ரமழான் - விஷேட
Whatsapp பாடநெறி - 2020
---------------------------
இதுவரை காணாத ஒரு சோதனைக்குள் இதயம் சுருண்டிருந்தாலும்...
உலகை அச்சுறுத்தும் ஒரு வைரஸின் வதை முகாமுக்குள் நாம் அடைபட்டுக் கிடந்தாலும்....
எதிர்வரும் புனித ரமழானை உயிரோட்டமாகக் கழிக்க ஆசைப்படும் ஓர் ஆத்மாவாகவே,
நீங்களும் இருப்பீர்கள் என நம்புகிறோம்...!
உள்ளங்களை துப்பரவு செய்து, உயிருள்ள விழுமியங்களை உள்வைக்கும் இம்மாதத்தில்,
இஸ்லாஹ் ஒன்லைன் கல்லூரி ஓர் உன்னதமான பரிசோடு இம்முறையும் உங்களைச் சந்திக்கிறது அல்ஹம்துலில்லாஹ்...
"ஆன்மீக மேம்பாடு... சில அடிப்படை புள்ளிகள்" என்னும் மகுடத்தின் கீழ்,
இதயம் சார்ந்த சிந்தனைகளை, எம்மை படைத்த இறைவனை, அவனது வழிகாட்டலை, அவனது எதிர்பார்ப்புகளை...
வீட்டிலிருந்தவாறே, கல்பு குளிரக் கற்பதற்கான ஒரு பாடநெறியை இந்த ரமழானில் எமது கல்லூரி ஏற்படுத்தித் தருகிறது.
வழமை போல் இப்பாடநெறி,
இன்ஷா அல்லாஹ், whatsapp வழியாக ரமழான் 1 முதல் தினமும் அனுப்பப்படும் 15 நிமிட வகுப்புகள் மூலம்
உங்களை வந்தடைய விருக்கிறது.
பாடநெறியில் பங்கெடுக்க விரும்பும் மாணவர்கள்,
1. https://bit.ly/2JZlOte என்ற லிங்கில் சென்று "subscribe" என்ற button ஐ அழுத்தி இணைந்துகொள்ளலாம்.
2. அல்லது +94776031838 என்ற இலக்கத்திற்கு உங்களது மொபைல் இல் இருந்து whatsapp request அனுப்புவதன் மூலம் இணைந்து கொள்ளலாம்.
3. SMS மூலம் விடுக்கப்படும் வேண்டுகோள்கள் நிராகரிக்கப்படும்.
4. விண்ணப்ப முடிவுத்திகத்தி - 20-04-2020.
வல்ல அல்லாஹ்,
அவனை நினைவுகூர இருக்கின்ற இப்பாடநெறியில் எமது உள்ளங்களை இருகப்பிணைப்பானாக.
உள்ளத்தின் கறைகளையும், கறுப்புப்பக்கங்களையும் கழுவி நிமிரும் ஒரு உயர்ந்த "தெளபா"விற்கு எம்மை தயார்படுத்துவானாக.
பிரார்தனைகளோடு,
---
Admin
islah online college.
12-04-2020