Re: Fw: Sujatha = Longevity

1 view
Skip to first unread message

R V Rao

unread,
Aug 30, 2025, 10:30:25 PM8/30/25
to Rangarajan T.N.C., societyforservingseniors
Long healthy life is preferable.Good forward. 

On Sun, 31 Aug, 2025, 7:38 am Rangarajan T.N.C., <tncran...@yahoo.com> wrote:


----- Forwarded message -----
From: Chittanandam V R <chittan...@gmail.com>
Sent: Sunday, 31 August 2025 at 05:44:15 am IST
Subject: Fwd: Sujatha = Longevity



ஆரோக்கியத்தின் காரணங்கள் - சுஜாதா


எனது மாமனார் ராமரத்னம் அவர்களின் தொண்ணூறாவது பிறந்த தினத்தை அண்மையில் கொண்டாடினோம். அமெரிக்காவிலிருந்து ஆழ்வார்பேட்டை வரை அனைவரும் கூடி, ஆசீர்வாதம் பெற்று போட்டோ எடுத்துக்கொண்டோம்.

ராமரத்னம் அவர்களைப் பார்த்தால், தொண்ணூறு வயசு என்று சொல்லமுடியாது.1993-ல் எனக்கு இதய ஆபரேஷன் நடந்தபோது, என்னைத் தினமும் மெரீனாவில் 'மாப்பிள்ளை, பார்த்து வாங்கோ' என்று அழைத்துச் செல்வார். 'என்ன சார், தலைகீழாக இருக்கிறது!' என்று வியப்பேன்.

ராமரத்னம் தொண்ணூறிலும் ஆரோக்கியமாக இருப்பதற்கான காரணங்களை யோசித்துப் பார்க்கையில், எனக்கு நான்கு விஷயங்கள் முக்கியமானதாகப் படுகிறது .

  • எதிலும் நிதானம். குறிப்பாகச் சாப்பிடுவது. அவருடன் சாப்பிட உட்கார்ந்தால், அவர் குழம்பு சாதம் சாப்பிடுவதற்குள் நான் சாப்பிட்டு முடித்து, மத்தியான டிபன் ரேஞ்சுக்கு வந்துவிடுவேன்.

  • அவருடைய வாழ்நாளில் வந்த பிரச்னைகள் எதுவும் அவரைப் பாதிக்கவில்லை. கவலையேபடமாட்டார். நம்பிக்கை இழக்கமாட்டார்.

  • எதற்கும் பதற்றப்படமாட்டார். உதாரணம், ஒருமுறை சென்ட்ரல் ரயில்நிலையத்துக்கு போன் செய்தார். 'கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் எப்போது வரும்..?' என்று கேட்டார். 'இருபத்து நாலு மணி நேரம் லேட் சார்' என்று பதில் வந்தது. 'தாங்க்யூ என்று வைத்துவிட்டார்.

  • அவர் குடும்பத்தில் லாஞ்செவிட்டி (longevity) இருக்கிறது. அவருடைய தமையனார் நாராயணசாமி தொண்ணூற்று மூன்று.

"என்ன சார், உங்களுக்குக் கோபம் வரவில்லையா..? இருபத்து நாலு மணி நேரம் லேட் என்கிறான்... 'என்ன ரயில் ஓட்டுகிறான்கள்' என்று ஒரு திட்டாவது, அலுப்பாவது வேண்டாமா..?"

"அவங்களுக்கு ஏதாவது பிராப்ளம் இருக்கும். வந்துடும்... மேக்-அப் பண்ணிடுவான்!"

பரிபூரண ஆப்டிமிஸ்ட்!

அவர்கள் நீண்ட நாள் வாழப் பாதி காரணம் ஜெனடிக், பாதி காரணம் வாழ்க்கை முறை என்றுதான் சொல்லத் தோன்று கிறது.


-- சுஜாதா 

****************************

சித்தானந்தம் 


Reply all
Reply to author
Forward
0 new messages