மாபெரும் குறுந்திரைப்பட போட்டி - 2021 (Short film Competition in Tamil )

7 views
Skip to first unread message

Marikkar.

unread,
Jan 12, 2021, 3:39:46 AM1/12/21
to

Ad Tamil.png

iMedia வழங்கும்
மாபெரும் குறுந்திரைப்பட போட்டி - 2021
------------------
iMedia தமது முதலாவது குறுந்திரைப்பட போட்டியை அறிமுகம் செய்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறது.
இளம் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் நோக்குடனும்,
சமூக தளத்தில் உயர் விழுமியங்களை சிறந்த படைப்புகளூடாக உயிரோட்டமாக வாழச்செய்யும் நோக்குடனும்,
திறமையும் ஆற்றலுமுள்ள கலைஞர்களை விருதுகளால் வெளிச்சமிட்டு களத்துக்கு அறிமுகம் செய்யும் ஆர்வத்துடனும்,
இந்த போட்டி நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திறமையும், தகுதியுமுள்ள எவரும்...
நீங்கள் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும், உங்கள் படைப்புகளூடாக இப்போட்டியில் கலந்துகொள்ளலாம்.
01. Theme / விடயப்பரப்பு - " முதல் தொழுகை..."
---------------
போட்டிக்கான கதைக்களம், "முதல் தொழுகை..." என்ற கருவை மையமாகக் கொண்டதாகும்.
அந்த வகையில் உங்களது படைப்பு, தொழுகையின் மகத்துவம், அது வழங்கும் உளஅமைதி, வாழ்வொழுங்கு, போன்ற அருள்களை பிரதிபலிக்கும் வகையில், பின்வரும் மூன்றில் ஒன்றை அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவற்றை உள்ளடக்கமாக கொண்டிருக்கலாம்,
1. 'தனது வாழ்வில் தொழுகையே இல்லாதிருக்கும் ஒருவர்' மனம் மாறி தொழுகையை ஆரம்பிக்கும் ஒரு கதையை உணர்வுபூர்வமாக முன்வைப்பதாக அமையவேண்டும்...
அல்லது
2. 'சம்பிரதாய பூர்வமாக பலவீனங்களுடன் தொழுதுவரும் ஒருவர்', தனது தொழுகையை பேணுதலுடன் உயிரோட்டமாக மாற்றிக்கொள்ளுதல் பற்றியதாக அமையவேண்டும்...
அல்லது
3. 'தொழுகை ஒரு மனிதனது வெளிவாழ்க்கையில் எதிர்பார்க்கும் மாற்றங்கள்' எதனையும் கடைபிடிக்காமல் தொழுதுவரும் ஒருவர் தொழுகையின் அடிப்படையில் வாழ்வை மாற்றிக்கொள்ளும் கதையொன்றாக அமையலாம்...
அல்லது
4. மேற்படி மூன்று அம்சங்களும் இணைந்ததாக அமையலாம்...
02. Content / உள்ளடக்கம்
---------------------
A. உங்களது குறுந்திரைப்படம் தமிழ் மொழியில், தரப்பட்ட விடயப்பரப்பில் அமைதல்வேண்டும்.
B. 03 நிமிடம் தொடக்கம் 10 நிமிடங்களுக்கு உற்பட்டதாக அமையவேண்டும்.
C. ஒருவர் எத்தனை படைப்புகளை வேண்டுமானாலும் அனுப்பலாம்.
D. படைப்புகள் 2D, 3D, கார்ட்டூன், அசையும் பிம்பங்களாக (Creative Animation) வும் இருக்கலாம்.
E. உங்களது படைப்பு சொந்தப்படைப்பாக இருப்பதோடு, இதற்கு முன்னர் எங்கும்-எவ்விதத்திலும் வெளியிடப்படாத ஒன்றாக இருக்கவேண்டும்.
F. படைப்புகள் குறைந்தபட்சம் 720P HD Resolution இல் .MP4 வடிவில் சமர்ப்பிக்கப்படல்வேண்டும். ( Youtube Private link மூலம் imedia...@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கப்படல் வேண்டும்.)
G. குறித்த ஆக்கத்தில் பங்களிப்புச்செய்த கலைஞர்கள் உற்பட ஏனைய தகவல்கள் படைப்புடன் இணைக்கப்பட்டு நாம் வழங்கும் google Form மூலம் அனுப்பிவைக்கப்படல் வேண்டும்.
H. உங்களது படைப்பு DSLR அல்லது உங்களது Mobile phone மூலமாக உருவாக்கப்பட்டதாகவும் அமையலாம்.
03. Selection / தேர்வு
----------------
A. படைப்புகள் துறைசார் நடுவார்களால் பார்வையிடப்பட்டு 70% புள்ளிகள் நேரடியாக வழங்கப்படும்.
எஞ்சியுள்ள 30% புள்ளிகள் சமூக வலைத்தளங்களில் குறித்த படைப்பிற்கு கிடைக்கும் வரவேற்பின் அடிப்படையில் வழங்கப்படும்.
B. போட்டிக்காக அனுப்பப்பட்ட எந்தப் படைப்பையும் மீள் தொகுப்புக்காகவோ/மாற்றங்களுக்காகவோ திருப்பி அனுப்பப்பட மாட்டாது.
C. நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.
04. Prize / பரிசு
-----------
A. தெரிவு செய்யப்படும் முதல் மூன்று படைப்புகளுக்கு முறையே...
முதல் பரிசு - 100,000 (ஒரு லட்சம் ரூபா) மற்றும் விருது
இரண்டாம் பரிசு - 50,000 (ஐம்பதாயிரம் ரூபா) மற்றும் விருது
மூன்றாம் பரிசு - 25,000 (இருபத்தைந்தாயிரம் ரூபா) மற்றும் விருது
என்பன வழங்கப்படும்.
B. மேலும், போட்டியில் பங்குபற்றிய சகல படைப்புகளும் கவனத்தில் கொள்ளப்பட்டு,
சிறந்த கதை
சிறந்த நடிகர்
சிறந்த படத்தொகுப்பாளர்
சிறந்த இயக்குனர்
என்போருக்கான விஷேட பணப்பரிசில்களும், விருதும் வழங்கி கௌரவிக்கப்படும்.
C. இலங்கைக்கு வெளியே இந்தியா, மலேசியா, மத்திய கிழக்கு நாடுகள் அல்லது பிற பகுதிகளில் இருந்து பங்குபற்றுவோர்...
வெற்றிபெற்று பரிசளிப்பு வைபவத்தில் கலந்துகொள்ள முடியாமல் போகுமிடத்து அவர்களுக்கான விருதுகள் courier மூலமும், பணப்பரிசுகள் அவர்களது வாங்கிக்கணக்கிற்கும் அனுப்பிவைக்கப்படும்.
04. Application / விண்ணப்பிக்கும் முறை.
-----------------------------------
A. பின்வரும் link இல் உள்ள google form விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, எதிர்வரும் 25-01-2021 க்கு முன்னர் submit செய்யவேண்டும்.
விண்ணப்ப படிவம் Application Link : https://forms.gle/V6DT2BTWmEXRknt18
B. உங்களது விண்ணப்பம் கிடைக்கப்பெற்றதும் iMedia வின் உறுதிப்படுத்தல் 24 மணிநேரத்துக்குள் வழங்கப்படும்.
C. Online Form ஊடாக விண்ணப்பிப்பது சிரமம் எனக்கருத்துவோர் நேரடியாக +94771746699 என்ற இலக்கத்துக்கு நேரடியாகவோ அல்லது whatsapp மூலமாகவோ அழைப்பை ஏற்படுத்தி தங்கள் குழுவை பதிவு செய்துகொள்ளலாம்.
D. பதிவு செய்த குழுக்களின் பிரதிநிதிகளுக்கு வழிகாட்டல் நிகழ்ச்சி ஒன்று february முதல் வாரத்தில் நடாத்தப்படும்.
05. படைப்புகள் வந்து சேர வேண்டிய இறுதித்திகதி
--------------------------------
உங்களது குறுந்திரைப்படம் எதிர்வரும் 28-02-2021 நள்ளிரவு 12 மணிக்கு முன்னர் எமக்கு கிடைக்கக்கூடியதாக மேற்குறிப்பிட்ட (02.F) வழிமுறையில் அனுப்பி வைக்கப்படல்வேண்டும்.
மேலதிக விபரங்களுக்கு,
+94771746699 என்ற இலக்கத்தை whatsapp மூலம் அல்லது con...@imedia.lk என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ளலாம்.
----
Team
iMedia Networks
01-01-2021
Reply all
Reply to author
Forward
0 new messages