Sudanthirmam sudanthiram

0 views
Skip to first unread message

cnu pne

unread,
Aug 17, 2026, 10:44:20 AM (20 hours ago) Aug 17
to S4SS, Justice Rangarajan, Vellimedu Seshadri, Raman_K
Courtesy Sri v.dotthusku
How many of us know the persons who sacrificed the life for Indias Freedom.
It is juicy poem in Tamil.
Could I request Sri justice Rangarajan a English translation in same flavor 

அற்புதம், இலந்தையாரே 🙏🙏🙏

இப்போதுள்ள தலைமுறையிலேயே இத்தனை தியாகிகளின் பெயர் தெரியாமல் பலர் இருக்கிறார்கள். 
அடுத்த தலைமுறைக்கு எப்படி எடுத்துச் செல்லப் போகிறோம். ??

குமார்(சிங்கை)

On Sun, Aug 16, 2026 at 9:46 PM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:
சுதந்திரமாம் சுதந்திரம்
சுதந்திரமாம் சுதந்திரம்
சொகுசான சுதந்திரம்
கதியெனநம் வாழ்விலே
கண்டெடுத்த சுதந்திரம்
ராட்டை நுhற்று காந்திஜி
நமக்குத் தந்த சுதந்திரம்
தேட்டமாக நேருஜி
தேடிவைத்த சுதந்திரம்
உப்பெடுத்து இராஜாஜி
உறுதி செய்த சுதந்திரம்
கப்பலோட்டி வ.உ.சி.
கணித்து வைத்த சுதந்திரம்
தீரன் கட்டபொம்மனும்
சிந்தை செய்த சுதந்திரம்
வீரன் பூலித்தேவனால்
விதைக்கப்பட்ட சுதந்திரம்
தாந்தியா தோப் இலஷ்மிபாய்
தளரா மங்கள் பாண்டேயும்
ஈந்த ஜீவன் வாங்கியே
எழுச்சி பெற்ற சுதந்திரம்
சித்தரஞ்சன் தாசரால்
சித்தி பெற்ற சுதந்திரம்
முத்துராம லிங்கமும்
முன்மொழிந்த சுதந்திரம்
மருது சகோதரர்களால்
மாண்பு பெற்ற சுதந்திரம்
கருதி விஸ்வநாததாஸ்
கானம் செய்த சுதந்திரம்
விபின சந்த்ர பாலரும்
மிகநினைந்த சுதந்திரம்
அபய வீரர் சாவர்க்கர்
ஆராதித்த சுதந்திரம்
தீரமுள்ள திலகரால்
தெம்பைக் கண்ட சுதந்திரம்
வீரமுள்ள நேதாஜி
வீறு சேர்த்த சுதந்திரம்
அஞ்சா நெஞ்சர் மோதிலால்
யாவும் தந்த சுதந்திரம்
பஞ்சாப் சிங்கம் லஜபதி
பாசம் கொண்ட சுதந்திரம்
மூத்த தலைவர் தாதாபாய்
முறைகள் கண்ட சுதந்திரம்
சீர்த்த நெஞ்சர் கோகலே
தினவளித்த சுதந்திரம்
இரும்பு நெஞ்சர் வல்லபாய்
இணைத்து வைத்த சுதந்திரம்
அரும்ஜெ யப்ர காசரும்
அறிந்து கொண்ட சுதந்திரம்
பாட்டின மூலம் பாரதி
பாதை போட்ட சுதந்திரம்
கோட்டை மேலே ஆரியா
கொடியைத் தந்த சுதந்திரம்
கொடியைக் காத்த குமரனால்
கூடிவந்த சுதந்திரம்
கடமை வீரர் காமராஜ்;
கருதி வைத்த சுதந்திரம்
தீரர் சத்ய மூர்த்தியும்
சிந்தை கொண்ட சுதந்திரம்
வீரர் வாஞ்சி நாதனும்
கேள்வி செய்த சுதந்திரம்
ஊக்கம் கொண்ட பகத்சி,ங்கம்
உயிரைத் தந்த சுதந்திரம்
ஆக்க வீரர் வ.வே.சு
ஐயர் யாத்த சுதந்திரம்
மனித நேயர் சாஸ்திரி
வல்ல பபந்த் அபுல்கலாம்
புனிதர் நீல கண்டரும்
போற்றி செய்த சுதந்திரம்
அருமை சிவம், ம.பொ.சி.
ஆன்ம ஞானி அரவிந்தர்
பெரியர் இன்னும் பலப்பலர்
பேணி வைத்த சுதந்திரம்
பெரியவர்கள் வாழ்விலே
பெருமை சேர்த்த சுதந்திரம்
உரிமையாக நாமிதை
உயிரைப் போலப் போற்றுவோம்.
எண்பதாவ தாண்டிலே
இற்றைநாள் நுழைகிறோம்
பண்பு கூடும் வகையிலே
பாரதத்தைப் போற்றுவோம்
இலந்தை
15-8-2026

Cnupne
Sent from my iPhone

Rajaram Krishnamurthy

unread,
Aug 17, 2026, 10:21:01 PM (8 hours ago) Aug 17
to cnu pne, Chittanandam V R, YM, Dr Sundar, Ravi mahajan, Venkat Giri, SRIRAMAJAYAM, APS Mani, Rangarajan T.N.C., Srinivasan Sridharan, Mathangi K. Kumar, Venkat Raman, Rama, Societyforservingseniors, Sanathana group, thatha patty, Kerala Iyer, Justice Rangarajan, Vellimedu Seshadri, Raman_K

தண்ணீர் விட்டோ வளர்த்தோம் SUBRAMANYA BHARATHI 18 8 26  KR IRS

தண்ணீர் விட்டோ வளர்த்தோம்
சர்வேசா இப்பயிரை
கண்ணீரால் காத்தோம்
கருக திருவுளமோ
கண்ணீரால் காத்தோம்
கருக திருவுளமோ....

தண்ணீர் விட்டோ வளர்த்தோம்
சர்வேசா இப்பயிரை
கண்ணீரால் காத்தோம்
கருக திருவுளமோ
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்
சர்வேசா இப்பயிரை
கண்ணீரால் காத்தோம்
கருக திருவுளமோ
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்...

எண்ணமெல்லாம் நெய்யாக
எம் உயிரினுள் வளர்ந்த.........
எண்ணமெல்லாம் நெய்யாக
எம் உயிரினுள் வளர்ந்த
வண்ண விளக்கிது
மடிய திருவுளமோ
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்....

ஓராயிரம் வருடம்
ஓய்ந்து கிடந்த பின்னர்
வாராது போல வந்த
மாமணியை தோற்போமோ....
ஓராயிரம் வருடம்
ஓய்ந்து கிடந்த பின்னர்
வாராது போல வந்த
மாமணியை தோற்போமோ

மாதரையும் மக்களையும்
வன்கண்மையால் பிரிந்து
மாதரையும் மக்களையும்
வன்கண்மையால் பிரிந்து
காதல் இளைஞர்
கருத்தழிதல் காணாயோ....

தர்மமே வெல்லும் எனும்
சான்றோர் சொல் பொய்யாமோ
கர்ம விளைவுகள் யாம்
கண்டதெல்லாம் போதாதோ
தர்மமே வெல்லும் எனும்
சான்றோர் சொல் பொய்யாமோ
கர்ம விளைவுகள் யாம்
கண்டதெல்லாம் போதாதோ
என் தாய் நீ தந்த
இயற் பொருளெல்லாம் இழந்து
நொந்தார்க்கு நீயின்றி
நோவழிப்பார் யார் உளரோ....

மேலோர்கள் வெஞ்சிறையில்
வீழ்ந்து கிடப்பதுவும்
நூலோர்கள் செக்கடியில்
நோவதுவும் காண்கிலையோ....
மேலோர்கள் வெஞ்சிறையில்
வீழ்ந்து கிடப்பதுவும்
நூலோர்கள் செக்கடியில்
நோவதுவும் காண்கிலையோ....

எண்ணற்ற நல்லோர்
இதயம் புழுங்கி
இரு கண்ணற்ற சேய் போல்
கலங்குவதும் காண்கிலையோ...

Lyrics

thaneer vitto valarthom
sarvesa ippayirai
kanneeraal kaathom
karuga thiruvulamo
kanneeraal kaathom
karuga thiruvulamo....

thaneer vitto valarthom
sarvesa ippayirai
kanneeraal kaathom
karuga thiruvulamo
thaneer vitto valarthom
sarvesa ippayirai
kanneeraal kaathom
karuga thiruvulamo
thaneer vitto valarthom...

ennamellaam neiyaaga
em uyirinul valarndha..a.a.a
ennamellaam neiyaaga
em uyirinul valarndha
vanna vilakkidhu
madiya thiruvulamo
thaneer vitto valarthom...

oraayiram varudam
oindhu kidandha pinnar
vaaraadhu pola vandha
maamaniyai thorpomo...
oraayiram varudam
oindhu kidandha pinnar
vaaraadhu pola vandha
maamaniyai thorpomo

maadharaiyum makkalaiyum
vankanmaiyaal pirindhu
maadharaiyum makkalaiyum
vankanmaiyaal pirindhu
kaadhal ilaingyar
karuthazhidhal kaanaayo....

dharmame vellum enum
saandror sol poiyaamo
karma vilaivugal yaam
kandadhellaam podhaadho
dharmame vellum enum
saandror sol poiyaamo
karma vilaivugal yaam
kandadhellaam podhaadho
en thaai nee thandha
iyar porulellaam izhandhu
nondhaarkku neeyindri
novazhippaar yaar ularo

melorgal venchiraiyil
veezhndhu kidappadhuvum
noolorgal sekkadiyil
novadhuvum kaangilaiyo...
melorgal venchiraiyil
veezhndhu kidappadhuvum
noolorgal sekkadiyil
novadhuvum kaangilaiyo.....

ennatra nallor
idhayam puzhungi
iru kannatra sei pol
kalanguvadhum kaangilaiyo...


--
You received this message because you are subscribed to the Google Groups "societyforservingseniors" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to society4servingse...@googlegroups.com.
To view this discussion, visit https://groups.google.com/d/msgid/society4servingseniors/D6415001-06C2-4163-9BE8-65A28D0E5D60%40gmail.com.
Reply all
Reply to author
Forward
0 new messages