சேலத்தில் ஒரு matriculation பள்ளி. அதன் வாசலில் நின்று இருந்தேன்.
ஒரு ஆட்டோவில் இருந்து மூன்று மாணவிகள் இறங்கினர். அந்த மூவரில் இரு
மாணவிகளுக்கு சுமார் பத்து வயது இருக்கும். ஒரு மாணவி LKG வயது
இருக்கும். அந்த 3 மாணவிகளுக்கும் பள்ளி வாசலில் இறக்கியதும் ஆட்டோ
ஓட்டுனர் முத்த மழை பொழிந்தான். இது அந்த LKG மாணவிக்கு சிரிப்பை
தந்தது. மற்ற இருவரும் சங்கடத்தில் நெளிந்தனர். எந்த பெற்றோரும் தராத
அளவுக்கு அந்த முத்தத்தை நான் பார்த்தேன். பின் பள்ளி முதல்வரிடம்
சொன்னேன். நடவடிக்கை எடுப்பதாக சொன்னார்கள்.
எனவே ஆட்டோ ஓட்டுனரை பற்றி ஆட்டோவில் பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்கள்
அவ்வப்போது நடவடிக்கைகளை கவனிக்க வேண்டும். (இல்லை எனில் பின்னாளில்
சங்கடங்களை சந்திக்க நேரிடும். )