Fwd: வையத் தலைமைகொள்

25 views
Skip to first unread message

SevukaMoorthy Lakshmi

unread,
May 3, 2014, 3:26:59 AM5/3/14
to sevukamoorthy arumugam, Kannan Sethuramalingam, sona...@googlegroups.com, sonam...@googlegroups.com, sonamca...@gmail.com, sonamc...@googlegroups.com



Subject: வையத் தலைமைகொள்
To:

S
வெ.இறையன்பு

லா-வோட் ஸூ என்கிற தாவோ ஞானி. கன்ஃப்யூஷியஸ் காலத்தவர்;
மூத்தவர். வாழ்வு குறித்த நுட்பமான சூத்திரங்களை முன்வைத்தவர். அவருடைய
​ ​
​  ​
வாசகங்களைப் படித்து, ஒரே மூச்சில் புத்தகத்தை மூடி வைக்கக் கூடாது.
​  ​
​  ​
வாசிக்க வேண்டும். ஒரு வாசகம் படித்தபின், கண்களை மூடி யோசிக்க வேண்டும்.
​  ​
அது நம் உடலின் ஓர் அங்கமாக ஆகும்படி உள்வாங்க வேண்டும்.

அந்த
ஞானி,
​"​
ஆள்பவர் யாரென்று தெரியாமல் நடப்பதே சிறந்த நிர்வாகம்’ என்று
குறிப்பிடுகிறார். முறையான நிர்வாகம் நடக்கும்போது முறையீடுகள்
தேவையில்லை, மனு நீதி முகாம்கள் அவசியமில்லை. கிராம அலுவலரே கடமையைச்
​ ​
சரியாகச் செய்கிற ஊரில் உள்ள மக்களுக்கு வட்டாட்சியர் பெயர் தெரியத்
​ ​
தேவையில்லை. சட்டம்-ஒழுங்கு நன்றாக இருக்கும் நாட்டில், மன்னரிடம் சென்று
​ ​
மணியடிக்கும் தேவை எழுவதில்லை.

 ‘நாம் மறைய வேண்டும்; நம் பணிகள் தெரியவேண்டும்’ என்று செயல்படுகிறவர்களே சிறந்த தலைமைப் பண்பு மிக்கவர்கள்.
அப்படியொரு மன்னன் வாழும் காலத்தில் இந்தியாவிலேயே இருந்தான். அவன்
​ ​
மறைந்த பிறகு அவன் மீது சாகசங்களும், புனைவுகளும் ஏற்றப்பட்டன. அவனை
​ ​
பராக்கிரமம் நிறைந்தவனாகவே மக்கள் பார்த்தனர்.
​​
இன்று நாம்
​ ​
பார்க்கிறோம்... சில மாமனிதர்கள் மறைந்த பிறகு ஒவ்வோர் ஆண்டும் அவர்கள்
​ ​
பிறந்த நாள், அவதரித்த நாள் போன்று அனுஷ்டிக்கப்படுவதை

 சாகர்களின்
​ ​
ஆதிக்கத்தை அடியோடு ஒழித்து, முழுக்க முழுக்க இந்தியப் பேரரசாகவும் இறுதி
​ 
சாம்ராஜ்யமாகவும் எழுந்ததுதான் குப்தர்களுடைய பாரம்பரியம். ஸ்ரீ குப்தர்
என்பவரால் அதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அந்தப் பேரரசை
விரிவுபடுத்தியவர் சமுத்திர குப்தர். பெரிய படிப்பாளி, இசைக் கலைஞன்,
கவிஞன். அவர் வீணை வாசித்து வீற்றிருப்பதைப் போல வெளியிடப்பட்ட நாணயங்கள்
​ ​
அதை உறுதிப்படுத்துகின்றன.

சமுத்திர குப்தர் நாற்பது ஆண்டுகள்
​ ​
நங்கூரமிட்டு ஆட்சி புரிந்தார். அவருடைய மறைவுக்குப் பின் மூத்த வாரிசு
​ ​
ராம குப்தர் அரியணைக்கு வந்தார்.
 ‘மஜ்மல்-உத்-தவாரிக்’ என்கிற அராபிய
​ ​
நூலில் ராமகுப்தரைப் பற்றிய குறிப்பு ஒன்று உண்டு. ராமகுப்தர்
​ ​
சாகர்களுடன் போர் புரியும் கட்டாயம் ஏற்பட்டது. சமுத்திர குப்தர் மிகப்
​ ​
பெரிய சேனையையும், படைபலத்தையும் உருவாக்கி வைத்திருந்தார். சில
​ ​
நேரங்களில் கட்டுவதை விட காப்பது பெரிது. உண்டாக்குவதை விட துண்டாக்குவது
​ ​
எளிது.

ராமகுப்தர் தந்தையின் சேனையை முறைப்படி தலைமையேற்று வழி நடத்தும்
​ ​
திராணியைக் கூடப் பெற்றிருக்கவில்லை. கடுமையான யுத்தம். ராமகுப்தர்
​ ​
படுதோல்வியடைந்தான். அவனுடைய மனைவி துருவதேவியை சாகர்களிடம்
​ ​
ஒப்படைத்தால்தான் கிரீடத்தைக் காப்பாற்ற முடியும் என்கிற நிபந்தனை.

அதைப்
​ ​
பார்த்த இரண்டாம் சந்திர குப்தன் வெகுண்டு எழுந்தான். ராணியின் வேடத்தில்
​ ​
அவன் தன்னை அலங்கரித்துக்கொண்டான். படை வீரர்கள் அவனுடைய பணிப்பெண்களைப்
​ ​
போல் உடையணிந்து கொண்டனர். அவர்கள் புடை சூழ, சாகர்களின் போர்ப்பாசறைக்குள் நுழைந்தான். சாகர் மன்னனின் படுக்கையறைக்குள் நுழைந்த
​ ​
சந்திரகுப்தன், ஒரே குத்தில் அவன் குடலை உருவி மாய்த்தான்.

குப்தர்களின்
​ ​
மானத்தைக் காத்தான். சில நாட்கள் அண்ணனின் பொறாமையிலிருந்து காப்பாற்றிக்
​ ​
கொள்ள, பித்துப் பிடித்தது போல நடித்த சந்திரகுப்தன், தகுதியற்ற அண்ணனை
​ ​
முடித்துவிட்டு அரியணையைக் கைப்பற்றினான். துருவதேவியையும் மணந்து
​ ​
கொண்டான்.

பானபட்டர் எழுதிய, ‘ஹர்ஷச் சரிதம்’ இதை வழிமொழிவதால்
இச்சம்பவம் உண்மைதானென்று உணர முடிகிறது. சமுத்திர குப்தர் பரந்த
சாம்ராஜ்யத்தை அரும்பாடுபட்டு உருவாக்கியதைக் கட்டிக் காப்பற்ற வேண்டிய
​ ​
பெரும் பொறுப்பு சந்திரகுப்தனுக்கு இருந்தது. ‘முதல் தலைமுறை
​ ​
சம்பாதிக்கும்; இரண்டாம் தலைமுறை அனுபவிக்கும்; மூன்றாம் தலைமுறை
​ ​
அழிக்கும்’ என்பது இன்றும் நிலவும் யதார்த்தம். அவன் சாகர்களைக் கூண்டோடு
​ ​
அழித்தான். சந்திர குப்தன் இன்னும் எல்லைகளை விரிவுபடுத்தினான். குஜராத்
​ ​
பகுதியை வென்றான். அப்பகுதி அவர்கள் வசம் வந்ததால், குப்தர்களின்
​ ​
பொருளாதாரத்தைச் செழிக்கச் செய்தது.

காரணம், வெளிநாடுகளுடன் வர்த்தகம்
​ ​
செய்ய அந்தத் துறைமுகங்கள் தோதாக இருந்தன. அதன் மூலம் பணமும்,
​ ​
பொருள்களும் பெருமளவு குப்தர் மண்ணில் குவிந்தன. இரண்டாம் சந்திரகுப்தன்
​ ​
கங்கை சமவெளி, வங்காளம், பஞ்சாப் ஆகியவற்றில் திக்விஜயம் செய்து தனது
நாட்டின் கொடி பல இடங்களில் பட்டொளி வீசிப் பறக்கச் செய்தான். அதனால்,
​ ​
இரண்டாம் தலைநகர் உஜ்ஜயினியில் உண்டானது. சாகர்களின் கடைசி சத்ரப் எனக்
​ ​
கருதப்படும் மூன்றாம் ருத்ர சிம்ஹனைத் தோற்கடித்துக் கொன்று, கி.பி.78-ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் நடந்து வந்த சாகாயுகத்திற்கு
​ ​
முற்றுப்புள்ளி வைத்தவன் சந்திரகுப்தன். மேற்கு கடற்கரைப் பகுதியில் உள்ள
​ ​
பரோச், கோபரா, கேம்பே போன்ற பல துறைமுகங்கள் இணைக்கப்பட்டதால் வர்த்தகம்
நர்த்தனமாடும் நாடாக மாறியதுடன், சுங்கச்சாவடிகளில் வந்த வருமானம்
கஜானாவை நிரப்பியது.

குதுப்மினாரில் இருக்கும் இரும்புத் தூணில் சந்திரா
​ ​
என்கிற மன்னனின் படையெடுப்புகளைப் பற்றியும், பராக்கிரமங்களைப் பற்றியும்
இருக்கும் குறிப்புகள் சந்திரகுப்தரைப் பற்றியதுதான் என்று பரவலான
அனுமானங்கள் உண்டு. ஆனால், அது ஊர்ஜிதமாகாத குறிப்பு. ஏனெனில் அதில்,
​ ​
‘குப்தர்’ என்கிற பெயர் எங்கேயும் குறிப்பிடப்படவில்லை. எப்போது
பார்த்தாலும் வாளைச் சுழற்றிக் கொண்டயிருந்தால், நிர்வாகம் நிலைகுலையும்.

புத்திசாலி வாளை உறையிலிருந்து எடுப்பது, உயிர்களை உருட்டுவதற்கே என
​ ​
உணர்ந்தவன். அவன் பல நாடுகளுடன், அந்தக் கால வழக்கப்படி திருமணம் மூலம்
​ ​
கூட்டணி அமைத்துக் கொண்டான். வாகதக மன்னன் இரண்டாம் ருத்ரசேனனின் மகளை
​ ​
மணந்தான். ஆனால், ருத்ரசேனன் மறைந்ததால், அந்த நாடும் குப்தர்கள்
​ ​
கட்டுப்பாட்டிலேயே காலம் தள்ளியது. ஒரு மன்னனின் மாட்சிமையை அவன்
​ ​
காலத்திய நாணயங்களைக் கொண்டே நன்கு அறியலாம்.

நாணயத்தோடு நாணயங்கள்
​ ​
வெளியிடப்பட்ட காலம். சமுத்திர குப்தர் ஒரு புலியை வெட்டி வீழ்த்துவது
​ ​
போல அவருடைய காலத்தில் நாணயம் வெளியிடப்பட்டது. ஆனால், சந்திர குப்தன்
​ ​
சிங்கத்தை வாளால் வீசுவது போல் அவனுடைய நாணயங்கள்
​ ​
பொறிக்கப்பட்டிருக்கின்றன. சௌராஷ்டிரத்தை வெற்றி கொண்டதால், சிங்கத்தை
அவன் வேட்டையாடியிருக்கக்கூடும் என்பது சூசகமான தகவல். ‘சிம்ம-விக்ரமன்’
​ ​
என்கிற புனைப்பெயர் அதனால் ஏற்பட்டது.

அவன் பூவை ஏந்தியபடி இருக்கும்
​ ​
நாணயம் ‘ரூபக்ருதி’ என்கிற பெயரையும், அவனுடைய கலைப் பண்பாட்டு ஈடுபாட்டை
உணர்த்துகிறது. அவனுக்கு ‘ஞாயிறு போன்ற வீரன்’ என்கிற பெயரில்
விக்கிரமாதித்யன்’ என்கிற பட்டப்பெயரும் அது குறித்த ‘புராண’க் கதைகளும்
​ ​
உண்டு. சந்திரகுப்தன் பாக்ட்ரியா வரைப் படை நடத்தி
அங்கிருப்பவர்களையெல்லாம் ஒரு மிரட்டு மிரட்டி விட்டு வந்தான்.

ஆனால்,அவர்கள் அடிபணிந்த பிறகு அவர்தம் முடியைப் பிடுங்காமல் அவர்களையே
​ ​
ஆளும்படி செய்தான். சந்திரகுப்தனுக்கு மக்களிடையே மிகுந்த செல்வாக்கு.
​ ​
பொது மக்கள் அவனைக் குதூகலத்துடன் கொண்டாடினர். அவனை, ‘தேவராஜா’ என்றும்
​ ​
‘தேவகுப்தா’ என்றும் அழைத்து மகிழ்ந்தனர். சாஞ்சியில் உள்ள எட்டாம்
​ ​
கல்வெட்டில் அவனுடைய அதிகாரி அம்காரதேவாவால் அவன் பெயர், ‘தேவராஜா’ என்று
​ ​
பொறிக்கப்பட்டிருக்கிறது. சந்திரகுப்தன் வெறும் தளபதி மட்டுமல்ல; நல்ல
​ ​
தலைவனும் கூட.

அவன் திறமையான ஆட்சியாளன்; தேர்ந்த நிர்வாகி. அவன்
காலத்தில் ராஜ்ஜியம் ஒட்டுமொத்த வளர்ச்சியைப் பெற்று உயர்ந்தது.
ஆன்மிகம், இலக்கியம், அறிவியல், நுண்கலை, பொருளாதாரம் என அவன் தொட்ட
​ ​
துறைகளிலெல்லாம் செழுமை சேர்ந்தது. சமுத்திரகுப்தர் சாதித்தவற்றை அவன்
​ ​
இன்னும் ஆழப்படுத்தினான். விரிவாக்கி, வீரியம் பாய்ச்சினான். ராஜ்ய
​ ​
எல்லைகளை எல்லாம் சீர்படுத்தி அவற்றின் மீது கட்டுப்பாட்டை விதித்தான்.

அவற்றை முழுமையாகத் தன்னுடைய ஆளுகைக்குள் கொண்டு வந்தான். பொதுவாக அரசு
​ ​
புதிதாகக் கட்டுவதில் செலுத்துகிற ஆர்வத்தை ஏற்கெனவே இருப்பவற்றை
​ ​
திடப்படுத்துவதில் செலுத்துவது கடினம். புதிதாக உருவாக்கும்போது ஏற்படும்
​ ​
புகழ் இருப்பவற்றைக் கட்டிக் காப்பதில், மெருகேற்றி ஜொலிக்கவைப்பதில்,
​ ​
பாழ்படாமல் பராமரிப்பதில் உண்டாவதில்லை.

 எந்த அரசும் வரவு செலவில்
​ ​
கணிசமான பகுதியை பராமரிப்புக்காக ஒதுக்கும்போதுதான், ஒதுக்கப்பட்டவர்கள்
​ ​
ஓங்கி வளருவார்கள். சந்திரகுப்தன் இந்தத் தத்துவத்தைப் புரிந்துகொண்டு
ஆட்சி புரிந்தவன். அதுவே அவன் அனாமதேயமாக ஆட்சி புரிந்ததற்கான அடையாளம்.

அதனாலேயே அவன் ஆட்சியைப் ‘பொற்காலம்’ என்று சரித்திர ஆசிரியர்கள்
​ ​
புகழ்ந்தனர். ஆர்.ஸி. மஜூம்தார், ‘சந்திரகுப்தர் ஒரு புதிய அரசியல்
​ ​
யுகத்திற்கான முதிர்ச்சியையும் பண்பாட்டு மறுமலர்ச்சிக்கான எழுச்சியையும்
​ ​
ஏற்படுத்தி, மக்களின் இதயங்களை வென்றார்’ எனக் குறிப்பிடுகிறார்.

உள்நாட்டுக் கல்வெட்டுகளை மட்டும் வைத்தோ, நாணயங்களை வைத்தோ மட்டும்
​ ​
முடிவுக்கு வருவது உசிதமல்ல. அது தற்சமயம் ஒட்டப்படுகிற சுவரொட்டிகளைப்
​ ​
போல் சற்று தூக்கலாகவே இருக்கும் என்பதே உண்மை. உயர்வு நவிற்சி
​ ​
ஓரளவிற்கேனும் கலப்பதே கவிஞர்களுக்கும் கல்வெட்டை வடிப்பவர்களுக்கும்
இயல்பு.

அவனுடைய நிர்வாகத்தைப் பற்றி முழுமையாக அறிய, அப்போது
இந்தியாவிற்கு பயணப்பட்ட சீன யாத்ரிகர் ஃபாஹியானையே படிக்க
வேண்டியிருக்கிறது. சீனர்களுடைய சரித்திரத்தைப் படிக்கும்போது அவர்கள்
​ ​
துல்லியமானவர்கள் என்பதும், மிகைப்படுத்தாதவர்கள் என்பதும், நடைமுறை
​ ​
வாழ்வோடு ஒட்டி எழுதுபவர்கள் என்பதும் புலப்படுகிறது. எனவே சிறிதும்
​ ​
மிகைப்படுத்தாத மரபில் வந்த ஃபாஹியானின் குறிப்புகள் சுவாரசியமானவை.

சீனர்களை அதிகம் கவர்ந்தது அராபியர்களுக்கிருந்தது போன்ற பொன்னாசை அல்ல;ஞானத்தேடலே. புத்த சுவடிகளைச் சேகரித்து எடுத்துச் செல்ல வேண்டும் என்கிறஎண்ணமே அவருடைய அந்தக் கடுமையான பயணத்திற்கு உந்துசத்தியாக இருந்தது.

அவர் எழுதுகிறார்: ‘இக்கால கட்டத்தில் உலகத்திலேயே நாகரிகம்
மிகுந்ததாகவும் மகிழ்ச்சி மிகுந்ததாகவும் இந்தியாதான் இருக்க வேண்டும்.
ரோமாபுரியோ அழிவை நோக்கி வேகமாகச் சென்று கொண்டிருக்கிறது. சீனமோ ஹோன் -டாங் என்கிற இரு யுகங்களின் நடுவே மிகப் பெரிய பிரச்சினைகளில் சிக்கிக்கொண்டிருக்கிறது. இந்தியர்களே ஆனந்தமாக வாழ்கிறார்கள்.’ இது தனிப்பட்டமுறையில் ஒரு துறவி எழுதிவைத்த குறிப்பு. யாரையும் திருப்திப்படுத்தும்நோக்கத்தில் அவர் இவ்வாறு எழுதவில்லை.

‘மக்கள் மகிழ்ச்சியாகவும்
​ ​
சுகமாகவும் இருக்கிறார்கள். அவர்கள் அரசு அலுவலர்களுடைய குறுக்கீடுஏதுமின்றி வாழ்கிறார்கள். உழுபவர்கள் லாபத்தில் ஒரு பங்கை வரியாகச்
​  ​
செலுத்துகிறார்கள். போக்குவரத்து சுமுகமாக இருக்கிறது. மன்னர் மரண
​ ​
தண்டனையை யாருக்கும் விதிப்பதில்லை. குற்றங்களின் தன்மைக்கேற்ப அபராதம்
மட்டுமே விதிக்கப்படுகிறது. இரண்டாம் முறையாக அரசுக்கு எதிராகக்
கிளர்ச்சி செய்தாலும், வலக்கை மட்டுமே துண்டிக்கப்படுகிறது. அரசரின்
மெய்க் காப்பாளர்களுக்கு நிலையான ஊதியம் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. மொத்த
​ ​
நாட்டிலும் யாரும் எந்த உயிரினத்தையும் கொல்வதில்லை; குடிப்பதில்லை;
​ ​
வெங்காயம், பூண்டு சாப்பிடுவதில்லை. பன்றி, கோழி வளர்ப்பு அதிகமில்லை.


ஃபாஹியான் சந்திரகுப்தனின் ஆட்சியை பற்றி இப்படிப் பல நுணுக்கமான
தகவல்களை நுணுக்கி நுணுக்கிப் பதிவு செய்திருக்கிறார். மன்னராட்சியிருந்த
​ ​
காலத்திலேயே அநாவசியமாக மக்கள் வதைக்கப்படவில்லை என்பதும், பெருமளவு
​ ​
தனிமனித சுதந்தரம் பேணிக் காக்கப்பட்டது என்பதும் தெரிகிறது. அஹிம்சையின்
​ ​
அடிப்படையில் பெரும்பாலும் சைவ உணவு சிலாகிக்கப்பட்டது என்பதும்,
அலுவலர்கள் நிலையான ஊதியமிருந்ததால் லஞ்சம், ஊழல் ஆகியவை இன்றி
​ ​
செயல்பட்டார்கள் என்பதும் தெரிகிறது.

 ஃபாஹியான் பாடலிபுத்திரத்தில்
​  ​
தங்கியிருந்து சமஸ்கிருதத்தைக் கற்றுக் கொண்டார். அவர் வருகையின் போதும்
​  ​
எஞ்சியிருந்த அசோகரின் அரண்மனையைப் பார்த்து வியந்து போனார். மகதத்து
நகரங்கள் கங்கை சமவெளியில் பரந்து விரிந்திருந்ததையும் பல தர்ம சாலைகள்
​ ​
நிறுவப்பட்டு இருந்ததையும் குறிப்பிடுகிறார். பயணிகளுக்கு நிறைய
​  ​
சத்திரங்கள் இருந்தன என்பதையும், தலைநகரில் இலவச மருத்துவமனை
​  ​
இருந்ததையும் வியந்து பாராட்டுகிறார். ‘இங்கு ஏழை, எளிய நோயாளிகள், பலவித
​  ​
உடல்நலக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்கள் வருகிறார்கள். அவர்கள் மிகவும்
நன்றாகக் கவனிக்கப் படுகிறார்கள். மருத்துவர்கள் கருணையுடன் அவர்களுக்கு
​ ​
சிகிச்சை அளிக்கிறார்கள். அவர்களுக்குத் தேவையான உணவும், மருந்தும்
​ ​
அளிக்கப்படுகின்றன. அவர்கள் நலமானதும் விருப்பப்படும் போது அங்கிருந்து
​ ​
போகலாம்.’

ஃபாஹியானுடைய வியப்புக்குக் காரணம் இல்லாமல் இல்லை. இன்றும்
வெளிநாடுகளில் அறுவை சிகிச்சை முடிந்தவுடன் மருத்துவமனையைக் காலி செய்ய
​​
வேண்டும். ஏனென்றால், காத்திருப்பவர்கள் வரிசையில் பல பேர்
​  ​
இருக்கிறார்கள். உலக அளவில் அந்த அளவு சிறந்த மருத்துவமனை வேறெங்காவது
​  ​
இருந்திருக்குமா என்பது கூட சந்தேகத்திற்குரியதே. ஆனால், ஃபாஹியானுடைய
​  ​
குறிப்புகளில் ஓரிடத்தில் கூட சந்திரகுப்தன் பெயர் இடம் பெறவில்லை.
​  ​
ஆள்பவர் யாரென்று தெரியாமல், ஃபாஹியான் எழுதிய வரலாற்றுப் பதிவுகள் அவை
​  ​
என்பதோடு, ஆள்பவருடைய ஆளுமை தேவைப்படாமல் நல்ல நிர்வாகம் நடந்ததற்கான
சாட்சிகள் அவை. தேவையற்ற கட்டுப்பாடு, அதிக அடக்குமுறை, எக்கச்சக்க வரி,
​ ​
நியாயமற்ற நீதி, கொடுமையான தண்டனை என எதுவுமற்ற நிர்வாகத்தை அளித்தால்,
​ ​
மக்களுக்கும் வருகிற பயணிகளுக்கும் மன்னன் பெயர் முக்கியமல்ல

நாட்டின்
​  ​
சுபிட்சமே முக்கியம் என்பது சந்திர குப்தனின் அணுகுமுறைக்குச் சான்று.
​  ​
லாவோட்ஸூன் மரபில் வந்த ஃபாஹியான் அதனால்தான் சந்திரகுப்தன் பற்றிக்
​ ​
குறிப்பிடவில்லை. இந்து மன்னனான அவனை அணுக வேண்டிய அவசியம் சிறிதும்
​ ​
ஏற்படாமல் போனாலும், அவன் ஆட்சியிலும் புத்த மத நிறுவனங்கள் உயிர்ப்புடன்
இருந்ததையும் மக்களுடைய அடிப்படைத் தேவைகள் நிறைவு பெற்றதையும்
​ ​
ஃபாஹியான்
​  ​
பாராட்டத் தவறவில்லை. சந்திரகுப்தன் வைஷ்ணவத்தில் ஈடுபாடு கொண்டவனாக
​   ​
இருந்தாலும் எங்கு திறமையிருந்தாலும் அதை மதிக்க அவன் தவறவில்லை. அவன்
​  ​
தகுதி வாய்ந்தவர்களை அடையாளங்களைத் தாண்டி அங்கீகரித்தவன்.

அவன் தளபதியே
​ ​
புத்தரை வழிபடுபவன். சில மந்திரிகள் - சபா - வீரசேனா போன்றவர்கள்
சைவர்கள். அனைவரையும் அரவணைத்ததன் மூலமே அகண்ட சாம்ராஜ்யத்தை எந்தக்
​  ​
கிளர்ச்சியோ, சீர்கேடோ இல்லாமல் அவனால் ஆள முடிந்தது. மகத்தான
​  ​
மனிதர்களைச் சுற்றிய புனைவுகளும் உண்டாகின்றன. சந்திரகுப்தனுடைய அவையில்
​  ​
‘நவரத்தினங்கள்’ எனப் போற்றப்படுகிற காளிதாசர், வராகமிகிரர் போன்ற
​  ​
கவிஞர்கள் இருந்ததாகச் சொல்லப்படுவதுண்டு.

 ஆனால், இது பற்றிய முடிந்த
​  ​
முடிவான ஆதாரங்கள் இல்லை. சந்திரகுப்தன் 38 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சி
​  ​
புரிந்தான். இந்தியாவின் கடைசி பேரரசைக் கட்டிக்காத்தவன் என்று இப்போதும்
பேசப்படுகிறவன் அவன். அடக்குமுறைகள், பணியாளர்களை பயமுறுத்துதல், நிறைய
​  ​
தண்டனையளித்தல் போன்றவை சில நேரங்களில் தற்காலிகப் பலன்களைத் தரும்.

ஆனால், நாளடைவில் நிர்வாகம் நீர்த்துப் போகும். அதை சந்திரகுப்தன்
அறிந்திருந்தான். அவன் மென்மையான கோழையல்ல. தேவைப்படுகிறபோது அவன் தீயாக
​  ​
மாறத் தெரிந்தவன். பல நாடுகளை இணைத்தான். தந்திரமாக உடன்படிக்கைகள்
மேற்கொண்டு ராஜநீதியைப் பேணியவன். அவன் விநியோகித்த நாணயங்களில் கூ
​  ​
வெள்ளி, செம்பு ஆகியவற்றில் புதுமை புரிந்ததோடு, சரித்திரத்தையும் பதிவு
​  ​
செய்தவன். ஆனால், மக்களுடைய அடிப்படை மனித உரிமைகளை அவன்
​  ​
மதித்தவன்.அந்தக் காலத்திலேயே தூக்குத் தண்டனையை ஒழித்தவன்.

பணக்காரர்களுடைய பரோபகாரத்தைத் தூண்டி, துலங்கச் செய்தவன். சில
நிறுவனங்கள் மிகச் சிறப்பாக நடக்கும். ஆனால், மக்களுக்கு யார் அதன்
தலைவர் எனத் தெரியாது. சில நேரங்களில் சில செயல்கள் அற்புதமாக
நடந்தேறும். ஆனால், யார் அதன் பின்னனியில் இருந்தார்கள் எனத் தெரியாது.
​ ​
காலம் அதை அப்படியே விட்டுவிடுவதில்லை. தோண்டியெடுத்து அந்த மகத்தான
​ ​
மனிதர்களுக்கு கௌரவத்தைக் கவிதைகளாகவும், இலக்கியமாகவும் பேசி
​ ​
மகிழ்வார்கள். கிராமத்தில் கூட தெருக்கூத்துகளில்

அவர்கள் நாயகர்களாக
​ ​
இருக்கிறார்கள். புகழைத் தேடாதவர்களுடைய முகவரிக்கே புகழ் சென்று
​ ​
சேருகிறது. (தலைமை கொள்வோம்) நெறி: பதினேழ ஆள்பவர் தெரியாமல் ஆள்
​ ​
எகிப்திய மதகுரு பரோவா தனது மரணத்திற்குப் பின்னால் எழுப்பப்படும்
​  ​
பிரமிடுக்குள், அவருடைய செல்வங்களை மறுவுலகிற்கு எடுத்துச் செல்ல
​  ​
ரகசியமாக ஓர் அறை கட்டும்படி சொன்னார். அறையைக் கட்டிய சிற்பி இரண்டு
மகன்களையும் அழைத்தான்; ‘நான் பரம ஏழையாகவே இறப்பேன்; ஆனால், அந்த ரகசிய
​  ​
அறைக்குப் போகும் சுரங்கப் பாதைக்கான வரைபடத்தை உங்களுக்கு அளிக்கிறேன்.


நம் அரசன் ஏழைகளின் ரத்தத்தை உறிஞ்சி ஏராளமான தங்கத்தைக்
குவித்துவிட்டான்’ என்றான். இரு மகன்களும் ரகசிய அறையில் ராத்திரி நேரம்
​  ​
சிறிதளவு தங்கம் எடுத்த நிலையில், ஒருவன் அங்கு மறைவாய்
வைக்கப்பட்டிருந்த கண்ணியில் சிக்கிக் கொண்டான். சிக்கியவன் தன்
சகோதரனிடம் ‘என் தலையை வெட்டி விடு. நம் குடும்பம் அதனால் தப்பிப்
பிழைக்கும். மிஞ்சியிருப்பவர்கள் புதையலைத் தேடி மீண்டும் வரலாம்’ என்று
​  ​
மன்றாடினான். சிறிது நேரம் விவாதம். பின் வேறு வழியின்றி தலை
வெட்டப்பட்டது. அரசனுக்குத் தலையற்ற முண்டம் ஆச்சரியமாக இருந்தது.
‘அந்தத் தலையற்ற உடலை ஒரு சுவற்றுடன் சேர்த்துக் கட்டி வைத்து அதன் மேல்
​   ​
ஒரு கண் வைத்திருங்கள்’ என்று ஆணையிட்டான். தலையற்ற உடலைத் தேடி
​  ​
உறவினர்கள் வந்தால், அவர்களைக் கைது செய்யலாம். தப்பித்த சகோதரன்
​  ​
சாமர்த்தியசாலி. சில தோல் பைகளில் மதுவை நிரப்பி,


அவற்றைக் கழுதைகளின்
​   ​
மேலேற்றி காவலாளிகள் இருக்கும் பாதைகளில் ஒழுகுமாறு செய்தான். காவலாளிகள்
​  ​
வீணாகிக் கொண்டிருந்த மதுவைக் குடித்து மயக்கத்தில் இருந்தபோது, உடலை
யாருக்கும் தெரியாமல் அடக்கத்திற்கு எடுத்துச் சென்று விட்டான்.





--
With regards,

Lakshmi Sevukamoorthy,
Sona College of Technology
India.

"Never let the regrets of Yesterday destroy the hopes of Tomorrow"    



Reply all
Reply to author
Forward
0 new messages