(Article condensed slightly and Translated into Tamil by Santhipriya)
ஜெய் சாயிராம்
அனைவருக்கும் சாயி தின வாழ்த்துக்கள்
ஸ்ரீ சாயி சரித்திரத்தில் சாயிபாபா தன் வழியில் பலரது வியாதிகளை வினோத முறையில் குணப்படுத்தி உள்ளது கூறப்பட்டு உள்ளது. இந்த அனுபவம் அதில் ஒன்று.
நான் எனக்கு பாபாவுடன் ஏற்பட்ட அனுபவத்தை மற்ற சகோதர, சகோதரிகளுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இரண்டு அல்லது மூன்று வாரங்களாக அதை எழுத எண்ணியும் இன்றுதான் வேலை வந்துள்ளது. ஆனாலும் இப்போதாவது அதை எழுதும் வாய்ப்பு கிடைத்ததிற்கு மகிழ்ச்சியுறுகிறேன். இனி என் அனுபவத்தைப் படியுங்கள்.
எனக்கு என் தாயாரைப் போலவே மாதவிடாய் பிரச்சனை இருந்தது. ஆகவே நான் அனைத்து ஏற்பாடுகளையும் முன்னரே செய்து கொள்வேன். இந்த சம்பவம் நடந்தது செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதியாகும். நான் பொழுது போகாமல் அலுவலகத்தில் போரடித்துக் கொண்டு அமர்ந்து இருந்தேன். அன்று சனிக்கிழமை என்பதினால் அலுவலகம் பாதி நாட்களே இருக்கும்.