ஆதரவற்றோர் நலனில் தொடர்ந்து இயங்கி வரும்,
படிக்கட்டுகள் இளைஞர் சேவை அமைப்பின் எட்டாம் ஆண்டு துவக்க விழாவின் அழைப்பிதழ் இது
2013 ஜனவரியில், முதலாமாண்டு துவக்க விழாவில் காப்பக குழந்தைகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளுடன் தொடங்கிய நம் அமைப்பின் பயணம்
இன்று 2020
-ல்
100 பட்டதாரிகளை உருவாக்கிய உழைப்பு, ஆயிரக்கணக்கான நண்பர்கள்,காப்பகங்களுக்கான ஆதரவு, விருதுகள் , செய்ய வேண்டிய கடமைகள், பொறுப்புகள் என எட்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம் ♥
நாம் கடந்து வந்த பாதை இதோ.
2013
முதலாம் ஆண்டில் குழந்தைகள் காப்பகங்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்து துவங்கி வைத்தோம்
2014
இரண்டாமாண்டில் கல்விக் கனவை தொடர முடியாத மாணவர்களை படிக்க வைக்க துவங்கினோம்
2015
மூன்றாமாண்டில் உன்னத சேவை செய்யும் ரியல் ஹீரோக்களை உலகிற்கு அறிமுகப்படுத்தினோம்
2016
நான்காம் ஆண்டில் வாழ்விழந்த குடும்பங்களுக்கு வாழ்வாதாரம் கொடுக்க துவங்கினோம்
2017
ஐந்தாம் ஆண்டில் காப்பக குழந்தைகளின் திறமையை 'ஹைக்கூ' நிகழ்வில் உலகறியச் செய்தோம்
2018
ஆறாம் ஆண்டில் தன்னம்பிக்கை மனிதர்களை- சேவை உள்ளங்களை அடையாளம் கண்டோம்
2019
ஏழாம் ஆண்டில் 100 பட்டதாரி மாணவர்களை உருவாக்கினோம்-
2020
எட்டாம் ஆண்டில்
சமூக சேவையில் சிறந்து விளங்கும்
"இளைஞர்களுக்கு விருது வழங்குகிறோம்"
&
"படிக்கட்டுகள் சார்பாக புது மாணவர்களை , உறுப்பினர்களை
அறிமுகப்படுத்துகிறோம்
&
நம் எட்டாம் ஆண்டு கனவுகளை,திட்டங்களை அறிமுகப் படுத்துகிறோம்
ஆதரவற்றோரை அரவணைக்கும் பணியில்,
காப்பக குழந்தைகளின் திறன் மேம்பாட்டில்
சமூக வளர்ச்சியில் பங்கெடுத்துக் கொள்ள உங்களையும் அழைக்கிறோம்
படிக்கட்டுகள் இயங்குதலுக்கு முதற் முக்கிய காரணம் கொடையாளர்கள் நீங்கள் தாம்.
நீங்கள் தான் எங்களின் சிறப்பு விருந்தினர்.
உங்களை ஆவலோடு எதிர்பார்க்கிறோம்.
.
இடம் :அசல் மலபார் மாளிகை,
அவனியாபுரம் பைபாஸ் சாலை, மதுரை.
நாள்: 19.
01.2020
, ஞாயிறு
நேரம்: காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை
தொடர்புக்கு : 9677983570
அனைவரும் வருக. அன்பு செய்க 💛
இது நம் விழா! நம்மால் பயன்பெற்றவர்களும், பயன்பெற இருக்கிறவர்களும் கூடும் ஒரு பெருவிழா ❤ விழாவிற்கு உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் ❤
"இல்லாமையை இல்லாது ஆக்குவோம்"
PADIKKATTUGAL