* ஒரு மன்னன் இருந்தான் அவனுக்கு வாரிசு இல்லை. வயதான காலத்தில் தனக்குப் பின்
நாட்டை ஆளத் தகுதியான ஒருவனைத் தேர்ந்தெடுக்க விரும்பினான்*
* அந்நாட்டிலிருந்த சிறுவர்கள் அனைவரையும் அழைத்து வரச் செய்தான் அவர்களிடம்
,”எனக்கு வயதாகி விட்டது. உங்களில் ஒருவனை நான் அடுத்த மன்னனாகத்
தேர்ந்தெடுக்கப் போகிறேன்.”என்றார்*
* சிறுவர்கள் ஆச்சரியப்பட்டார்கள்*
* மன்னன் தொடர்ந்தான்,”நான் உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு விதை
தரப்போகிறேன்.அது மிக விசேடமானது.*
* நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம்,அதை ஒரு தொட்டியில் ஊன்றித் தினம் தண்ணீர்
ஊற்றிக் கவனமாக வளர்த்து ஓராண்டுக்குப் பிறகு நீங்கள் வளர்த்த செடியுடன்
வரவேண்டும் .*
* நான் அதைப் பார்த்து முடிவெடுப்பேன்.”*
* எல்லாச் சிறுவர்களும் ஆளுக்கு ஒரு விதையுடன் திரும்பினர் அவர்களில் ராமுவும்
ஒருவன்*
* அவன் ஆர்வத்துடன் அந்த விதையைத் தொட்டி மண்ணில் ஊன்றித் தினம் தண்ணீர் ஊற்றி
வரலானான் பத்து நாட்களுக்குப் பின் பல சிறுவர்கள் அவர்கள் செடி முளைக்கத்
தொடங்கி விட்டதைப் பற்றி பெருமை பேசினர்.*
* ஆனால் ராமுவின் தொட்டியில் எந்த விதமான முன்னேற்றமும் இல்லை.நாட்கள்
மாதங்களாயின.மற்றச் சிறுவர்கள் ஆகா, ஓகோ என்றெல்லாம் சொல்கையில் ராமுவின்
தொட்டியில் எதுவும் முளைக்கவில்ல.*
* ஓராண்டு சென்றது.எல்லாச்சிறுவர்களும் தத்தம் தொட்டியை,அழகிய செடியுடன் கூடிய
தொட்டியை எடுத்துச் செல்ல,ராமு மட்டும் காலித்தொட்டியை எடுத்துச் சென்றான். *
* அவனுக்குப் போக மனமில்லைதான்,ஆனால் மன்னன் கட்டளையை மீற முடியாது.
தன்முயற்சி பலனற்றுப் போனது தெரிந்து மன்னன் கோபித்தாலும் உண்மையைத்
தெரிவிப்பது கடமை என எண்ணினான்.*
* அனைவரும் அரண்மனையில் குழுமியிருக்க.மன்னன் பார்வையிட்டவாறு வந்தான்..*
* அவன் பார்வை ராமுவின் தொட்டி மீது விழுந்தது. ராமுவை அழைத்தான்.ராமு பயந்து
கொண்டே சென்று மன்னனிடன் நடந்ததைச் சொன்னான்.*
* மன்னன் அறிவித்தான்,*
* ”இதோ இந்தச் சிறுவன்தான் இந்நாட்டு அடுத்த மன்னன்.உங்கள் அனைவருக்கும்
ஓராண்டுக்கு முன் ஒரு விதையைக் கொடுத்தேன்.அது முளைக்க முடியாத வேக வைத்த
விதை. இவனைத் தவிர அனைவரும் என்னை திருப்திப்படுத்த பொய்யான தொட்டிகளைக்
கொண்டு வந்தீர்கள்.*
* ஆனால் இச்சிறுவன் மட்டுமே உண்மையைச் சொல்ல முன் வந்தான்.நேர்மை இருக்கிறது
இவனிடம்.*
* எனவே இவனே எதிர்கால மன்னன்."*
* ஆம்.எதை விதைக்கிறோமோ அதுதான் முளைக்கும்.,இது நியதி.,*
* நேர்மையை விதையுங்கள்.நம்பிக்கையை அறுவடை செய்யுங்கள்.,*
* கடின உழைப்பை விதையுங்கள்;வெற்றியை அறுவடை செய்யுங்கள்.,*
* நல்லதை விதையுங்கள்;நல்லதே கிடைக்கும்.,*
Lakshmi Sevukamoorthy,Sona College of Technology
India.
"Never let the regrets of Yesterday destroy the hopes of Tomorrow"