Shirdi Sai Baba Stories in Tamil-Sai Baba Saved Me and My 30 Week Old Premature Baby -Experience By Reena.

2 views
Skip to first unread message

Sai.Manisha

unread,
Jan 19, 2012, 3:20:55 AM1/19/12
to shirdi-sai-baba...@googlegroups.com




சாய் ராம் !
அனைவருக்கும் சாய் தின நல்வாழ்த்துக்கள்.
சகோதரி ரீனா அவர்கள் என்னுடன்  பகிர்ந்து கொண்ட  நெகிழ்ச்சியான சாய் அனுபவத்தை அனைவரிடமும் பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன். இதனால் பாபாவின் மீது பக்தர்கள் கொண்டுள்ள நம்பிக்கை அதிகமாகி நம் பாபா எத்தனை கருணையானவர்  என அவர்களை மேலும் நினைக்கத் தூண்டும்.  இதற்கு பாபா மீது பக்தர்கள் கொண்டுள்ள நம்பிக்கை மட்டுமில்லாது, அவர்களுக்கு பாபா மீது கொண்டுள்ள அளவு கடந்த அன்பும், பாசமும் ஒரு காரணம். பாபா சரித்திரம் கூறுவதாவது "எவன் ஒருவன் என் மீது மாறாத பக்தியும்,உண்மையான நம்பிக்கையையும் கொண்டு தினந்தோறும் என்னை தியானிக்கிறானோ அவன் எல்லாவித துன்பங்களிலிருந்தும் முழுமையாக விடுபடுவான்" . இதுவே சத்தியம் என்பது போல கடவுள் நம் பக்தியை பரீட்சித்து, உரிய நேரத்தில் நமக்கு துணை புரிவார் என்பதற்கு சான்றாக  உள்ளது ரீனா வாழ்வில் பாபா, அவரையும் அவர் குழந்தையையும் ஆசிர்வதித்த சம்பவங்கள் .
சகோதரி ரீனா அவர்களின் முந்தைய குழந்தை அனுபவம் படித்த ஒருவரின் நம்பிக்கை பாபா மீது அதிகம் ஆகி, அவர் பொறுமையும், பக்தி மாறாமலும் இருந்த காரணத்தால் அவருக்கும் பாபா அருள் புரிந்ததாக மின்னஞ்சல் மூலம் எனக்கு செய்தி அனுப்பி இருந்தார்.
இதை படித்து அனைவரும் கருத்து தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன். ஜெய் சாய் ராம்.
மனிஷா
----------------------------------------------------------
சகோதரி மனிஷா
மீண்டும் ஒருமுறை எனக்கு ஏற்பட்ட சாய் அனுபவத்தை நான் சாய் பக்தர்களிடம் பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன். நீங்கள் செய்து வரும்  இந்த மகத்தான  சேவைக்கு வெறும் வார்த்தைகளால் நன்றியை கூற முடியாது.  இந்த அனுபவம் எவ்வாறு சாய் பகவான் எனது 30 வாரம் மட்டுமே ஆன  குழந்தையையும் ( எனக்கு 30 வாரத்திலேயே குழந்தை பிறந்துவிட்டது ) , என்னையும் காப்பாற்றினார் என்பது பற்றி ஆகும்.



(Original text condensed and Translated into Tamil by :-Ramya aymar and
Edited and published by Santhipriya )


--
Posted By N.R.Jayaraman to Shirdi Sai Baba Stories in Tamil. at 1/18/2012 05:47:00 AM
Sairam 
Baba Guide us all,
At the feet of my Sathguru Sai Baba
Baba's blessing are every where 
Manisha.Rautela.Bisht


Reply all
Reply to author
Forward
0 new messages