( Slightly condensed and translated into Tamil by Santhipriya)
அனைவருக்கும் சாயிராம்
அனைவருக்கும் சாயி தின வாழ்த்துக்கள். சாயிபாபா
கருணை வடிவானவர். அவர் தான் செய்வதை தான் கடைபிடிப்பதும் அல்லாமல்
மற்றவர்களுக்கும் அதையே போதிப்பார். உன் வீட்டு வாயிலில் வருவது யாராக
இருந்தாலும், மனிதரோ இல்லை மிருகமோ அவர்களை உதாசீனப்படுத்தாதே என்று
உபதேசிப்பார்.
சாயிபாபா தனக்கு கிடைக்கும் உணவை மிருகங்கள், பறவைகள்
நாய்கள் என அனைத்துடனும் பங்கிட்டுக் கொள்வார். அப்படி செய்யாத பக்தர்கள்
மீது அவர் கோபப்படுவது உண்டு.
பாபா தான் போதிப்பதை தானும் கடைபிடிப்பார் என்பதற்கு கீழுள்ள அனுபவக் கட்டுரை ஒரு உதாரணம்.
மனிஷா
-------------
அன்புள்ள மனிஷாஜி
நான்
உங்கள் வலை தளத்தை தொடர்ந்து படிப்பவன். நீங்கள் சாயிபாபாவுக்கு செய்யும்
சேவை மகத்தானது. சாயிபாபா மனிதர்களுக்கு மட்டும் அல்ல மிருகங்களுக்கும்
தக்க நேரத்தில் வந்து உதவுவார் என்பதற்கு இந்த என்னுடைய அனுபவம் ஒரு
உதாரணம். இந்த நிகழ்ச்சி நடந்தது 2012 ஆம் வருடம் ஜூலை மாதம் 30 ஆம்
தேதி. அது ஒரு திங்கட்கிழமை. காலை ஒன்பது மணி ஆயிற்று. நான்
அலுவலகத்துக்குகு என்னுடைய இரண்டு சக்கர வண்டியில் கிளம்பிச் சென்று
கொண்டு இருந்தேன். அப்போது தூரத்தில் ஒரு வெண்மை நிற பசுவின் கன்றுக்
குட்டி நின்று கொண்டு என் வீட்டையே பார்த்தவாறு இருந்தது. அந்த வாசனையில்
இருந்தே அது சமீபத்தில் பிறந்து இருக்க வேண்டும் என்று தெரிந்தது. அதன்
காலில் ஒரு காயம் இருந்ததைக் கண்டேன். அதில் இருந்து ரத்தம் வடிந்து
கொண்டு இருந்தது. அதன் அருகில் சென்றதும் அதன் நாற்றம் சகிக்காமல்
இருந்தது.