Periyar Thirai 2009 (Short Film Competition)

11 views
Skip to first unread message

princenrsama

unread,
Dec 4, 2009, 6:19:34 AM12/4/09
to Screenwriting India
பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை மற்றும் பகுத்தறிவாளர் கழகம்
இணைந்து நடத்தும் முதலாம் ஆண்டு
பெரியார் திரை குறும்படப் போட்டிக்காக
குறும்படங்கள் வரவேற்கப்படுகின்றன.

முதல் பரிசு: ரூ.10000/-
இரண்டாம் பரிசு: ரூ.5000/-
மூன்றாம் பரிசு: ரூ.3000/-


போட்டிக்கான விதிமுறைகள்:
1. பகுத்தறிவு, பெண்ணுரிமை, சமூகநீதி, ஜாதி ஒழிப்பு, மதவாத எதிர்ப்பு
ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைப் பிரதிபலிப்பதாக குறும்படம் இருத்தல்
வேண்டும்.
2. குறும்படம் தமிழில் எடுக்கப்பட்டதாக 30 மணித்துளிகளுக்கு மிகாமல்
இருக்க வேண்டும். ஆங்கிலத் துணைத் தலைப்புகளுடன்(Subtitles) இருப்பின்
நலம். தரமான DVD அல்லது CD வடிவில் குறும்படத்தின் இரண்டு பிரதிகள்
அனுப்பப்பட வேண்டும்.
3. ஒருவரே ஒன்றுக்கும் மேற்பட்ட குறும்படங்களையும் போட்டிக்கு
அனுப்பலாம். ஒவ்வொன்றிற்கும் தனித்தனி விண்ணப்பங்கள் பயன்படுத்தப்பட
வேண்டும்.
4. இயக்குநர், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த
விவரமும், ஏற்கெனவே பரிசு பெற்றிருந்தால் அது பற்றிய விவரமும் இணைத்து
அனுப்பப்பட வேண்டும்.
5. குறும்படத்தின் கதைச் சுருக்கம், முக்கியக் காட்சிகளின் ஒளிப்படங்கள்
(Photos) மற்றும் இயக்குநரின் ஒளிப்படம் ஆகியவை வரவேற்கப்படுகின்றன. 6.
போட்டியில் கலந்து கொள்ளுவதற்கான ஒப்புதல் கடிதம் படத்தின்
உரிமையாளரிடமிருந்து பெறப்பட்டு இணைக்கப்பட வேண்டும். (அல்லது)
போட்டிக்காக குறும்படத்தை அனுப்புகிறவர் எந்த உரிமையில் அதனை
அனுப்புகிறார் என்பதைக் குறிப்பிட வேண்டும்.
7. போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் குறும்படங்கள் அனைத்தும் "பெரியார்
சுயமரியாதை ஊடகத் துறை" நடத்தும் திரையிடல் நிகழ்வுகளில் திரையிடப்படும்.
8. குறும்படங்கள் 2007-2009 ஆம் ஆண்டுக்குள் எடுக்கப்பட்டனவாக இருக்க
வேண்டும்.
9. தேர்வுக் குழுவின் முடிவே இறுதியானது.
10. போட்டி முடிவுகள் விடுதலை, உண்மை இதழ்களிலும் பிற நாளிதழ்களிலும்
செய்தியாக டிசம்பர் இறுதியில் வெளியிடப்படும்.
11. ஆவணப்படங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா.
12. தேர்வு செய்யப்படாத குறும்படங்களைத் திருப்பி அனுப்புதல் இயலாது.
13. விண்ணப்பங்களை www.viduthalai.com -இல் பதிவிறக்கிக் கொள்ளலாம்.
14. போட்டியில் பங்கேற்க நுழைவுக் கட்டணம் எதுவும் இல்லை.
15. போட்டிக்கு குறும்படங்களை அனுப்ப வேண்டிய கடைசித் தேதி: டிசம்பர் 20,
2009.


குறும்படங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
அமைப்பாளர்,
பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை,
பெரியார் திடல், 50, ஈ.வெ.கி. சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை-7


மேலும் தொடர்புகளுக்கு:
செல்பேசி: 9444210999, 9940489230
periya...@gmail.com
www.viduthalai.com

Satinder bedi

unread,
Dec 5, 2009, 12:34:33 PM12/5/09
to screenwri...@googlegroups.com
send it in english na :( i cant read tamil.

2009/12/4 princenrsama <prince...@gmail.com>



--
Satindar Singh Bedi

09840311401

princenrsama

unread,
Dec 6, 2009, 7:05:19 AM12/6/09
to Screenwriting India
Periyar Self Respect Media Department & Rationalist Forum is
conducting

"PERIYAR THIRAI SHORT FILM COMPETITION"

First Prize - Rs. 10000/-
Second Prize -Rs. 5000/-
Third Prize - Rs. 3000/-

Time Limit : 30 Minutes
1. Concepts should be on Rationalism, Feminism, Social Justice, Caste
Eradication, Secularism.
2. No entry fee.
3. Last Date: 20.12.2009



Send Entries to:
Co-Ordinator,
Periyar Self Respect Media Department,
Periyar Thidal,
50, E.V.K. Sampth Road,
Vpery, Chennai-7


For More Details: 9444210999, 9940489230
visit: http://viduthalai.com
periya...@gmail.com

suma bandopadhyay

unread,
Dec 7, 2009, 1:33:29 AM12/7/09
to screenwri...@googlegroups.com
 I dont understand tamil or telegu

2009/12/4 princenrsama <prince...@gmail.com>
Reply all
Reply to author
Forward
0 new messages