Fwd: இன்றைய சிந்தனை

3 views
Skip to first unread message

SevukaMoorthy Lakshmi

unread,
Aug 13, 2014, 3:37:35 AM8/13/14
to sona...@googlegroups.com, sona...@googlegroups.com, sonamc...@googlegroups.com, sonam...@yahoogroups.com, sona...@googlegroups.com, sonamca...@gmail.com

With regards,

Lakshmi Sevukamoorthy,
Sona College of Technology
India.

"Never let the regrets of Yesterday destroy the hopes of Tomorrow"    





--
அமைதி என்றால் என்ன..?
............................................ நாட்டில் அவ்வப்போது ஏதாவது
போட்டிகள் நடத்தி வெற்றி பெறுபவர்களுக்கு சன்மானம் அளிப்பது அந்த மன்னனின்
​ 
வழக்கம். 

ஒரு முறை அமைதி என்றால் என்ன என்பது குறித்து தத்ரூபமான ஓவியம்
​ 
வரைபவர்களுக்கு மிகச் சிறந்த பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தான்.

இதையடுத்து நாட்டின் முன்னணி ஓவியர்கள் அமைதியை பிரதிபலிக்கும் வண்ணம்
​ 
தத்ரூபமான பல ஓவியங்களை வரைந்து அரண்மனைக்கு எடுத்து வந்தார்கள். 

மன்னன்
​ 
ஒவ்வொரு ஓவியமாக பார்வையிட்டுக்கொண்டே வந்தான். அமைதியை ஒவ்வொரு ஓவியரும் ஒரு
மாதிரி பிரதிபலித்து இருந்தார்கள். 

ஒருவர் அழகான ஏரியை வரைந்திருந்தார். ஒரு
அழகிய மலையின் அடிவாரத்தில் அந்த ஏரி காணப்பட்டது. மலையின் பிம்பம் ஏரியில்
​ 
பிரதிபலித்து பார்க்கவே ரம்மியமாக இருந்தது. 

மற்றொருவர் மலர்களை
​ 
வரைந்திருந்தார். பார்த்தவுடனே பறிக்கத் தூண்டும் வகையில் அம்மலர்கள்
​ 
தத்ரூபமாக இருந்தது. இப்படி ஒவ்வொருவரும் அமைதியை தங்களுக்கு தோன்றியவாறு
ஓவியத்தில் பிரதிபலித்திருந்தனர். 

ஒரு ஓவியத்தில் ஒரு மலையின் மீதிருந்து
​ 
ஆக்ரோஷமாக கொட்டும் நீர்வீழ்ச்சியின் படம் வரையப்பட்டிருந்தது. அதுமட்டுமா
இடியுடன் மழை வேறு பொழிந்துகொண்டிருந்தது. இது அமைதியே அல்ல. சற்று உற்று
​ 
பார்க்கும்போது, நீர்வீழ்ச்சியின் கீழே இருந்த மரம் ஒன்றில் கூடு கட்டியிருந்த
​ 
பறவை ஒன்று கூட்டில் தனது குஞ்சுகளுடன் காணப்பட்டது.


 “இந்த ஓவியத்தை வரைந்தது
​ 
யார்?” சம்பந்தப்பட்ட ஓவியர் எதிரே நிறுத்தப்படுகிறார். 

“இந்த ஓவியம்
​ 
தத்ரூபமாக பார்க்க அழகாக இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. ஆக்ரோஷத்துடன்
​ 
கொட்டும் அருவி, இடியுடன் கூடிய மழை… கீழே மரத்தில் தனது கூட்டில் ஒரு பறவை….
ஆனால் இதில் அமைதி எங்கே இருக்கிறது?” 

“மன்னா சப்தமும், பிரச்னையும்,
​ 
போராட்டமும் இல்லாத இடத்தில் இருப்பது அமைதி அல்ல. இவை எல்லாம் இருக்கும்
​ 
இடத்தின் நடுவே இருந்து கொண்டு, எதற்கும் கலங்காமல் எதுவும் தன்னை
பாதிக்கவிடாமல் பார்த்துக்கொண்டு உள்ளுக்குள் அமைதியாக இருப்பதே  உண்மையான
​ 
அமைதி! அப்படி பார்க்கும்போது குஞ்சுகளுடன் இருக்கும் இந்த பறவையே பரிபூரணமான
அமைதியில் இருக்கிறது!!” 


“சபாஷ்… அமைதிக்கு ஒரு அற்புதமான விளக்கம்” கைதட்டிய
மன்னன் அந்த ஓவியத்திற்கே முதல் பரிசு கொடுத்தான்.., 

ஆம்.,நண்பர்களே., அனைத்து
​ 
சௌகரியங்களும் அமையப்பெற்று எந்த வித பிரச்னையும் இல்லாத ஒரு சூழலில் வாழ்வது
அமைதியல்ல. அது ஒரு வாழ்க்கையும் அல்ல. 

ஆயிரம் துன்பத்திற்கு நடுவே, “நிச்சயம்
​ 
ஒரு நாள் விடியும்” என்று விடாமுயற்சியுடன் தினசரி உழைத்துக்கொண்டு
​ 
வருகிறார்களே அவர்களிடம் இருப்பது தான் அமைதி. 

எத்தனையோ தொல்லைகள் யார்
​ 
தந்தாலும், “எனக்கு நேரும் மான அவமானங்களை விட நான் எட்ட வேண்டிய இலக்கே
எனக்கு பெரிது” என்று எதையும் பொருட்படுத்தாது போய் கொண்டிருக்கிறார்களே…
​ 

அவர்கள் உள்ளத்தில் உள்ளது தான் உண்மையான அமைதி. சாத்தியமில்லாத இடத்தில்
​ 
சாத்தியப்படுவது தான் அமைதி. அதாவது பாறைக்குள் வேரைப் போன்று!!!*

Reply all
Reply to author
Forward
0 new messages