமுதன்

scan0022.jpg
scan0023.jpg

மன்னார் அமுதன்

unread,
Jan 17, 2011, 11:11:19 PM1/17/11
to srilankanta...@googlegroups.com
கொழும்பு திருமறைக்கலாமன்றத்தின் இலக்கியப் பாசறை நடாத்தும்

முழுமதி தின இலக்கிய நிகழ்வு 

கொழும்பு திருமறைக்கலாமன்றம் நடத்தும் முழுமதி தின “இலக்கியப் பாசறை” நிகழ்வு நாளை புதன்கிழமை காலை 10.00 மணிக்கு இல.57, 5ஆவது வீதி, புனித பெனடிக் மாவத்தை, கொழும்பு - 13 இல் உள்ள கலாசுரபி மண்டபத்தில் நடைபெறும். 

திருமறைக் கலாமன்ற இணைப்பாளர் திரு.அம்புறோஸ் பீட்டர் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் எழுத்தாளர் சி.சிவசேகரம் எழுதிய “முட்கம்பித் தீவு” நூல் பற்றிய கருத்துரையை கவிஞர் கனிவுமதியும், எழுத்தாளர் நீ.பி.அருளானந்தத்தின் “கடந்து போகுதல்” மற்றும் “ஆதாம் ஏவாள் மறு வாசிப்பு”  நூல் பற்றிய கருத்துரைகளை கவிஞர்களான வினோராஜும், மன்னார் அமுதனும் ஆற்றவுள்ளனர்.

எழுத்தாளர்களான நீ.பி.அருளானந்தம், சி.சிவசேகரம் மற்றும் கலை இலக்கியப்பேரவைச் பொதுச்செயலாளர் சோ.தேவராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொள்ள உள்ளனர்.

இலக்கிய ஆர்வலர்களையும், சக படைப்பாளிகளையும் சமுகமளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மன்னார் அமுதன்

unread,
Feb 3, 2011, 6:06:22 AM2/3/11
to srilankanta...@googlegroups.com
மக்கள் களிரியின் “நாடகத் திருவிழா”

05-02-2011    -  செக்கு நாடகம்
06-02-2011   -   அபிஞான சகுந்தலா
07-02-2011   -    குருடனும் நொண்டியும்

இடம்: மரதானை, டவர் மண்டபம்
நேரம் : மாலை 6.00 மணி

(அனுமதி இலவசம்) 


--

நன்றி
==============================
அன்புடன்
மன்னார் அமுதன்
http://amuthan.wordpress.com/
==============================

மன்னார் அமுதன்

unread,
Feb 15, 2011, 12:04:20 AM2/15/11
to srilankanta...@googlegroups.com
கொழும்பு திருமறைக்கலாமன்றத்தின் இலக்கியப் பாசறை நடாத்தும்
முழுமதி தின இலக்கிய நிகழ்வு 



கொழும்பு திருமறைக்கலாமன்றம் நடத்தும் முழுமதி தின “இலக்கியப் பாசறை” நிகழ்வு எதிர்வரும் 17.02.2011 வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு இல.57, 5ஆவது வீதி, புனித பெனடிக் மாவத்தை, கொழும்பு - 13 இல் உள்ள கலாசுரபி மண்டபத்தில் நடைபெறும். 

திருமறைக்கலாமன்ற இணைப்பாளர் திரு.அம்புறோஸ் பீட்டர் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் இலங்கை தமிழ் சினிமாவின் வரலாறு குறித்து திரு தம்பையா தேவதாசும், இலக்கியச் சிறப்புரையை கவிஞர். விமலாதித்தனும் ஆற்றவுள்ளனர்.

இலக்கிய ஆர்வலர்களையும், சக படைப்பாளிகளையும் சமுகமளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.


மன்னார் அமுதன்

unread,
Mar 31, 2011, 2:32:39 AM3/31/11
to srilankanta...@googlegroups.com


அக்குரோணி - கவிதை நூல் வெளியீட்டு விழா


எதிர்வரும் ஏப்ரல் 3ஆம் திகதி (03-04-2011) ஞாயிற்றுக்கிழமை மாலை 05.05க்கு எனது (மன்னார் அமுதன்) இரண்டாவது கவிதை நூலான அக்குரோணி இலக்கம்:57, உருத்திராமாவத்தை, கொழும்பு-06 இல் உள்ள கொழும்பு தமிழ்ச்சங்கத்தின் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெறவுள்ளதுமருத்துவக் கலாநிதி.எம்.கே.முருகானந்தன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்விற்கு வீரகேசரி வாரவெளியீடுகளின் பிரதான பொறுப்பாசிரியர் திரு.வி.தேவராஜ் பிரதம அதிதியாகக் கலந்துகொள்கின்றார். 

இலக்கியப் புரவலர் அல்ஹாஜ் ஹாசிம் உமர் அவர்கள் இந்நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு முதற்பிரதியைப் பெற்றுக் கொள்வார்.சிறப்பு அதிதிகளாக கொழும்பு தமிழ்ச்சங்கத்தின் பொதுச்செயலாளரான திரு.இரகுபதி பாலஸ்ரீதரன் மற்றும் கலை இலக்கியப் பேரவையின் பொதுச்செயலாளர் திரு.சோ.தேவராஜா ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பிக்கின்றனர். மேலும் கொழும்பு தமிழ்ச்சங்கத்தின் தலைவர் திரு.மு.கதிர்காமநாதன்னும் சட்டத்தரணியும், இலக்கிய ஆர்வலருமான திரு.ஜி.இராஜகுலேந்திரா ஆகியோர் கெளரவ விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர்.

அக்குரோணி நூல் பற்றிய அறிமுக உரையை சக்தி பண்பலையின் தயாரிப்பாளரான திரு.ஆ.இராஜ்மோகன் ஆற்றவுள்ள அதேவேளை கவிஞர், நூல்விமர்சகர், பத்தி எழுத்தாளர் எனப் பல்துறையில் கால்பதித்த பன்முகப் படைப்பாளி கவிஞர் அஷ்ரப் சிஹாப்தீன் நூல் நயவுரையை  ஆற்றவுள்ளார். நூல் வெளியீடு பற்றி கவிஞர் சடாகோபனும், பேச்சாளர்.என்.கே.அசோக்பரனும் கருத்துரைக்கவுள்ளனர்.

வரவேற்புரையை கொழும்பு திருமறைக் கலாமன்றத்தின் இணைப்பாளரான திரு.அம்புறோஸ்பீட்டரும், தமிழ்மொழி வாழ்த்தை திருமதி மைதிலி அமுதனும் இசைப்பார்கள். நிகழ்வுகளை ஊடகவியலாளரும், வலைப்பதிவருமான திரு.நிர்சன் இராமானுஜம் நெறிப்படுத்தவுள்ளார். இந்நூல் வெளியீட்டு விழாவில் சக்தி இசை இளவரசர்கள் புகழ் திரு.லோகேஷ்வரனின் இன்னிசைப் பாடல்களும் இடம்பெறும்.

இலக்கிய ஆர்வலர்கள், வலைப் பதிவர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றேன்

அனைவரும் வருக ..... தமிழ்ச்சுவை பருக.....


தகவல்:

மன்னார் அமுதன்

unread,
Mar 31, 2011, 2:46:48 AM3/31/11
to srilankanta...@googlegroups.com
scan0082.jpg

மன்னார் அமுதன்

unread,
Apr 12, 2011, 12:59:36 AM4/12/11
to srilankanta...@googlegroups.com

அக்குரோணி - கவிதைநூல் அறிமுக விழா


17.04.2011 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு அக்குரோணி -அறிமுகவிழா மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் கேட்போர் கூடத்தில் இடம்பெறும்.. 

தலைமை: அருட்பணி தமிழ்நேசன் அடிகள் 

பிரதம அதிதி: கலாநிதி கந்தையா ஸ்ரீகணேஸ் 

நூல் விமர்சனம்: அருட்பணி டக்ளஸ் மில்ரன் லோகு அடிகள்

அனைவரும் வருக.. 
introduce -akkuroni.jpg

மன்னார் அமுதன்

unread,
Apr 12, 2011, 1:16:30 AM4/12/11
to srilankanta...@googlegroups.com
கொழும்பு திருமறைக்கலாமன்றத்தின் இலக்கியப் பாசறை நடாத்தும்
முழுமதி தின இலக்கிய நிகழ்வு 

“மல்லிகை ஆண்டு மலர் -2011 ஆய்வு”

கொழும்பு திருமறைக்கலாமன்றம் நடத்தும் முழுமதி தின இலக்கியப் பாசறை நிகழ்வு எதிர்வரும் 17.04.2011 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு இல.57, 5ஆவது வீதி, புனித பெனடிக் மாவத்தை, கொழும்பு - 13 இல் உள்ள கலாசுரபி மண்டபத்தில் நடைபெறும். 

மூத்த எழுத்தாளர் திரு.தெளிவத்தை ஜோசப் தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்வில் மல்லிகை ஆண்டு மலர்-2011 மலரில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளை விமர்சகர் எஸ்.சக்திதரனும், கதைகளை சட்டத்தரணி திரு.இராஜகுலேந்திராவும், கவிதைகளை கவிஞர் மட்டுவில் ஞானக்குமரனும் ஆய்வு செய்யவுள்ளனர்

இலக்கிய ஆர்வலர்களையும், சக படைப்பாளிகளையும் சமுகமளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மன்னார் அமுதன்

unread,
May 13, 2011, 2:33:55 AM5/13/11
to srilankanta...@googlegroups.com
இரு கவிதை நூல் ஆய்வுகள்

கொழும்பு திருமறைக்கலாமன்றத்தின் முழுமதி தின இலக்கியப் பாசறை நிகழ்வு எதிர்வரும் 17.05.2011 செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு இல.57, 5ஆவது வீதி, புனித பெனடிக் மாவத்தை, கொழும்பு - 13 இல் உள்ள கலாசுரபி மண்டபத்தில் நடைபெறும். 

வானம்பாடிக் கவிஞர் வதிரி.சி.ரவீந்திரன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் கவிஞர் மன்னார் அமுதனின் “அக்குரோணி” கவிதை நூலைக் கவிஞர். தீபச்செல்வனும், கவிஞர் மட்டுவில் ஞானக்குமரனின்  “சிறகு முளைத்த தீயாக” கவிதை நூலைக் கவிஞர் மேமன்கவியும் ஆய்வு செய்யவுள்ளனர்.

இலக்கிய ஆர்வலர்களையும், சக படைப்பாளிகளையும் சமுகமளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தகவல்:
மன்னார் அமுதன்
--
http://amuthan.wordpress.com/
==============================

மன்னார் அமுதன்

unread,
Jun 24, 2011, 1:37:41 AM6/24/11
to srilankanta...@googlegroups.com

சாய்ந்தமருதில் மாபெரும் கலை இலக்கிய நிகழ்வுகள்


சாய்ந்தமருது “லக்ஸ்டோ” அமையமும், “தடாகம்” கலை இலக்கிய வட்டமும் இணைந்து மாபெரும் ஒருநாள் கலை இலக்கிய நிகழ்ச்சியை ஒழுங்கமைத்துள்ளனர். எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 9.00மணி முதல் மாலை5.00 மணி வரை கமு/அல் ஹிலால் வித்தியாலயத்தில் நடைபெற உள்ள இந்நிகழ்வில் மருதூர் அன்சாரின் தொகுப்பில் 26 கவிஞர்கள் இணைந்து வெளியிடும் “உன்னை நினைப்பதற்கு” எனும் கவிதை நூலும் சப்னா அமீனின் “நிலாச்சோறு” எனும் கவிதை நூலும் வெளியிடப்பட உள்ளன.

அதனைத் தொடர்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகளும், சிறப்புக் கவியரங்கமும் இடம்பெற உள்ளன.தமிழ்த்தென்றல் அலி அக்பர் தலைமையில் இடம்பெற உள்ள இக்கவியரங்கில் வெவ்வேறு கவியடிகளில் கவிமணி என்.நஜ்முல் ஹுசைன், கிண்ணியா அமீர் அலி, யாழ் அஸீம், கலைமகள் ஹிதாயா றிஸ்வி, கவிஞர் அஸ்மின், எஸ்.ஜனூஸ், மன்னார் அமுதன், ஏ.சி.ராஹில், சுகைதா ஏ.ஹரீம், தர்பா பானு ஆகிய கவிஞர்கள் கலந்து சிற்ப்பிக்க உள்ளனர்.

மேலும் கலை, இலக்கிய ,சமூக, ஊடகத் துறையில் சாதித்தவர்களுக்கான லக்ஸ்டோவின் கெளரவிப்பும்,தடாகம் கலை இலக்கிய வட்டத்தின் "அகஸ்தியர் விருது" வழங்கும் நிகழ்வும் இடம் பெறவுள்ளன."வானொலிக் குயில் " ராஜேஷ்வரி சண்முகம் அவர்கள் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கவுள்ளார்.


கலை இலக்கிய ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்...

தகவல்: 
நிகழ்ச்சித் தயாரிப்புக் குழு:-
ஏ.எல்.அன்ஸார்
கலைமகள் ஹிதாயா றிஸ்வி
எஸ்.ஜனூஸ்
பி.எம்.ரியாத்


மன்னார் அமுதன்

unread,
Jul 12, 2011, 1:30:10 AM7/12/11
to srilankanta...@googlegroups.com
14.07.2011 வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு இல.57, 5ஆவது வீதி, புனித பெனடிக் மாவத்தை, கொழும்பு - 13 இல் உள்ள கலாசுரபி மண்டபத்தில் கொழும்பு திருமறைக்கலாமன்றத்தின் இலக்கியப் பாசறை நடாத்தும் பேராசான் கார்த்திகேசு சிவத்தம்பியின் இரங்கல் கூட்டமும் எழுத்தாளர் அருள் மா.இராஜேந்திரனின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலியும்

மாதந்தோறும் நடைபெறும் கொழும்பு திருமறைக்கலாமன்றத்தின் முழுமதி தின இலக்கியப் பாசறை நிகழ்வில் இம்முறை எழுத்தாளர் அருள் மா.இராஜேந்திரனின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலியை நினைவு கூறுமுகமாக எதிர்வரும் 14.07.2011 வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு இல.57, 5ஆவது வீதி, புனித பெனடிக் மாவத்தை, கொழும்பு - 13 இல் உள்ள கலாசுரபி மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்படுள்ளது. 

டிலாசால் அருட்சகோதரர் பொனவெஞ்சர் தலைமையில் நடைபெறவுள்ள  இந்நிகழ்வில் ஈழத்தின் பேராசான் கார்த்திகேசு சிவத்தம்பி -சில நினைவலைகள் எனும் தலைப்பில் எழுத்தாளர் லெனின் மதிவானம் அவர்களும், எழுத்தாளர் அருள்மா இராஜேந்திரன் ஆற்றிய இலக்கிய சேவைகள் மற்றும் மனிதாபிமானப் பணிகள் பற்றிய உரையை ஆசிரியர் தாசியிசஸ் அவர்களும், மன்னார் அமுதனும் ஆற்றவுள்ளனர். 

இலக்கிய ஆர்வலர்களையும், சக படைப்பாளிகளையும் சமுகமளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நன்றி
==============================
அன்புடன்
மன்னார் அமுதன்

மன்னார் அமுதன்

unread,
Aug 11, 2011, 5:58:00 AM8/11/11
to srilankanta...@googlegroups.com
“குடை நிழல்” ஆய்வும்,  “கலைமுகம்” விமர்சனமும்

தலைமை : கலை இலக்கிய விமர்சகர் எஸ். சக்திதரன்
குடைநிழல் :  கருத்துரை கவிஞர் கனிவுமதி
கலைமுகம்:   கவிதைப் பகிர்வு - கவிஞர் சப்ராஸ் அபூபக்கர்

நாள்: 13.08.2011 சனிக்கிழமை 
நேரம்: காலை 10.00 மணிக்கு 
இடம்: இல.57, 5ஆவது வீதி, புனித பெனடிக் மாவத்தை, கொழும்பு - 13 

ஆர்வலரே வருக..
         இனிய தமிழ் பருக

--
தகவல்: மன்னார் அமுதன்


purujoththaman thangamayl

unread,
Aug 11, 2011, 8:27:08 AM8/11/11
to srilankanta...@googlegroups.com

அஜித்தை காப்பாற்றுமா மங்காத்தா? :ஜோக்கர்களாக எதிர்க்கட்சிகள்?!

மீசை தாடி இல்லாமல் ரவுடி ஹீரோவைக்கூட மிகவும் ஸ்ரைலிஷாக ஏ.ஆர்.முருகதாஸ் காட்டிய படம் தீனா. எனக்கு நடிகர் அஜித்தின் படங்களில் மிகவும் பிடித்த படமும் இதுதான். சண்டைக்காட்சிகளில் அப்படியொரு அனலும், காதல் காட்சிகளில் வழிந்தோடும் ரொமான்ஸ்சும் இன்றைக்கும் தீனாவை விரும்ப காரணங்கள்.

http://maruthamuraan.blogspot.com/2011/08/blog-post_11.html

2011/8/11 மன்னார் அமுதன் <amuj...@gmail.com>



--
PURUJOTHTHAMAN THANGAMAYL (PRAVEEN)
http://maruthamuraan.blogspot.com/

மன்னார் அமுதன்

unread,
Jan 4, 2012, 11:37:25 PM1/4/12
to srilankanta...@googlegroups.com
தழல் இலக்கிய வட்டமும் மன்னார் எழுத்தாளர் பேரவையும் இணைந்து நடத்தும்

முழுமதி நாள் இலக்கியக் கருத்தாடலும் மன்னார் எழுத்தாளர் பேரவையின் புதிய நிர்வாகக் குழுத் தெரிவும்

உரை : திரு. எடிசன்


நேரம்:காலை 10.00 மணி

காலம்: 08.01.2012 (ஞாயிறு)

இடம்:
கலைஅருவி
சமூக தொடர்பு அருட்பணியகம்,
#116/3, புனித சூசையப்பர் வீதி,
பெட்டா, மன்னார்.

எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றோம் 
--

நன்றி
==============================
அன்புடன்
மன்னார் அமுதன்

Ashwin Win

unread,
Mar 1, 2012, 11:42:45 AM3/1/12
to srilankanta...@googlegroups.com
Inline image 1

Inline image 2

Inline image 3
அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.

--
Ashwin Win
http://www.ashwin-win.tk/
l2.jpg
l3.jpg
l1.jpg

mathisutha

unread,
Apr 12, 2012, 10:18:46 AM4/12/12
to srilankanta...@googlegroups.com
முதன் முறையாக ஓர் சமூக வலைத் தள குழுமத்தில் (நாற்று பேஸ்புக் குழுமத்தில்) ஓர் குறும்படத்தினை வெளியீடு செய்ய தீர்மானித்திருக்கிறோம்,
இந்த குறும்பட வெளியீட்டினை இன்று வியாழக் கிழமை (12.04.12) நாற்று குழுமத்தினூடாக இந்திய நேரம் மாலை 20.00 மணியிற்கு நடாத்த தீர்மானித்திருக்கிறோம். இம் வெளியீட்டில் வித்தியாசமாக சில நிகழ்வுகளை முன் வைக்க இருக்கின்றோம்.
இந்த சிறப்பு நிகழ்விற்கு உங்கள் அனைவரினதும் பேராதரவினை வேண்டி நிற்கின்றோம்.
நிகழ்வு நடை பெறும் இடம்: உங்கள் நாற்று பேஸ்புக் குழுமம்.
நேரம்: உள்ளூர் நேரம் 08.00ப்ம் (இந்திய நேரம்)
அறிமுக உரை,
வரவேற்பு உரை
விமர்சனம், - பட விமர்சனம்
கருத்துப் பகிர்வு,
நன்றி உரை

என்ன நட்புக்களே ஞாபகம் இருக்கிறதா இந்திய நேரம் பிற்பகல் 20,00மணியிற்கு நாற்று முகப்புத்தக குழுமத்தில் இணைந்திருக்க மறந்துவிடாதீர்கள்.
 

நன்றியுடன்
ம.தி.சுதா

 
Reply all
Reply to author
Forward
0 new messages