2 views
Skip to first unread message

Nalla Sivam

unread,
Dec 23, 2011, 11:09:13 PM12/23/11
to sparkersmca06, skiru...@gmail.com
பிறக்கும் போதே வறுமையில் பிறந்து,குடும்பத்தின் வறுமையை போக்க நாடகத்தில் வாய்ப்பு தேடி,போராடி நடிகராகி பின்பு திரைப்படத்தில் கதாநாயகனாக உயர்ந்து கடும் உழைப்பால் முன்னணிக்கு வந்து,அரசியலில் சாதாரண உறுப்பினராக சேர்ந்து,அண்ணாவின் உண்மை தம்பியாக உயர்ந்து,பிரபாகரனை தம்பியாக ஏற்று ஈழ விடுதலைக்கு உதவி,துரோகிகளால் தி.மு.க-வில் இருந்து வேளியேற்றப்பட்டு,தனி கட்சி தொடங்கி மக்களால் தொடர்ந்து 3 முறை முதல்வராகவும்,இறக்கும் போதும்,இறந்த பிறகும் தமிழ் மக்கள் மனதில் முதல்வராய் இருக்கும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 24 -ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று.


--
--------- Mr.Nice Guy




13.jpg

Nalla Sivam

unread,
Dec 25, 2011, 11:50:54 PM12/25/11
to sparkersmca06, skiru...@gmail.com
கடந்த கால தவறுகளில் இருந்து நம்மை ஆளும் புண்ணியவான்கள் என்று தான் பாடம் கற்று கொள்ள போகிறார்கள் என்று தெரியவில்லை.இரண்டு வருடங்களுக்கு முன் மூணாறில் படகு கவிழ்ந்து நிறைய மக்கள் இறந்து போனார்கள். நேற்று சென்னை பழவேற்காட்டில் படகு கவிழ்ந்து 22 பேர் பலியாகினர்.94 -ஆம் ஆண்டு இதே இடத்தில் 34 பேர் உயிரிழந்தனர்."அங்கு படகு சவாரிக்கு செய்வதற்கு தடை செய்யபட்டுள்ளது,விபத்துக்கு காரணமானவர்களை தண்டிப்போம்"என்று இப்போது ஐ.ஜி. சைலேந்திரபாபு அரசின் சார்பாக கூறியுள்ளார்.அரசு உயர் அதிகாரிகள் எல்லாம் விண்ணில் இருந்த குதித்தவர்கள்,அவர்கள் பொழுது போக்க கொடநாடும்,வெளிநாடும் பாதுகாப்பாக காத்திருக்கிறது..... மக்களுக்கு......?



Reply all
Reply to author
Forward
0 new messages