புலால் மறுத்தல் frm mugilan13

216 views
Skip to first unread message

praveen krishan

unread,
Jul 23, 2010, 2:27:13 PM7/23/10
to perur-pat...@googlegroups.com, perur...@gmail.com, chidambaramtemple, sivan...@googlegroups.com, kovilpu...@googlegroups.com, santhisr...@gmail.com

புலால் மறுத்தல்

Postby mugilan13 » Fri Feb 05, 2010 6:37 pm

திருமந்திரத்தின் முதல் தந்திரத்தில் “புலால் மறுத்தல்” பாடல் உள்ளது. 
“பொல்லாப் புலாலை நுகரும் புலையரை

எல்லாரும் காண இயமன் தன் துளைதுவர்

செல்லாகப் பற்றித் தீவாய் நரகத்தின்

மல்லாக்கத் தள்ளி மறித்துவைப்பாரே“

புலால் இறைச்சி உணவு.

இது உயிருக்குத் துன்பம் தருவது. 

உடலுக்குத் தீமை விûளவிப்பது.

எனவே இதைப் பொல்லால் புலால் என்றார்.

தீயதான இந்த இறைச்சி உணவை விரும்பி உண்ணும் கீழ் மக்கûள எமதுளைதர்கள்

பலரும் காணப்பற்றி இழுத்துக் கொண்டு

போய், அவர்கள் உடலைக் கரையான் போல அரித்துக் கொல்லப், 

பற்றி எரியும் நரக நெருப்பில் மல்லாந்து படுக்கத் தள்ளிப் புரட்டி எடுப்பார்கள்.

மேலும், “கொல்லாமை” பாடலில்

“மற்றோர் அணுக்கûளக் கொல்லாமை ஒண்மலர்....“

இறைவனின் பூசைக்கு, உகந்த பல மலர்களில் உயர்வான மலர் இன்னொரு உயிரைக் கொல்லாமையாகிய சிறந்த மலர் மாலையே ஆகும் - என்கிறார்.

மேலும், எல்லா உயிர்களிலும் ஈசன் இருக்கிறான் என்ற உண்மை உணர்ந்து, எல்லா உயிர்களிடமும் அன்பும் இரக்கமும் கொண்டு மகிழ்ந்திருப்பவர்க்கே “இறையருள்” கிட்டும்.

“கொலையே களவுகள் காமம் பொய்கூறல்

மலைவான பாதகமாம் அவை நீக்கித்

தலையாம் சிவனடி சார்ந்து இன்பம் சார்ந்தோர்க்கு
இலையாம் இவைஞானா னந்தத்து இருத்தலே.“ 


உயிர்கொலை, திருட்டு, பெண்இச்சை, பொய் பேசுதல், கள் உண்ணுதல் ஆகிய ஐந்தும் மிகப் பெரும் பாவங்கள், தீச்செயல்களளைகும். இந்தத் தீச்செயல்கûள விட்டொழித்துத் தலைவனாம் சிவபெருமான் திருவடித்துணைநாடி இன்புற்று இருப்பவர்களுக்கு வேறுவகைத் துன்பங்கள் இல்லை.

அன்பே சிவம்
"என் செயலாவது யாதென்று மில்லை"
User avatar
mugilan13
Power Contributor
 

Re: புலால் மறுத்தல்

Postby mugilan13 » Wed Feb 10, 2010 12:31 pm

தாவர உணவே மனிதருக்குத் தகுதியான உணவு!

மனிதர் உடலமைப்பு, தாவர உணவு உண்ணும் விலங்குகள் உடலமைப்பு போலவே இருக்கிறது. மாமிச உணவு விலங்கு உடல் அமைப்பு, வேறுபட்டு இருப்பதை எல்லோரும் காணமுடியும்.மனிதர் மற்றும் தாவர உணவு விலங்குகள் பற்கள், நகங்கள் தட்டையாக இருக்கின்றன. ஆனால், பூனை, நாய் முதலான மாமிச விலங்குகளின் பற்களும், நகங்களும் கூர்மையாக இருக்கின்றன.

மனிதரும், தாவர உணவு விலங்குகளும் நீரை உதடுகளால் உறிஞ்சிக் குடிக்கின்றன. ஆனால், மாமிச உணவு விலங்குகள் நாக்கால் நீரை நக்கிக் குடிக்கின்றன. மாமிச உணவு விலங்குகள் பச்சையாக மாமிசத்தை தின்கின்றன. ஆனால், மனிதர் மாமிசத்தை வேக வைத்துப் பக்குவப்படுத்தியே தின்கின்றனர். இவற்றால், மாமிசம் மனிதர் உணவு அல்ல் தாவர உணவுதான் மனிதர் உணவு என்பது தெளிவாகிறது.

தாவர உணவில் சக்தி இல்லை; மாமிச உணவில் சக்தி இருப்பதாகக் கூறுகின்றனர். ஆனால், மிகு பளு தூக்கும் யானை, விரைந்து ஓடும் குதிரை, உழைக்கும் மாடு, பால் தரும் பசு முதலான எல்லாம் தாவர உணவே கொள்கின்றன. "ஹார்ஸ் பவர்"என்று கூறுகிறோம். அந்த "ஹார்ஸ்" குதிரை தாவர உணவே தின்கிறது. பசு தின்னும் தாவரமே பாலாகிறது. அந்தப் பால் சக்தியான உணவு. அந்தப் பாலிலிருந்துதான் நெய் தயாராகிறது. முதலானவை எல்லாம் இலை, தழை, புல் முதலான உணவு உண்பனவே!

இந்த விலங்குகள் தின்னும் தாவர வகை சிலவே. அவை கிடைக்கலாம், சில காலத்தில் கிடைக்காமலும் போகலாம். ஆனால், மனிதருக்கு எத்தனை வகையான உணவு. அரிசி, கோதுமை, பட்டாணி, கடலை, முதலான தானியங்களும், அவரை, தக்காளி முதலான காய்கறிகளும், வாழை, மாம்பழம், முதலான பழங்களும் என பலவகையான உணவுப் பொருட்கள் கிடைக்கின்றன. இவற்றை சேர்த்து (ஸ்டாக்) வைக்கிறான். இவற்றை கொண்டு சக்தியான உணவைப் பெறலாம். பிறகு ஏன் மாமிசத்தின் பக்கம் போகிறான்? அதில் தாவரத்தைக் காட்டிலும் அதிக சக்தி பெறமுடியுமா?

தம் உடலையும், குழந்தைகளையும் மனிதர் எவ்வளவு சிரத்தையோடு காப்பாற்றுகின்றனர். அதே போல விலங்குகள், தம் உடலையும், குட்டிகளையும் சிரத்தையோடு காப்பாற்ற உரிமை இல்லையா?
தனக்கும், தன் குழந்தைக்கும் தீங்கு செய்வாரோடு சண்டை போடுகின்றனர் மனிதர் அதற்காக வழக்கு மன்றம் போகவும் செய்கின்றனர். ஆனால், விலங்குகள் மனிதரோடு சண்டை இட முடியுமா? வழக்கு மன்றம் போக முடியுமா?

தாய், தன் வயிற்றில் வளரும் குழந்தை பிறந்தால் எப்படி எல்லாம் வளர்க்கலாம் என்று கற்பனை செய்து மகிழ்கிறாள். அதே போல கோழி தன் முட்டையில் வளரும் குஞ்சு வெளியே வந்தால் எப்படிப் பாதுகாக்கலாம் என்று கற்பனை செய்து மகிழாதா? அந்த முட்டை வெளியே வந்து குஞ்சு வெளியே வரும் முன் அதனை எடுத்துத் தின்பது எவ்வளவு கொடுமை? முட்டை நிலையில் மூச்சு காணப்படுகிறது. என்று அமெரிக்க டாக்டர் கூறியுள்ளார். அதனால், அது மாமிசமே; தாவர உணவு அன்று. அதுமட்டுமல்லாமல் சேவலும் கோழியும் சேர்ந்து தோன்றிய அசுத்த பொருள்களால் ஆனது முட்டை அது உண்ணத்தக்கது அன்று.

தன்னை வீட்டிலிருந்தோ, பணியிலிருந்தோ விலக்கி விட்டால் மனிதன் எவ்வளவு துன்பம் அடைகின்றான்? தண்ணீரில் வாழும் மீனை தரையில் போட்டால் அது எவ்வளவு துடிதுடித்துத் துன்பம் அடைகிறது. அதனைக் கொன்று தின்னுவது கொடுமை! கொடுமை! வெளியேற்றியதால் வேதனை அடைபவனே தண்ணீரை விட்டு வெளியே போட்ட மீனின் வேதனையை அறிய முடியும்.

இப்படி இந்த ஊமை விலங்குகளுக்குக் கொடுமை செய்து துன்பம் தந்து பெற்ற மாமிசத்தை உண்டு மனிதன் நலமாக வாழ முடியுமா? மனிதருக்கு ஒன்றுமே நேராதா?எந்த குற்றமும் செய்யாத நிலையில் பிறக்கும் போதே, குருடு, நொண்டி, ஊமையாக, வறுமையில் ஏன் பிறக்கிறது குழந்தை? காரணம் சொல்ல முடியுமா? கருணையுள்ள கடவுள் இப்படி யாரையும் செய்யமாட்டார். அதனால், முன் பிறவியில் செய்த பாபங்களின் விளைவு இவை என அறிதல் வேண்டும்.

பாபங்கள் ஐந்து என்பர். அவை இம்சை, பொய், திருடு, காமம், பா¢க்ரஹம் (பற்று) இவற்றுள் பெரும் பாபம் எது? உங்களுக்குத் தெரியும். இம்சையே பெரும் பாபம்.உன்னை அடித்தவனை நீ திருப்பி அடித்தால் அது அத்தனை பாபம் அன்று ஆனால், உனக்கு எந்த தீங்கும் செய்யாத விலங்கை கொன்று மாமிசமாகக் தின்னுகிறாயே அது எத்தனை பெரும் பாபம். மகா பெரும் பாபம்.

ஆனால், எல்லா தருமங்களும், சான்றோர்களும், சாஸ்திரங்களும் தன்னை ஒன்றும் செய்யாத விலங்குகளைக் கொன்று தின்னும் பாபி கடவுளை, குருவை, சாஸ்திரங்களைத் தொடும் பாக்கியத்தை இழக்கிறான் என்று கூறுகின்றனர். நல்லோர் தொடர்புகளையும் அவன் இழக்கிறான். அதனால்தான் விரத நாட்களில் மாமிசம் உண்ணுதலை விலக்குகிறான். என்றுமே புலால் உண்ணுதலை நீக்கினால் எவ்வளவு நன்மை அடையலாம்.

மஹாவீரர், புத்தர், ஏசு, இராமன், அனுமான், அல்லா முதலானவர் காலத்தில் மாமிசம் உண்டார்களா?

ஆகையால், மாமிசம் உண்ணுதலை விட்டு அந்த மகா சான்றோர்களைப் போல நாமும் மகான் ஆன்மாவாக ஆக முயற்சிப்போமாக.
"என் செயலாவது யாதென்று மில்லை"

Re: புலால் மறுத்தல்

Postby mugilan13 » Tue Apr 27, 2010 7:00 pm

உயிர் கொல்லாமையில் இலக்கியங்களின் பங்கு
..................................................................................................

கொல்லாமை என்பது பழங்கால தமிழ் இலக்கியங்களில் அறமாக கருதப்பட்டிருக்கிறது. பழங்கால தமிழர்கள்- திராவிடர்கள் சைவ உணவுகளைத்தான் உட்கொண்டனர், இடைக்காலத்தில் அன்னியர்களின் வருகை திராவிடர்களின் உணவு பழக்கத்தையும், இறைவழிப்பாட்டையும் மாற்றியிருக்கிறது. 

பழங்கால திராவிடர்கள் பஞ்ச பூதங்களை தெய்வமாக பாவித்து வழிப்பட்டுருக்கின்றனர். அன்னியர்கள் மற்றும் ஆரியர்கள் வருகை எல்லாவற்றையும் மாற்றி உணவு பழக்கவழக்கங்களையும் மாற்றியிருக்கிறது.

தத்துவரீதியாகப் பார்க்கும்போது பெளத்தவர்கள் கொல்லாமையை வலிறுத்தினாலும், புலால் உண்ணாமையை வலியுறுத்தவில்லை.

'கல்பய மாமிசம்', அகழுதூபூ மாமிசம் என்று புலாலை ஏற்றுக் கொள்ள கூடிய, 'ஏற்றுக்கொள்ளாத இயலாத'என இரு வகைப்படுத்தினர்.

'பிறர் கொன்று தரும் புலாலை, இறந்த விலங்குகளின் புலாலை ஏற்பது தவறன்று' என்பது அவர்கள் கொள்கை. ஆனால், கொல்லாமைக் கோட்பாட்டை முழுமையாக வலியுறுத்திய நூல்கள் பெரும்பாலும் சமண இலக்கியங்களில் காணப்படுகிறது.

இந்தக் கோட்பாட்டை வாழ்க்கையில் தவறாது பின்பற்ற வேண்டும் என்று பேசிய சமய இலக்கியங்களும் தமிழில் உள்ளன. வள்ளலாரும் - வள்ளுவரும் இதனை மிகையாக வலியுறுத்தியுள்ளனர். ஆகவே, கொல்லாமைக் கோட்பாட்டை நாம் தமிழ் இலக்கியங்களில் சமய எல்லைகளைக் கடந்தும் காணமுடிகிறது.

கொல்லாமை என்பது வெறும் அறநெறி என்று கூறுவது பொருந்தாது. விலங்குகளை துன்புறுத்தாமை, ஊனப்படுத்தாமை, ஆகியவற்றைச் செய்யாமல் இருத்தலும் கொல்லாமைக்கோட்பாட்டில் அடங்கும்.

அனைத்து உயிரினங்கள்பாலும் கருணை காட்டுவதே ஜீவ காருண்ய ஒழுக்கம்.'' ஆன்ம நேய ஒருமைப்பாடு '' என்பது ஜீவ காருண்ய ஒழுக்கத்தின் முழுமை வடிவம் என்றும் கொள்ளலாம். 


''ஒன்றாக நல்லது கொல்லாமை மற்று அதன்
பின்சாரப் பொய்யாமை நன்று '' 
என்பது குறள். 

தலையாய அறம் கொல்லாமை என்று குறள் உரைக்கிறது. 

''அறவினை யாதெனின் கொல்லாமை கோறல் 

பிறவினை எல்லாம் தரும் '' என்ற குறள், கொல்லாமைக் கோட்பாடே பிறவினைகள் அணுகுவதைத் தவிர்க்கும் என்பதைத் தெளிவாக்குகிறது.

கொல்லாமை மேற்கொண்டொழுவான் வாழ்நாள் மேல்
செல்லாது உயிருண்ணுங் கூற்று

- குறள்.



கொல்லாமை, பொய்யாமை, களவாடாமை, மிகுபொருள் விரும்பாமை, பிறன் மனை விழையாமை ஆகியவை 'அணு விரதம் ' என சொல்லப்படுகிறது.

தமிழ் இலக்கியங்களில் கொல்லாமைக் கோட்பாட்டை எடுத்துக்கூறும் பல பகுதிகளைக் காணலாம். அறம் எனப்படுவது ஆரூயிர் ஓம்பல், விரதம், எனப்படுவது பிற உயிர் கொல்லாமை' என்ற பொருள் பொதிந்த பாடல்களை நாம் காணலாம்.



''பொய்யாமை நன்று பொருள்நன்று உயிர்நோவக்
கொல்லாமை நன்று கொழிக்கும்கால் ''

-சிறுபஞ்சமூலம் .39.

" கொல்லாமை நன்று கொலைதீது எழுத்தினைக்
கல்லாமை தீது கதம்தீது - நல்லார் 
மொழியாமை முன்னே முழுதும் கிளைஞர்
பழியாமை பல்லார் பதி '' 

-சிறுபஞ்சமூலம் ,51


கொன்றான் கொலை உடம்பாட்டான்
கொன்றதனைக் கொண்டான் கொழிக்குங்கால் கொன்றதனை
அட்டான் அடவுண்டான் ஐயவரினும் ஆகுமென்
சுட்டெரித்த பாவம் கருது

-சிறு பஞ்சமூலம் ,70.


கொல்லான் உடன்பாடன் கொல்வார் இனஞ்சேரான்
புல்லான் பிறர்பால் புலால்மயங்கல் - செல்லான்
குடிப்படுத்துக் கூழ் ஈந்தான் கொல்யானை ஏறி
அடிப்படுப்பான் மண்ணாண்டு அரசு.
ஏலாதி. 42

கொல்லாமல் கொன்றதைத் தின்னாமல்
- பட்டினத்தார்

கொல்லா விரதம் குவலயமெல்லாம் ஓங்க
எல்லார்க்கும் சொல்லுவது என் இச்சை பராபரமே

-தாயுமானவர்.

உயிர்கள் ஓம்புமின் ஊன்விழைந்து உண்ணன் மின்
செயிர்கள் நீங்குமின் செற்றம் இகழ்ந்து ஓரீஇக்
கதிகள் நல்லூருக் கண்டனர் கைதொழு
மதிகள் போல மறுவிலர் தோன்றுவீர்

-வளையாபதி.

கொன்றூ நுகரும் கொடுமையை உள்நினைந்து
அன்றே ஒழிய விடுவானேல் - என்றும்
இடுக்கண் எனவுண்டோ இல்வாழ்க்கைக் குள்ளே
படுத்தானாம் தன்னைத் தவம்

- அறநெறிச்சாரம் 63

புலையும் கொலையும் களவும் தவிர்.
- கொன்றை வேந்தன்

ஊன் ஊண் துறமின் ! உயிர்கொலை நீங்குமின்
- சிலப்பதிகாரம்

தன்னுயிர் தான் பரிந்து ஓம்புமாறு போல்
மன்னுயிர் வைகலும் ஓம்பி வாழுமேல்
இன்னுயிர்க்கு இறைவனாய் இன்ப மூர்த்தியாய்ப்
பொன்னுயி ராய்ப்பிறந்து உயர்ந்து போகுமே..
- சீவக சிந்தாமணி

இவ்வுலகின் எவ்வுயிரும் எம்முயிரின் நேர் என்று
அவ்வியம் அகன்று இருள் சுரந்து உயிர் வளர்க்கும்
செவ்விமையின் நின்றவர் திருந்தடி பணிந்து உண்
எவ்வினை கடந்துயிர் விளங்குவிறல் வேலோய்

- யசோதர காவியம்



யசோதர காவியத்தில் கோழியைக் கொல்வது பாவம் என்று எடுத்தோதப்படுகிறது.

யசோதரன் அல்லல்(பாவம்) தீர கோழியைப் பலியிட முனையும் போது, சிந்தனையில் இம்சை எண்ணம் இருப்பதே பாவம் என்று தாய் யசோதமதி அறிவுரை கூறுவதை பின் வரும்பாடலில் காணலாம்.

இன்னுமீது ஐய கேட்க
யசோதமதி தந்தை யாய
மன்னவன் அன்னையோடு
மாவினிற் கோழி தன்னைக்
கொன்னவில் வாளில் கொன்ற
கொடுமையிற் கடிய துன்பம்
பின்னவர் பிறவி தோறும்
பெற்றன பேச லாமோ



தன்னுடைய வழி பயணத்தில் புலால் உண்ணாமையையும் கொல்லாமையும் போதித்த சீவகனை சிந்தாமணியில் திருத்தக்க தேவர் காட்டுகிறார். மேரு மந்திர புராணம் என்ற இன்னொரு காப்பியமும் இந்தக் கொல்லாமைக் கோட்பாட்டைப் போதிக்கிறது. கொல்லாமை விரதத்தைப் பின்பற்றாவிட்டால் கொடு நரகு கிடைக்கும் என்று அச்சுறுத்துகிறது.

கொல்லாமை தவிர்த்தல் என்பது தமிழர்களிடையே தொன்று தொட்டு வந்த மரபாகும். திருவள்ளுவர் உள்ளிட்ட அனைவரும் கொலையும் , கொல்லாமையும் தவிர்க்க கோரினார்கள். அதற்கு மகுடம் வைத்தார் போல் வள்ளலார் கொலை, புலால் ஒழித்தல் கொள்கையை தீவிரமாக அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். 

உயிர் எல்லாம் பொதுவில் உளம்பட நோக்கவேண்டுமாயின் அதற்கு அடிப்படையாக அமையவேண்டியது அன்பும் , கருணையும் ஆகும். எவ்வுயிரையும் தம் உயிர்போல் பாவித்து " அன்பு செய்தல் வேண்டும். இப்படிச் செய்வோர் உள்ளத்திலேதான் இறைவன் தங்கி உறைவன்" என்று தம் கருத்துக்களை வல்லளார் வலியுறுத்தி வந்தார். தாம் கண்ட இந்த நெறிக்கு 'சமரச சுத்த சன்மார்க்கம்' என்று பெயரிட்டார்.

ஒரு பெண்ணை ஆணாக்கினாலும் , அல்லது ஒரு ஆண் மகனை பெண்ணாக்கினாலும் ஜீவகாருண்யம் இல்லாவிட்டால் அவரை ஞானி என்று கூறக்கூடாது. என்பதை பின் வரும் பாடல் மூலம் அறியலாம்.

மருவாணைப் பெண்ணாக்கி ஒருகணத்தில் கண்விழித்து வயங்கும் அப்பெண்
உருவாணை உருவாக்கி இறந்தவரை எழுப்புகின்ற உறுவ னேனும்
கருவாணை யுறஇரங்கா துயிருடம்பைக் கடிந்துண்ணுங் கருத்த னேல்எங்
குருவாணை எமதுசிவக் கொழுந்தாணை ஞானிஎனக் கூறொ ணாதே

திருவருட்பா 184


மேலும் கீழ்வரும் திருவருட்பா பாடல்கள் அனைத்தும் கொல்லாமையை வலியுறுத்துகின்றன. திருவருட்பா ( 4161 -4163)

உயிர் கொலை தவிர்த்தோர் –அக இனத்தார் மற்றவர்கள் புற இனத்தார் என்பதை இந்த பாடல் கூறுகிறது...

உயிர்கொலையும் புலைப்பொசிப்பும் உடையவர்கள் எல்லாம்
உறவினத்தார் அல்லர்அவர் புறஇனத்தார் அவர்க்குப்
பயிர்ப்புறும்ஓர் பசிதவிர்த்தல் மாத்திரமே புரிக
பரிந்துமற்றைப் பண்புரையேல் நண்புதவேல் இங்கே
நயப்புறுசன் மார்க்கம்அவர் அடையளவும் இதுதான்
நம்ஆணை என்றெனக்கு நவின்றஅருள் இறையே
மயர்ப்பறுமெய்த் தவர்போற்றப் பொதுவில்நடம் புரியும்
மாநடத்தென் அரசேஎன் மாலைஅணிந் தருளே



இறைவனே ஜீவகாருண்யம் என்னும் பசி தவிர்த்தல் புரிக, அனைவருக்கும் துன்பம் தீர உதவி புரிக என்று உரைத்ததாக உள்ள பாடல்கள். 

வன்புடையார் கொலைகண்டு புலைஉண்பார் சிறிதும்
மரபினர்அன் றாதலினால் வகுத்தஅவர் அளவில்
அன்புடைய என்மகனே பசிதவிர்த்தல் புரிக
அன்றிஅருட் செயல்ஒன்றும் செயத்துணியேல் என்றே
இன்புறஎன் தனக்கிசைத்த என்குருவே எனைத்தான்
ஈன்றதனித் தந்தையே தாயேஎன் இறையே
துன்பறுமெய்த் தவர்சூழ்ந்து போற்றதிருப் பொதுவில்
தூயநடத் தரசேஎன் சொல்லும்அணிந் தருளே

கொடியவரே கொலைபுரிந்து புலைநுகர்வார் எனினும்
குறித்திடும்ஓர் ஆபத்தில் வருந்துகின்ற போது
படியில்அதைப் பார்த்துகவேல் அவர்வருத்தம் துன்பம்
பயந்தீர்ந்து விடுகஎனப் பரிந்துரைத்த குருவே
நெடியவரே நான்முகரே நித்தியரே பிறரே
நின்மலரே என்கின்றோர் எல்லாரும் காண
அடியும்உயர் முடியும்எனக் களித்தபெரும் பொருளே
அம்பலத்தென் அரசேஎன் அலங்கல்அணிந் தருளே



இவ்வாறு பல பாடல்கள் மூலம் கொல்லாமையை வள்ளலார் வலியுறுத்தினார், ஆனால், இன்றைய நாகரீகம் என்ற போக்கு ஊனினை சுருக்கி உள்ளொளியினை வளர்க்க மறந்து, எந்த ஒரு சுப –அசுப நிகழ்ச்சிகளுக்கும் ஊனை தின்று உயிரை வளர்க்கிறது.

Reply all
Reply to author
Forward
0 new messages