வணக்கம் நண்பர்களே!
இந்திய மொழிகளின் சொல் திருத்தி குழுமத்தில் இணைந்தமைக்கு நன்றி.
குழுமத்தின் நோக்கம்:
தமிழ் சொல் திருத்தியை பயர்பாக்ஸ் நீட்சி வழியாக உருவாக்கினோம். அதே போல்
இந்தியாவில் உள்ள மற்ற மொழிகளின் அகராதி கிடைத்தால், அந்த மொழியின்
திருத்தியையும் வெளியிடவோம்.
தற்பொழுதைய வேலை:
தமிழ் சொல் திருத்தியை உருவாக்கி நாம் ஒரு படி முன்னேறி இருக்கின்றொம்.
சரியான சொல் திருத்தி என்றால் அது இலக்கணப் பழையை கண்டு பிடிக்க
வேண்டும். ஒரு பக்கம் அதனுடைய ஆய்வு நடக்கையில், அகராதியில் இருக்கும்
சொற்களை ஒப்பிட்டு பார்க்கும் தற்காலிகமான சொல் திருத்தியை மேம்படுத்த
வேண்டும். அதற்கான வேலையில் தான் இப்பொழுது நாம் செய்தல் வேண்டும்.
நிலைமை:
தற்பொழுது சொல் திருத்தியின் சொற்பட்டியலை குனு ஏஸ்பெல்(GNU Aspell)
என்னும் திட்டத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. அதில் உள்ள மொத்த
சொற்களின் எண்ணிக்கை: 13940 ஆகும். இந்த பட்டியலை தமிழா குழுவினர்
தயாரித்துள்ளனர்.
தமிழ் விக்சனரியில் இருந்து 1 லட்சத்திற்கு அதிகமான வார்த்தைகளின்
பட்டிலை நேற்று கிடைத்தது. இதிலிருந்த வார்த்தைகளையும் ஏஸ்பெல்
திட்டத்திலிருந்து எடுக்கப்பட்ட வார்த்தைகளையும் இணைக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது மொத்த 65034 வார்த்தைகள் உள்ளன. இதனை இன்னும் வெளியிட வில்லை.
இங்கும் அங்கும் சில பிழைகள், தவறுகள் ஏற்படுகின்றன. எல்லாவற்றையும் சரி
பார்த்தப் பிறகு தான் வெளியிட வேண்டும்.
மேலும் இந்த வார்த்தைகளை குனு ஏஸ்பெல் திட்டத்தில் சேர்க்க வேண்டும். அது
குறித்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.
தமிழ் சொல் திருத்தி திட்டம்
http://code.google.com/p/tamilspellchecker/
தமிழா குழுவினர்
* முகுந்தராஜ்
* இளஞ்செழியன்
* ராதாகிருஷ்ணன்
* விஜய்
தமிழ் விக்சனரி குழுவினர்
* சுந்தர்
* ரவிசங்கர்
* மயூரநாதன்
* வினோத் ராஜன்
நீட்சியை உருவாக்கியவர்கள்
* ரவிசங்கர்
* பாலச்சந்தர் முருகானந்தம்
எத்தனையோ நண்பர்கள இந்த முயர்ச்சியில் பங்களித்துள்ளார்கள். மேலே
குறிப்பிட்டவர்களுக்கும், பெயர் குறிப்பிடாதவர்களுக்கும் எனது
வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ் இணையத்தில் இணைந்து
பாரெங்கும் தமிழை வளர்ப்போம்!
- பாலச்சந்தர் முருகானந்தம்
உலகம்.net - இலவச தமிழ் வலைப்பதிவுச் சேவை
http://ulagam.net