மே 1 உழைப்பாளர் தினம்!
வெயிலிலும்,மழையிலும் உழைக்கும் உழைப்பாளர்களுக்கு முகநூலில் வாழ்க! வளர்க Respect Salute-ன்னு மரியாதை செய்துவிட்டு அந்த நாளை கடந்து போய் விடுவோம்.
உழைக்கும் வர்க்கத்திற்கும், பொருளாதார ரீதியில் கஷ்டப்படும் உழைப்பாளர்களுக்கும் உதவும் வகையில், படிக்கட்டுகள் அமைப்பு நண்பர்கள் கடந்த 2015-ல் தோள் கொடு தோழா முயற்சியை தொடங்கினோம்.
இந்த உழைப்பாளர் தினத்தையொட்டி மதுரையில் உள்ள உழைக்கும் கரங்களுக்கு தேவையானவற்றை கொடுத்து கௌரவிக்க உள்ளோம்.
இந்த நிகழ்வில்,
ராமமூர்த்தி மற்றும் அவர் மனைவி இருவரும் மாற்றுத்திறனாளிகள். மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் பேனா விற்று வருகின்றனர். அவரின் மனைவி மெழுகுவர்த்தி செய்யும் சுயதொழிலில் ஈடுபட்டு உள்ளார்.
இந்த வருடம் ராமமூர்த்திக்கு அவரது வியாபாரத்திற்காக நிறைய பேனாக்களும், ராமமூர்த்தியின் துணைவியாருக்கு மெழுகுவர்த்தி செய்ய பொருட்களும் வழங்க இருக்கிறோம்.
இளநீர் வியாபாரி ராஜா, கண் பார்வையற்றவர். ஆனாலும் பல வருடங்களாக மதுரை பாண்டியன் ஹோட்டல் அருகில் இளநீர்வியாபாரம் செய்து வருகிறார்.
இந்த வருடம் ராஜாவிற்கு அவரது தேவைக்காக லுங்கி, துண்டு, டவல், FM radio முதலான பொருட்களும் வழங்க இருக்கிறோம்.
மேலும் கார்த்தி மற்றும் அவரின் மனைவி இருவரும் கண் பார்வையற்றோர். அவர்கள் தற்போது ஊதுபத்தி செய்யும் தொழில் ஈடுபட்டுள்ளார். அவர்களுக்கும் தேவையான பொருட்களும் வழங்க உள்ளோம்.
MR இல்ல தேவைகளாய் கேட்டிருந்த மளிகைப் பொருட்களுடன்,
நேத்ராவதி முதியோர் இல்லத்தின் தேவையாய் கேட்டிருந்த Nighties-களும், வழங்க உள்ளோம்
இந்த நிகழ்விற்கு பொருட்களாய் கொடுக்க விருப்பம் உள்ளவர்கள் நிகழ்வில் கலந்து கொண்டும் கொடுக்கலாம் அல்லது நேரில் வர இயலாதர்வர்கள் பொருட்கள் குடுக்க விரும்பினால் தங்களின் முகவரியை தெரிவித்தால் படிக்கட்டுகள் அமைப்பு நண்பர்கள் அதனை பெற்றுச்செல்வர்.
வாய்ப்பிருப்பின் அனைவரும் கலந்து கொள்க !
நாள்: மே 1, செவ்வாய், காலை 10 மணி
இடம்: மதுரை மாநகராட்சி சிறப்பு பூங்கா, புதூர் தாமரை தொட்டி எதிரில், மதுரை.
https://goo.gl/maps/jZVTmjzTYGp
https://www.facebook.com/events/143823989803856/
9600973479 / 9677983570