Fwd: சில்பி எனும் தெய்வ புருஷன்

0 views
Skip to first unread message

Rajaram Krishnamurthy

unread,
2:11 AM (4 hours ago) 2:11 AM
to Chittanandam V R, YM, Dr Sundar, Ravi mahajan, Venkat Giri, SRIRAMAJAYAM, APS Mani, Rangarajan T.N.C., Srinivasan Sridharan, Mathangi K. Kumar, Venkat Raman, Rama, Sanathana group, Kerala Iyer, thatha patty, Societyforservingseniors
KARMA IS NOT CONFINED TO ONE JANMA ALONE OR EACH JANMA FROM BIRTH TO DEATH. IT CONTINUES WHICH IS TERMED AS SIRANJEEVI. SAPTA CHIRANJEEVI IS BY PASSED NOW. DEVOTIONAL MUSIC SINGERS ARE NOT DEAD AND PAST; M S SUBUULASHMI. MLV SPB ARE BEING HEARD EVEN TODAY AND REACHES OUR PUJA ROOM WHERE SILPI IS PERMANENT . KR IRS 18826

---------- Forwarded message ---------
From: Venkatachalam Subramanian <v.dot...@gmail.com>
Date: Tue, 18 Aug 2026 at 11:23
Subject: சில்பி எனும் தெய்வ புருஷன்
To: thathapatti-google <thatha...@googlegroups.com>, Venkatachalam Dotthathri <v.dott...@gmail.com>


சில்பி எனும் ஒரு தெய்வ புருஷன்

- சுப்ரஜா

1919 புலியூர் (கும்பகோணம்) பிறந்தவர் சீனிவாசன்.தந்தை பெரிய செல்வந்தராக .விட்டு கடைசியில் நாமக்கல் ஆஞ்சனேயர் கோவிலுக்குப் பின்னால் இப்பொழுது இருக்கும் இடத்தில் இருந்த சொந்த நிலத்தில் கீரை,காய்கறி,மல்லிகைப் பூக்களை பயிர்வித்து அதை விற்று உண்ணும் நிலைக்கு தள்ளப் பட்டார்கள்.பின் அவரின் தாத்தா நாமக்கல் ஆஞ்சேனயர் கோவிலுக்கு அதை தானமாக கொடுத்து விட்டார்.

பின் அந்த நிலத் சினிவாசன் வாழ்க்கையில் மனம் திறந்த வேளை அதுதான்.

பேப்பரில் சிறு சிறு படங்களை வரைவார்.அதைப் பார்த்த நாமக்கல் கவிஞருக்கு பையனிடம் ஏதோ தெய்வாம்ச கலை ஒளிந்திருப்பது புரிந்தது.

நேரே சீனிவாசன் தந்தையிடம் சென்றார்.

''உங்க பையன் சாதாரண ஆள் இல்லை,அவன் கிட்ட மிகப் பெரிய திறமை இருக்கு,ரொம்ப நாளாவே அவன் வரையறதை எல்லாம் கவனிச்சிட்டு வர்றேன்,இன்னைக்கு தான் அவன் கிட்ட இருக்கற தீட்சன்யம் எனக்குப் புரிஞ்சுது,சில நேரங்கள்ல்ல அவன் கண்ணை என்னாலே நேரே பார்க்க முடியலை''என்றாராம்.

அது வரை டிம்பர் மெர்சண்ட் மற்றும் சில தொழில்கள் என ஓடி கடைசியில் சொந்தங்களுக்கு வந்த தந்தை சொன்னாராம்.

''நான் இவ்வளவு நாள் அதை கவனிக்கலே,ஓடிண்டே இருந்துட்டேன்,இன்னைக்கு தான் எனக்கும் அவன் விளையாட்டா எதுவும் பண்ணலைன்னு தோன்றது,என்னப் பண்றது,அவனை எப்படி கொண்டு போறதுன்னு எனக்கு தெரியலை"என்றிருக்கிறார்.
அதற்கு நாமக்கல் கவிஞர்,''நீங்க என்னை அனுமதிச்சா,சீனிவாசனை பட்டணுத்துக்கு கூட்டிண்டு போறேன்,அங்கே ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸ் இருக்கு,அங்கே சேர்க்கறேன்,அவனை நான் பார்த்துக்கறேன்"என உருக்கமாய் சொல்ல தந்தையும் ஒப்புக் கொண்டுள்ளார்.

நாமக்கல் கவிஞர் சீனிவாசனை கொண்டு வந்து எக்மோரில் இருந்த ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸ் அண்ட் க்ராஃப்ட்ஸ் சேர்த்து விட்டார்.

அதுதான் அரசு கவின் கல்லூரியாக மாறியுள்ளது.

அங்கே பணம் கட்டி சீனிவாசனை சேர்த்து விட்ட கவிஞர் தங்கும் இடத்திற்கும்,சாப்பாட்டுக்கும் ப்ராட்வேயில் கன்னிகா பரமெஸ்வரி சத்திரத்தில் ஏற்பாடு செய்து விட்டார்.அவரின் சில நண்பர்களுக்கும் சில வேளை அங்கிருந்து உணவினை பொட்டலம் கட்டி வந்து கொடுத்திருக்கிறார்.சொந்தக்காரகள் அவரைப் பார்க்க வந்தாலும் அங்கே வந்து தங்கியுள்ளனர்.

அங்குதான் சில்பி எனும் தெய்வ புருஷன் உருவானது.
அங்கே படித்தது எல்லாம் பெரிய வீட்டு பையன்கள்,பெண்கள்.

அவர்களுக்கு அவர்களது நோட்டுப் புத்தகத்தில் வரைந்து கொடுத்து அதற்கு அவர்கள் தரும் காசை வைத்துக் கொண்டு படம் வரைவதற்கான இங்க்,ஓவிய பேப்பர் பென்சில்,ஃப்ரஷ் எல்லாம் வாங்கிக் கொள்வார்.அங்கே வரும் வெளி நாட்டுக் காரர்கள் தங்களை வரைய சொல்லி அதற்கு பணம் தருவார்கள்.

அதுவும் அப்பொழுதே(1939-1941)நூறு ரூபாய் தருவார்கள்.

அவரின் மனம் மனிதர்களை வரைவதில் இல்லை.

காஞ்சி மகா பெரியவரிடம் மிகவும் நெருக்கமாக இருந்த

ஒரு சிலரில் சில்பி பிரதானமானவர்.

வருடத்தில் இருபது நாட்கள்,அதிகப் பட்சம் முப்பது நாட்கள் தான் சென்னைக்கு வருவார்.

அவரது மனைவி பத்மாவதி.

என்னே பொருத்தம் பாருங்கள்.

சீனிவாசன் - பத்மாவதி.

திருப்பதியில் மூல விக்கிரகத்தை நாற்பது நாட்கள் தங்கி வரைந்தவர் சில்பி.

அவர் படைத்தை தான் அங்கே முதல் முதலில் திருப்பதி தேவஸ்தானத்தில் காலண்டரில் வெளியிட்டார்கள்.
திருவாசி புதியதுடன் வரைந்த படத்தினை தேவஸ்தானம் காலண்டரில் வெளியிட்டார்கள்.

வெங்கடாஜலபதி படத்தினை அவர் வரைந்த போது திருவாசி நிறைய ஆணிகள் அடித்து இருந்தது.
அதை அப்படியே துல்லியமாய் வரைய ஆரம்பித்து விட்டார் சில்பி.

இது நடந்தது 1951 ல்.

அதிகாரிகள் வந்துப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

''இதென்ன இப்படியே போடறீங்க,திருவாசியை நீங்க படம் போடும் போது கரெக்ட் பண்ணக்கூடாதா?''என்று கேட்க சில்பி அமைதியாய் பதில் சொன்னார்.

''இங்கே என்ன இருக்கோ,அதை அப்படியே வரைவேன்"என்றதும் மிரட்ட ஆரம்பித்து விட்டனர்.
அவர் தயங்காமல் பதில் சொன்னார்.

லட்சக் கணக்கான பக்தர்கள் வரா இங்கே,எல்லாம் பக்திப்பூர்வமா எங்கிருந்து எங்கிருந்தோ வந்து தரிசனம் பண்ணிட்டு பணத்தை லட்சம் லட்சமாய் கொட்டறா உண்டியில,அதுல பெருமாள் திருவாசி எப்படி இருக்குன்னு படத்தை பார்க்கறாவ தெரிஞ்சுகிட்டம்,நான் பிரஸ் அப்படியே போடுவேன்"என்றதும் அவர்கள் கமிட்டியை கூட்டை புது திருவாசியே ஏற்பாடு செய்கிறோம்'' என்று சொன்னார்கள்.

அதையும் இரண்டு வருடம் கழித்து வரைந்திருக்கிறார் 1953 ல் சில்பி.

நிறைய கோவில்களுக்கு வரச் சொல்லி அவருக்கு உத்தரவு வரும்.

கிளம்பி போவார்,
முப்பது நாள்,நாற்பது நாள் அங்கேயே தங்கி படம் வரைவார்.

ஜனங்கள் எல்லாம் வந்து சென்றபின் தான் பணியைத் தொடங்குவார்.

சாப்பாடு வெளியில் சாப்பிட மாட்டார்.

சமையல் பாத்திரங்களையும் மளிகை பொருட்கள் மற்றும் அரிசையையும் கையில் எடுத்து செல்வார்.
அவரே சமைத்து சாப்பிடுவார்.

உட்கார்ந்தால் எழுந்திருக்கவே மாட்டார்.

எந்த கோவிலுக்கு சென்றாலும் அந்த தெய்வத்தைப் பற்றி அவரே பிராதான குறிப்புகளையும் எழுதி விடுவார்.

சில இடங்களில் இண்டு இடுக்குகளில் காலையும் கையையும் அசைக்க கூட முடியாத நிலையில் உட்கார்ந்து மணிக் கணக்கில் வரைந்துள்ளார் சில்பி.
எல்லோருக்கும் ஒரு மாஸ்டர் பீஸ் ஒன்றுதான் இருக்கும்.

சில்பிக்கு அப்படியல்ல.

அவர் வரைந்தது எல்லாமே மாஸ்டர் பீஸ் தான்.

ஒரு முறை காஞ்சி பெரியவரிடம் உரையாடிக் கொண்டிருந்த போது ''எல்லாத்தையும் வரைஞ்சுண்டு இருக்கே,சந்தோஷமா இருக்கு,நீ காசிக்கு போய் மாதக் கணக்குல தங்கி வரைந்து கொண்டு வந்திருக்கே,உனக்கு ஒரு கட்டளை வந்திருக்கு,நீ ஸ்வர்ண அன்னப்பூரணியை வரையணும்"என்றார்.

சில்பி அதை எதிர்பார்க்கவில்லை.

பிட்சாண்டவர் கோலத்தில் சிவ பெருமான் கோவில் கோவிலாய் போய் பிரம்ம கபாலத்தில் பிட்சை எடுத்து கடைசியில் அது ஸ்வர்ண அன்னப்பூரணி பிட்சையிட்டதும் தான் நிறைகிறது.

''என்ன சொல்றேன் ஸ்வாமி,தீபாவளிக்கு முதல் நாள்,தீபாவளி,அப்புறம் அடுத்த நாள் மொத்தமே மூணு நாள் தான் திறந்திருக்கும் அந்த சன்னிதி,எப்படி வரைய முடியும,லட்சக்கணக்குல கூட்டம் அலைமோதும்,வட இந்தியா காரா எல்லாம் கணக்கு நோட்டுல முதல் பக்கத்துல ஸ்வஸ்திக் போட்டு கொண்டு வந்து அன்னபூரணி கால்ல வச்சு ஆசிர்வாதம் வாங்கிண்டு போவா,எப்படி முடியும்"என மகா பெரியவா,''எல்லாம் முடியும்,நீ கிளம்பு காசி மடத்துலயும் சொல்லியிருக்கேன்,என்னன்னாலும் எங்கிட்ட தகவல் சொல்லுவா,நீ கிளம்பு''என புறப்பட்டு விட்டார் சில்பி.

ஸ்வர்ண அன்னப்பூரணி சன்னதி வருஷத்துல மூன்று நாள்தான் திறந்து இருக்கும்.

அவருக்கு திறந்த வுடன் சன்னதி முன்னால் அமர வைக்க ஏற்பாடு ஆகியிருந்தது.

தான் ஸ்புடம் போட்டு எடுத்துக் கொண்டு போன வாட்டர் கலர் பேப்பரை (பேப்பர எல்லாம்) வச்சுண்டு தயார் ஆனார்.

அவர் உட்கார்ந்த உடனே தான் அது ஆரம்பிச்சது.
வந்த பக்தர்களுக்கு ஆசிர்வதிக்கும் பொருட்டு பால் தீர்த்தம் தொட்டு தெறிக்கும் படி விடும் புஷ்பங்கள் அவர் மேலும் படம் வரைய வைத்திருந்த ஆர்ட் செய்ய வைத்ருந்த பேப்பர் மேலும் விழுந்தது.முதல் நாள் முடியவில்லை.

அவர் உடனே காஞ்சி மகா பெரியவாளுக்கு தகவல் அனுப்புகிறார்.

அதை கேட்ட மகா பெரியவா ஒன்றும் பதில் சொல்லவில்லையாம்.

காஞ்சிப் பெரியவர் மௌனம் காத்திருக்கிறார்.
இரண்டாம் நாளான தீபாவளி அன்றும் அப்படியே சென்றது.

அன்றும் காஞ்சி மடம் மூலம் பெரியவருக்கு தகவல் செல்ல அன்றும் மௌனம் காத்திருக்கிறார்.

இரண்டாம் நாள் ஊர் பெரிய மனுஷங்க,நிர்வாகிகள் எல்லோருக்கும் தொடர்ந்து இரண்டு நாள் ஒரே மாதிரி கனவு வந்து இருக்கு.

ஸ்வர்ண அன்னப்பூரணி படத்தை வரைய வந்திருக்கிற சில்பி பற்றி..

அவங்க யார் சொன்னா சில்பி கேட்பாரோ அப்படி ஒரு நாலு பேரை தேர்வு பண்ணி அனுப்ப சில்பி தெளிவாய் சொல்லி விட்டார்.

''நான் இங்கேயிருந்து படம் வரையாம போக மாட்டேன்,எது சரி எது தப்புன்னு எனக்கு தெரியலை,ஒரு வேளை என்னோட கடைசிப் படம் இதுதானோ,இங்கே தான் என்னோட ஆயுள் முடியப் போறதோ,அதுவும் தெரியல,இந்த சன்னிதி இப்படிதான் ஆயிரம் வருடங்களா இருக்கு,என்ன பண்ண முடியும்"
சொன்ன சில்பி சன்னதிக்கு எதிரில் இருந்த மண்டபத்தில் போய் உட்கார்ந்து கொள்கிறார்.

கிட்டத்தட்ட 48 மணி நேரம் தியான நிலையிலேயே இருந்திருக்கிறார் சில்பி.

மூன்றாம் நாள் கோவில் தர்மகர்த்தா,டர்ஸ்டி,ராணுவ அதிகாரிகள்(கோவில் ராணுவ கட்டுப் பாட்டிலும் உள்ளது),மத்தியஸ்தர்கள் எல்லோரும் வருகிறார்கள்.

'என்ன செய்வது என்று பேசுகிறார்கள்'

சில்பியை அழைக்க 'நீங்களே முடிவெடுங்கள்,ஆனால் நான் எந்த காரணத்தை கொண்டும் இங்கிருந்து படம் வரையாமல் போக மாட்டேன்'என்று சொல்லி விடுகிறார்.

'அவர்கள் எதாவது யோசனை சொல்லுங்கள்'என்று பணிந்து கேட்க-

'திருவுள சீட்டு எழுதிப் போடுங்கோ,அம்மா கிட்டயே கேட்போம்'என்கிறார் சில்பி.

காரணம் ஆயிரம் வருடங்களாக நடந்து வரும் வழிமுறையை மாற்றி தெய்வகுத்ததுக்கு ஆளாக கூடாது என்று முடிவு செய்து இரண்டு வாசகங்களை தனித்தனி சீட்டில் எழுதுகிறார்கள்.

ஒன்றில் 'நான் வெளி உலகத்துக்கு வர ஆசைப் படுகிறேன்'என்றும் இன்னொரு சீட்டில் 'நான் எப்பவும் போல் இருக்க விரும்புகிறேன்'என்று எழுதி அதில் ஒன்றை எடுத்து அதன் படி நடக்கலாம் என்று முடிவு செய்கிறார்கள்.

மூன்றாம் நாள் இரவு ஸ்வர்ண அன்னப்பூரணி காலடியில் சீட்டைக் குலுக்கிப் போட்டு காத்திருக்க யாரும் சீட்டை எடுக்கலை.

எல்லோருமே தயங்கி தயங்கி நிற்கிறார்கள்.

அப்பொழுது கூட்டத்துல இருந்து ஒரு பெண்

குழந்தையின் குரல் கணீரென்று கேட்டது.

''ஏன் எல்லோருமே தயங்கி நிற்கிறீர்கள்,நானே எடுக்கறேன்னு''முன்னாடி வர-

சர்வ லட்சணம் பொருந்திய அந்த பெண் குழந்தை வந்து ஒரு சீட்டை எடுத்து கொடுத்து விட்டு போய் விடுகிறாள்.
பிரித்துப் பார்த்தால்'நான் வெளி உலகதுக்கு வர விருபுகிறேன்''என்றே வந்துள்ளது.

அந்தப் பெண் யார் வீட்டுப் பெண் குழந்தை என்று விசாரிக்க யாருமே பார்த்தது இல்லை என்று கை விரிக்கிறார்கள்.

பலரும் பல பக்கங்களில் உடனே விரைந்து பார்த்து திரும்புகிறார்கள்.

அந்தப் பெண் குழந்தையை காணவில்லை.

ஆயிற்று.

இப்பொழுது என்ன செய்ய?

இவரை படம் வரையாதே என்று சொல்வது தர்மமும் கிடையாது.

நியாமும் கிடையாது.

எதெல்லாமோ யோசித்தவர்கள் 'அம்பாள் சில்பிக்கு மட்டுமே அனுமதி கொடுத்துள்ளார்கள்'ஒரு முடிவுக்கு வருகிறார்கள்.

மிகவும் நம்பிக்கையான ஒரு டவாலி சில்பியுடன் வந்து சன்னதியின் பூட்டைத் திறந்து விட்டு திரும்பி நின்று கொள்வார்.

அதன் பின் உள்ளே சில்பி தனது ஒவிய உபகரணங்களுடன் உள்ளே சென்று கதவினை உள்புறம் தாளிட்டுக் கொண்டு ஒரு முறை தட்டுவார்.
வெளியில் நிற்கும் டவாலி திரும்பி பூட்டைப் பூட்டி விட்டு வெளியில் இருக்கும் நாற்காலியில் எங்கும் செல்லாமல் உட்கார்ந்து விடுவான்.

பின் இரவு வரை படம் வரையும் சில்பி கதவை இரண்டு முறை தட்டுவார்.
அவன் உடனே எழுந்து பூட்டைத் திறந்து விட்டு அந்தப் புறம் திரும்பி நின்று கொள்ள சில்பி வெளியில் வந்து கதவை மூடுவார்.

படம் வரையத் தொடங்கும் முன் பூரணிக்கு பூஜை செய்து விட்டு தான் சமைத்துக் கொண்டு போன உணவை நைவேத்யம் செய்து வேலையை தொடங்குவார் சில்பி.
மீண்டும் கதவை தட்டி சமிஞ்சை செய்ய திரும்பி பூட்டி விட்டு திரும்புவார்கள்.

இது போல முப்பது நாட்கள் இருந்து ஸ்வர்ண அன்னப்பூரணியை வரைந்திருக்கிறார் சில்பி.

குடந்தை பக்கத்தில் உள்ளது பட்டீஸ்வரம்.
இங்கே உள்ள துர்க்கை மிகப் பிரசித்தம்.

அங்கே சென்று தங்கி சில்பி படம் வரைந்து முடித்த பின் சொன்ன ஒரு விஷயம் பலரின் புருவத்தினை உயர்த்தியது.

பட்டீஸ்வரம் துர்கையை உற்று நோக்கினால் அதில் ஸ்வாமினாதன் என்கிற முருகன் முகம் தெரியும்.
எம்.ஜி.ஆர்.முதல்வராக இருந்த போது சில்பியின்
ஓவியங்களை அரசுடைமையாக்க பேசினார்.

பிறகு அதை தடைப் பட்டு விட்டது.

சில்பியின் மனைவி பத்மாவதிக்கும் அவருக்கும் அவர் வெளியூரில் இருக்கும் போதெல்லாம் கடிதத் தொடர்பு இருந்தது.

அதில் அவருக்கு தூண்டுகோலாகவே குடும்ப பற்றிய விஷயங்களை எழுதாமல் அவர் கோவில் சமாச்சாரங்களை படம் வரையும் விஷயங்களை கேட்டு எழுதுவார்.இருவருக்கும் இடையில் எழுதிக் கொண்ட கடிதங்ககளை வெளியிட்டாலே அது ஒரு பக்தி நூலாக அமையும் என்றே தோன்றுகிறது.

கலைஞர்கள் பதவி பணத்துக்கு மயங்குவதில்லை,குறிப்பாக உள் ஒளி பெருக்கி மனித தெய்வமாக மாறி பல ஆயிரம் பக்தி கோவில் சம்பந்தப் பட்ட படங்களை மட்டுமே வரைந்து இன்றும் பல வீடுகளில் பூஜை படங்களில்,பூஜை அறைகளில் அலங்கரித்துக் கொண்டிருக்கும் சில்பியின் படங்கள் அமர ஓவியங்கள்.

1983 ல் பிறவி மீளா இயற்கை மரணத்தில் ஆழ்ந்தார் தெய்வீக ஓவியர் சில்பி.

நன்றி : குமுதம் 

--
You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thatha_patty...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3DdsxTYuy7bfn9HV9C94MT28_t7AwWST0RifW6UcYR9ixug%40mail.gmail.com.
Reply all
Reply to author
Forward
0 new messages