அந்த அடர்ந்த மரத்தின் வேர்களுக்கு தீனியாக்கியவர்!
***
கழுத்திலே கரங்கள் இழுத்துக்கட்டப்பட்டு, மக்காவின் மண்மேடுகளில்
ஈமானிய சுகம் கண்ட இன்னொரு அன்சாரி முகம்...
***
ஏழை வீடுகளில் சுற்றிவரும் உங்கள் உணவுப் பாத்திரம்...
புஜங்களுக்குள் துடிக்கும் உங்கள் போர்க்கொடி...
தவறுக்குத் திருந்தி அழும் அந்தக் கண்ணீர்த்துளிகள்...
உங்கள் இதயத்தின் பல பக்கங்களை எங்களுக்கு அறிமுகம் செய்கின்றன...
***
அல்லாஹ்வின் தூதரைப்போலவே 1400 ஆண்டுகள் கடந்து,
நாங்களும் துஆச் செய்கின்றோம்...
அல்லாஹ் உங்களுக்கு அருள்செயயட்டும்..!
(கேளுங்கள்... கேட்கச் செய்யுங்கள்!!)