ஆக்டிவேஷன்-டிஆக்டிவேஷன்:
பொதுவா நாம எந்த ஜோஸ்யர்ட்ட போனாலும் எதாவது க்ரகங்கள் சரி இல்லன்னா
சாந்தி பன்னுங்க,பரிகாரம் பன்னுங்க இப்படித்தான் சொல்லுவாங்க.ஆனா இந்த
நிகழ்ச்சியில் ஜோதிட ஆலோசனை சொல்லும் ஜோதிடர் திரு பழனிநாதன் அவர்கள்
இந்த க்ரகம் வீக்கா இருக்கு சோ அத ஆக்டிவேஷன் பன்னுங்க அப்படிங்கரார்.அதே
மாறி கெடுதல் செய்யக்கூடிய க்ரகம் நம் ஜாதகத்தில் வலுவாக இருந்தால் அந்த
க்ரகத்தை டீஆக்டிவேட் செய்வதன் மூலம் அதன் கெடு பலனை தடுக்கலாம்
என்கிறார்.இது போல் தமிழகத்திலேயே புதிய முறையில் ஆலோசனை அளிக்கும்
ஜோதிடரும் நிகழ்ச்சியும் இதுமட்டுமே.
ஆலோசனை பலிக்கிரது:
இவர் ஒரு ஜாதகரின் பிறப்பு விபரங்களை கேட்ட உடன்,அவருக்கு என்னென்ன
கிரகங்கள் எவ்வாறு உள்ளது.அதனால் அந்த ஜாதகர் எப்படி இருப்பார் என்ற
விபரத்தை அவரே கூறிவிடுகிறார்.ஜாதகரின் குறை நீங்க அவர் கூறும் ஆலோசனை
புதுமையாகவும்,எளிமையாகவும்,அறிவியல் ரீதியாகவும் உள்ளது.
பரிகாரமா ஸ்னேக்பார்க் போங்க:
எந்த ஜோதிடரும் கூறாத பரிகாரமாகும் இது.ஆம் ராகு,கேது சம்மந்தமான
தோஷங்களுக்கு ஜாதகரை தங்களுக்கு அருகில் உள்ள பாம்பு பன்னைக்கு சென்று
சிறிது நேரம் அமர்ந்துவிட்டு வரச்சொல்கிறார்.காரணம் பாம்பின்
மூச்சிக்காற்றை இவர் ச்வாசிக்கும்போது,சம்மந்தப்பட்ட க்ரக தோஷம்
நீங்குவதாகவும் அறிவியல் பூர்வமாக அவர் கூறுகிறார்.மேலும் குறிப்பிட்ட
உணவை உண்பதன் மூலமும்,குறிப்பிட்ட இசையை கேட்பதன் மூலமும் தோஷத்தை
போக்கலாம் என்பது அவரின் கருத்து.இதுபோன்ற பல வியக்கவைக்கும் செய்திகள்
அந்த நிகழ்ச்சியில் காணலாம்.சரி,
எப்போது அந்த நிகழ்ச்சி:
இவ்வளவையும் படித்தபின் அந்த நிகழ்ச்சியை பார்க்கவேண்டும் என்ற ஆசை
வருகிறதா?வரவேண்டும்.இல்லை என்றால் நீங்க நார்மலான மனிதர் இல்ல.
இந்நிகழ்ச்சி தினமும் இந்திய நேரப்படி இரவு 6.30 to 7.00 p.m வரை jaya
plus டிவில ஒளிபரப்பாகிறது.ஒரு முறையாவது பாத்துட்டு வந்து நா சொன்னது
கரெக்டான்னு வந்து சொல்லுங்க.