TRB - TTET
|
|
TNPSC GROUP - IV பொது அறிவு வினாக்கள் Posted: 19 Jun 2012 04:31 PM PDT ![]() தமிழகம்: குரூப் 4 தேர்வு மட்டுமல்லாது, டி.என்.பி.எஸ்.சி. போட்டித்தேர்வுகள் அனைத்திலும் தமிழகம் சார்ந்த கேள்விகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அந்த வகையில் தமிழகம் பற்றிய முக்கியத் தகவல்களை இங்கு தொகுத்துள்ளோம். தமிழ்நாட்டின் எல்லைகள் திசை எல்லை வடக்கு ஆந்திரப்பிரதேசம் மற்றும் கர்நாடகம் தெற்கு இந்தியப் பெருங்கடல் கிழக்கு வங்காளவிரிகுடா மேற்கு கேரளா தமிழ்நாட்டின் காலநிலை தென்மேற்குப் பருவக்காற்றின் மூலம் ஜூன் முதல் செப்டம்பர் வரை மழை பெறும். இதன் மூலம் தெற்கு தமிழகம் பயன் பெறும். வடகிழக்குப் பருவக்காற்றின் மூலம் அக்டோபர் முதல் டிசம்பர் வரை மழை பெறும். இதன் மூலம் பரவலாக தமிழகம் முழுவதும் பயன் பெறும். மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ளமலைகள்: 1. நீலகிரி மலை 2. பழனி மலை 3. குற்றால மலை 4. அகஸ்தியர் மலை 5. மகேந்திரகிரி மலை 6. ஏலக்காய் மலை 7. வருஷநாடு மலை 8. சிவகிரி மலை கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ளமலைகள்: 1. ஜவ்வாது மலை 2. ஏலகிரி மலை 3. செஞ்சி மலை 4. கல்வராயன் மலை 5. பச்சை மலை 6. கொல்லி மலை 7. சேர்வராயன் மலை 8. செயின்ட் தாமஸ் குன்றுகள் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ள சிகரங்கள்: 1. ஆனை முடி - 2695 மீ 2. தொட்டபெட்டா - 2637 மீ கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ள சிகரங்கள்: மகேந்திரகிரி - 1501 மீ மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ள கணவாய்கள்: 1. பாலக்காட்டுக் கணவாய் 2. தால்காட் கணவாய் 3. போர்காட் கணவாய் 4. செங்கோட்டைக் கணவாய் 5. ஆரல்வாய் கணவாய் தமிழ்நாட்டில் உள்ள மலைகள்: சேர்வராயன் மலை, கொல்லி மலை, தீர்த்த மலை, ஜவ்வாது மலை, கல்வராயன் மலை, பச்சை மலை, பழனி மலை, நீலகிரி மலை. கொங்கு மண்டலம்: காவிரிக்கும், பாலக்காட்டுக்கும் இடையில் உள்ளது (ஈரோடு, கோயம்புத்தூர், சேலம், நீலகிரி, நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி) | |||||||||||
|
Posted: 19 Jun 2012 04:31 PM PDT ![]() 1.உலகத்தின் விலக்கப்பட்ட நகரம் எது - லாசா - தீபெத் 2.மருத்துவ வெந்நீர் ஊற்றுகள் நிறைந்த நாடு எது - செக்கோஸ்லாவாகியா 3.ஐரோப்பிய பொருளாதார நாடுகள் எப்போது உருவானது - 25/03/1957 4.உலகத்தின் நீர் நிலப்பரப்பு எவ்வளவு - 14,44,85,740 ச.கி.மீ 5.பெண்டகன் என்றால் என்ன - அமெரிக்காவின் ராணுவம், விமானம் மற்றும் கப்பல் படையின்ஒருங்கினைந்த தலைமையகம் 6.இந்தியாவில் விமானப் பராமரிப்பு என்ஜினியராக பணியாற்றிய முதல் பெண்மணி யார் - புவன்ஸ்ரீ கெளதம் 7.மிக நீளமான ஒடுபாதை இந்தியாவில் எந்த விமான நிலையத்தில் உள்ளது - மும்பை விமான நிலையம் 8.போலீஸ் என்ற சொல் ஆங்கில அகராதியில் எப்போது இடம் பெற்றது - 1714-ம் ஆண்டு 9.உலகிலேயே மிக உயரத்திலிருந்து விழும் நீர்விழ்ச்சி எது - வெனிசுலா நீர்விழ்ச்சி 10.ஆக்ஸிசன் இல்லாத பொருள் எது - மண்ணெண்ணை 11.அறிவியல் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது - பிப்ரவரி 28. 12.நாய்களே இல்லாத ஊர் எது - சிங்கப்பூர். 13.மனிதர்களைக் கண்டு பயப்படும் வியாதிக்குப் பெயர் என்ன - ஆன்ட்ரோ போபியா. 14.எந்தத் தட்பவெப்பத்திலும் உறையாத தனிமம் எது - ஹீலியம். 15.உலகிலேயே அதிக தித்திப்பான பொருள் எது - தாலின், இது கெடெம்பே என்ற செடியில் இருந்து கிடைக்கிறது. 16.வைரத்தில் மொத்தம் எத்தனை மூலைகள் உள்ளன - ஆறு மூலைகள். 17.சிரிக்கவும், உம்மென்றிருக்கவும் எத்தனை தசைகள் அவசியமாகின்றன - சிரிக்க – 17 தசைகள், உம் – 43 தசைகள் 18.மனிதனை அடையாளம் காண கைரேகை பயன்படுகிறது. அதுபோல மாட்டை அடையாளம் காண பயன்படுவது எது - மூக்கு ரேகை. 19.கண்கள் இருந்தும் பார்வையில்லாத பிராணி - வவ்வால் (வௌவால்) 20.ருத்ராட்சம் எத்தனை வகைப்படும் - 38 வகைகள். 21.சுழ்நிலை என்ற சொல்லை உருவாக்கிய விலங்கியல் வல்லுநர் யார் - ரேய்ட்டர். 22. சுழ்நிலை என்ற சொல்லை யாரால் வரையறுக்கப்பட்டது - ஹேக்கல். 23.கங்காரூ அதிகம் உள்ள நாடு - ஆஸ்திரேலியா. 24.கண்கள் திறந்த நிலையிலேயே தூங்கும் மிருகம் எது - முதலை. 25.ரப்பர் தாவரத்தின் தாவரவியல் பெயர் என்ன - ஹீவியா ப்ரசிலியன்சிஸ். 26.மஞ்சள் காமாலை நோயினை குணப்படுத்தும் மூலிகை தாவரம் எது - கிழாநெல்லி. 27.வனவிலங்கு தடுப்புச்சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு எது - கி பி 1890. 28.உலக சுற்றுச்சுழல் தினம் என்று கொண்டாடப்படுகிறது - ஜூன் 5. 29.இதய நோயாளிகள் பயன்படுத்த வேண்டிய எண்ணெய் - சூரியகாந்தி எண்ணெய். 30.தாவரங்களில் ஒளிச்சேர்க்கையின் போது எந்த காற்று வெளியேற்றப்படுகிறது - ஆக்ஸிஜன். 31.சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர்கள் சிலையை செய்தவர் யார் - டி பி ராய். 32.உதகமண்டலத்தை கண்டறிந்து மேம்படுத்தியவர் யார் - ஜான் சுல்லிவன். 33.பெண் கமாண்டோ படையை உருவாக்கிய முதல் மாநிலம் எது - தமிழ்நாடு. 34.தென்னிந்தியாவின் நுழைவுவாயில் எது - சென்னை. | |||||||||||
|
இடைநிலை ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தடை நீங்கியது! Posted: 19 Jun 2012 12:33 AM PDT இடைநிலை ஆசிரியர்கள் பணிநியமனத்துக்காக நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை இன்று நீக்கியுள்ளது. பட்டதாரி ஆசிரியர்களைப் போல இடைநிலை ஆசிரியர்களுக்கும் தகுதித் தேர்வு நடத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து 2 பட்டதாரி ஆசிரியர்கள் மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த மனுவில், இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் தகுதித் தேர்வு நடத்தி அதன் மூலமாக பணி நியமனம் செய்ய வேண்டும் என்று 7.3.2012 அன்று தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. ஆனால், இது 15.12.2011 தேதியன்று இடைநிலை ஆசிரியர்களை மாநில பதிவு மூப்பு அடிப்படையில் நியமிக்கலாம் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிரானதாகும். எனவே, இடைநிலை ஆசிரியர்களை மாநில பதிவு மூப்பு அடிப்படையில் நியமிக்க வேண்டும் என்றும், இடைநிலை ஆசிரியரர்களுக்கான தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தனர். மனுவை விசாரித்த நீதிமன்றம், இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வுக்கு இடைக்காலத் தடை விதித்து, இது குறித்து தமிழக அரசை பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இந்த நிலையில், மதுரை கிளை நீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று தனது பதில் மனுவை தாக்கல் செய்ததோடு, இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வுக்கு இடைக்காலத் தடை விதித்திருப்பதால், தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 7,903 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே இடைக்காலத் தடையை நீக்க வேண்டும் என்ற வாதத்தை முன் வைத்தது. தமிழக அரசின் வாதத்தை ஏற்றுக் கொண்ட மதுரைக் கிளை நீதிமன்ற நீதிபதி கே. வெங்கட்ராமன், வழக்குத் தொடர்ந்துள்ள 2 பட்டதாரிகளுக்கான பணியிடங்களை மட்டும் காலியாக வைத்துவிட்டு, இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வை நடத்தி ஆசிரியர்களை பணி நியமனம் செய்யும் வகையில், இடைக்காலத் தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது. | |||||||||||
|
TNPSC GROUP - IV பொது அறிவு வினாக்கள் Posted: 19 Jun 2012 12:14 AM PDT சிந்துசமவெளி நாகரிகம் ராஜாவிற்கு நிர்வாகத்தில் உதவி செய்தவர்கள் - புரோகிதர், சேனானி (படைத்தலைவர்) ராஜாவிற்கு உதவி செய்த அமைப்புகள் - சபா, சமிதி சபா - முதியோர் அவை சமிதி - ஊர்மக்களின் பிரதிநிதிகளைக் கொண்ட அவை ரிக் வேத கால மக்கள் தெரிந்து வைத்திருந்த தொழில்- கால்நடை வளர்ப்பு மற்றும் வேளாண்மை, தச்சு வேலை, நூல் நூற்றல், பருத்தி, கம்பளி ஆடைகள் உற்பத்தி. வணிகத்தில் நிஷ்கா என்ற தங்க அலகுகள் பயன்படுத்தப்பட்டன. பிற்பட்ட வேதகாலம் பிற்பட்ட வேதகாலம் (கி.மு. 1000 - கி.மு.600) - ரிக் வேத காலத்திற்குப் பின்னர், சாம, யஜுர், அதர்வண வேதங்களின் காலமே பிற்பட்ட வேதகாலம் முற்பட்ட மற்றும் வேதகால மக்கள் காபூலிலிருந்து மேல் கங்கைவரை பரவி இருந்தனர். பிற்பட்ட வேதகாலத்தில்தான், கங்கைச் சமவெளியில் கோசலம், விதேகம், குரு, மகதம், காசி, அவந்தி, பாஞ்சாலம் போன்ற அரசுகள் தோன்றின. அரசப் பதவி பரம்பரைப் பதவியானது. வேள்விகள் இந்தக் காலத்தில்தான் அதிகரித்தது. ராஜசூயம், அஸ்வமேதம் போன்ற யாகங்கள் மன்னரின் பேராதிக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் செய்யப்பட்டன. ஒருவரிடம் இருந்த கால்நடைகளின் எண்ணிக்கையைப் பொருத்து, அவரது செல்வ நிலை மதிப்பிடப்பட்டது. நிஷ்கா, சுவர்ணா, சதமானா போன்ற தங்க, வெள்ளி நாணயங்கள் புழக்கத்தில் இருந்தன. சாதி அமைப்புமுறை தோன்றி வலுப்பட்டது. கார்கி, மைத்ரேயி போன்ற பெண்கள் கல்வியில் சிறந்து விளங்கினர். திராவிடர்கள்: இருண்ட நிறமும், நடுத்தரமான உயரமும் கருமையான தலைமுடியும் உடையவர்கள். முதன்மைத் தொழில்; பயிர்த்தொழில், வணிகம் பருத்தி ஆடை உடுத்தினர். முக்கிய விலங்கு எருது சுட்ட செங்கற்களால் வீடுகளைக் கட்டினர். வழிபாடு: கோயில் வழிபாடு, சிலை, லிங்கம், சூலம், சக்தி, நாகம் செம்பு உலோகத்தை பயன்படுத்தினர். இரும்பை அறிந்திருக்கவில்லை. புலியை அறிந்திருந்தனர்; ஆனால், குதிரை பற்றி தெரியாது. ஆரியர்கள்: வெள்ளை நிறமும், உயரமான உருவமும், செம்பட்டையுமான முடியும் உடையவர்கள். முதன்மைத் தொழில் ; கால்நடை வளர்ப்பும், போர் புரிதலும் கம்பளி, பருத்தி மற்றும் விலங்குகளின் தோலை உடுத்தினர். முக்கிய விலங்கு பசு. களிமண் மற்றும், மூங்கில்கள் கொண்ட வீடுகளை அமைத்தனர். வழிபாடு; யாகம் செய்தல், சிலைகளும், கோயில்களும் இல்லை; இந்திரன் அக்னி, வருணன். இரும்பை அறிந்திருந்தனர். புலி அறியார்; குதிரைகளைப் பயன்படுத்தினர். சமணமும், பௌத்தமும்: கி.மு. 6ஆம் நூற்றாண்டில்தான் இந்தியாவில் பௌத்தமும், சமணமும் தோன்றின. சமண மதத்தை உருவாக்கியவர் வர்த்தமான மகாவீரர். பௌத்த மத கருத்துக்களை வழங்கியவர் கௌதமபுத்தர். சமண மதத்தினரால் 24 தீர்த்தங்கரர்கள் வழிபடப் படுகின்றனர். முதல் தீர்த்தங்கரர் ஆதிநாதர் எனப்படும் ரிஷபதேவர் ஆவார். 24வது தீர்த்தங்கரர் வர்த்தமான மகாவீரர் வர்த்தமான மகாவீரர்: இவரின் காலம் கி.மு. 534 - கி.மு. 462 இன்றைய பீகார் மாநிலத்தில் வைசாலி நகருக்கு அருகிலுள்ள குந்தக்கிராமம் என்னும் ஊரில் பிறந்தார். இவரது தந்தையார் பெயர் சித்தார்த்தர்; தாயின் பெயர் திரிசலை. மனைவி பெயர் யசோதா; அனோஜா பிரியதர்சனா என்ற மகளும் இருந்தனர். இல்வாழ்க்கையை துறந்தது 30ஆம் வயதில். தியானத்தில் ஆழ்ந்த வருடங்கள் மொத்தம் 12. வெற்றியாளர் என்பதைக் குறிக்கும் ஜீனர் என்ற சொல்லால் அழைக்கப்பட்டார். மக்கள் அவரை ‘மகாவீரர்’ என்று அழைத்தனர். வர்த்தமானர் போதித்த மும்மணிகள் ; நல்லறிவு, நன்னம்பிக்கை, நன்னடத்தை. சமண சமயத்தைப் பின்பற்றி அரசர்கள்; சந்திரகுப்த மௌரியர், கலிங்கத்துக் காரவேலன், கூன் பாண்டியன், முதலாம் மகேந்திரவர்ம பல்லவர். சமணர்களின் தமிழ் இலக்கிய, இலக்கணப் படைப்புகள் ; சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, வளையாபதி, சூளாமணி முதலிய காப்பியங்கள் மற்றும் யாப்பருங்கலக்காரிகை, யாப்பருங்கலவிருத்தி, நேமிநாதம், நன்னூல், அகப்பொருள் விளக்கம், இலக்கண விளக்கம் போன்ற இலக்கண நூல்களையும், நிகண்டுகளையும், நாலடியார், நான்மணிக்கடிகை, பழமொழி, திணைமாலை நூற்றைம்பது முதலிய அற நூல்களையும் இயற்றியவர்கள் சமணர்கள். சமணக் கட்டடக் கலை: ராஜஸ்தான் -மவுண்ட் அபு, தில்வாரா கோயில். கஜுராஹோ, சித்தூர், ரனக்பூர் - சமணர் கோயில். சமணர்களின் புனித நூல்கள் - அங்கங்கள், பூர்வங்கள். பௌத்த மதம்: தோற்றுவித்தவர் - சித்தார்த்தர் எனும் கௌதமபுத்தர். வாழ்ந்த காலம் - கி.மு.563 - கி.மு.483. நேபாள நாட்டில் உள்ள கபிலவஸ்து எனும் ஊரில் பிறந்தார். இவரது தந்தை சாக்கியக் குலம். தந்தை சுத்தோதனர், தாய் மாயாதேவி. யசோதரையை மணந்தபோது சித்தார்த்தருக்கு வயது 16. மகன் பெயர் ராகுலன். புத்தர் என்ற சொல்லின் பொருள் நல்லது எது,கெட்டது எது என்பதை அறிந்து கொண்டவர் என்பது ஆகும். புத்தர் தனது முதல் போதனையை உத்தரப் பிரதேசத்தில் உள்ள வாரணாசியின் அருகே சாரநாத்தில் உள்ள மான் பூங்காவில் தொடங்கினார். புத்த மதம் ஹீனயானம், மஹாயானம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. ஹீனயானம் - புத்தரின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டவர்கள். உருவ வழிபாடு செய்யாதவர்கள். மஹாயானம் - புத்தரைத் தெய்வமாக ஏற்றுக்கொண்டவர்கள். உருவ வழிபாடு செய்பவர்கள். பௌத்த மதத்தைப் பின்பற்றிய அரசர்களில் முக்கியமானவர் - அசோகர், கனிஸ்கர், ஹர்ஷர். பௌத்த சமயக் கொள்கைகளைக் கூறும் மறைநூலுக்குத் திரிபிடகம் என்று பெயர். இது வினயபிடகம், சுத்த பிடகம், அபிதம்மபிடகம் என்ற மூன்று உட் பிரிவுகளைக் கொண்டது. மணிமேகலையும், குண்டலகேசியும் பௌத்த நூல்கள். பௌத்த சமய வரலாற்றை பெரிதும் விளக்கும் நூல் - ஜாதகக் கதைகள். காந்தாரக் கலை சிற்பங்களும் புத்த சமயத்தைச் சார்ந்தவையே. பௌத்த சமயத் துறவிகளின் பிரார்த்தனைக் கூடங்கள் சைத்தியங்கள் என்றும், மடாலயங்கள் விகாரங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. திரிபிடகம் முதன்முதலில் நூல் வடிவில் எழுதப்பட்டது வட்டக் காமினி அபயன் என்னும் அரசன் காலத்தில். திரிபிடகம் என்பதற்கு மூன்று கூடை என்பது பொருள். மகாஜனபதங்கள்: புத்தர் காலத்தில் வட இந்தியாவில் பதினாறு மகாஜனபதங்கள் மேலோங்கி இருந்தன. 16 மகாஜனபதங்கள்: 1. அங்கம் 2. மகதம் 3. கோசலம் 4. காசி 5. வஜ்ஜி 6. மல்லம் 7. கேதி 8. வத்சம் 9. குரு 10. பாஞ்சாலம் 11. மத்ஸ்யம் 12. சூரசேனம் 13.அஸ்மகம் 14. அவந்தி 15. காந்தாரம் 16. காம்போஜம். பிம்பிசாரர்: அரியங்க வம்சத்தைச் சேர்ந்தவர். பிம்பிசாரரின் மகன்தான் அஜாதசத்ரு. தந்தையையே சிறையில் அடைத்து ஆட்சியைக் கைப்பற்றினார். பாடலிபுத்திரத்தில் பெரிய கோட்டையை அமைத்தவரும் இவரே. அரியங்க வம்சத்தை வீழ்த்தியவர் - சிசுநாகர். சிசுநாகர் - நந்தவம்சத்தைச் சேர்ந்தவர். மகதத்தின் ஆட்சியை வட இந்தியா வரை பரப்பியவர் சிசுநாகர்தான். முதல் நந்தமன்னர் மகாபத்மநந்தன் விந்திய மலைகளைக் கடந்து தக்காணப் பகுதிகளைக் கைப்பற்றினார். சிந்து நதி முதல் தக்காணம் வரை பரந்துவிரிந்த முதல் இந்தியப் பேரரசை உருவாக்கியவர் மகாபத்மநந்தன். நந்தவம்சத்துப் பேரரசர்கள் சமண சமயத்தைப் போற்றினார்கள். மௌரியப் பேரரசு: நந்தமன்னரான தனநந்தனுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்து, போரில் வென்று மகதப் பேரரசை மௌரிய வம்சத்தைச் சேர்ந்த சந்திரகுப்தர் கைப்பற்றி ஆண்டார். கிரேக்க மன்னர் செலூகஸ் நிகேடார் என்ற கிரேக்க மன்னரைத் தோற்கடித்து, ஆப்கானிஸ்தானம், காந்தாரம் போன்ற பகுதிகளை சேர்த்த பெருமையும் சந்திரகுப்தரையே சாரும். சந்திரகுப்தரது காலத்தில்தான் செலூகஸின் தூதுவரான மெகஸ்தனிஸ் என்ற கிரேக்க அறிஞர் பாடலிபுத்திரத்தில் பல ஆண்டுகள் தங்கி இந்தியாவைப்பற்றி இண்டிகா எனும் நூலை எழுதினார். சந்திரகுப்த மௌரியருக்குப்பின் அவரது அரியணையில் இருந்து ஆட்சியை 25 ஆண்டுகள் மேற்கொண்டது அவரது மகன் பிம்பிசாரர். பிம்பிசாரரின் மகன்களில் ஒருவர்தான் அசோகர். பிம்பிசாரருக்குப் பிறகு மௌரியப் பேரரசை ஆண்டவர் அசோகர். மௌரியப் பேரரசில் இருந்து பிரிந்துசென்ற கலிங்கத்தை மீண்டும் சேர்க்க கடுமையான போரை மேற்கொண்டார். அந்தப் போரில் வெற்றிபெற்று கலிங்கத்தை மௌரியப் பேரரசுடன் இணைத்தார். ஆனால், அந்தப்போரில் ஏற்பட்ட உயிர்ச் சேதத்தைப் பார்த்துவிட்டு, இனி போரிடுவதில்லை என்னும் உறுதி எடுத்தார். படையெடுத்துப் போர் செய்து வெற்றி பெறுவது திக் விஜயம் என்று அழைக்கப்பட்டது. மக்களிடம் தர்மத்தை வளர்க்க மேற்கொண்ட பயணம் தர்ம விஜயம் என்றும் அழைக்கப்பட்டது. மக்களுக்கு உதவுவதற்காக அசோகர் நியமித்த பணியாளர்கள் தர்மமகாமாத்திரர்கள் என அழைக்கப்பட்டனர். இந்தியாவில் முதன் முதலில் மக்கள் நல அரசை உருவாக்கிய சிறப்பு அசோகரையே சாரும். பௌத்த மதத்தைப் பின்பற்றினார். கபிலவஸ்து, சாரநாத், புத்தகயா போன்ற இடங்களில் பௌத்த நினைவிடங்களை விரிவுபடுத்தினார். அசோகர் காலத்து கல்வெட்டுகள் பெரும்பாலும் பிராகிருத மொழியில் எழுதப்பட்டவை. அசோகர் ஆட்சியில் எல்லைப் பகுதியில் பாதுகாப்பை மேற்கொண்டவர்கள் ‘அந்தமகாமாத்திரர்’ என்று அழைக்கப்பட்டனர். | |||||||||||
|
+2 முடித்தவுடன் நேரடியாக பிஎட் படிக்கலாம்! Posted: 19 Jun 2012 12:07 AM PDT பிளஸ் டூ படித்த மாணவர்கள் நேரடியாக நான்கு ஆண்டு கல்வியியல் இளநிலைப் பட்டப் படிப்பையும் ஆறு ஆண்டுகள் ஒருங்கிணைந்த முதுநிலை கல்வியியல் பட்டப் படிப்பையும் படிக்கும் வாய்ப்பை வழங்குகிறது மைசூரில் உள்ள மண்டல கல்வியியல் இன்ஸ்டிட்யூட். இந்தப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது. தரமான கல்வியியல் படிப்புகளை வழங்கும் நோக்கத்துடன் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் தேசியக் கல்வி மற்றும் ஆராய்ச்சி கவுன்சிலின் ஒரு பகுதியாகத் தொடங்கப்பட்டதுதான் ரீஜினல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் எஜுக்கேஷன் எனப்படும் மண்டல கல்வியியல் இன்ஸ்டிட்யூட். ஆஜ்மீர், போபால், புவனேஸ்வரம், மைசூர் ஆகிய இடங்களில் இந்த மண்டல மையங்கள் உள்ளன. மைசூரில் உள்ள மண்டல மையத்தில் உள்ள கல்வியியல் பட்டப் படிப்புகளில் சேருவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இங்கு பிஎஸ்சிஎட் என்ற ஒருங்கிணைந்த நான்கு ஆண்டு பட்டப் படிப்பு உள்ளது. பிளஸ் டூ வகுப்பில் இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளையோ இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடப்பிரிவுகளையோ, தாவரவியல், உயிரியல், வேதியியல் பாடப்பிரிவுகளையோ எடுத்துப் படித்த மாணவர்கள் இந்தப் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம். இந்தப் படிப்பில் சேர விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் பிளஸ் டூ தேர்வுகளில் 45 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். பிஏஎட் என்ற நான்கு ஆண்டு ஒருங்கிணைந்த நான்கு ஆண்டு பட்டப் படிப்பில் பிளஸ் டூ படித்த மாணவர்கள் சேரலாம். பிளஸ் டூ வகுப்பில் ஆங்கிலம், பிராந்திய மொழிப் பாடங்களை எடுத்துப் படித்திருக்க வேண்டும். அத்துடன், வரலாறு, புவியியல், பொருளாதாரம், அரசியல் விஞ்ஞானம், சமூகவியல் ஆகிய பாடப்பிரிவுகளில் ஏதேனும் இரண்டு பாடங்களை எடுத்துப் படித்திருக்க வேண்டும். பிளஸ் டூ தேர்வுகளில் குறைந்தது 45 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியம். இதுதவிர, இந்தக் கல்வி நிலையத்தில் எம்எஸ்சிஎட் (இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளில்) என்ற ஆறு ஆண்டு ஒருங்கிணைந்த முதுநிலை கல்வியியல் படிப்பும் உள்ளது. பிளஸ் டூ வகுப்பில் இயற்பியல், கணிதம், வேதியியல் பாடப் பிரிவுகளை எடுத்துப் படித்து குறைந்தது 50 சதவீத மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் இந்த ஒருங்கிணைந்த முதுநிலைப் பட்டப் படிப்புகளில் சேரலாம். இந்த மூன்று படிப்புகளிலும் சேர விரும்பும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்கு மதிப்பெண்களில் 5 சதவீதமதிப்பெண் சலுகை அளிக்கப்படுகிறது. இந்தப் படிப்புகளைப் படித்து முடிக்கும் மாணவர்களுக்கு மைசூர் பல்கலைக்கழகம் பட்டங்களை வழங்கும். எம்எஸ்சிஎட் படிப்புக்கு அகில இந்திய அளவில் மாணவர் சேர்க்கை இருக்கும். பிஎஸ்சிஎட், பிஏஎட் படிப்புகளுக்கு தென் மாநிலங்கள் மட்டும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் மட்டும் சேர்க்கப்படுவார்கள். இந்த மூன்று படிப்புகளிலும் சேர விரும்பும் மாணவர்கள், பிளஸ் டூ தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நுழைவுத் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் சேர்க்கப்படுவார்கள். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், ஓபிசி பிரிவினர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு மத்திய அரசின் விதிமுறைகளின்படி இடஒதுக்கீடு உண்டு. அனைத்துத் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்கும், 50 சதவீதபிற மாணவர்களுக்கும் மாதம் ரூ.800 முதல் ரூ.1200 வரையும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டில் பத்து மாதங்களுக்கு மாதம் ரூ.250 வீதம் படிப்புக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்கு படிப்புக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் தனித்தனியே விடுதி வசதி உள்ளது. இந்தப் படிப்புகள் அனைத்தும் ஆங்கில மீடியத்தில் மட்டுமே நடத்தப்படும். இந்தப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் 'Principal, Regional Institute of Education, Mysore' என்ற பெயருக்கு மைசூரில் மாற்றத்தக்க வகையில் ரூ.500க்கான டிமாண்ட் டிராப்ட் (தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு ரூ.350க்கான டிமாண்ட் டிராப்ட்) எடுக்க வேண்டும். 26 செமீ து 12 செமீ நீளமுள்ள உறையில் ரூ.10 மதிப்புள்ள தபால் தலையை ஒட்டி சுயவிலாசத்தை எழுதி, டிராப்ட்டை இணைத்து தபால் மூலம் அனுப்பி விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம். இந்தக் கல்வி நிலையத்தில் நேரடியாகவும் விண்ணப்பங்களைப் பெறலாம். ஒவ்வொரு பிரிவிற்கும் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 'Section Officer (academic), Regional Institute of education, Mysore - 570006' என்ற முகவரிக்கு ஜூலை 2ம் தேதிக்குள் கிடைக்கும்படி அனுப்பி வைக்க வேண்டும். இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளில் எம்எஸ்சிஎட் படிக்க விரும்பும் மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வு ஜூலை 15-ம் தேதி நடைபெறுகிறது. பிஎஸ்சிஎட் மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வு ஜூலை 16-ம் தேதி நடைபெறுகிறது. பிஏஎட், எம்எட் மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வு ஜூலை 18-ம் தேதி நடைபெறுகிறது. மைசூர், ஆஜ்மீர், போபால், புவனேஸ்வரம், ஷில்லாங், புதுதில்லி ஆகிய இடங்களில் எம்எஸ்சிஎட் நுழைவுத் தேர்வு நடைபெறும். பிஎஸ்சிஎட், பிஏஎட், எம்எட் நுழைவுத் தேர்வுகள் மைசூரிலுள்ள ரீஜினல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் எஜுக்கேஷன் கல்வி நிலையத்தில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தரமான கல்வியியல் படிப்புகளைப் படிப்பதற்கான முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனம் மைசூரில் உள்ள ரீஜினல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் எஜுக்கேஷன். இந்தக் கல்வி நிலையத்தில் சேர்ந்து படிக்க விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது. விவரங்களுக்கு: www.riemysore.ac.in மேலும் சில படிப்புகள் இந்தக் கல்வி நிலையத்தில் எம்எட் ஓராண்டு படிப்பில் சேர பிஎட், பிஎஸ்சிஎட், பிஏஎட் அல்லது அதற்கு இணையான பட்டப் படிப்புகளைப் படித்திருக்க வேண்டும். பட்டப் படிப்புகளில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்கு மதிப்பெண்களில் 5 சதவீதம் சலுகை உண்டு. முதுநிலைப் பட்டத்துடன் பிஎட் படித்த மாணவர்களும் இந்தப் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம். இந்தப் படிப்பில் தென்மாநில மற்றும் யூனியன் பிரதேச மாணவர்கள் மட்டுமே சேர்க்கப்படுவர். பட்டப் படிப்பில் பெற்ற மதிப்பெண்கள், நுழைவுத் தேர்வு அடிப்படையில் இந்தப் படிப்புக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்தப் படிப்பில் சேர தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை கிடைக்கவும் வாய்ப்பு உண்டு. கைடன்ஸ் அண்ட் கவுன்சலிங் என்ற ஓராண்டு டிப்ளமோ படிப்பும் இங்கு உள்ளது. இந்தப் படிப்பு, தொலைநிலைக் கல்வி மூலம் வழங்கப்படுகிறது. இந்தத் தொலைநிலைப் படிப்புக்கு வரும் செப்டம்பர், அக்டோபரில் அட்மிஷன் நடைபெறும். | |||||||||||
|
மாதிரி ஆசிரிய தகுதி தேர்வு எழுத வேண்டுமா? Posted: 18 Jun 2012 11:32 PM PDT ![]() வணக்கம் நண்பர்களே! இந்த பதிவானது ஆசிரிய தகுதி தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பயனுள்ள பதிவாக இருக்கும் வகையில் உங்கள் வீட்டிலேயே இருந்து கொண்டு ஆசிரிய தகுதி தேர்வின் மாதிரி தேர்வை எழுதலாம். முதழில் தாள் இரண்டுக்கான மாதிரி தேர்வை எழுத முடியும். தேர்வுக்கான மாதிரி OMR படிவம். மாதிரி வினா தாள் மற்றும் அதற்குறிய விடைகளும் தரப்பட்டுள்ளது. கீழ்கண்ட லிங்க்குகளுக்கு சென்று பதிவிறக்கி கொள்ளவும். மாதிரி OMR படிவம் மாதிரி வினா தாள் வினாவிக்கான விடைகள் தேர்வுக்கு முந்தைய மாதிரி தேர்வை முதன்மை தேர்வாக நினைத்து எழுதினால் முதன்மை தேர்வு மாதிரி தேர்வை விட எளிதாக இருக்கும், வாழ்த்துக்கள். டிஸ்கி: தேர்வு காலம் 3 மணி நேரம் அல்ல. 1 1/2 மணி நேரம் என்பதை மனதில் கொண்டு விரைவாக செயல் பட வேண்டும் | |||||||||||
|
TNPSC - பொது அறிவு வினா விடைகள் Posted: 18 Jun 2012 06:22 PM PDT ![]() 1. ஒரு தடவை கூட லோக்சபாவிற்கு செல்லாத இந்திய பிரதமர் யார் - திரு. சரண்சிங். 2. உலக சுற்றுச்சூழல் தினம் எப்போது கடைபிடிக்கப்படுகிறது - ஜூன் 5. 3. மனித உடலில் வியர்க்காத பகுதி எது - உதடு. 4. ஒரு ஹெக்டார் என்பது எவ்வளவு ஏக்கர் - கிட்டத்தட்ட 2.5 ஏக்கர். 5. வேர்க்கடலையின் அறிவியல் பெயர் என்ன - அராக்கிஸ் ஹைபோஜியா. 6. பஞ்ச தந்திர கதைகளை எழுதியவர் யார் - விஷ்ணு சர்மா. 7. வருடத்தின் ஒரே நாளில் 24 மணிநேரத்தில் பகலும், இரவும் சரியாக 12 மணிநேரம் மட்டும் வருவது எந்த நாளில் - மார்ச்சு 21. 8. மனித தலையில் உள்ள மொத்த எலும்புகள் எத்தனை - 22 . 9. ஈக்களின் சுவை உணர் உறுப்பு எது - நாக்கு. 10. தமிழில் வெளிவந்த முதல் வரலாற்று நூல் எது - மோகனாங்கி. 11. பாலில் உள்ளதை விட அதிக கால்சியம் உள்ள காய்கறி எது - வெங்காயம். 12. கவிஞர் கண்ணதாசன் பாடல் எழுதிய கடைசி படம் எது - மூன்றாம் பிறை. 13. தமிழில் முதல் நாவல் எழுதியவர் யார் - தமிழில் முதல் நாவலை எழுதியவர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை. அவர் 1879ல் எழுதிய 'பிரதாப முதலியார் சரித்திரம்'தான் தமிழில் முதல் உரைநடை வடிவ நாவல். 14. நமது இந்திய நேரம் எந்த இடத்தினை அடிப்படையாய் வைத்து கணிக்கப்படுகிறது - அலகாபாத். | |||||||||||
|
TNPSC - தமிழ் இலக்கணம் வினா விடைகள் Posted: 18 Jun 2012 08:49 AM PDT ![]() தமிழ் மொழி, இயற்றமிழ், இசைத்தமிழ் மற்றும் நாடகத் தமிழ் எனமூன்று பிரிவுகளை உடையது. இவையே முத்தமிழ் எனஅழைக்கப்படக் காரணமாக விளங்குகிறது. நம் முன்னோர்முத்தமிழின் பிரிவுகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியேஇலக்கணம் அமைத்தனர். அகத்தியம் முத்தமிழுக்கும் உரியஇலக்கண நூல் என்பர். இருப்பினும்,
பொதுவாக தமிழ்இலக்கணம் என்பது இயற்றமிழ் இலக்கணத்தைக்குறிப்பதாயிற்று. செய்யுள் மற்றும் உரைநடை ஆகியவற்றின்தொகுதி இயற்றமிழாகும். தொல்காப்பியம் இயற்றமிழில்கிடைத்துள்ள மிகப்பழைய இலக்கண நூலாகும். பைந்தமிழ்இலக்கணம் ஐந்து வகை. அவை,1. எழுத்து
2. சொல்
3. பொருள்
4. யாப்பு
5. அணி
அறிஞர்கள் தமிழ் இலக்கணத்தை மூன்று இலக்கணம் என்றும்ஆறு இலக்கணம் என்றும் ஏழு இலக்கணம் என்றும்வகைப்படுத்துவர்.
எழுத்து
முதலெழுத்து
"எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப" -தொல்காப்பியம்
உயிரும் உடம்புமாம் முப்பது முதலே - நன்னூல்
அ முதல் ஔ வரையுள்ள 12 உயிரெழுத்துகளும், 'க்' முதல் 'ன்'வரையுள்ள 18 மெய்யெழுத்துகளும் ஆகிய முப்பதும்முதலெழுத்துகள் எனப்படும்
உயிரெழுத்துக்கள் குறில், நெடில் என இருண்டு வகைப்படும்.மெய்யெழுத்துக்கள் வல்லினம், மெல்லினம், இடையினம் என்றுமூன்று வகைப்படும்.
சார்பெழுத்துகள்
உயிர்மெய் ஆய்தம் உயிரள பொற்றள
ப ஃகிய இஉ ஐஔ மஃகான்
தனிநிலை பத்தும் சார்பெழுத் தாகும்
-நன்னூல்
1. உயிர்மெய் எழுத்து
2. ஆய்த எழுத்து
3. உயிரளபெடை
4. ஒற்றளபெடை
5. குற்றியலுகரம்
6. குற்றியலிகரம்
7. ஐகாரக் குறுக்கம்
8. ஔகாரக் குறுக்கம்
9. மகரக்குறுக்கம்
10. ஆய்தக்குறுக்கம்
எனச் சார்பெழுத்து பத்து வகைப்படும். முதலெழுத்துகளைச்சார்ந்து வருவதாலும், முதலெழுத்து திரிபு, விகாரத்தால்பிறந்ததாலும் இவை சார்பெழுத்துகள் என அழைக்கப்படுகின்ற்ன
இவ்வாறு, உயிர் எழுத்துகள் 12 , மெய் எழுத்துகள் 18 , உயிர்மெய்எழுத்துகள் (இவைகள் உயிர் மெய் இரண்டும் சார்ந்து வரல்ஆதலின் சார்பெழுத்து எனப்படும் 216) மற்றும் ஆய்தம் ஆகிய 247எழுத்துகளே, தமிழ் எழுத்துகள் எனப்படும்.
எழுத்து குறித்த இலக்கணச் செய்தி
எழுத்தெண்ணிச் சீரும் அடியும் வரையறுக்கும் நிலையைத்தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.
வஞ்சியுரிச்சீர், குறளடி, சிந்தடி, நேரடி, நெடிலடி, கழி நெடிலடிபோன்றவை எழுத்தடிப்படையில் எழுத்தெண்ணி சீர்களும்அடிகளுமாகும்.
வஞ்சியுரிச்சீர்
நேர் இறுதி ஐந்து எழுத்து நிரை இறுதி ஆறு எழுத்து சிறுமை மூன்றுஎழுத்து பெருமை ஆறு எழுத்து
4 முதல் 6 எழுத்து வரை - குறளடி
7 முதல் 9 எழுத்து வரை - சிந்தடி
10 முதல் 14 எழுத்து வரை - நேரடி
15 முதல் 17 எழுத்து வரை - நெடிலடி
18 முதல் 20 எழுத்து வரை - கழி நெடிலடி
மெய்யெழுத்து உயிரில் எழுத்து என்று குறிக்கப் பெறுகிறது.
ஓரடிக்கு 4 முதல் 20 எழுத்து வரை ஆசிரியப்பா வருமென்றும், 7முதல் 16 எழுத்து வரை வெண்பா வருமென்றும், 13 முதல் 20எழுத்து வரை கலிப்பா வருமென்றும் தொல்காப்பியர் குறிக்கிறார்.
சொல்
ஓர் எழுத்து தனித்து நின்றோ பல எழுத்துகள் தொடர்ந்து நின்றோபொருள் தருவது சொல் எனப்படும்.
எ.கா: வீடு, கண், போ, சொல்லின் வகைகள்
1. பெயர்ச்சொல்
2. வினைச்சொல்
3. இடைச்சொல்
4. உரிச்சொல்
பொருள்
பொருள் இரண்டு வகைப்படும். அவை,
1. அகப்பொருள்
2. புறப்பொருள்
நம் இலக்கியஙளுக்குப் பாடுபொருள்களாக அமைவனஅகப்பொருள்களும் புறப்பொருள்களும்.ஒத்த அன்புடையதலைவனும் தலைவியும் ஒருவரையொருவர் காதலித்து நடத்தும்வாழ்க்கை நிகழ்ச்சிகளை விளக்கிக் கூறுவது அகப்பொருள்.அறம்,பொருள், வீடு ஆகிய (இன்பம் ஒழிந்த) மூன்று பேறுகளைபற்றியும், கல்வி, வீரம், கொடை, புகழ் முதலியன பற்றியும்கூறுவது புறப்பொருள்.
யாப்பு
யாப்பு என்பதற்குப் புலவர்களால் செய்யப்பெறும் செய்யுள் என்பதுபொருள். செய்யுள் இயற்றுதற்குரிய இலக்கணம்யாப்பிலக்கணமாகும்.
யாப்பின் உறுப்புகள்
1. எழுத்து
2. அசை
3. சீர்
4. தளை
5. அடி
6. தொடை
உயிர் எழுத்துக்களும், உயிர்மெய்யெழுத்துக்களும் தத்தம் ஒலிஅளவுகளைப் பொருத்து குறில் அல்லது நெடில் எனவழங்கப்படுகின்றன. குற்றெழுத்து மற்றும் நெட்டெழுத்துக்களின்அடுக்குகளை அசைகளாக வகுத்துள்ளனர். நேரசை மற்றும்நிரையசை ஈரசைகளாவன. குறிலோ நெடிலோ தனித்தோஒற்றடுத்தோ வருதல் நேரசையாகும். இருகுறிலிணைந்துவருதலும், குறில் நெடிலிணைந்து வருதலும், இவை இரண்டும்ஒற்றடுத்து வருதலும் நிரையசையாகும். ஒலிப்பியல்அடிப்படையில் அசைகளே கவிதைகளின் அடிப்படைக்கூறுகளாவன. அசைகளின் கூட்டு சீர் எனப்படும். சீர்கள்ஒன்றன்பின் ஒன்றாக வருதலால் தளைகள் உண்டாகும்.
யாப்பின் அடிப்படையில் பா வகைகள்
1. வெண்பா
2. ஆசிரியப்பா
3. கலிப்பா
4. வஞ்சிப்பா
அணி
அணி என்பதற்கு அழகு என்பது பொருள். செய்யுளில் அமைந்துகிடக்கும் சொல்லழகு, பொருளழகு முதலியவற்றைவரையறுத்துக் கூறுவது அணி இலக்கணமாகும். அணிபலவகைப்படும். அவற்றுள் சில,
1. தன்மையணி
2. உவமையணி
3. உருவக அணி
4. பின்வருநிலையணி
5. தற்குறிப்பேற்ற அணி
6. வஞ்சப் புகழ்ச்சியணி
7. வேற்றுமை அணி
8. இல்பொருள் உவமையணி
9. எடுத்துக்காட்டு உவமையணி
10. இரட்டுறமொழிதலணி
| |||||||||||
|
Posted: 18 Jun 2012 06:32 AM PDT 1.பிறப்பு விகிதமே இல்லாத நாடு - வாடிகன் சிட்டி 2.உஅகில் பெரிய பங்குச்சந்தை - நியூயார்க் 3.வருடம் தொடும் பூமியுல் புதைந்து வரும் நாடு -நெதர்லாந்து 4.டாக்ஸி அதிகம் உள்ள நாடு - மெக்ஸிகோ 5.கண்ணாடி தொழிலுக்கு பெயர் பெற்ற நாடு - பெல்ஜியம் 6.படகு வடிவில் அமைத்து உள்ள நாடு - இத்தாலி 7.கடல் மட்டத்துக்கு கீழே உள்ள நாடு - டென்மார்க் 8.வருடம் தோறும் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் நாடு - சுவிட்சர்லாந்து 9.உலகில் மிக பழமையான பாராளுமன்றம் உள்ள நாடு - ஐஸ்லாந்து 10.நீரிலும் , நிலத்திலும் அனைத்திலும் செல்லும் வாகனம் - ஹோவர் கிராக்ப்ட் 11.தினசரி பத்திரிக்கை இல்லாத , படிக்க தெரியாத மக்கள் உள்ள நாடு - காம்பியா 12.உலகில் தட்டையான , சமதளமான நாடு - மாலைதீவு 13.உலக மக்கள் அமைதியாக வாழ்வதற்கு உகந்த நாடு - நோர்வே 14.உலகில் அதிக மக்களால் தயாரித்து சாப்பிடப்படும் உணவு - நூடில்ஸ் 15.கிறிஸ்மஸ் வாழ்த்து அட்டையை அறிமுகம் செய்த நாடு - நோர்வே 16.ஒரு நாட்டின் பரப்பளவுக்குள் அமைந்து இருக்கும் இன்னுமொரு நாடு - லெசதோ ( ஆபிரிக்கா ) 17.ஒரே நாடக இருக்கும் கண்டம் - அவுஸ்ரேலியா 18.பழமை வாய்ந்த செய்தி நிறுவனம் - ரொயிட்டர் 19.தனக்கு என்று தாய் மொழி இல்லாத நாடு - சுவிட்சர்லாந்து 20.பத்திரிகை வெளிவராத நாடு - திபெத் 21.ஒரு போதும் மலராத பூ - அத்திப்பூ 22.வேர் இல்லாத தாவரம் - இலுப்பை 23.உலகில் வறுமையான நாடு - ருவாண்டா 24.விவாகரத்து செய்யமுடியாத நாடு - அயர்லாந்து 25.ஜப்பான் தீவுகளின் எண்ணிக்கை - 4 26.ஆட்சி மாற்றம் இல்லாத நாடு - மெச்சிக்கோ 27.அந்தமான் தீவுகளின் எண்ணிக்கை - 204 28.உலகில் மிக அதிகமாக மின்னலால் பாதிக்கப்படும் நாடு - பனாமா | |||||||||||
|
இன்று வரை பாரத ரத்னா விருது வாங்கியவர்கள் Posted: 17 Jun 2012 10:15 AM PDT ![]() 1. பண்டிட் பீம்சென் ஜோஷி (2008) 2. குமாரி லதா மங்கேஷ்கர் (2001) 3. உஸ்தாத் பிஸ்மில்லா கான் (2001) 4. பேராசிரியர் அமர்த்தியா சென் (1999) 5. லோக்பிரியா கோபிநாத் (1999) 6. லோக்நாயக் ஜெயபிரகாஸ் நாராயண் (1999) 7. பண்டிட் ரவி ஷங்கர் (1999) 8. ஸ்ரீ சிதம்பரம் சுப்ரமணியம் (1998) 9. திருமதி. மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி (1998) 10. ஸ்ரீ (டாக்டர்) அவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் (1997) 11. திருமதி. அருணா ஆசப் அலி (1997) 12. ஸ்ரீ குஜாரி லால் நந்தா (1997) 13. ஸ்ரீ ஜஹான்கீர் ரத்தன்ஜி தாதாபாய் டாடா (1992) 14. ஸ்ரீ மவுலானா அப்துல் கலாம் ஆசாத் (1992) 15. ஸ்ரீ சத்யஜித் ரே (1992) 16. ஸ்ரீ மொரார்ஜி தேசாய் (1991) 17. திரு ராஜீவ் காந்தி (1991) 18. சர்தார் வல்லபாய் படேல் (1991) 19. டாக்டர் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கார் (1990) 20. டாக்டர் நெல்சன் மண்டேலா (1990) 21. ஸ்ரீ மருதூர் கோபாலன் ராமச்சந்திரன் (1988) 22. கான் அப்துல் காஃபர் கான் (1987) 23. ஸ்ரீ ஆச்சார்யா வினோபா பாவே (1983) 24. அன்னை தெரேசா (ஆக்னஸ் போஜாஜியூ) (1980) 25. ஸ்ரீ குமாரசாமி காமராஜர் (1976) 26. ஸ்ரீ வராககிரி வெங்கட கிரி (1975) 27. திருமதி. இந்திரா காந்தி (1971) 28. ஸ்ரீ லால் பகதூர் சாஸ்திரி (1966) 29. டாக்டர் பாண்டுரங் வாமன் கேன் (1963) 30. டாக்டர் ஜாகீர் ஹுசைன் (1963) 31. டாக்டர் ராஜேந்திர பிரசாத் (1962) 32. டாக்டர் பிதான் சந்த்ரா ராய் (1961) 33. ஸ்ரீ புருஷோத்தம் தாஸ் தாண்டன் (1961) 34. டாக்டர் தோண்டே கேஷவ் கர்வ் (1958) 35. Pt. கோவிந்த் வல்லப பாண்ட் (1957) 36. டாக்டர் பகவான் தாஸ் (1955) 37. ஸ்ரீ ஜவகர்லால் நேரு (1955) 38. டாக்டர் மோக் விவேஸ்வரய்யா (1955) 39. ஸ்ரீ சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி (1954) 40. டாக்டர் சந்திரசேகர வெங்கட ராமன் (1954) 41. டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் (1954) | |||||||||||
|
அமைதிக்கான நோபல் பரிசை பெற்ற ஆங் சாங் சூகி! Posted: 16 Jun 2012 11:40 PM PDT ![]() மியான்மரில் ஜனநாயகத்துக்குப் போராட்டம் நடத்தி வரும் ஆங் சாங் சூகி 21 ஆண்டுகளுக்குப் பிறகு நோபல் பரிசை ஏற்றுக் கொண்டு உரையாற்றினார். மியான்மரில் ஜனநாயகத்துக்காகப் போராடியதால் 15 ஆண்டுகளுக்கு மேலாக விட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தார் ஆங் சாங் சூகி. அவருக்கு 1991-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. ஆனால் ஆங் சாங் சூகியால் நேரில் சென்று நோபல் பரிசை பெற்றுக் கொள்ள முடியவில்லை. அவரது மகன்கள் கிம் மற்றும் அலெக்சாண்டர் ஆகியோர்தான் நோபலைப் பெற்றனர். கடந்த 2010-ம் ஆண்டு விடுதலை செய்யப்பட்ட சூ கி, அண்மையில் நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு அபார வெற்றி பெற்றார். அதன் பின்னர் தாய்லாந்து பயணம் மேற்கொண்டிருந்தார். தற்போது ஐரோப்பிய நாடுகளில் பயணம் மேற்கொண்டுள்ள அவர் நார்வே சென்றார். நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், சூகி நோபல் பரிசைப் பெற்றுக் கொண்டு உரை ஆற்றினார். | |||||||||||
|
TNPSC - கணிணி அறிவியல் வினா விடைகள் Posted: 16 Jun 2012 12:19 AM PDT 1. ஒரு இணைய ஆண்டுக்கு 55 நாட்கள் 2. கணினியின் மூளை என்றழைக்கப்படுவது? நுண்செயலி 3. CD மற்றும் DVD களின் விட்டம் 120 மி.மீ 4. CD டிரைவில் X என்பது 150 தகவல் பறிமாற்ற வேகத்தை குறிக்கிறது 5. கணினியில் உள்ள SMPS மாறுதிசை(AC) மின்னோட்டத்தை நேர்திசை(DC) மின்னோட்டமாக மாற்றுகிறது 6. CD-ல் தகவல்கள் மேடு பள்ளமாக சுருள் வடிவில் சேமிக்கப்படுகிறது 7. CD டிரைவில் தகவல்கள் லேசர் கதிரை பயன்படுத்தி படிக்கப்படுகிறது 8. உலகின் முதல் டிஜிட்டல் கணினியின் நீளம் 51 அடி அகலம் 8 அடி. 9. ஸ்டேடிக் ராம் நினைவகங்கள் பிஃளிப்-ப்ளாப்(Flip flop) கொண்டு வடிவமைக்கப்படுகிறது. 10. டைனமிக் ராம் நினைவகங்கள் கெப்பாசிட்டர் கொண்டு வடிவமைக்கப்படுகிறது. 11. உலகின் முதல் நுண்னியக்கியான் 4004 –ல் உள்ளிணைக்கப்பட்ட டிரான்சிஸ்டர்களின் எண்ணிக்கை சுமார் 2300 12. முதல் தலைமுறை கணினிகள் வால்வுகள் கொண்டு வடிவமைக்கப்பட்டன. 13.USB -2 –ன் தகவல் பறிமாற்ற வேகம் வினாடிக்கு 460 மெகா பைட் ஆகும். 14. லேசர் ப்ரிண்டரில் தகவல்களை அச்சடிக்க டோனர்(toner) என்னும் உலாகப்பொடி பயன்படுத்தப்படுகிறது | |||||||||||
|
TNPSC - சமுக அறிவியல் வினா விடைகள் Posted: 15 Jun 2012 10:23 PM PDT ![]() • உள்ளாட்சி அமைப்பு முறையை இந்தியாவில் அறிமுகப்படுத்திய ஆங்கிலேய ஆட்சியாளர் - ரிப்பன் பிரபு. • ஊராட்சி மன்றத்தின் மூலம் நிறைவேற்றப்படும் பணிகள்: தெருவிளக்குகள் அமைத்தல், ஊர்ச்சாலைகள் அமைத்தல், கிணறு தோண்டுதல், கழிவு நீர்க்கால்வாய் அமைத்தல், சிறிய பாலங்கள் கட்டுதல், வீட்டுமனைப் பிரிவுகளுக்கு அனுமதி வழங்குதல், கிராம நூலகங்களைப் பராமரித்தல், தொகுப்பு வீடுகள் கட்டுதல், இளைஞர்களுக்கான பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு மைதானங்களை நிறுவுதல், பராமரித்தல் ஆகியன. • ஊராட்சி ஒன்றியத்தில் எத்தனை மக்களுக்கு ஒரு பிரதிநிதி நியமிக்கப்படுகிறார் - ஐந்தாயிரம் மக்கள் தொகை. • ஊர் மன்றக் கூட்டங்கள் ஆண்டுக்கு நான்கு முறை கூடுகின்றன. • ஊர் மன்றக் கூட்டங்கள் நடைபெறும் பொதுவான நாட்கள்: ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2. • ஊராட்சி ஒன்றியங்கள் செய்யும் பணிகள்: ஊராட்சி ஒன்றியச் சாலைகளைப் பராமரித்தல், குடிநீர் வழங்குதல், ஊரக மருத்துவமனைகளை ஏற்படுத்துதல், தொடக்கப் பள்ளிக் கட்டடங்களைப் பழுதுபார்த்தல், தாய் - சேய் நல விடுதிகளை நடத்துதல், பொதுச் சந்தைகளை ஏற்படுத்துதல், கால்நடை மருந்தகங்களை ஏற்படுத்துதல், வேளாண்மைக் கருவிகள், உரங்கள் போன்றவற்றை வழங்கல், சமூகக் காடுகளை வளர்த்தல். • மாவட்ட ஊராட்சியின் கடமைகள்: மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்களின் வளர்ச்சித் திட்டங்கள், மாவட்டச் சாலைகளின் மேம்பாடு குறித்து அரசுக்கு ஆலோசனை வழங்குதல், வளர்ச்சித் திட்டங்களைக் கண்காணித்தல். • பத்தாயிரம் மக்கள் தொகைக்கு மேலுள்ள ஊராட்சிகள் - பேரூராட்சிகள் எனப்படும். • ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகையுள்ள பேரூர்கள் நகராட்சி எனப்படும். • பல லட்சம் மக்கள் தொகையும், பல்வேறு அலுவலகங்களும் அமைந்துள்ள பகுதி - மாநகராட்சிகள். டாக்டர் முத்துலட்சுமிரெட்டி • சென்னை மருத்துவக் கல்லூரியில் 1912ஆம் ஆண்டில் மருத்துவராகப் பட்டம் பெற்ற முதல் தென்னிந்தியப் பெண்மணி. • ஆங்கிலேய அரசில் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியர் இடம்பெற்ற சென்னைச் சட்டமன்றத்தில் நியமிக்கப்பெற்ற முதல் பெண்மணி. சட்டமன்றத்தின் முதல் பெண் துணைத் தலைவரும் இவரே. • தேவதாசி முறை ஒழிப்புச் சட்டத்தை சட்டமன்றத்தில் கொண்டு வந்தார். • 1930ஆம் ஆண்டு அடையாற்றில் ஔவை இல்லம் தொடங்கினார். • பெண்களுக்கு எட்டாம் வகுப்பு வரை இலவசக் கல்வி வழங்க வழி செய்தார். • 1956ஆம் ஆண்டு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது. | |||||||||||
|
TRB PG 2012 தேர்வு கணிதம் @ விலங்கியல் வினா விடைகள் Posted: 15 Jun 2012 07:58 AM PDT ![]() ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட முதுகலை ஆசிரியர்களுக்கான போட்டித்தேர்விற்கான (2012) உத்தேசமான பதில்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பொதுஅறிவு மற்றும் கல்வியியல் வினாக்களுக்கான விடையும் உள்ளது. மீண்டும் அறிவுறுத்துகிறோம்... இது அத்தனையும் உத்தேச பதில்கள் மட்டுமே. ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட பதில்கள் அல்ல. இதற்கான இணைப்பு பெற கீழ்க்கண்ட இணைப்பினை கிளிக் செய்யவும். | |||||||||||
|
ஆசிரிய தகுதி தேர்வுக்கான மாதிரி OMR படிவம் Posted: 14 Jun 2012 11:23 PM PDT | |||||||||||
|
Posted: 14 Jun 2012 02:24 AM PDT அறிவியல் • மருத்துவக் குணம் நிறைந்த தாவரங்கள் - மூலிகைகள் • தூதுவளை - சளித்தொல்லை, கோழை அகற்றும், மார்புச்சளி நீக்கும், உடல் பலம் தரும் • கீழாநெல்லி - மஞ்சள் காமாலை நோயைத் தீர்க்கும். • வேம்பு - கிருமி நாசினி, குளிர்ச்சி தரும். வயிற்றுப் பூச்சியை நீக்கும். • நெல்லி - வாய்ப் புண்ணைக் குணப்படுத்தும், குளிர்ச்சி தரும். • துளசி - சளி, கோழை அகற்றும், காய்ச்சல் நீக்கும். • ஓமவல்லி - வியர்வை பெருக்கும், கோழை அகற்றும், காய்ச்சல் நீக்கும். • வசம்பு - வயிறு தொடர்பான நோய்களை தீர்க்கும். • மஞ்சள் - கிருமி நாசினி, அழகுபடுத்துதல் • பிரண்டை - பசியைத் தூண்டும், செரிமானமின்மையை நீக்கும். • இஞ்சி - செரிமானக் கோளாறுகளைத் தீர்க்கும். • மிளகு - தொண்டைக் கரகரப்பை நீக்கும். • இந்தியாவின் நறுமணப் பொருள்களின் தோட்டம் என்று அழைக்கப்படுவது - கேரளம். • நாம் அணியும் ஆடை - பருத்தியில் இருந்து தயாரிக்கப்படுகிறது • கயிறு - தேங்காய் நாரிலிருந்து பெறப்படுகிறது. • சணல் - ஹேம்ப் என்ற தாவரத்திலிருந்து கிடைக்கிறது. • ஹேம்ப் தாவரம் - இதில் 85 சதவீதம் செல்லுலோஸ் உள்ளதால், இவை உயிரி பிளாஸ்டிக் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகின்றன.உயிரி பிளாஸ்டிக் மண்ணில் மட்கும் தன்மை கொண்டது. • தாவரத்தண்டின் கருநிறமான மையப்பகுதி - வன்கட்டை • தாவரத்தண்டின் மென்மையான வெளிப்பகுதி - மென்கட்டை • வன்கட்டையின் பயன் - பிசின், அரக்கு, ரெஸின், எண்ணெய் முதலியன பெறப்படுகின்றன. ஊட்டச்சத்துக்களின் வகைகள்: • கார்போஹைட்ரேட்டுகள் - ஆற்றல் அளிக்கின்றன • புரதங்கள் (புரோட்டீன்ஸ்) - வளர்ச்சி அளிக்கின்றன • கொழுப்புகள் - ஆற்றல் அளிக்கின்றன. • வைட்டமின்கள் - உடலியல் செயல்களை ஒழுங்குபடுத்துகின்றன • தாது உப்புகள் - உடலியக்கச் செயல்களை ஒழுங்குபடுத்துகின்றன. • நீர் - உணவைக் கடத்துகிறது; உடல் வெப்பத்தை ஒழுங்குபடுத்துகிறது. • காய்கறிகள், பழங்கள், உணவுப் பொருள்களில் இருக்கும் நீரின் அளவு: • வெள்ளரிக்காய் - 95 %, உருளைக்கிழங்கு - 75% • காளான் - 92%, ஒரு துண்டு ரொட்டி - 25% • முட்டை - 73%, பால் - 87% • தர்பூசணி - 99% ஊட்டச்சத்துக் குறைபாட்டு நோய்களும், அறிகுறிகளும்: • உணவுப் பொருட்கள் - மீன், இறைச்சி, முட்டை (வெள்ளைக் கரு), பால், பட்டாணி, தானியங்கள். குறைபாட்டு நோய்: குவாஷியோர்கர் (1 -5 வயதுக் குழந்தைகள்)- அறிகுறிகள் : வளர்ச்சி தடைபடுதல், உப்பிய வயிறு. கை மற்றும் கால்களில் வீக்கம். • ஊட்டச்சத்து: புரதம் - உணவுப் பொருட்கள் : மீன் இறைச்சி, முட்டை (வெள்ளைக் கரு), பால், பட்டாணி, தானியங்கள். குறைபாட்டு நோய் : மராஸ்மஸ் - அறிகுறிகள் : குச்சி போன்ற கை, கால்கள். மெலிந்த தோற்றம், பெரிய தலை, எடைக் குறைவு, உடல் மற்றும் மூளை வளர்ச்சி குறைதல். • வைட்டமின் ஏ - உணவுப்பொருள்கள்: மீன் எண்ணெய், முட்டை, பால், நெய், வெண்ணெய், கேரட், மக்காச்சோளம், மஞ்சள் நிற பழங்கள், கீரைகள். குறைபாட்டு நோய்: மாலைக்கண் நோய் - அறிகுறிகள் : பார்வைக் குறைபாடு, மங்கிய வெளிச்சத்தில் பார்க்க முடியாமை. • வைட்டமின் பி - உணவுப் பொருட்கள் : முழு தானியங்கள், பருப்பு, தீட்டப்படாத அரிசி, பால், மீன், இறைச்சி, பட்டாணி, பயறு வகைகள், பச்சை காய்கறிகள். குறைபாட்டு நோய்: பெரி - பெரி - அறிகுறிகள் : ஆரோக்கியமற்ற நரம்பு, தசைச் சோர்வு • வைட்டமின் சி - உணவுப் பொருள்கள் : ஆரஞ்சு, எலுமிச்சை, நெல்லிக்காய், பச்சைமிளகாய், தக்காளி. குறைபாட்டு நோய்: ஸ்கர்வி - அறிகுறிகள் - பல் ஈறுகளில் ரத்தம் வடிதல் • வைட்டமின் டி - உணவுப் பொருள்கள் : மீன் எண்ணெய், பால், முட்டை மற்றும் சூரிய ஒளியின் உதவியுடன் தோலில் தயாரிக்கப்படுகிறது. குறைபாட்டு நோய்: ரிக்கட்ஸ் - அறிகுறிகள் - வலிமையற்ற, வளைந்த எலும்பு. • வைட்டமின் இ - உணவுப் பொருள்கள் : தாவர எண்ணெய், பச்சைக் காய்கறிகள், முழு கோதுமை, மாம்பழம், ஆப்பிள், கீரை. குறைபாட்டு நோய் : மலட்டுத் தன்மை- அறிகுறிகள் : குழந்தையின்மை, நோய் எதிர்ப்பு தன்மை குறைதல். • வைட்டமின் கே - உணவுப் பொருள்கள் : பச்சைக் காய்கறிகள், தக்காளி, முட்டைக்கோஸ், முட்டை, பால் பொருள்கள். நோய்: ரத்தம் உறையாமை - நோய் அறிகுறிகள் : சிறிய காயம் ஏற்படும்போது அதிக ரத்தப்போக்கு ஏற்படுதல் • கால்சியம் - உணவுப்பொருள்கள்: பால், மீன், பச்சைப் பயறு, கோதுமை. நோய்: எலும்பு மற்றும் பல் சிதைவு - அறிகுறிகள்: எலும்பு, பற்களின் வலிமை குறைதல். • இரும்பு - உணவுப் பொருள்கள் : இறைச்சி, ஆப்பிள், கீரை, பேரீச்சம் பழம். நோய் : ரத்த சோகை - நோய் அறிகுறிகள்: மயக்கம் வருதல், உடல் சோர்வு. • அயோடின் - உணவுப் பொருள்கள் : பால், அயோடின் கலந்த உப்பு, இறால், நண்டு. நோய்: முன் கழுத்துக் கழலை - அறிகுறிகள் : கழுத்துப் பகுதியில் வீக்கம். • தற்சார்பு ஊட்ட முறை -- தனக்குத் தேவையான உணவை தானே தயாரித்துக் கொள்ளுதல் தற்சார்பு ஊட்ட முறை. எடுத்துக்காட்டு - பசுந்தாவரங்கள், யூக்ளினா. • பிறசார்பு ஊட்ட முறை - பிற உயிரினங்களை பாதிப்பிற்குள்ளாக்கி அவற்றிலிருந்து தமக்குத் தேவையான உணவைப் பெறுவது ஒட்டுண்ணி உணவூட்டம் - கஸ்க்யூட்டா. • சாறுண்ணி உணவூட்டம் - இறந்துபோன தாவர, விலங்குப் பொருள்களை மட்கச் செய்து, எளிய மூலக்கூறுகளாக மாற்றி, அவற்றை உடல் சுவர் வழியாக உறிஞ்சுவது சாறுண்ணி உணவூட்டம் - எடுத்துக்காட்டு: காளான். • சிறப்பு வகை உணவூட்டத்திற்கு எடுத்துக்காட்டு - நெப்பந்தஸ், டிரோசீரா, யுட்ரிகுலேரியா. • புற ஒட்டுண்ணிகளுக்கு எடுத்துக்காட்டு - பேன், அட்டைப்பூச்சி. • அக ஒட்டுண்ணிகளுக்கு எடுத்துக்காட்டு - உருளைப்புழு. • அளவீட்டு முறைகள் - FPS (Foot, Pound, Second), CGS Method (Centimetre, Gram, Second), MKS method (Metre, Kilogram, Second) • 1 மீட்டர் - 1000 மில்லி மீட்டர் ; 1 மீட்டர் - 100 சென்டிமீட்டர்: 1 கிலோ மீட்டர் - 1000 மீட்டர். • ஒரு வினாடி என்பது 1000 மில்லி வினாடி அல்லது 1000000 மைக்ரோ வினாடி | |||||||||||
|
மொழிப் பாடங்களை தேர்வு செய்ய வாய்ப்பு தந்த ஆசிரியர் தேர்வு வாரியம் Posted: 12 Jun 2012 06:52 AM PDT தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு (டிஇடி) வரும் ஜுலை மாதம் 12ம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது மொழிப் பாடத்தைத் தேர்வு செய்யாதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது. அதன்படி, தேர்வு அறைக்குச் சென்று அங்கு மொழிப் பாடத்தை தேர்வு செய்யலாம். அது குறித்து தேர்வு அறை கண்காணிப்பாளரிடம் தகவல் அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஜுலை 12ம் தேதி காலையில் இடைநிலை ஆசிரியர்களுக்கான முதல்தாள் தேர்வும், பிற்பகலில் பட்டதாரி அசியார்களுக்கான 2ம் தாள் தேர்வும் நடைபெற உள்ளது. டிஇடி தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளவர்களுக்கு ஜுன் 18ம் தேதி முதல் ஹால் டிக்கெட் அனுப்பி வைக்கப்பட உள்ளது. | |||||||||||
|
Posted: 12 Jun 2012 06:37 AM PDT ![]() 1 x 8 + 1 = 9
12 x 8 + 2 = 98 123 x 8 + 3 = 987 1234 x 8 + 4 = 9876 12345 x 8 + 5 = 98765 123456 x 8 + 6 = 987654 1234567 x 8 + 7 = 9876543 12345678 x 8 + 8 = 98765432 123456789 x 8 + 9 = 987654321 1 x 9 + 2 = 11 12 x 9 + 3 = 111 123 x 9 + 4 = 1111 1234 x 9 + 5 = 11111 12345 x 9 + 6 = 111111 123456 x 9 + 7 = 1111111 1234567 x 9 + 8 = 11111111 12345678 x 9 + 9 = 111111111 123456789 x 9 +10= 1111111111 9 x 9 + 7 = 88 98 x 9 + 6 = 888 987 x 9 + 5 = 8888 9876 x 9 + 4 = 88888 98765 x 9 + 3 = 888888 987654 x 9 + 2 = 8888888 9876543 x 9 + 1 = 88888888 98765432 x 9 + 0 = 888888888 அற்புதம், அல்லவா? இறுதியாக, இந்த சமச்சீர் பார்க்கலாமா : 1 x 1 = 1 11 x 11 = 121 111 x 111 = 12321 1111 x 1111 = 1234321 11111 x 11111 = 123454321 111111 x 111111 = 12345654321 1111111 x 1111111 = 1234567654321 11111111 x 11111111 = 123456787654321 111111111 x 111111111=12345678987654321 | |||||||||||
|
TNPSC - பொதுஅறிவு வினா விடைகள் 6 Posted: 11 Jun 2012 07:48 PM PDT புவியியல்:
• தொலைநோக்கி இல்லாமல் வெறும் கண்களால் மட்டுமே பார்க்கக்கூடிய விண்மீன்கள் - புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி.
• தொலைநோக்கி மூலம் மட்டும் காண இயலக்கூடிய கோள்கள் - யுரேனஸ் மற்றும் நெப்டியூன்.
• சூரியனின் கோள்களை திடக்கோள்கள், வாயுக்கோள்கள் என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
• புதன், வெள்ளி, பூமி, செவ்வாய் ஆகிய நான்கும் திடக்கோள்கள்.
• வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய நான்கும் வாயுக்கோள்கள்.
• சூரியனைக் கோள்கள் நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகிறது. கோள்கள் சுற்றி வரும் பாதை சுற்றுப்பாதை.
• பூமியில் இருந்து சூரியன் சுமார் 15 கோடி கி.மீ. தொலைவில் உள்ளது.
• புளூட்டோ, செரஸ், ஏரிஸ், மேக்மேக், ஹவ்மீயே முதலியன 2006ஆம் ஆண்டு குள்ளக்கோள்கள் என புதியதாக வகைப்படுத்தப்பட்டன. இவையும் சூரியனைச் சுற்றி வருகின்றன. இவை சந்திரனை விடச் சிறியவை. எனவேதான் இவை குள்ளக்கோள்கள் எனப்படுகின்றன.
• செவ்வாய்க்கோளுக்கும் வியாழன் கோளுக்கும் இடையில் லட்சக்கணக்கான குறுங்கோள்கள் உள்ளன. சிறுசிறு கற்கள், பெரும்பாறை முதல் 300 - 400 கி.மீ. விட்டம் உடைய பெரும் வான்பொருள்கள் ஆகியவற்றின் தொகுதி குறுங்கோள்கள் ஆகும்.
• இந்தியாவில் யார் யார் பெயர்களில் குறுங்கோள்கள் உள்ளன - வானவியல் அறிஞர் வைணுபாப்பு, அணுசக்தித் துறையின் தந்தை சாராபாய், கணிதமேதை ராமானுஜன்.
• சந்திரன் பூமியைச் சுற்ற எடுத்துக்கொள்ளும் கால அளவு - 27.3 நாள்கள்.
• சந்திரனின் மறுபக்கத்தை புகைப்படம் எடுத்த செயற்கைக்கோளின் பெயர் - 1959ஆம் ஆண்டு, லூனா 3 செயற்கைக்கோள்தான் இந்தப் புகைப்படத்தை எடுத்தது.
• அமாவாசையன்று பூமிக்கும் சூரியனுக்கும் இடையே சந்திரன் அமைகிறது.
• முழுச்சந்திரன் (பௌர்ணமி) அன்று சூரியனுக்கு எதிர்த்திசையில் சூரியன் காட்சி அளிக்கும்.
• வால்நட்சத்திரம் என்பது ஒரு விண்மீன் இல்லை. பனி, தூசு முதலிய பொருள்கள் நிறைந்த பனிப்பாறைதான் அது. சூரியனுக்கு அருகே அது வரும்போது பனி உருகி ஆவியாதலாலும், சூரிய ஒளி பிரதிபலிப்பதாலும் வால்போல் நீண்டு தோன்றுகிறது.
• வால்நட்சத்திரத்தின் வால் எப்போதும் சூரியனுக்கு எதிர்த்திசையில் அமையும்.
• பல கோடிக்கணக்கான விண்மீன்களின் தொகுதி - அண்டம்.
• பல கோடிக்கணக்கான அண்டங்களைக் கொண்ட தொகுதி - பேரண்டம்.
• சூரியனிடமிருந்து மூன்றாவதாக அமைந்த கோள் - பூமி.
• வெள்ளியும், புதனும் வெப்பம் கொண்ட கோள்கள் (ஏனெனில் சூரியனுக்கு அருகாமையில் உள்ளன)
• செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய கோள்கள் சூரியனிடமிருந்து வெகு தொலைவில் இருப்பதால் இந்தக் கோள்களில் கடுங் குளிர் நிலவுகிறது.
• பூமி ஒரு முறை தன்னைத்தானே சுற்றிக்கொள்ள ஆகும் நேரம் - 23 மணி 56 நிமிடங்கள்.
• பூமி, சூரியனை ஒரு முறை சுற்றிவர எடுக்கும் கால இடைவெளி 365.24 நாள்கள்.
• பருவங்கள் நான்கு வகைப்படும் ; கோடைக்காலம், வசந்தகாலம், குளிர்காலம், இலையுதிர்க்காலம்.
• ஜூலை மாதத்தில் பூமி சூரியனுக்கு வெகுதொலைவில் இருக்கும். ஜனவரி மாதத்தில் மிக அருகே இருக்கும். இதனால்தான் பருவகாலம் ஏற்படுகிறது.
• வடகோளத்தில் கோடைக்காலம் என்றால், தென்கோளத்தில் குளிர்காலம். வடகோளத்தில் குளிர்காலம் என்றால், தென்கோளத்தில் கோடைக்காலம் என மாறி மாறி வரும்.
• டிசம்பர் 22 என்று அதிகபட்ச தென்கிழக்குப் புள்ளியில் உதிக்கும் சூரியனின் உதயப்புள்ளி வடக்கு நோக்கி நகரத்தொடங்கும். அதுவே வட ஓட்டம் - உத்ராயனம்.
• சூரிய உதயப்புள்ளியின் தெற்கு நோக்கிய நகர்வு - தென் ஓட்டம் - தட்சிணாயனம்.
• மார்ச் 21 மற்றும் செப்டம்பர் 23 ஆகிய இரு நாள்கள் சம இரவு பகல் நாள்களாக இருக்கும்.
• பருவ காலங்கள்: கார், குளிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில்.
• ஏழு கண்டங்கள் - ஆசியா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, அண்டார்டிகா.
• ஆசியா - கண்டங்களில் மிகப்பெரியது; கோபி குளிர்பாலைவனமும், உயரமான இமயமலைத் தொடரும் இக்கண்டத்தில் உள்ளன.
• ஆப்பிரிக்கா - நிலப்பரப்பளவில் இரண்டாவது பெரிய கண்டம். நிலநடுக்கோடு இந்தக் கண்டத்தை இரண்டாகப் பிரிக்கிறது. உலகில் மிக நீளமான நைல் நதி இக்கண்டத்தில் பாய்கிறது. மிகப் பெரிய சகாரா பாலைவனம் இந்தக் கண்டத்தில் அமைந்துள்ளது.
• வட அமெரிக்கா - அட்லாண்டிக், பசிபிக், ஆர்டிக் பெருங்கடல்களால் சூழப்பட்ட கண்டம் இது. ராக்கி மலைத்தொடர் இந்தக் கண்டத்தில் அமைந்துள்ளது.
• தென் அமெரிக்கா - ஆண்டிஸ் மலைத்தொடர் இங்குதான் அமைந்துள்ளது. உலகின் நீளமான அமேசான் ஆறு இக்கண்டத்தில் உள்ளது.
• ஐரோப்பா - ஆசியாவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள கண்டம். ஆல்ப்ஸ் மலைத்தொடர் உள்ளது.
• ஆஸ்திரேலியா - நான்கு பக்கமும் கடல்களால் சூழப்பட்டுள்ளது. இது ஒரு தீவுக்கண்டம். கிரேட் பாரியர் ரீப் எனப்படும் உலகின் மிகப் பெரிய பவளப் பாறை ஆஸ்திரேலியக் கடற்கரையில் உள்ளது.
• அண்டார்டிகா - தென் துருவப் பகுதியில் உள்ள கண்டம் இது. மிகக் குளிர்ந்த பகுதி இது. பென்குயின் பறவை, சீல் போன்ற உயிரினங்களின் வாழிடம் இது. இந்தக் கண்டத்தில் தட்சிண் கங்கோத்ரி மற்றும் மைத்ரேயி எனும் ஆய்வுக் குடியிருப்புகளை இந்தியா நிறுவியுள்ளது.
• பெருங்கடல்கள் - மொத்தம் ஐந்து. 1. பசிபிக் பெருங்கடல், 2. அட்லாண்டிக் பெருங்கடல், 3.இந்தியப் பெருங்கடல், 4. ஆர்க்டிக் பெருங்கடல் 5. அண்டார்டிக் பெருங்கடல்.
• தமிழகத்தின் கிழக்கே உள்ள கடல் பரப்பு - வங்காள விரிகுடா. கேரளத்தின் மேற்கே உள்ள கடல் பரப்பு - அரபிக்கடல்.
• பசிபிக் பெருங்கடல் - உலகின் ஆழமான பெருங்கடல். இங்குள்ள தீவுக்கூட்டங்களில் எரிமலைகள் நெருப்புக் குழம்பைக்கக்குவதால், இப்பகுதி பசிபிக் நெருப்பு வளையம் என்று அழைக்கப்படுகிறது.
• உலகின் மிக ஆழமான மரியானா அகழி இந்த கடல்பகுதியில்தான் இருக்கிறது.
• அட்லாண்டிக் பெருங்கடல் - உலகின் இரண்டாவது பெருங்கடல்.
• இந்தியப் பெருங்கடல் - உலகின் மூன்றாவது பெருங்கடல். இப்பெருங்கடலில் உருவாகும் பருவக்காற்று மழையினால்தான் இந்தியா வளம் பெறுகிறது.
• அண்டார்டிக் பெருங்கடல் - தென் துருவப் பகுதியில் உள்ள அண்டார்டிகா கண்டத்தைச் சுற்றிப் பரந்துள்ள கடல் தென் பெருங்கடல் எனப்படுகிறது. இது அண்டார்டிக் பெருங்கடல் என்றும் அழைக்கப்படுகிறது.
• ஆர்க்டிக் பெருங்கடல் - வடதுருவப் பகுதியில் அமைந்துள்ள மிகச் சிறிய பெருங்கடல் ஆர்டிக் பெருங்கடல் ஆகும்.
• மூன்று பக்கங்கள் நீராலும், ஒரு பக்கம் நிலத்தாலும் சூழப்பட்ட பகுதிக்குத் தீபகற்பம் என்று பெயர். இந்தியா ஒரு தீபகற்பம்.
• மூன்று பக்கங்களும் நிலமாகவும், ஒரு பக்கம் கடலாகவும் அமைந்த நீர்ப் பரப்புக்கு விரிகுடா என்று பெயர்.
• இரண்டு நீர்ப்பரப்புகளை இணைக்கும் குறுகிய நீர்ப்பகுதிக்கு நீர்ச்சந்தி என்று பெயர். இந்தியா, இலங்கை இரண்டுக்கும் இடையில் உள்ளது பாக் நீர்ச்சந்தி.
• விரிந்த இரண்டு நிலப்பரப்புகளுடன் மிகச் குறுகிய நிலப்பரப்பு இணைந்திருந்தால் அதனை நிலச்சந்தி எனலாம். தென் அமெரிக்கா மற்றும் வட அமெரிக்காவை இணைப்பது பனாமா நிலச்சந்தி.
• பழைய கற்காலம் - கி.மு. 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்.
• புதிய கற்காலம் - கி.மு. 10,000 - கி.மு.4,000
• செம்பு கற்காலம் - கி.மு.3000 - கி.மு.1500
• இரும்புக்காலம் - கி.மு. 1500 - கி.மு.600
• முக்கியத் தோற்றங்களின் ஆண்டுகள்:
• பூமியின் தோற்றம் - 460 கோடி ஆண்டுகளுக்கு முன்
• மனிதனின் தோற்றம் - 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் (ஹோமோசேப்பியன்ஸ்)
• வேளாண்மை தோன்றிய காலம் - சுமார் 8,000 ஆண்டுகளுக்கு முன்.
• நகரங்களின் தோற்றம் - 4,700 ஆண்டுகளுக்கு முன்
• இந்தியாவில் பழைய கற்காலக் கருவிகள் கிடைக்கப்பெற்றுள்ள இடங்கள் - மத்தியப் பிரதேசத்தில் உள்ள சோன் ஆற்றுப்படுகை, பிம்பேட்கா, மஹேஸ்வா (மத்தியப் பிரதேசம்) ராஜஸ்தானில் பாயும் லூனி ஆற்றுச்சமவெளி, பாகல்கோட் (கர்நாடகம்), கர்னூல் குகைகள், ரேணிகுண்டா (ஆந்திரப் பிரதேசம்), தமிழ்நாட்டில் வடமதுரை, பல்லாவரம், காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளூர்.
• மனிதன் முதலில் பழக்கிய விலங்கு நாய்.
• சக்கரம் உருவாக்கப்பட்ட காலம் - புதிய கற்காலம்.
புதிய கற்காலம்
• புதிய கற்கால மனிதர்கள் முதலில் பயன்படுத்திய உலோகம் செம்பு.
• மனிதன் குடியிருப்புகளை உருவாக்கி கூட்டமாக வாழ்ந்தான்.
• தமிழகத்தில் புதிய கற்கால மண்பாண்டங்கள் கிடைத்துள்ள இடங்கள் - திருநெல்வேலி, சேலம், புதுக்கோட்டை, திருச்சி.
• இறந்தவர்களை புதைத்தார்கள்.
செம்புக் கற்காலம்:
• புதிய கற்கால முடிவில் செம்பு என்னும் உலோகத்தின் பயனை மக்கள் அறிந்திருந்தார்கள்.
• தமிழகத்தில் பழைய கற்காலக் கருவிகள் கிடைக்கப் பெற்ற இடங்கள் - பல்லாவரம், காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளூர்.
• புதிய கற்காலக் கருவிகள் கிடைத்த இடங்கள் - திருநெல்வேலி, சேலம், புதுக்கோட்டை, திருச்சி, தான்றிக்குடி (கொடைக்கானல் மலை)
உலோகக் கலவைகள்
• இரும்பு + குரோமியம் = சில்வர்
• செம்பு + வெள்ளீயம் = வெண்கலம்
• செம்பு + துத்தநாகம் = பித்தளை
• இரும்பு + மாங்கனீசு = எஃகு.
சிந்துவெளி(ஹரப்பா) நாகரிகம்:
• சிந்துவெளி நாகரிகமே இந்திய நாகரிகத்தின் தொடக்கம்.
• ஹரப்பா கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு - 1856.
• ஹரப்பாவில் முதன்முதலில் அகழ்வாராய்வு நடத்தப்பட்ட ஆண்டு - 1921
• ஹரப்பா என்பது சிந்தி மொழி. இதற்கு தமிழில் புதையுண்ட நகரம் என்று பெயர்.
• 4,700 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்த நாகரிகம், மொகஞ்சதாரோ, சான்குதாரோ, கலிபங்கன், லோத்தல் போன்ற வேறுபல இடங்கள் வரை பரவி இருந்ததாக அகழ்வாராய்வில் தெரிய வந்துள்ளது.
• மொகஞ்சதாரோ என்பது சிந்தி மொழி. இதற்கு சரியான தமிழ் சொல், இடுகாட்டு மேடு.
| |||||||||||
|
TNPSC - பொதுஅறிவு வினா விடைகள் 2 Posted: 11 Jun 2012 06:18 AM PDT ![]() 1. உகாதி பண்டிகை எங்கு கொண்டாடப்படுகிறது? அ. தமிழகம் ஆ. ஆந்திரா இ. கர்நாடகா ஈ. கேரளா 2. என். ராஜம் எதோடு தொடர்புடையவர்? அ. நடனம் ஆ. ஓவியம் இ. வயலின் ஈ. கர்னாடக இசை 3. பின் வருவனவற்றில் எது தொன்மையான நடன வடிவம்? அ. வாங்லா ஆ. கல்பேலியா இ. ஒடிசி ஈ. பண்டவணி 4. பகவத் கீதையை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த முதல் ஐரோப்பியர் யார்? அ. சர் அலெக்ஸாண்டர் கன்னிங்காம் ஆ. வில்லியம் ஜோன்ஸ் இ. சார்லஸ் வில்கின்ஸ் ஈ. ஜேம்ஸ் பன்செப் 5. ராஜஸ்தானின் நடனம் எது? அ. கார்பா ஆ. குமர் இ. ஜமர் ஈ. நௌதங்கி 6. கீத் கோவிந்தம் புத்தகத்தை எழுதியவர் யார்? அ. ஜெய்தேவர் ஆ. மீரா இ. உமபதி தர் ஈ. தோலி 7. சரங்க் என்பது எந்த நேரத்தில் பாடப்படும் ராகம்? அ. நள்ளிரவு ஆ. காலை இ. மதியம் ஈ. மாலை 8. இந்தியாவின் முதல் சமஸ்கிருத மொழி திரைப்படம் எது? அ. மாயா மிருகா ஆ. ஹரிச்சந்திரா இ. ஆதி சங்கராச்சாரியா ஈ. கந்தகார் 9. தங்கமும் செல்வமும் குவிந்திருப்பதாக மேலை நாடுகளில் கற்பனையில் உருவாக்கப்பட்ட நாட்டின் பெயர் என்ன? அ. உடோபியா ஆ. ஒயாசிஸ் இ. எல்டராடோ ஈ. இவை அனைத்தும் 10. இறந்தவர்களுக்காக பாடப்படும் ஆங்கில இலக்கிய வடிவம் என்ன? அ. எலிஜி ஆ. பாலட் இ. ஹைபர்போல் ஈ. ஓட் 11. முஸ்லிம்களின் 3வது புனித தலமாக கருதப்படுவது எது? அ. மெக்கா ஆ. மெதீனா இ. ஸ்ரீநகர் ஈ. அல் அக்ஸா 12. விசுவநாதர் ஆலயம் எந்த புகழ் பெற்ற இந்து புனிதத் தலத்திலுள்ளது? அ. காசி ஆ. ராமேஸ்வரம் இ. மதுரா ஈ. அயோத்தி 13. பின்வரும் பக்தி மார்க்க துறவிகளில் செருப்பு தைக்கும் தொழிலைச் செய்து வந்தவர் யார்? அ. நம்தேவ் ஆ. சேனா இ. கபீர் ஈ. ரவிதாஸ் 14. ஆதி சங்கரரின் தத்துவம் எது? அ. துவைதம் ஆ. அத்வைதம் இ. விசிட்டாத்வைதம் ஈ. சைவம் 15. இந்துக்களின் உபநிஷத்துக்கள் எதைப் பற்றியவை? அ. தத்துவம் ஆ. மதம் இ. யோகா ஈ. சட்டம் 16. தற்போது நடைமுறையில் இருக்கும் பைபிளின் ஆங்கில பிரதி முதன் முதலில் யாருடைய ஆட்சியின் போது தயார் செய்யப்பட்டது? அ. முதலாம் ஜேம்ஸ் ஆ. 2ம் ஜேம்ஸ் இ. எலிசபெத் மகாராணி ஈ. ஆலிவர் குரோம்வெல் 17. முகமது நபி எப்போது பிறந்தார்? அ. கி.பி. 573 ஆ. கி.பி. 574 இ. கி.பி. 571 ஈ. கி.பி. 572 18. தனது நம்பிக்கைகளால் முகமது நபி ஜாரத் எனப்படும் யாத்திரையை மெக்காவிலிருந்து மேற்கொண்டு மெதினா சென்றார். இது எப்போது நிகழ்ந்தது? அ. கி.பி. 621 ஆ. கி.பி. 622 இ. கி.பி. 623 ஈ. கி.பி. 624 விடை: 1. ஆ 2. இ 3. இ 4. இ 5. ஆ 6. அ 7. ஆ 8. இ 9. இ 10. அ 11. ஈ 12. அ 13. ஈ 14. ஆ 15. அ 16. அ 17. இ 18. ஆ | |||||||||||
|
TET - ஆசிரியர் தகுதித் தேர்வு இயற்பியல் வினாக்கள் Posted: 10 Jun 2012 05:52 PM PDT ![]() 1. ஒரு குதிரைத்திறன் என்பது அ. 946 வாட் ஆ. 846 வாட் இ. 746 வாட் ஈ. 646 வாட் 2. வௌவால் ஏற்படுத்துவது அ. குற்றொலி ஆ. மீயொலி இ. செவி உணர் ஒலி ஈ. அனைத்தும் தவறு 3. மனிதன் மற்றும் சில விலங்குகளின் ஒலி உணரும் திறனை (ஹெர்ட்ஸ்) பொருத்துக: I. மனிதன் - 1. 1000 - 1,00,000 II. யானை - 2. 100 - 32,000 III. பூனை - 3. 20 - 20,000 IV. கொறி விலங்குகள் - 4. 16 - 12,000 அ. I-3 II-1 III-2 IV-4 ஆ. I-3 II-4 III-1 IV-2 இ. I-3 II-2 III-1 IV-4 ஈ. I-3 II-4 III-2 IV-1 4. குவி ஆடியில் தோன்றும் பிம்பங்கள் அனைத்தும் அ. மாயபிம்பம் ஆ. மெய்பிம்பம் இ. பொய்பிம்பம் ஈ. மாய மற்றும் மெய்பிம்பங்கள் 5. மழைத்துளிகள் கோள வடிவத்தைப் பெறக் காரணம் அ. பரப்பு இழுவிசை ஆ. ஈர்ப்பு விசை இ. மைய நோக்கு விசை ஈ. மைய விலக்கு விசை 6. முதன்மை நிறங்கள் அ. சிவப்பு, பச்சை, நீலம் ஆ. பச்சை, சிவப்பு, கருப்பு இ. சிவப்பு, பச்சை, வெள்ளை ஈ. கருப்பு, மஞ்சள், நீலம் 7. அகச்சிவப்பு கதிர்களின் இயற்கை மூலம் அ. காற்று ஆ. ஆக்சிசன் இ. நீர் ஈ. சூரியன் 8. ஒரு கிலோகிராம் நிறையுள்ள ஒரு பொருளின் மீது செயல்படும் புவி ஈர்ப்பு விசை அ. 9.9 N ஆ. 9.10 N இ. 9.8 N ஈ. 9.11 N 9. ஒரு சிறிய கோப்பையில் உள்ள கொதி நீரின் வெப்ப நிலையும் ஒரு பெரிய பாத்திரத்தில் உள்ள கொதி நீரின் வெப்ப நிலையும் அ. சமமாக இருக்கும் ஆ. தண்ணீரின் அளவை பொறுத்து மாறுபடும் இ. பாத்திரத்தின் அளவை சார்ந்து வேறுபடும் ஈ. மேற்கூறிய எதுவும் சரியில்லை 10. காற்றாலைகள் அமைக்க தேவையான காற்றின் சராசரி வேகம் அ. 20 கி.மீ. ஆ. 18 கி.மீ. இ. 25 கி.மீ. ஈ. 30 கி.மீ. 11. தகவல்களை எடுத்துச் செல்வதில் மிகவும் சக்திவாய்ந்தது அ. கேபிள் ஆ. ரேடியோ அலைகள் இ. மைக்ரோ அலைகள் ஈ. ஆப்டிகல் பைபர் 12. நீராவி இன்ஜினை கண்டு பிடித்தவர் யார்? அ. ஸ்டீபன்ஸன் ஆ. ஜேம்ஸ்வாட் இ. மெக்ஆடம் ஈ. ராவ்லண்ட் ஹில்ஸ் 13. தீர்ந்து விடாத ஆற்றல் மூலம் அ. பெட்ரோலியம் ஆ. நிலக்கரி இ. இயற்கை வாயு ஈ. சூரியன் 14. ஒரு துப்பாக்கியிலிருந்து வெளிவரும் குண்டின் இயக்கம் அ. சுழற்சி இயக்கம் ஆ. வேக இயக்கம் இ. நேர்கோட்டு இயக்கம் ஈ. அலை இயக்கம் 15. ஒரே உயரத்தில் இருந்து தடையின்றி தானே விழும் வெவ்வேறு எடையுள்ள பொருட்கள் எப்போது புவியில் விழும் அ. எடை அதிகமான பொருள் முதலில் விழும் ஆ. அவை ஒரே நேரத்தில் விழும் இ. இரண்டும் சரி ஈ. இரண்டும் தவறு 16. ரயில் நிலையத்தை நோக்கி ரயில் வரும்போது ஒலியின் சுருதி அதிகமாகவும் நம்மைவிட்டு விலகிச் செல்லும்போது குறைவாக கேட்பதை டாப்ளர் விளைவு மூலம் 1842ம் ஆண்டு விளக்கியவர் அ. மார்ஷல் டாப்ளர் ஆ. ஸ்டீபன் டாப்ளர் இ. ஐசக் டாப்ளர் ஈ. கிறிஸ்டியன் டாப்ளர் 17. ஒலிப்பதிவு செய்யும் ஒலி நாடாவில் உள்ளது அ. இரும்பு ஆக்ஸைடு ஆ. குரோமியம் டை ஆக்ஸைடு இ. இரண்டும் இருக்கும் ஈ. மேற்சொன்ன இரண்டில் ஒன்று 18. பாராசூட் திறக்காத நிலையில் வானத்தில் குதிப்பவரின் முற்று திசை வேகம் ஏறக்குறைய அ. 150 கி.மீ ஆ. 200 கி.மீ இ. 250 கி.மீ ஈ. 300 கி.மீ 19. கோள்களின் இயக்கம் பற்றிய கெப்ளரின் முதல் விதியின் மற்றொரு பெயர் அ. காலங்களின் விதி ஆ. பரப்புகளின் விதி இ. சுற்றுப்பாதைகளின் விதி ஈ. தொலைவுகளின் விதி 20. கருமை நிற பொருட்கள் எல்லா நிறங்களையும் அ. உட்கவரும் ஆ. எதிரொளிக்கும் இ. இரண்டும் சரி ஈ. இரண்டும் தவறு 21. பிரஷர்குக்கரில் (அழுத்த சமைப்பான்) நீரின் கொதி நிலை அ. 100o C ஆ. 110o C இ. 120o C ஈ. 130o C 22. ஒரு மின் விளக்கின் ஆயுள் அ. 1,000 மணிகள் ஆ. 1,500 மணிகள் இ. 2,000 மணிகள் ஈ. 2,500 மணிகள் 23. மிதிவண்டி மின் இயக்கி செயல்படும் தத்துவம் அ. வலக்கை பெருவிரல் விதி ஆ. மின்காந்த தூண்டல் இ. காந்த தூண்டல் ஈ. இடக்கை விதி 24. ஒரு பொருள் திட நிலையில் இருந்து நேரடியாக வாயு நிலைக்கு மாறும் நிகழ்வு அ. ஆவியாதல் ஆ. உருகுதல் இ. உறைதல் ஈ. பதங்கமாதல் 25. ஆவியாதல் திரவத்தின் எப்பகுதியில் நிகழும் அ. திரவத்தின் நடுப்பகுதியில் ஆ. திரவத்தின் அடிப்பகுதியில் இ. திரவத்தின் மேற்பரப்பில் ஈ. திரவத்தின் மேற்பரப்பு மற்றும் அடிப்பகுதியில் 26. ஈரம் மிகுந்த காற்றில் உலர்ந்த காற்றை விட ஒலி அ. வேகமாக பரவும் ஆ. மெதுவாக பரவும் இ. மாற்றம் இல்லை ஈ. அனைத்தும் தவறு விடை: 1. இ 2. ஆ 3. ஈ 4. அ 5. அ 6. அ 7. ஈ 8. இ 9. அ 10. ஆ 11. ஈ 12. ஆ 13. ஈ 14. இ 15. ஆ 16. ஈ 17. ஈ 18. ஆ 19. இ 20. அ 21. இ 22. அ 23. ஆ 24. ஈ 25. இ 26. அ | |||||||||||
|
TET - ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழ் வினாக்கள் Posted: 09 Jun 2012 09:08 PM PDT * தொல்காப்பியம் அமைந்துள்ள "பா" வகை - கலிப்பா * ஐந்திணை எழுபதின் ஆசிரியர் - மூவாதியார் * சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்டவர் - காரைக்கால் அம்மையார் * தமிழின் தொடர் அமைப்பு எந்த அடிப்படையில் அமையும் - செயப்படுபொருள் - எழுவாய் - பயனிலை * யசோதர காவியத்தின் ஆசிரியர் - வெண்ணாவலுடையார் * உள்ளத்துணர்வுகளின் வெளிப்பாட்டை விளக்குவது - மெய்ப்பாட்டியல் * "இலக்கியம் வாழ்வின் கண்ணாடி என்றும் காலத்தைக் காட்டும் கண்ணாடி என்றும்" எதனைக் கூறுவர் - சங்க இலக்கியம். * 99 வகை மலர்களின் வருணை அமைந்து வரும் பாடல் - மலைபடும்கடாம் * பதினெண் கீழ்க்கணக்கில் உள்ள அறநூல்களின் எண்ணிக்கை - 11 * "முடி பொருள் தொடர்நிலைச் செய்யுள்" என்று அழைக்கப்படுவது - சீவக சிந்தாமணி * வேளாண் வேதம் என அழைக்கப்படும் நூல் - நாலடியார் * உத்திரவேதம் என அழைக்கப்படும் நூல் - திருக்குறள் * திருக்குறளில் தனமனிதனது வாழ்வின் மேன்மையைக் குறிக்கும் பகுதி - அறத்துப்பால் * காலந்தோறும் தமிழ் சங்க காலத் தமிழ், பல்லவர் காலத் தமிழ் என வழங்கப்படுகிறது. * மூவேந்தர்களின் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்தோர் - பாண்டியர் * தொல்காப்பியம் பொருளாதிகாரம் எதற்கு இலக்கணம் கூறுகிறது - அகத்திணை, புறத்திணை. * தொல்காப்பியம் - முழுமையாகக் கிடைத்த எழுத்து சொல்பொருள் நூல். * தினையியல், களவியல், கற்பியல் பொருளியல் ஆகிய நான்கும் உரைப்பது - அகப்பொருள். * பூதத்தாழ்வார் பிறந்த இடம் - காஞ்சிபுரம் * நம்மாழ்வாரின் சீடராகக் கருதப்படுபவர் - திருப்புளி ஆழ்வார். * சுந்தரர் பிறந்த ஊர் - திருமுனைப்பாடி * சுந்தரரின் இயற்பெயர் - நம்பி ஆரூரர் * "வையம் தகளியாக, வார்கடலே நெய்யாக" என்று முதல் திருவந்தாதியைப் பாடியவர் - பொய்கையாழ்வார். * தமிழ்மாறன் என்று அழைக்கப்படுபவர் - நம்மாழ்வார் * புறப்பொருளுக்கு இலக்கணம் உரைக்கும் நூல் - புறப்பொருள் வெண்பாமாலை * மூன்று சீர்களாய் அமைவது - நேரிசை ஆசிரியப்பா * ஈற்றயலடி முச்சீராய் வருவது - நேரிசை ஆசிரியப்பா * மூன்று சீர்களாய் அமைவது - நெடிலடி * சார்பெழுத்துக்களின் வகைகள் - ஐந்து * தமிழில் வேர்ச்சொல் ஆராய்ச்சியில் மிகவும் புகழ் பெற்றவர் - தேவநேயப் பாவாணர் * இடைச்சங்கத்தின் கால எல்லை - 3700 ஆண்டுகள் * இடைச்சங்கம் இருந்த இடம் - கபாடபுரம் * அறிவுடை நம்பியைப் பாடியவர் - பிசிராந்ததையார் பாண்டியன * தலைமுடி நரைக்காததற்கு விளக்கம் தந்தவர் - பிசிராந்தையார் * சோழ மன்னனின் உள்ளம் கவர்ந்த நண்பர் - பிசிராந்ததையார் * காரைக்கால் அம்மையார் அந்தாதித் தொடையில் பாடியுள்ள பாடல்கள் - அற்புதத் திருவந்தாதி, திருவிரட்டை மணி மாலை * காரைக்கால் அம்மையாரின் பாடல்கள் சேர்க்கப்பட்டுள்ள திருமுறை - பதினோராம் திருமுறை * மணிமேகலையின் அமுதசுரபியில் முதன் முதலில் சோறிட்டவர் - ஆதிரை * மணிமேகலையில் உள்ள காதைகள் - 30 காதைகள் * மணிமேகலைக்கு உதவிய பெளத்தமதத் துறவி - அறவண அடிகள் * மணிமேகலை நூல் அமைந்துள்ள பா - அகவற்பா * மணிமேகலை பெரிதும் வலியுறுத்துவது - பசிப்பிணி நீக்கம் * தென்னவன் பிரமராயன் என்ற விருது பெற்ற நாயன்மார் - மாணிக்கவாசகர் * திருத்தொண்டத் தொகையை எழுதியவர் - மாணிக்கவாசகர் * சமுதாய சீர்திருத்தங்களைக் கூறிய காப்பியம் (பரத்தை ஒழிப்பு, மது ஒழிப்பு, நிறை ஒழிப்பு, சாதி ஒழிப்பு) - மணிமேகலை * சீவகன் ஆட்சி எய்திய சிறப்புப் பற்றிக் கூறும் இலம்பகம் - நாமகள் இலம்பகம் * வளையாபதி எந்தச் சமயத்தைச் சார்ந்த நூல் - சமண சமயம் * தருமசேனர் என்று அழைக்கப்பட்டவர் - அப்பர் * "வடமேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ் கூறு நல்லுலகம்" எனத் தமிழ்நாட்டின் எல்லையைக் குறிப்பிடுபவர் - பனம்பாரனார் * "கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே, வானொடு முன்தோன்றி மூத்தகுடி" எனும் தொடர் அமைந்துள்ள பாடல் - புறப்பொருள் வெண்பாமாலை * "இவள் என்று பிறந்தவள்" என்றறியாத இயல்பினலாம் எங்கள்தாய்" என்று தமிழின் தொன்மையைக் குறிப்பவர் - பாரதியார். * "விண் இயங்கும் ஞாயிற்றைக் கை மறைப் பாரில்" இவ்வடி இடம்பெறும் நூல் - கார் நாற்பது. * திருமாலின் பாஞ்சசன்யம் என்னும் சங்கின் அவதாரமாகக் கருதப் பெறுபவர் - பொய்கையாழ்வார் * தமிழ்மொழியியல் ஆய்வுக்கு வித்திட்டவர் - தெ.பா.மீ * மொழி என்பது - கருத்துக்களின் பரிமாற்றம் * தமிழ்மொழி வழங்கிய பகுதியின் வட எல்லை, தென் எல்லைகளாக அமைந்தவை - வடவேங்கடம் முதல் தென் குமரி வரை * சங்கங்கள் கடல்கோள்களால் அழிந்தன. * சங்கங்கள் பாண்டியர்களால் புரக்கப் பெற்றன. * சங்கங்கள் தமிழ் வளர்த்தன. * களவியலுரை என்பது ஒர் உரைநூல். * களவியலுரை என்பது ஒர் இலக்கண நூல் * களவியலுரை என்பது காலத்தால் பழமையான நூல் * பண்பட்ட திராவிட மொழிகளில் தொன்மையானது - தமிழ் * பத்துப்பாட்டு நூலில் மிகவும் பெரிய நூல் - மதுரைக் காஞ்சி * பொருநராற்றுப்படையைப் பாடியவர் - முடத்தாமக் கண்ணியார். * மலைபடுகடாம் என்னும் இலக்கியம் - கூத்தாற்றுப்படை * முல்லைப்பாட்டைப் பாடியவர் - நப்பூதனார். * தமிழ் நிலைபெற்ற மதுரை எனக்கூறும் நூல் - சிறுபாணாற்றுப்படை * உலா நூல்களுள் மிகப் பழமையைனது - திருக்கைலாய ஞான உலா * தூது இலக்கியத்திற்குரிய யாப்பு - கலிவெண்பா * கலிங்கத்துப் பரணி பாட்டுடைத்தலைவன் - குலோத்துங்கன் * ஆண்பால் பிள்ளைத் தமிழின் இறுதி நான்கு பருவங்கள் - அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர் * திருக்கோவையார் என்னும் சிற்றிலக்கியத்தை இயற்றியவர் - மாணிக்கவாசகர் * கலம்பக இலக்கியம் பாடுவதில் வல்லவர் - இரட்டைப் புலவர் * தமிழ் மொழியில் தோன்றிய முதல் குறவஞ்சி இலக்கியம் - அழகர் குறவஞ்சி * கண்ணனே வந்து தன் கைத்தலம் பற்றக் கனவு கண்டதாகக் கூறும் பாடலைப் பாடியவர் - ஆண்டாள் * "நாமார்க்கும் குடியேல்லோம், நமனை அஞ்சோம்" என்று பாடியவர் - திருநாவுக்கரசர் * "பொய்கை ஆழ்வார்" பாடிய பக்திப் பாடல் தொகுதியின் பெயர் - முதல் திருவந்தாதி * "சான்றோனாக்குதல் தந்தைக்கு கடனே" பாடியவர் - பொன்முடியார் * திருமாலின் பல்வேறு அம்சமாகத் தோன்றிய ஆழ்வார்கள் * பாஞ்ச சன்யம் - பொய்கையாழ்வார் * கருடாம்சம் - பெரியாழ்வார் * சுதர்சனம் - திருமழிசை * களங்கம் - திருமங்கையாழ்வார் * காலமுறைப்படி வரிசைப்படுத்துதல்: பொய்கையாழ்வார், பூத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார் * நற்றினண, நல்ல குறுந்தொகை, ஐங்குறு நூறு, ஒத்தபதிற்றுபத்து * அம்புலி, சிற்றில் சிறுபறை, சிறுதேர் * காப்பு, செங்கீரை, தாலாட்டு, சப்பாணி * அரியணையைத் துறந்து வைணவத் தொண்டர் கோலத்தை ஏற்றவர் - குலசேகரர் * சுந்தர் பாடிய திருத்தொண்டர் தொகை - தொண்டர் தம் பெருமை கூறும் நூல் * பிள்ளைத் தமிழின் இலக்கியம் குறித்து விளக்கம் தரும் நிகண்டு - திவாகர நிகண்டு * குலோத்துங்க சோழனின் பிள்ளைத்தமிழ் பாடியவர் - ஒட்டக்கூத்தர் * பகழிக்கூத்தர் பாடிய பிள்ளைத்தமிழ் - திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ். * திருத்தக்கதேவர் சார்ந்த சமயம் - சமண சமயம் * சீவகன் கதையைப் பெருங்காப்பியமாகப் பாடியவர் - திருத்தக்கதேவர் * அறிவு அற்றம் காக்கும் கருவி - முப்பால் * செல்வம் சகடக் கால்போல் வரும் - நாலடியார் * சிறு மாலை கொல்லுனர் போல வரும் - ஐந்திணை எழுபது * காதலி மாட்டுள்ளம் வைப்பார்க்குத் துயிலில்லை - நான்மணிக்கடிகை * ஊனைத் தின்று ஊனைப் பெருக்குதல் - இன்னா நாற்பது * இளமையை மூப்பு என்றுணர்தல் இனிதே - இனியவை நாற்பது * புல் நுனிமேல் நீர் போல் நிலையாமை - நாலடியார் * அகம் குன்றி மூக்கில் கரியாருடைத்து - முப்பால் * முல்லையும் குறிஞ்சியும் நல்லியல்பு இழந்தால் பாலையாகும் * மருந்துப் பெயர் அல்லாத பதினெண் கீழ்க்கணக்கு நூல் - கைந்நிலை * தூது இலக்கியத்திற்குரிய யாப்பு - கலிவெண்பா | |||||||||||
|
ஆசிரியர் பயிற்சியில் சேர விண்ணப்பம் விற்பனை Posted: 09 Jun 2012 02:36 AM PDT தமிழகத்தில் உள்ள ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் சேர விரும்பும் மாணவிகளுக்கு ஜுன் 12ம் தேதி முதல் 23ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. சென்னை மற்றும் மாவட்ட ஆசிரியர் பயிற்சி மையங்களில் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஜுன் 23ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. | |||||||||||
|
மனித உலகில் பேசும் தாவரங்கள் கண்டுபிடிப்பு! Posted: 08 Jun 2012 08:05 AM PDT செடி, கொடிகள் போன்ற தாவரங்கள் ஒன்றுடன், ஒன்று பேசிக் கொள்கின்றன என்று இங்கிலாந்து நாட்டில் உள்ள எக்ஸ்டெர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். முட்டைகோஸ் கொடியானது ஆபத்து வரலாம் என உணர்ந்தால் தனது இலைப் பகுதியில் சிறிய வெடிப்பை ஏற்படுத்துகிறது. இதன் மூலம் ஒருவித வாயுவை வெளியேற்றி, ஒலியை ஏற்படுத்தி பக்கத்தில் உள்ள செடியை எச்சரிக்கை செய்கிறது. இதனை நுட்பமான கேமராவின் மூலம் ஆய்வு செய்து முதன் முறையாக விஞ்ஞானிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். | |||||||||||
|
TNPSC குரூப் - 4 தேர்வு மாதிரி வினாக்கள் பகுதி 5 Posted: 08 Jun 2012 07:21 AM PDT
அறிவியல்
• உயிரற்ற காரணிகள் - நிலம், நீர், சூரியன், காற்று • உயிருள்ள காரணிகள் - தாவரங்கள், விலங்குகள், மனிதர்கள் • மகரந்தச் சேர்க்கை - ஒரு பூவின் மகரந்தத் துகள்கள், அதே இனத்தைச் சேர்ந்த மற்றொரு தாவரத்தின் சூல்முடியைச் சென்றடைவது. • அயல் மகரந்தச் சேர்க்கை - காற்றின் மூலம் நடைபெறும் • விதை பரவுதல் என்பது - விதைகள் ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு காற்று, நீர், மனிதர்கள், விலங்குகள் மற்றும் பறவைகள் ஆகியவற்றால் எடுத்துச் செல்லப்படுதல். • அவரைக்காய், வெங்காயம் தோன்றிய நாடு - ஆசியா • காப்பி, வெண்டைக்காய், தர்பூசணி தோன்றிய நாடு - ஆப்பிரிக்கா • பட்டாணி, முட்டைகோஸ், நெல்லிக்காய் தோன்றிய நாடு - ஐரோப்பா • உருளைக்கிழங்கு, மக்காச்சோளம், கொய்யா தோன்றிய நாடு - தென் அமெரிக்கா. • ஆலமரம், புளியமரம், வேப்பமரம், மாமரம் தோன்றிய இடம் - இந்தியா. • இலவம் பஞ்சு, முருங்கை, எருக்கு முதலிய தாவரங்களின் விதைகள் - காற்றின் வாயிலாகப் பரவுகின்றன. • தென்னை, ஆகாயத்தாமரை, அல்லி, தாமரை ஆகியவற்றின் விதைகள் எப்படிப் பரவுகின்றன - நீரின் வாயிலாக. • வெண்டை, உளுந்து, காராமணி, பால்சம், பயறு வகைகளின் விதைகள் எப்படி பரவுகின்றன - வெடித்துப் பரவுகின்றன. • நாயுருவி, புல், நெருஞ்சி முதலியவற்றின் விதைகள் எப்படிப் பரவுகின்றன - விலங்குகள் மூலம் • வாழிடம் என்பது - இயற்கையான சூழலில் உயிரினங்கள் வாழும் இடம். • இந்தியாவின் தேசிய விலங்கு - புலி • மான்களுக்கான சரணாலயம் - கிண்டி தேசியப்பூங்கா, சென்னை மாவட்டம். • பறவைகளுக்கான சரணாலயம் - வேடந்தாங்கல், காஞ்சிபுரம் மாவட்டம். • யானை, காட்டெருமை சரணாலயம் - முதுமலை, நீலகிரி மாவட்டம். • புலி, சிறுத்தை சரணாலயம் - ஆனைமலை, கோவை மாவட்டம். • வெள்ளைப்புலி, நரி, குரங்கு சரணாலயம் - அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, காஞ்சிபுரம் மாவட்டம். • இந்தியாவில் இருக்கும் மொத்த வனவிலங்குப் பாதுகாப்பகங்கள் - 17. • இந்தியாவில் உள்ள மொத்த தேசியப் பூங்காக்கள் - 66. • இந்தியாவில் முதன் முதலில் வனவிலங்கு பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்ட பூங்கா - உத்ராஞ்சல் மாநிலத்தில் உள்ள கார்பெட் தேசியப் பூங்கா. • SPCA (Society for the prevention of cruelty to animals) என்பது - விலங்கு வதைத் தடைச் சட்டம். • இந்தியக் காட்டு வாழ் உயிரிகள் வாரியம் தொடங்கப்பட்ட ஆண்டு - 1952 • வனவிலங்கு வாரவிழா இந்தியாவில் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு - 1955 • வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு - 1972 • தேசிய வனவிலங்கு உயிர்வாழ் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு - 1983 • தேசியப் பூங்கா மற்றும் பாதுகாக்கப்பட்ட உயிர்க்கோளங்கள் அமைத்தல் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது - 1986 • வண்ணத்துப்பூச்சி முழு வளர்ச்சி அடைய எத்தனை பருவங்களை கடக்கவேண்டியுள்ளது - 4 (முட்டை, புழு, கூட்டுப்புழு, வண்ணத்துப்பூச்சி) • வண்ணத்துப்பூச்சிகளின் சொர்க்கம் என்று இந்தியாவில் அழைக்கப்படும் மாநிலங்கள் - அஸ்ஸாம், சிக்கிம். • உலகிலேயே மிகப் பெரிய வண்ணத்துப் பூச்சி - நியூகினி நாட்டில் காணப்படும் அலெக்ஸாண்டிரா குயின் வண்ணத்துப்பூச்சிதான் உலகிலேயே பெரியது (25 செ.மீ. நீளம்) • வண்ணத்துப்பூச்சிகளுக்கு மொத்தம் எத்தனை கால்கள் - 6 • வண்ணத்துப்பூச்சியில் சுவையை அறியும் உறுப்பு எங்கு உள்ளது - கால்களில் • வண்ணத்துப்பூச்சி இரவில் தூங்குமா? - தூங்கும். ஆனால், கண்கள் மூடாது. ஏனெனில் அதற்கு இமைகள் கிடையாது. • வண்ணத்துப்பூச்சிகள் எப்படி தங்களுக்குள் தகவல்களை பரிமாறிக்கொள்கின்றன - உடல் அசைவு, நிறம், சத்தம் வாயிலாக. • சமுதாயப் பூச்சிகள் என்று அழைக்கப்படும் பூச்சி எது - தேனீ • தேன் கூட்டில் காணப்படும் மூன்று வகையான தேனீக்கள் - ராணித்தேனீ, ஆண் தேனீ, வேலைக்கார தேனீ • தேனீக்கள் நொடிக்கு எத்தனை தடவை இறக்கைகளை அசைக்கின்றன - 18,000 தடவை • ராணித் தேனீ - உருவத்தில் பெரியது; ஆயுட்காலம் அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள். • ஆண் தேனீக்கள் - இனப்பெருக்கத்திற்கு மட்டுமே பயன்படுகின்றன. இதில் வேலைக்காரத் தேனீக்களை விட ஆண் தேனீக்கள் உருவத்தில் பெரிதாக இருக்கும். • வேலைக்காரத் தேனீக்கள் - இனப்பெருக்கம் செய்யும் திறனற்ற பெண் தேனீக்கள் ஆகும். சுறுசுறுப்பானவை. ஆயுட்காலம் 28 நாள் முதல் 38 நாட்கள் வரை. • தேனீக்களின் இனங்கள் - மலைத் தேனீ, சிறுதேனீ, இந்தியத் தேனீ • சுமார் 425 கிராம் தேனைச் சேகரிக்க எத்தனை பூக்களை தேனீ நாடுகிறது - சுமார் 20 லட்சம் பூக்கள். • ஒரு கிலோ தேனில் எவ்வளவு ஆற்றல் இருக்கிறது - 3,200 கலோரி ஆற்றல் • கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டத்தில் மட்டும் உற்பத்தி செய்யப்படும் தேனின் அளவு - 25 மில்லியன் கிலோ. • தேனில் உள்ள சத்துக்கள் விவரங்கள் - நீர் 17 %; குளுக்கோஸ் - 31%, ப்ரக்டோஸ் - 38%, மால்டோஸ் - 10%, ஆல்புமின் - 2%, கனிம உப்புகள் - 1%, வைட்டமின்கள் சாம்பல் சத்து - 1% • உப்பு எதன் பயனாகக் கிடைக்கிறது - உப்பு நீர் ஆவியாதல் நிகழ்ச்சியின் மூலம். • நீர் சுழற்சி என்பது - பூமியின் மீதுள்ள நீர் ஆவியாக மாறி மேகங்களை உண்டாக்குகின்றன. மேகங்கள் குளிர்ந்து மழையாகப் பொழிகிறது. இதுவே நீர் சுழற்சி. • இயற்கையில் மூன்று நிலைகளில் கிடைக்கும் ஒரே பொருள் - நீர் (திடநிலை - பனிக்கட்டி; திரவநிலை - நீர்; வாயுநிலை - நீராவி. • தூய்மையான நீரின் குணங்கள் - நிறமற்றது; மணமற்றது; சுவையற்றது. • ஆலங்கட்டி மழை என்பது - மேகங்களில் ஏற்படும் மிகுந்த குளிர்ச்சியின் காரணமாக மழைநீர் பனிக்கட்டியாக மாறுகின்றது. • சர்வ கரைப்பானுக்கு சிறந்த எடுத்துக்காட்டு - நீர் • ஆழம் அதிகரிக்கும்போது நீரின் அழுத்தம் எப்படி இருக்கும் - அதிகமாக • பூமியில் உள்ள மொத்த நீரில் கடல் நீரின் அளவு - 97.3 சதவீதம். • பூமியில் குடிக்கும் தன்மையில் உள்ள நீரின் அளவு - 1 சதவீதம் • உலக நீர் நாள் - மார்ச் 22 • காற்றின் பண்புகள் - எல்லா திசைகளிலும் பரவும்; இடத்தை அடைத்துக்கொள்ளும். • மனிதன் சுவாசித்தலின்போது என்ன நடக்கிறது - ஆக்சிஜன் உள்இழுக்கப்பட்டு, கார்பன் -டை ஆக்ஸைடு வெளியிடப்படுகிறது. • ஆழ்கடலில் மூழ்குபவர்கள், விண்வெளி ஆய்வாளர்கள் தங்களுடன் வைத்துக்கொள்ளும் சிலிண்டரில் அடைக்கப்பட்டிருக்கும் வாயு என்ன - ஆக்ஸிஜன். • கார்பன் - டை ஆக்சைடு - தாவரங்களின் ஒளிச்சேர்க்கைக்கு பயன்படுகிறது. • நைட்ரஜன் - இயற்கை உரமாகப் பயன்படுகிறது. • மந்த வாயுக்கள் - நியான், ஆர்கான், கிரிப்டான், செனான். • பாய்மரக் கப்பல், பாராசூட், பட்டம் ஆகியவை எந்த முறையில் இயங்குகின்றன - காற்றழுத்த முறையில். • சமுதாயத்தின் அனைத்து முன்னேற்றங்களுக்கும் வழிவகுக்கும் அடிப்படை முதலீடு - கல்வி. • சமுதாய முன்னேற்றத்தின் விளைநிலம் - பள்ளி. • தொடக்கக் கல்வியை உறுதி செய்வதற்கான சட்டம் - அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டம். • இடைநிலைக் கல்வியை உறுதி செய்வதற்கான திட்டம் - அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம். • ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறும் நாள் - திங்கட் கிழமை. |
| You are subscribed to email updates from TRB - TET To stop receiving these emails, you may unsubscribe now. |
Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |