படிக்கட்டுகள் அமைப்பின் 9ஆம் ஆண்டு துவக்க விழா

1 view
Skip to first unread message

Padikkattugal

unread,
Jan 13, 2021, 11:31:21 AM1/13/21
to
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் 🙏 

படிக்கட்டுகள் அமைப்பு ஆரம்பித்து 8 வருடம் நிறைவடைகிறது 😍  

2013-ல்  தொடங்கியதிலிருந்து ,
கஷ்டப்படும் மக்கள் சிலருக்காவது நம்மால முடிஞ்சதை செஞ்சு கொடுத்து
படிக்கணும்-ன்னு கனவோட இருக்கிற பல பசங்க கனவை நிறைவேத்தி,
இயற்கை இடர்பாடு,விதியால குடும்பத்தை இழந்து, வாழ வழி தெரியாம இருந்த எத்தனையோ குடும்பங்களுக்கு வாழ்வாதாரம் கொடுத்து,
நாங்க பாத்து வளர்ந்த காப்பக பசங்க ஸ்கூல் முடிச்சு, காலேஜ் படிக்க வச்சு,இப்போ அவங்களை வேலைக்கு அமர்த்துற வரை கொண்டு வந்து,
இல்லாதோர்க்கும்,இயலாதோர்க்கும் இயன்றதை கொடுத்து,
ஒவ்வொரு தீபாவளிக்கும்,ரம்ஜானுக்கும்,கிறிஸ்துமஸ்க்கும் பசங்களுக்கு புது டிரெஸ், வெடி,பரிசு,அறுசுவை சாப்பாடு-ன்னு கொடுத்து கொண்டாடி.
2015-வெள்ள நிவாரணம் தொடங்கி, கஜா புயல்,கொரானா ஊரடங்கு நிவாரணம் வரை ஆதரவற்ற மக்களுக்கு உதவி செய்து, என
நம் சேவை பயணத்தில் 8 வருடங்களை நிறைவு செய்கிறோம்.

நம் சேவைகளும், கனவுகளும் தொடர
ஒன்பதாம் ஆண்டு துவக்க விழாவை இந்த வாரம் கொண்டாடுகிறோம் 🥰

இந்த முறை
நோய் தோற்று சூழலை கருத்தில் கொண்டு
 மிக எளிமையாய்,நம் பாசத்திற்குரிய பிள்ளைகள் இருக்கும்
குழந்தைகள் காப்பகத்திலேயே  இவ்வருட துவக்க விழாவை கொண்டாட முடிவு செய்திருக்கிறோம்.

விழாவின் சிறப்பம்சமாக,

✔️ஆன்-லைன் கல்வி முறையை எதிர்கொண்டு எவ்வாறு கற்பது,
தேர்வில் வெற்றி பெறுவது எப்படி என காப்பக குழந்தைகளுக்கு அறிவுறுத்த இருக்கிறோம்.

தொடர்ந்து,

✔️கடந்த வருடங்களில் நாம் செய்தவை,வரும் நாட்களில் நம் திட்டங்கள், செயல்பாடுகள்
✔️படிக்கட்டுகள் படிக்க வைக்கும் மாணவர்களின் கல்வி விவரங்கள், கணக்கு தணிக்கைகள்
✔️குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள்,
✔️நன்கொடையாளர்கள்-ஆதரவாளர்கள்- அமைப்பு நண்பர்கள் கலந்துரையாடல்
✔️புதிய தன்னார்வலர்கள் சேர்க்கை

என நிகழ்வை நிரலாக்கி இருக்கிறோம்.

நிகழ்வில் குழந்தைகளுக்கு அறுசுவை உணவு,அவர்களுக்கு தேவையான அடிப்படை பொருட்கள் கொடுக்க இருக்கிறோம்.

படிக்கட்டுகள் அமைப்பின் வளர்ச்சிக்கும், பயணத்துக்கும் ஆதரவளித்து வரும்  உங்கள் அனைவரையும்,
இந்த விழாவுக்கு தலைமை தாங்க,முன்னின்று நடத்த வரவேற்கிறோம் 💪

அனைவரும் வாருங்கள். அன்பு செய்வோம் <3  ஆதரவற்றோரை அரவணைப்போம்

நாள் : ஜனவரி 15, வெள்ளிக்கிழமை , காலை 10 மணி முதல்⏰
இடம் : ஜோ-ஆண்ட்ரியா குழந்தைகள் காப்பகம்,கடச்சனேந்தல்,
            அழகர் கோவில் ரோடு,மதுரை 🏬

தொடர்புக்கு :
கிஷோர் : 9677983570 📞
மலைச்சாமி : 9865427756 📞

முக்கிய குறிப்பு :

குழந்தைகள் காப்பகத்தில் தான் நிகழ்வு என்பதால்,வரும் அனைவரும் முக கவசம் சகிதம் பாதுகாப்பாக வரவும். காய்ச்சல்,இருமல் இருந்தால் வருவதை தவிர்ப்பது நல்லது 😷


1.jpeg 2.jpeg

"இல்லாமையை இல்லாது ஆக்குவோம்" 
      
PADIKKATTUGAL
Reply all
Reply to author
Forward
0 new messages